கண்டேன் புதையலை

கண்டேன் புதையலை, ஆனி பிளாரன்ஸ் (எ) பிரியசகி, புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 160ரூ. குழந்தைகளிடம் இயற்கையாகவே இருக்கும் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஒருங்கிணைந்த மகிழ்ச்சியான சூழ்நிலை அவர்களிடம் உருவாக்குவது குறித்து அறிமுகம் செய்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

இனி இல்லை மரணபயம்

இனி இல்லை மரணபயம், சந்தியா நடராஜன் சந்தியா பதிப்பகம், விலை 100ரூ. மரணம், வாழ்க்கையின் எதார்த்தம், இந்த எதார்த்தத்தை ஏற்கமறுக்கிற மனம், பயத்தில் வாழ்க்கையின் பெரும்பாலான சந்தோஷத் தருணங்களைக் கொண்டாட விடாமல் செய்கிறது.இதனால் வாழ்க்கையை வாழாமல் தொலைத்து விடுகிறவர்கள் நிறைய பேர். மரணத்தைப் பற்றி தேவையில்லாத பயமும் குழப்பமும் கொண்டவர்களுக்கு உற்ற தோழனாக இருக்கும் இந்த நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

அமராவதி

  அமராவதி, இரா.ரவிக்குமார், கொங்குமண்டல ஆய்வு மண்டலம், விலை 500ரூ. நடந்தாய் வாழி அமராவதி! தமிழ் மொழியில் நதிகளைப் பற்றி வெளியான புத்தகங்கள் மிகக் குறைவே. காவிரியைப் பற்றி தி.ஜ.-வும், சிட்டியும் எழுதிய ‘நடந்தாய் வாழி காவிரி’க்குப் பிறகு, நதியைப் பற்றி விரிவான புத்தகங்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம். அந்தக் குறையைப் போக்கும் வகையில் வெளியாகியிருக்கிறது, உடுமலையைச் சேர்ந்த இரா.ரவிக்குமார் எழுதிய அமராவதி நதியைப் பற்றி ஆய்வுப் பார்வையிலான புத்தகம். கொங்கு மண்டலத்தில் பழனி மலைத் தொடருக்கும் ஆனை மலைத் தொடருக்கும் இடையே […]

Read more

கையளவு கடல்

கையளவு கடல், மதுக்கூர் ராமலிங்கம், பாரதி புத்தகாலயம், பக். 120, விலை 130ரூ. எள்ளலும் துள்ளலும் துள்ளல் நடையில் அமைந்த கட்டுரைத் தொகுப்பு இது. நாடறிந்த பேச்சாளர், பத்திரிகையாளரான மதுக்கூர் ராமலிங்கத்தின் சமூக அக்கறை எல்லா கட்டுரைகளிலும் வெளிப்படுகிறது. கூடவே, எள்ளலும், நகைச்சுவையும் கைக்கொடுக்கிறது. ‘நார்ச் சத்து மிகுந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். தேங்காய் நார் சாப்பிடச்சொல்லாதது ஒன்றுதான் பாக்கி’ என்று தனக்கு சர்க்கரை குறைபாடு வந்திருப்பதைக் கூட எளிதாகக் கடந்துசெல்ல முடிகிறது அவரால்! -மானா பாஸ்கரன், நன்றி: தி […]

Read more

அபாயம் தொடாதே

அபாயம் தொடாதே, பட்டுக்கோட்டை பிரபாகர், கவிதா பதிப்பகம், விலை 200ரூ. கடந்த 40 ஆண்டுகளாகச் சிறுகதை, நாவல், தொடர்கதை, சின்னத்திரை தொடர்கள், வெள்ளித் திரையில் கதை – உரையாடல் எனத் தொடர்ந்து வெகுசன தளத்தில் பரவலாகப் பேசப்படும் எழுத்தாளரின் நாவல். எந்த முன்குறிப்பும் இல்லாமல் தொடங்கும் கதை, தொடங்கிய வேகத்திலேயே சட்டென முடிந்தும்போகிறது. சியாமளாவின் கொலைக்குக் காரணமான விவேக்கை அவனது கல்யாண மேடையில் வைத்தே கைது செய்வதோடு நாவல் முடிகிறது. வழக்கமான துப்பறியும் கதைதான் என்றாலும் மின்னல் வேக வாசிப்புக்கு உத்தரவாதம் உண்டு. நன்றி: […]

Read more

பொருநை நதிக்கரையினிலே

பொருநை நதிக்கரையினிலே, கன்யூட்ராஜ், என்சிபிஹெச், விலை 230ரூ. இருபுறக் கரைகளிலும் தண்ணீர் புரண்டோடிய ஆறுகள், இன்று வெறும் மணல்வெளியாய் அனல் பரப்பிக் கிடக்கின்றன. பயிர் செழிக்க உதவிய ஆற்றுநீர்ப் பாசனம், விவசாயிகளின் ஒட்டிய வயிறாய் சுருங்கிவிட்டது. நதிகளில் ஓடும் ஆற்று நீர் எவ்வளவு அவசியமானதோ அதற்குச் சற்றும் குறைந்ததல்ல, அற்றுமணலும், பன்னாட்டுக் கம்பெனிகள் ஒருபுறம் நதிநீரை உறிஞ்சிக் குடிக்க, இன்னொருபுறம் ஆற்று மணலை அள்ளிப்போய் கொள்ளையடிக்கிறார்கள் பெருமுதலாளிகள். இயற்கை வளத்தைச் சூறையாடிவருபவர்களுக்கு எதிராகப் போராடும் கிராம மக்களின் போராட்டத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது […]

Read more

குழந்தைகளின் நூறு மொழிகள்

குழந்தைகளின் நூறு மொழிகள், ச. மாடசாமி, புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 80ரூ. ‘வகுப்பறையும் அறிவொளியும்தான் இந்தக் கண்களுக்கு வெளிச்சத்தைத் தந்தன’ என்று சொல்லும் பேராசிரியர் ச.மாடசாமி, மொழி, பண்பாடு, கல்வி சார்ந்து எழுதிய 14 கட்டுரைகளின் தொகுப்பு. எதையும் மேம்போக்காக அணுகாமல், கூர்ந்து கவனித்து எழுதும் கட்டுரையாளரின் நுட்பமான பார்வைக்கு இந்நூலின் கட்டுரைகளே சாட்சி. ஆழமான விஷயங்கள் கொண்ட கட்டுரைகள்கூடச் சட்டென முடிந்துவிடுகின்றன. வகுப்பறைக்குள்ளிருக்கும் அதிகாரம் பற்றிப் பேசும் கட்டுரையும், அகங்காரத் தமிழ் எனும் மொழியின் சமூகத் தேவை குறித்த அக்கறையுடன் கூடிய […]

Read more

கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைக் கனியால் உண்ணப்பட்டவர்

கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைக் கனியால் உண்ணப்பட்டவர், க. பஞ்சாங்கம், அன்னம் வெளியீடு, விலை 120 தமிழ்க் கவிதைத் தடத்தில் பன்மொழி ஆளுமையோடு விளங்கிய அப்துல் ரகுமானின் பவள விழாவையொட்டி, நூலாசிரியர் எடுத்த சற்றே நீண்ட நேர்காணலும் (64 பக்கங்கள்), 4 கட்டுரைகளும் இதில் உள்ளன. கவிதை குறித்த அப்துல் ரகுமானின் விரிந்த பார்வையும், புதியன வரவேற்கும் அவரது எண்ணமும் கவிதை குறித்த அவரது பதில்களில் தீர்க்கமாக வெளிப்பட்டுள்ளன. ஒரு பித்தனைப் போல் தனது கவிதைகளால் கேள்வியெழுப்பிய கவிஞர், ‘இன்னும் எனக்கு இந்த வாழ்க்கை புரியவில்லை’ […]

Read more

பூச்சிகள் ஓர் அறிமுகம்

பூச்சிகள் ஓர் அறிமுகம், ஏ.சண்முகானந்தம், வானதி பதிப்பகம், விலை 60ரூ. இயற்கையைப் பொறுத்தவரை ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு காரணம் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒரு சங்கிலித் தொடர்பு இருக்கும். அதில் மிக முக்கியமானவை பூச்சிகள். பூச்சியைப் பார்த்தாலே பலருக்கும் அருவருப்பாகத் தோன்றும். ஆனால் அவை அருவருக்கத்தக்கவை அல்ல என்பதை அழகிய படங்களுடனும் அறிவியல் தகவல்களுடனும் சிறப்பாக அறிமுகம் செய்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம், என்.ராமதுரை, க்ரியா பதிப்பகம், விலை 130ரூ. உலகெங்கிலும் பருவநிலை மாறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கோடையில் வெயில் வழக்கத்தை விடக் கடுமையாக இருக்கிறது. புயல்கள் அதிகரிக்கின்றன. சில இடங்களில் அளவுக்கு மீறி மழை பொழிகிறது அல்லது வறட்சி தலைகாட்டுகிறது. இது ஏன் என்பதை இந்த நூல் எளிமையாக விளக்குகிறது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more
1 13 14 15 16 17 36