நினைவு நாட்களும் நெஞ்சில் அலைகளும்

நினைவு நாட்களும் நெஞ்சில் அலைகளும், கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 176, விலை 135ரூ. லட்சியத்துக்காக வாழ்வதென்பது அண்மைக்காலமாக அனைத்து அரசியல் கட்சிகளிலும் அருகி வருகிறது. இந்நிலையில், பொதுவுடைமை இயக்கத்துக்காக தங்களை அர்ப்பணம் செய்த தியாகிகளின் வரலாறு, இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது. ப.ஜீவானந்தம், கே.பாலதண்டாயுதம், கே.டி.கே.தங்கமணி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சி.எஸ்.சுப்பிரமணியம், சாம்பவான் ஓடை சிவராமன், சின்னியம்பாளையம் தியாகிகள் ஆகியோருக்கான அஞ்சலிக் கட்டுரைகள், கொண்ட கொள்கைக்காக வாழ்ந்த அற்புதமான மனிதர்களை அறிமுகப்படுத்துகின்றன. இவை ஜனசக்தி, தாமரை உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளியானவை. பொதுவுடைமை சித்தாந்தம் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, […]

Read more

நான் இந்து அல்ல

நான் இந்து அல்ல, சி.கே. மதிவாணன், மேன்மை வெளியீடு, விலை 100ரூ. அம்பேத்கரின் கருத்தாக்கங்களை இன்றைய சூழலில் அனுபவத்தில் ஆய்வு செய்யும் நூலாகும். நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- குமரித் தமிழன் தொல்காப்பியர், முதற்சங்கு பதிப்பகம், விலை 100ரூ. தொல்காப்பியர் பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூல், தொல்காப்பியர் குமரி மாவட்டத்தில்தான் தோன்றினார். அதுவும் காப்பிக் காட்டில்தான் தோன்றினார் என உறுதிபடக் கூறுகிறார் நூலாசிரியர் புலவர் சி. ஞானாமிர்தம். நன்றி: தினத்தந்தி, 7.9.2016.

Read more

தமிழ் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு

தமிழ் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு, தொகுப்பாசிரியர் ரவி. வைத்தீஸ்வரன், ரா. ஸ்தனிஸ்லால், மேன்மை வெளியீடு, பக். 336, விலை 250ரூ. சமய ஆய்வின் பயிற்சிக் கையேடு! இந்திய சமூக வரலாற்றில் சமயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், சமயம், ஜாதி ஆகியவற்றைக் குறித்த பாடத்துறையோ, ஆய்வுக் கழகமோ தமிழகம் மட்டுமல்ல இந்தியக் கல்விச் சூழலில் இல்லை. இதனால், சமூகவியல் ஆய்வில் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்ப, இந்தியா – இலங்கை – கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் […]

Read more

பொன்விழா சுற்றுலா

பொன்விழா சுற்றுலா, கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 208, விலை 140ரூ. ஜம்பதாண்டைக் கடந்துவிட்ட நமது தேசத்தின் சுதந்திரத்தை இன்றைய தலைமுறைக்குச் சொல்லப்பட வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட நூல். இந்த தேசத்திற்காக பாடுபட்டு மறைந்த மாமனிதர்களின் ஊர்களுக்கு மாணவர்கள் சுற்றுலா செல்வது போன்று இந்நூலை ஜீவபாரதி படைத்திருப்பது சிறுவர்களுக்கு பயன்தரும். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 31/8/2016.

Read more

பாவேந்தர் உள்ளம்

பாவேந்தர் உள்ளம், மன்னர் மன்னன், முல்லை பதிப்பகம், பக். 192, விலை 100ரூ. பல்வேறு ஏடுகளில், சிறப்பு மலர்களில் பாவேந்தர் பற்றி மன்னர் மன்னன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பாவேந்தரின் வாழ்க்கையிலிருந்து அவரின் படைப்புகளைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருப்பதால் பாவேந்தரின் உள்ளத்தை எளிதில் நமம்முன் வைக்க முடிந்திருக்கிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/6/2016.   —- முஃபாரோலின் அழகிய மகள்கள், முத்தையா வெள்ளையன், மேன்மை வெளியீடு, பக். 88, விலை 90ரூ. அமெரிக்கா, ரஷ்யா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் […]

Read more

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரை இசைப் பாடல்கள்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரை இசைப் பாடல்கள், கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, விலை 150ரூ. தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர்களில் ‘மக்கள் கவிஞர்’ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு தனித்த இடம் உண்டு. 24 வயதில் பாடல் எழுதத் தொடங்கிய அவர் 29 வயதில் மரணத்தைத் தழுவினார். 5 ஆண்டு காலத்தில் 57 திரைப்படங்களுக்கு சுமார் 201 பாடல்களை எழுதியுள்ளார். காதல் பாடல்களில் கண்ணியத்தையும், பக்திப் பாடல்களில் பகுத்தறிவையும், சமூகப் பாடல்களில் பொதுவுடைமை கருத்துக்களையும் புகுத்தியவர். ‘சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா’, ‘தூங்காதே […]

Read more

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள், ப்ரியாபாலு, கண்ணப்பன் பதிப்பகம், பக். 560, விலை 400ரூ. நன்னெறிகளை கதாபாத்திரங்களின் மூலம் எடுத்துரைக்கும் இக்கதைகள், மந்திரங்கள், தந்திரங்கள், மாயாஜாலங்கள் நிறைந்தவை. வாழ்க்கைக்குத் தேவையன ஆலோசனைகளையும் வழங்கும் கதைகள் இவை. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 04/5/2016.   —- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரை இசைப் பாடல்கள், தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 192, விலை 150ரூ. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்களில் கண்ணியத்தையும் பகுத்தறிவையும் பொதுவுடமையையும் சிறப்பாகக் காணலாம் என்பதற்கு இத்தொகுப்பு நூலே சான்று. -இரா. மணிகண்டன். […]

Read more

தம்பலா

தம்பலா, பாரதிவசந்தன், மேன்மை வெளியீடு, விலை 150ரூ. புதுவை எழுத்தாளர் பாரதிவசந்தன் எழுதிய “தம்பலா” சிறுகதைக்கு, ஒரு தனிச்சிறப்பு உண்டு. இக்கதை தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளில் ஒரே புத்தகமாக வெளிவந்துள்ளது. எனவே ‘மூன்று மொழிகளில் வெளிவரும் தமிழின் முதல் சிறுகதை’ என்ற சிறப்பை ‘தம்பலா’ பெற்றுள்ளது. தீண்டாமைக்கும், சாதி வெறிக்கும் எதிராக இக்கதையை எழுதியிருக்கிறார், பாரதி வசந்தன். வேகமான நடை, அருமையான வர்ணனைகள். தற்கால தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சிறந்த கதை இது. நன்றி:தினத்தந்தி, 20/4/2016.   —- தெருவோரங்கள், […]

Read more

பாரதியார் சரித்திரம்

பாரதியார் சரித்திரம், செல்லம்மாள் பாரதி, அழகு பதிப்பகம், விலை 100ரூ. மகாகவி பாரதியாரின் வரலாற்றை பலரும் எழுதியுள்ளனர். இது, பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதி எழுதிய புத்தகம், எனவே தனிச்சிறப்பு வாய்ந்தது. “பாரதியாரின் பதினாலாம் வயதில் எங்களுக்கு மணவினdை முடிந்தது. அப்போது எனக்கு வயது ஏழு” என்று கூறும் செல்லம்மாள் பாதி, மதம் பிடித்த யானையால் பாரதியார் தாக்கப்பட்ட சம்பவத்தையும், அவர் மறைவையும் படிப்போர் கண்களில் நீர் வரும் விதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம். நீண்ட இடைவெளிக்குப் பின் […]

Read more
1 2 3