விளையாட்டு விஞ்ஞானம்

விளையாட்டு விஞ்ஞானம், அ.சுப்பையா பாண்டியன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2. விலை ரூ. 125 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-843-6.html இயற்பியலில் உயர் பட்டங்களைப் பெற்ற பேராசிரியரான இந்நூலாசிரியர், தமிழக அரசின் அறிவியல் பாட நூல்களுக்குக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர். இவர் பொதிகை, மக்கள் தொலைக்காட்சி போன்றவற்றில் பல்வேறு அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்தி, விஞ்ஞானத்தை விளையாட்டாக எளிதில் புரியவைத்தவர். அவர் டி.வி.யில் செய்து காட்டிய பல்வேறு அறிவியல் நிகழ்ச்சிகளில் 70க்கு மேற்பட்ட சிறப்பானவற்றை, உரிய […]

Read more

சிவ சாகரத்தில் சில அலைகள்

சிவ சாகரத்தில் சில அலைகள், தொகுப்பாசிரியர் – எஸ். கணேச சர்மா, சனாதன பப்ளிகேஷன்ஸ், சபரிசனாதன, 142, கிரீன்வேஸ் ரோடு, ஆர். ஏ. புரம், சென்னை – 28, விலை 40 ரூ. தமிழகத்தில் 20 ஆம் நூற்றாண்டில் அவதரித்த மகாபுருஷர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். அந்த மகா பெரியவரால், ‘என் தம்பி சாச்சு பிறவியிலேயே மஹான்’ என்று பாராட்டப் பெற்றவர் ஸ்ரீ சிவன் சார். அந்தளவிற்கு இவர் ஞானத்திலும், குணத்திலும், விசாலமான அறிவிலும், பற்றற்ற […]

Read more

ஸ்ரீ வைஷ்ணவம்

ஸ்ரீ வைஷ்ணவம், வேணு ஸ்ரீனிவாசன், கிழக்கு பதிப்பகம், 177/103, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14,  விலை 200 ரூ.   ஸ்ரீ வைஷ்ணவம் என்பது ஏதோ ஒரு இனத்தாருக்கு மாத்திரமே உரியதாக எண்ணப்படுகிறது. அது அப்படியில்லை. எல்லோருமே ஸ்ரீ வைஷ்ணவனாகப் பிறப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் இவ்வுலகில் பிறந்த அத்தனை ஜீவன்களும் ஸ்ரீ வைஷ்ணவன் ஆகலாம் என சிவப்புக் கம்பளம் விரிக்கும் மதம் ஸ்ரீ வைஷ்ணவம்.   வேதகாலத்தில் இருந்து வைஷ்ணவம் தோன்றியது. தமிழ் இலக்கியங்கள் அதனைப் போற்றின. வாழ்க்கையோடு வைஷ்ணவம் எப்படியெல்லாம் […]

Read more

சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு

சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு, மிஷல்தனினோ, கிழக்கு பதிப்பகம், 177/103, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை – 14, விலை 300 ரூ. இந்திய இதிகாசங்களில் ஒன்றான மஹாபாரதத்திலும், ஹிந்து மத வேதங்களிலும் வெகுவாகப் புகழப்பட்டிருக்கும் நதிகளில் ஒன்று சரஸ்வதி நதி. இந்தியாவின் வடமேற்கே பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள வறண்ட பிரதேசத்தில், சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிய இந்த நதி, கால மாற்றங்களினால் பூமிக்குள் புதைந்து போனது. இந்நதி குறித்த பல்வேறு ஆய்வுகள் […]

Read more

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை, பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை – 18, விலை 40 ரூ. உலகையே மலைக்க வைத்த ஊழல். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்குப் பெரும் அதிர்ச்சித் தோல்விக்குக் காரணமாக இருந்த ஊழல். இதையும் மிஞ்சி ஒரு ஊழல் உலகில் இனி நடக்க வாய்ப்பில்லை என்று கருதப்படும் ஊழல்… என்று பல ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் உள்ளடக்கிய ஊழல்,ஸ்பெக்ட்ரம் ஊழல், சுமார் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஊழல் விவகாரத்தின் முழுமையான பின்னணியை […]

Read more

நாடக மேடையும் திரை உலகமும்

நாடக மேடையும் திரை உலகமும், ஏ.எல்.எஸ். வீரய்யா, திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை – 17, விலை 75 ரூ கவிஞர் கண்ணதாசனின் பாசறையில் உருவான இந்நூலாசிரியர், சுமார் 50 ஆண்டுகள் சினிமாத் துறையிலும், அதற்கு முன் சில ஆண்டுகள் நாடகத் துறையிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவர். அந்த அடிப்படையில் இவ்விரு துறைகளைப் பற்றிய தனது சுவாரஸ்யமான அனுபவங்களையும், மற்ற பல செய்திகளையும் தொகுத்து அவ்வப்போது புத்தகங்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இந்நூலிலும் வியப்பான, சுவையான பல செய்திகளை துணுக்கு வடிவிலும், சிலவற்றை […]

Read more

ரெபிடெக்ஸ் கம்ப்யூட்டர் கோர்ஸ்

ரெபிடெக்ஸ் கம்ப்யூட்டர் கோர்ஸ்,  இ.ராமநாதன், ரெபிடெக்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 220 ரூ. கம்ப்யூட்டர், லேப்டாப், இன்டர்நெட், போன்றவற்றின் பயன்பாடுகளை அறியாமல், இனி எந்தவொரு இளைய தலைமுறையினராலும் எதிர்காலத்தை எதிர்கொள்வது என்பது மிகக் கடினம். அந்த அளவுக்கு இவற்றின் ஆதிக்கம் உள்ளது. அதே சமயம், இவற்றைப் பயன்படுத்த ஓரளவுக்கு ஆங்கில அறிவும், விஷய ஞானமும், பயிற்சியும் தேவை. ஆயினும் ஆங்கிலம் தெரியாதவர்களும் கம்ப்யூட்டரை பயன்படுத்தும் இலகுவான பயிற்சி முறையை எளிய தமிழில் இந்நூல் விளக்குகிறது. கம்ப்யூட்டர் என்றால் என்ன என்ற ஆரம்பப் பாடம் முதல், அதன் […]

Read more

கால வரிசையில் பாரதி பாடல்கள்

கால வரிசையில் பாரதி பாடல்கள், பதிப்பாசிரியர் – சீனி. விசுவநாதன், விலை 650ரூ., வெளியீடு – சீனி. விசுவநாதன், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை 35. மகாகவி பாரதி மீது தீராத பக்தி பூண்டு, பாரதியின் படைப்புகள் அனைத்தையும் தேடிப் பிடித்து ஒருங்கிணைக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் இந்நூலின் படைப்பாசிரியர். இவரது கடின உழைப்பை பாரதியின் உடன்பிறந்த தம்பி சி.விசுவநாதனும், கவிஞர் கண்ணாதசனுமே வியந்து பாராட்டியுள்ளனர். அதன்படி பாரதியின் படைப்புகள் அனைத்தையும் காலவரிசையில் தனித் தனியாகத் தொகுத்து, அவற்றை […]

Read more
1 19 20 21