சங்கத்தமிழ் களஞ்சியம்

சங்கத்தமிழ் களஞ்சியம், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 316, விலை ரூ.200; தமிழின் தொன்மையை விளக்கும் ஆவணங்களாக இருப்பவை சங்கத்தமிழ் இலக்கியங்கள். சங்கத்தமிழ் நூல்களை தொல்காப்பியம் முதல் பக்தி இலக்கியம் வரை 21 கட்டுரைகளாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வு எப்படி வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பது முதல் பக்தி இலக்கியங்களின் பண்பாட்டுக்கூறுகள் வரை தற்காலத் தமிழ் ஆர்வலர்களுக்குப் புரியும் வகையில் நூலில் கருத்துகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சங்கத்தமிழ் இலக்கியங்களில் பெண்பாற் புலவர்களின் முக்கியத்துவத்தை ஒளவையார் முதல் ஒக்கூர் மாசாத்தியார் உள்ளிட்டோர் வரை எந்தவகையில் […]

Read more

ஏர்வாடியம்

ஏர்வாடியம், பேராசிரியர்கள் இரா.மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 176, விலை 125ரூ. பிரபல எழுத்தாளரும், கவிதை உறவு ஆசிரியருமான ஏர்வாடி ராதாகிருஷ்ணனின் படைப்புகள் பற்றிய பார்வையை தரும் எளிமையான நுால் இது. அவரோடு நெருங்கி பழகிய இலக்கிய இணையர்கள், இரா.மோகனும், நிர்மலா மோகனும், ‘ஏர்வாடியம்’ படைத்திருப்பது இன்னும் தனிச்சிறப்பு. இதுவரை, 104 புத்தகங்கள் எழுதியுள்ள, தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமை ஏர்வாடியார். நாடகம், சிறுகதை, கட்டுரை, கவிதை என, பல பரிமாணங்களில் ஏர்வாடியாரின் எழுத்துக்கள் கோலோச்சுகின்றன. அதை தனித்தனி அத்தியாயங்களாக பிரித்து படிக்க […]

Read more

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம், இரா.மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம்,  பக்.184, விலை ரூ.120, இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழும் பின்னி பிணைந்த முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.முத்தமிழ், மூவேந்தர்,மூன்று தலைநகரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருளாலும், அமைப்பாலும் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ரத்தினச் சுருக்கமாக தந்திருப்பது இந்நூலின் சிறப்பம்சம். சிலப்பதிகாரம் முழுவதும் காணப்படுகின்ற பன்முகத் தன்மை குறித்து நூலாசிரியர் ஆராய்ந்து சுருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதோடு மட்டுமின்றி தமிழறிஞர்கள் மற்றும் பிற நாட்டு அறிஞர்களின் மேற்கோள்களை காட்டி ஒப்பிட்டும் விளக்குகிறார்.பண்டிய மன்னன் அரசவையில் […]

Read more

அ.ச.ஞானசம்பந்தன்

அ.ச.ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ. 50. தமிழறிஞர் என்று பொதுவாக அறியப்படும் அ.ச.ஞானசம்பந்தன் ஒரு தமிழறிஞராக மட்டுமல்லாது, எழுத்தாளர், சொற்பொழிவாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். அவரது அனைத்துத் தமிழ்ப் பணிகளையும் இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். தனது ஒன்பதாவது வயதில் துறையூர் சைவ சமய மாநாட்டில் முதன்முதலில் மேடையேறிப் பேசினார் அ.ச.ஞா. அதனைத் தொடர்ந்து பதினைந்தாவது வயதில், தூத்துக்குடியில் வ.உ.சி. ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரா.பி. சேதுப்பிள்ளை உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலருடன் அ.ச.ஞா.வும் உரையாற்றிப் […]

Read more

தமிழ்க்கதிர் வ.சு.ப.மாணிக்கனார்

தமிழ்க்கதிர் வ.சு.ப.மாணிக்கனார், இரா.மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 230, விலை 150ரூ. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நூல் இது. ஒருவரது நூற்றாண்டு விழா எனில் அவரது வாழ்க்கை வரலாறு, படைப்புகள், விருதுகள் என தனிப்பெருமை போற்றும் வழக்கமான நிலையில், வ.சுப.மாணிக்கனாரின் தமிழ் நூல்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாக்கியிருக்கிறது. தொல்காப்பியத்தை மற்ற பேராசிரியர்களிலிருந்து வ.சுப.மாணிக்கனார் எப்படி வேறுபட்டு பார்க்கிறார் என்பது மிக நுட்பமாக விளக்கப்பட்டுள்ளது. தமிழ் பல்துறை ஆராய்ச்சிக்கு உரியதாக வளர்ந்தாலும், யாப்பு குறித்த ஆய்வு […]

Read more

தமிழ்க்கதிர் வ.சுப.மாணிக்கனார்

தமிழ்க்கதிர் வ.சுப.மாணிக்கனார், இரா. மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 230, விலை 150ரூ. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நூல் இது. ஒருவரது நூற்றாண்டு விழா எனில் அவரது வாழ்க்கை வரலாறு, படைப்புகள், விருதுகள் என தனிப்பெருமை போற்றும் வழக்கமான நிலையில், வ.சுப.மாணிக்கனாரின் தமிழ் நூல்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாக்கியிருக்கிறது. தொல்காப்பியத்தை மற்ற பேராசிரியர்களிலிருந்து வ.சுப.மாணிக்கனார் எப்படி வேறுபட்டு பார்க்கிறார் என்பது மிக நுட்பமாக விளக்கப்பட்டுள்ளது. தமிழ் பல்துறை ஆராய்ச்சிக்கு உரியதாக வளர்ந்தாலும், யாப்பு குறித்த […]

Read more

அ. ஞானசம்பந்தன்

அ. ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. ‘புதிய புதிய அல்லல்களில் சிக்கித் தவிக்கும் தமிழ்ச் சமுதாயம், பெரிய புராணத்தைக் கற்பதன் மூலம் மீண்டும் தலை நிமிர்ந்து வாழ முற்படுமென்று நம்புகிறேன்.’(பக். 72) என்று கூறும், ‘ஆழ்ந்து அகன்ற நுண்ணியரான’ அ.க. ஞானசம்பந்தன், 35 ஆய்வு நூல்களையும், மூன்று மொழிபெயர்ப்பு நூல்களையும், ஆறு பதிப்பு நூல்களையும் வெளியிட்டு, அன்னைத் தமிழுக்கு அரணாகவும், அணியாகவும் விளங்கி 85வது அகவையில் காலமானார். நாவலர் சோமசுந்தர பாரதியாரால் இலக்கியத் துறைக்கு வந்த அ.ச..வின் […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள், அ.ச. ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்ய அகாதெமி, சென்னை, பக். 128, விலை 30ரூ. பேராசிரியர், எழுத்தாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் என்று பல பெருமைகளைக் கொண்ட முதுபெரும் தமிழ் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தனைப் பற்றி, இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளார் நிர்மலா மோகன். அ.ச.ஞா.வின் வாழ்வும் பணியும் பற்றிய கட்டுரையில் அவர் இலக்கியச் சிற்பியாக செதுக்கப்பட்டு உருமாறி வந்த வளர்ச்சிப்பாதை தொகுக்கப்பட்டுள்ளது. வி.எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி, திரு.வி.க. தெ.பொ.மீ. […]

Read more

ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1

ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1, நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 208, விலை 110ரூ. கபிலரின் வாழ்வியல் சிந்தனைகள், குறுந்தொகையில் உவமை நயம், கலித்தொகையில் நோக்கு, நற்றிணை நவிலும் கற்பு நெறி, சங்க இலக்கியத்தில் குந்தை, ஊடல் தணிக்கும் வாயிலாக, ஈத்துவக்கும் பெருஞ்சித்திரனார் உள்பட சங்க இலக்கியம் தொடர்பான 16 கட்டுரைகளும், திருக்குறள் உள்பட அற நூல்கள் தொடர்பான 3 கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. ஒக்கூர் மாசாத்தியாரின் தனித்திறன் கட்டுரை தமிழ்ப் பெண் கவியின் கற்பனை வளம் உவமை நயம், […]

Read more

பாண்டியர் காலச் செப்பேடுகள்

பாண்டியர் காலச் செப்பேடுகள், மு. ராஜேந்திரன், அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, பக். 352, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-3.html தமிழகத்தின் மிகப் பழைமையான பாண்டிய அரசு எப்போது ஆரம்பித்தது என்று குறிப்பிட்டு சொல்லமுடியாத நிலைமை இன்றளவும் நீடிக்கிறது. கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை கன்னியாகுமரியிலிருந்து திருப்பதி வரை ஆண்ட பெருமைக்குரிய பேரரசர்களாகவோ அல்லது தென்காசிப் பகுதிக்குள் மட்டுமே முடக்கப்பட்ட வலிமை குன்றிய சிற்றரசர்களாகவோ இருந்துள்ளனர். கி.பி. 3ஆம் நூற்றாண்டு […]

Read more
1 2