கடல் முற்றம்

கடல் முற்றம், அருள் சினேகம், கடல்வெளி, விலை 80ரூ. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், உள்ளிட்ட வேணாட்டுக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் முக்குவர்கள் பேசும் வழக்கு மொழியில் எழுதப்பட்ட 9 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தின் இந்நூலுக்கு எழுதியுள்ள 18 பக்க சற்றே பெரிய முன்னுரை. கதைமாந்தர்களின் வாழ்க்கையோட்டங்களை புரிந்துகொள்ள நமக்கு வழித்துணையாக உள்ளது. ஊம சேசய்யன், பாதர் டாமி, கஞ்சிக் கலயம் உள்ளிட்ட கதைகள் தனித்த கவனிப்பை கோருகின்றன. வழக்கு மொழியிலேயே நகரும் கதையை வாசிப்பவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ள பின்னிணைப்பில் […]

Read more

மாலைகள்

மாலைகள், போந்தூர் கனகசுந்தரம், மேன்மை வெளியீடு, விலை 170ரூ. மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கப்பட்ட திருநங்கைகள் பற்றிய சமூகப் பார்வைகள் இன்னும் பெரிதாக மாறிவிடவில்லை. மிகை அலங்காரத்தோடு நின்றபடி, சாலையில் செல்வோரிடம் கைதட்டிக் காசு கேட்பவர்கள் என்கிற ஒற்றைப் புரிதலிலிருந்து நாம் முதலில் விடுபட்டாக வேண்டும். சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’, திருநங்கைகளின் வாழ்வை இலக்கிய வெளியில் பரவலான பேசுபொருளாக மாற்றிய நாவல். போராட்டக் களத்திலிருந்து வேர்பிடித்துக் கிளம்பி, திருநங்கைகளின் மீதான வெற்று கரிசனங்களைப் புறந்தள்ளி, ஒழுங்கற்ற சமூக அமைப்பை ஒருங்கிணைக்கும் நோக்கத்தைத் திருநங்கைகள் வாழ்வின் வழியாக முன்மொழிந்துள்ள […]

Read more

சிவகங்கைச் சரித்திரக் கும்மி

சிவகங்கைச் சரித்திரக் கும்மி, முனைவர் ஆ.மணி, காவ்யா, விலை 750ரூ. இந்திய மண்ணில் வெள்ளையர்களின் ஆதிக்கத்தைக் கண்டு பொறுக்காமல், விடுதலைக்காக போராடியவர்களில் முன்னோடியானவர் மருதுபாண்டியர். முக்குளத்தில் பிறந்து, சிவகங்கைக்கு வந்த மருது சகோதரர்கள் வேலு நாச்சியாருக்கு உறுதுணையாக இருந்து, அவரை ராணியாக அரியணையில் ஏற்றி, தளபதியாகவும் அமைச்சராகவும் இருந்தனர். அரசியல் மோதலினால் 1799ல் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு, 1801-ல் தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கும்மிப் பாடல்களாக மக்கள் கொண்டாடினார்கள். அவ்வகையில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சிவகங்கை சரித்திரக்கும்மியை 63 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் […]

Read more

எங்கேயும் எபோதும்

எங்கேயும் எபோதும், பொள்ளாச்சி அபி, ஒரு துளிக்கவிதை வெளியீடு, விலை 160ரூ. ஊடகவியலாளராகத் தன் பயணத்தைத் தொடங்கிய எழுத்தாளர் அபியின் சிறியதும் பெரியதுமான 27 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பிது. ‘நேத்து சாயங்காலம் நான் ரெண்டு பேரைக் கொன்னுட்டேன்னு சொன்னா உனக்கு ஆச்சரியமா இருக்கும்… சார்’ என்று மெல்லிய அதிர்வோடு தொடங்கும் ‘நீயே சொல்லு சார்’ கதையாகட்டும். ‘ஏய்… சரசு… மின்னல் வெட்றாப்புலே இருக்குது’ என்று இரைச்சலான அழைப்போடு தொடங்கும் ‘ஒரு ஊருல ஒரு இராஜகுமாரி’ கதையாகட்டும், எல்லாக் கதைகளிலுமே வற்றிப் போகாத நம்பிக்கை சுரந்துகொண்டேயிருக்கிறது. […]

Read more

அழிவின் விளிம்பில் அந்தமான்

அழிவின் விளிம்பில் அந்தமான், பேரா.பொ.முத்துக்குமரன், முனைவர் ம.சாலமன் பெர்னாட்ஷா, என்.சி.பி.ஹெச்., விலை 370ரூ. இயற்கையின் தாய்மடியாக திகழ்ந்த அந்தமான் தீவு பற்றிய முழுமையான ஆவணம் இந்நூல். இயற்கை வளமிக்க ஒரு தீவு, பேராசையும் சுயநலமும் மட்டுமே கொண்ட மனிதர்களின் ஆக்கிரமிப்பால் இன்றைக்கு சிதைந்துபோன அவலத்தை தக்க வரலாற்று ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. வரலாற்றுச் சுவடுகளில் சோழர்களும் சைலேந்திர அரசர்களும் பலமுறை கடந்து சென்றபோதெல்லாம் சிதைவுறாத இந்த பூமி, ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் எப்படியெல்லாம் சூறையாடப்பட்டது என்பதை தெளிவாக இந்த நூல் எடுத்துரைத்துள்ளது. படங்கள், வரைபடங்கள் யாவும் […]

Read more

சாத்தனார் அருளிய மணிமேகலை

சாத்தனார் அருளிய மணிமேகலை, வீ. இளவழுதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களம் மூன்று காப்பியங்கள் மட்டுமே முழுமையாக கிடைத்துள்ளன. வளையாபதி, குண்டலகேசி காப்பியங்கள் இரண்டும் முழுமையாக கிடைக்கவில்லை. முழுமையாகக் கிடைத்த காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை, கடைச்சங்கப் புலவரான சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பட்டது. மணிமேகலையைக் கதை வடிவில் எழுதியுள்ளார். நூலாசிரியர் 30 காதைகளைக் கொண்ட இக்காப்பியத்தை ஒவ்வொரு காதைக்கும் பல கிளை தலைப்புகளுடன் எளிய மொழிநடையில் கதையாக எழுதியிருப்பது இன்றைய தலைமுறை வாசகர்களையும் வாசிக்கத் தூண்டும் நல் முயற்சி. நன்றி: தி […]

Read more

நதியோடு நாமும்

நதியோடு நாமும், இராஜேஸ்வரி கோதண்டம், நிவேதிதா பதிப்பகம், விலை 160ரூ. தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலிருந்து நல்ல பல நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கும் ‘ராஜம்பாட்டி’ (இதுதான் நாவலாசிரியரின் புனைபெயர்) இந்திய நதிகளின் போக்கிலேயே தானும் பயணித்து, சுவைபட இந்நூலை எழுதியுள்ளார். கங்கை, ஹுக்ளி, கோதாவரி, கிருஷ்ணா, வைகை என இந்திய நதிகள் பலவற்றைப் பற்றியும் மனம் தோய்ந்து எழுதியுள்ளார். கங்கை பாயும் காசி பற்றி எழுதுகையில், மகாகவி பாரதியார் அங்கு வாழ்ந்த காலத்தைப் பற்றியும் சேர்த்தே பதிவு செய்துள்ளார். […]

Read more

விமலா கூறும் செவிச்செல்வம்

விமலா கூறும் செவிச்செல்வம், செ. க ணேசலிங்கம், குமரன் பப்ளிஷர்ஸ், விலை 90ரூ. கற்காலத்திலிருந்து மனித இனம் நாகரிகம் அடைந்தாலும் பெண் என்பவள் அடிமைப்பட்டவளாகவே இருப்பதைக் கதாசிரியர் தன்னுடைய நாவல்களில் குறிப்பிடத் தவறுவது இல்லை. இக்கதையின் நாயகி விமலா இசைக் கல்லூரி மாணவி. எனவே இசையின் தோற்றத்தையும், இருப்பையும், அதன் வணிக நோக்கத்தையும் பாத்திரங்கள் வாயிலாகவே விவரிக்கிறார். பெரும்பாலும் உரையாடல் வாயிலாகவே கதை நகர்கிறது. பாலின்பம், இசை இரண்டும் எப்படி வெறும் புலனின்பத்துக்காகவும், வணிக நோக்கத்துக்காகவும் மாற்றப்பட்டுவிட்டன என்று கதாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். நன்றி: தி […]

Read more

விவசாயியை வாழவிடு

விவசாயியை வாழவிடு, விவசாயின் அழிவு சமூகத்தின் பேரழிவு, மக்கள் அதிகாரம், விலை 10ரூ. விவசாய வருமானத்தைக் கொண்டு வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில், விவசாயச் சங்கங்கள் முன் வைக்கும் கடன் தள்ளுபடி, நதிநீர் இணைப்பு, நிவாரணங்கள் முதலான கோரிக்கைகளால் நிரந்தரத் தீர்வுகள் ஏற்படாது. எனவே, தற்போதைய விவசாயத்தின் மோசமான நிலைக்குக் காரணமாக இருக்கும் அரசின் விவசாயக் கொள்கைகளை மறுபரிசீலனை, செய்ய வேண்டும், நிலச் சீர்த்திருத்தங்கள், பசுமை புரட்சி என்று முன்னெடுத்த திட்டங்கள் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், விவசாயம் சார்ந்த தொழில் […]

Read more

நன்னயம்

நன்னயம், வசீகரன், மின்னல் கலைக்கூடம், விலை 250ரூ. சிறுபத்திரிகையாளர், கவிஞர் என அறியப்பெற்ற வசீகரன் எழுதிய 83 குறுங்கட்டுரைகளின் தொகுப்பு இது. 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரைகள் என்றாலும்கூட, இன்றைக்கும் வாசிக்கையில் கட்டுரைகளின் பொருண்மையும், எளிமையும் வசீகரிக்கவே செய்கின்றன. மாற்றங்களும் தடுமாற்றங்களும், கேட்பவர்களும் கேளாதவர்களும், மலட்டுக் காரணங்கள் என ஒவ்வொரு கட்டுரையும் ஒரு வாழ்க்கை நெறியைச் சுருங்கக்கூறி விளங்க வைக்கின்றன. நூலாசிரியரின் தொடர் புத்தக வாசிப்பும், பத்திரிகை அனுபவமும் கட்டுரைகளின் உருவாக்கத்துக்குக் கை கொடுத்துள்ளன. நன்றி: தி இந்து, 9/9/2017.

Read more
1 16 17 18 19 20 36