மருத்துவ மாயங்கள்

மருத்துவ மாயங்கள், டாக்டர் கு.கணேசன், காவ்யா பதிப்பகம். மருத்தவ உலகம் மிகவும் புதிரானது. டாக்டர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்து சீட்டுகூட நோயாளிக்குப் புரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிற மருத்துவர்கள் வாழ்கிற இக்காலத்தில், 21-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள், கண்டுபிடிப்புகள். நவீன சிகிச்சைகள் குறித்து எளிய தமிழில் எழுதியிருக்கிறார் மருத்துவ எழுத்தாளர் கு.கணேசன். மருத்துவச் சொற்களைக் கூறி நம்மை அச்சுறுத்தாமல், குடும்ப நண்பரைப் போன்று விஷயங்களை விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

ஹைட்ரோ கார்பன் அபாயம்

ஹைட்ரோ கார்பன் அபாயம், கா.அய்யநாதன், கிழக்கு பதிப்பகம், விலை 225ரூ. தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வேளாண் பூமியாகத் திகழ்ந்துவரும் காவிரிப் படுகை, ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காகக் குறிவைக்கப்படுவது பெரும் முரணாக மாறியிருக்கிறது. வலுக்கட்டாயமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசுக்கும் இயற்கை சார்ந்த வாழ்வாதாரத்தைப் போற்றும் மக்களுக்கு இடையிலான மோதலாகவும் உருவெடுத்துள்ளது. ஆனால் ஓ.என்.ஜி.சி.யோ. ‘இது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்’ என்கிறது. இவற்றில் உண்மை என்னவென்பதை அறிவியல் பூர்வமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் அலசி ஆராய்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

இனயம் துறைமுகம்

இனயம் துறைமுகம், கிறிஸ்டோபர் ஆன்றணி, எதிர் வெளியீடு, விலை 120ரூ. நவீன யுகத்தில் இயற்கைச் சீர்கேடு மிகவும் அதிக அளவில் நடக்கிறது. அது காடானாலும் கடலானாலும் ஒன்றுதான். கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள இனயம் துறைமுகத்தைச் சுற்றி நடக்கும் அரசியல் பற்றியும், பவளத் திட்டுச் சிதைவுகள் உள்ளிட்ட சூழலியல் பாதிப்புகள் பற்றியும், கடலில் கலக்கும் பெட்ரோலிய கதிர்வீச்சால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை

ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை, மிக்காயேல் ஃபெரியே, தடாகம் வெளியீடு, விலை 200ரூ. தமிழில் சு.ஆர். வெங்கட சுப்புராய நாயக்கர் நிலநடுக்கம், சுனாமி ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று விபத்துகளை 2011-ம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்பகளை நேரில் அனுபவித்த சாட்சியான ஆசிரியர் தன் அனுபவங்களையும் அங்கு திரட்டிய தரவுகளையும் இந்தப் புத்தகத்தில் முற்றிலும் புதிய முறையில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

கையா உலகே ஒரு உயிர்

கையா உலகே ஒரு உயிர், ஜேம்ஸ் லவ்வாக், தமிழில் சா.சுரேஷ், பாரதி புத்தகாலயம், விலை 160ரூ. இன்றைக்கு அனைத்து நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கும் பொருளாக புவி வெப்பமயமாதல் மாறியுள்ளது. இந்தப் பூவுலகு ஒற்றை உயிர் போலவே இயங்குகிறது என்கிற கோட்பாட்டை முன்மொழிந்து அதைப் பரவலாக ஏற்கச் செய்தவர்களில் முக்கியமானவர், இந்நூலின் ஆசிரியர். பருவநிலை மாற்றத்தை மாறுபட்ட கோணத்தில் புரிந்துகொள்ள உதவும் இன்னுமொரு புத்தகம் இது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

உயிரி வளமும் காலநிலை மாற்றமும்

உயிரி வளமும் காலநிலை மாற்றமும், கு.வி.கிருஷ்ணமூர்த்தி, உலகத் தமிழ் பண்பாட்டு மையம், விலை 200ரூ. பல்லுயிர் வாழும் பூமியில், இயற்கையின் கொடையைத் தற்காத்துக் கொள்வதே உத்தமம். பல மாற்றங்களுக்கும், சீற்றங்களுக்கும் புவி வெப்பமடைதலே மையக் காரணமாக உள்ளது. புவி வெப்பமடைவதற்கு மனிதச் செயல்பாடுகளே முதன்மைக் காரணமாக உள்ளது. பருவநிலை மாற்றத்தால் சூழலியலில் ஏற்படும் தாக்கம் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்த நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

மூதாய் மரம்

மூதாய் மரம், வறீதையா கான்ஸ்தந்தின், தடாகம் வெளியீடு, விலை 80ரூ. கடல் பழங்குடி வாழ்வின் அடிப்பதைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன் வேட்டைக் களத்தில் தன் முழு உடலையும் புலன்களாக்கிக் கொள்கிறான். களத்தில் தன்னை தற்காத்துக்கொண்டு சிறந்த வேட்டைப் பெறுமதிகளுடன் குடிலுக்குத் திரும்புகிறான். கடலைப் பொழுதுகளின், காட்சிகளின், ஒலிகளின், வாசனைகளின் வரைபடமாய்க் காணக் கற்றுக்கொண்டிருக்கிறான். இறுதி மூச்சு வரை கடலின் மாணவனாக வாழ்கிறான். விழிப்புநிலை தவறவிட்டால் பழங்குடி வாழ்வு பொருளற்றுப் போய்விடுகிறது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பறவையியல்

பறவையியல், வ.கோகுலா & சி.காந்தி, ஜாஸிம் பதிப்பகம், விலை 300ரூ. தமிழ்ச் சூழலில் அறிவியல் சார்ந்த படைப்புகள் கணிசமாக இருந்தாலும் பறவையியல் குறித்த படைப்புகள் பெருவாரியாக இல்லை என்பதே உண்மை. சமீபகாலமாகத்தான் பறவைகள் தொடர்பான புத்தகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் இந்தப் புத்தகமும் சேர்ந்துள்ளது. பறவைகளின் உடற்கூறு பற்றி சற்று விரிவாகப் பேசுகிறது இது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பனை மரமே பனை மரமே

பனை மரமே பனை மரமே, ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், விலை 425ரூ. தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மரம் பனை. இம்மரத்தை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழி வழக்காறுகளையும் எழுத்துப் பதிவுகளையும் இந்நூல் கொண்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தைய தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் தொடங்கி இடைக்கால கல்வெட்டுகள் வரை, தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொடங்கி – வாய்மொழி இலக்கியம் – நவீன இலக்கியம் வரை என பல அரிய தரவுகளின் துணையுடன் இந்நூல் உருவாகியுள்ளது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

புனைவு வெளி

புனைவு வெளி, நா. விச்வநாதன், பேசும் புதிய சக்தி பதிப்பகம், விலை 150ரூ. சி.சு.செல்லப்பா தொடங்கி தஞ்சை ப்ரகாஷ் வரை 18 இலக்கிய பிதாமகர்களைப் பற்றிய எழுத்துக் கோலம்தான் இந்தப் புத்தகம். எளிய வாசகர்களுக்கும் எழுத்து ஆளுமைகளை அடையாளம் காட்டும் விதமாக எளிமையான தமிழில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம். தமிழுக்கு நல்வரவு. ஒரு ஆரம்பப் பள்ளி வாத்தியார் தோற்றம், ஒரு மாத தாடி’ என்று சி.சு.செல்லப்பாவை இவர் உருவகிக்கும் சித்திரம் வாசகரை 60-களின் செல்லப்பாவைத் தேட வைக்கிறது. ஒவ்வொரு தனிநபரும் ஒரு தத்துவம்தான். தரிசனம்தான். […]

Read more
1 14 15 16 17 18 36