செய்தி எழுதப் பழகுவோம்

செய்தி எழுதப் பழகுவோம், ஆ.குணசீலன், வசந்தா பிரசுரம், விலைரூ.90 பத்திரிகைகளுக்கு செய்தி எழுதுவது குறித்து அனுபவ அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நுால். பத்து தலைப்புகளில் சிறு கட்டுரைகளை உள்ளடக்கியது. ஈர்க்கும் வகையில் எளிமையாக செய்திகள் எழுதுவது பற்றி விளக்குகிறது. பத்திரிகைத்துறையில் பணியாற்ற விரும்புவோருக்கு உதவும். நன்றி: தினமலர், 18/10/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம், (பாகம் 7), பேராசிரியர் டாக்டர் எஸ் சுவாமிநாதன், வசந்தா பிரசுரம், பக்கம் 296, விலை 220ரூ. ஆயுர்வேத மருத்துவப் பட்டம் பெற்று ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் இந்நூல் ஆசிரியர், தினமணி கதிரில் 2004 முதல் 2017 வரை வாசகர்கள் தங்கள் நோய்களுக்கான மருத்துவம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பே இந்நூல். இதற்கு முன் இந்நூலின் ஆறு பாகங்கள் இதேபோல் பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு வெளியாகிய நிலையில் நல்ல வரவேற்பு […]

Read more

எங்கே போகும் இந்த பாதை?

எங்கே போகும் இந்த பாதை?, கலைநன்மணி மகிழ்நன், வசந்தா பிரசுரம், பக். 144, விலை 90ரூ. பள்ளி, கல்லுாரிப் பாடங்களை எத்தனைச் சிறப்பாகப் படித்தாலும், அன்றாட உலக நடப்புகளைப் புரிந்து சாதுர்யமாகத் தன்னை வழி நடத்திச் செல்பவரே வெற்றி அடைவதைக் காணலாம். பெரும்பாலும் ஊடகங்கள் வாயிலாகவும், இணையதளங்கள் மூலமாகவும் ஏராளமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன. சமூக மேம்பாட்டை பதிவு செய்யும் நுால்களும் வெளிவருகின்றன. அவற்றைப் படித்து, முக்கியமான சாரங்களை சமீபத்திய மாற்றங்களோடு பொருத்தி, விழிப்புடன் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். கடந்த ஏழாண்டுகளாக […]

Read more

முன்னேற்றம் உங்கள் கைகளில்

முன்னேற்றம் உங்கள் கைகளில், துடுப்பதி ரகுநாதன், வசந்தா பிரசுரம், பக். 192, விலை 125ரூ. மூத்த எழுத்தாளரான இந்நூலாசிரியர் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். கட்டுரைகள், குறுநாவல்களை படைத்துள்ளார். இவரின் ‘மாயமான காப்பகம்’ என்ற நாவல் 2013ல் வெளிவந்து, சிறந்த நாவலாக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தால் தேர்வு செய்து, விருது பெற்றது. வாழ்க்கையில் முன்னேற விரும்புவர்களுக்கு, தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, ஊக்கத்துடன் செயல்படத் தூண்டும் விஷயங்களை தினமலர் மற்றும் பாக்யா போன்ற பத்திரிகைகளில் இந்நூலாசிரியர் எழுதிய தொடர் கட்டுரைகள் வாசகர்களின் வரவேற்பை பெற்றன. அவற்றில் சிறப்பான 62 […]

Read more

மனதைத் தொட்ட சில நிகழ்வுகள்

மனதைத் தொட்ட சில நிகழ்வுகள், சி.இரத்தினசாமி, வசந்தா பிரசுரம், பக். 136, விலை 100ரூ. ஒரு விஷயத்தை ஒருவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த, கதை மூலம் ஒரு விஷயத்தை சொல்வது மிக சிறந்த வழி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கதை கேட்பதிலும், படிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், வாழ்வியல் தத்துவங்கள், வாழ்க்கையின் செயல்பாடுகள் ஆகியவற்றை தமிழ் மணத்துடன், அழகுற, எளிய நடையில், சிறு சிறு கதைகளாக தொகுத்து, ஆசிரியர் தந்துள்ளார். இந்த கதைகளை படித்த போது, அந்த கதாபாத்திரங்கள், நம் மனதில் […]

Read more

புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்

புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள், பட்டத்தி மைந்தன், வசந்தா பிரசுரம், விலை 240ரூ. காலத்தால் அழியாத கதைகளில் விக்கிரமாதித்தன் கதைகளும் ஒன்று. சிறுவர் முதல் வயோதிகர் வரை அனைவரும் ஆர்வத்துடன் படிக்கும் 55க்கும் மேற்பட்ட விக்கிரமாதித்தன் கதைகள் விறு விறுப்பாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், ஏ.சி. திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், பக். 352, விலை 220ரூ. கதாசிரியர், திரைப்பட இயக்குநர் என்ற புகழுக்கு உரியவரான கலைமாமணி ஏ.சி. திருலோகசந்தர் தன் சமகாலத்து சினிமா அனுபவங்களை இந்நூலில் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். திரு. ஏவி.எம். சரவணன் நட்பு தொடங்கி, அவரது பிறப்பின் பிரமிப்பில் ஆரம்பித்து, கல்லூரி வாழ்க்கை, முதல்பட வாய்ப்பு, எம்.ஜி.ஆர். சிவாஜி உள்ளிட்டோரை இயக்கியது, ‘அன்பே வா’ உள்ளிட்ட மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய அனுபவம், ஜனாதிபதி பரிசு பெற்றது. ஜெயலலிதா நடித்த ‘எங்கிருந்தோ வந்தாள்’, […]

Read more

நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், ஏ.சி. திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், பக். 352, விலை 220ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024366.html தமிழ் திரைப்பட இயக்குனர் ஏ.சி. திருலோகசந்தர், தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்திருக்கிறார் இந்த நூலின் மூலம். ஒரு திரைக்கதாசிரியராக, உதவி இயக்குனராக எத்தனை போராட்டங்களைச் சந்தித்து, இயக்குனராக வேண்டியிருந்தது. அதன்பின் அந்தப் புகழைத் தக்க வைத்துக் கொள்ள, எத்தனை போராட வேண்டியிருந்தது என்று சினிமாவைத் தாண்டிய பல விஷயங்கள் நூலில் அடங்கியிருப்பது, திரைத்துறையில் வெல்வதற்கு போராடும், உதவி இயக்குனர்கள் […]

Read more

நினைவு அலைகள்

நினைவு அலைகள், கலாநிகேதன் பாலு, வசந்தா பிரசுரம், சென்னை, பக். 206, விலை 150ரூ. கலைத் துறையிலும், எழுத்துத் துறையிலும் ஆர்வம் உள்ளவர் இந்நூலாசிரியர். இவர் 60களில் கலாநிகேதன் சபாவில் செயலாளர் பொறுப்பில் இருந்தபோது, அன்றைய பிரபலங்கள் பலருடனும் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. அந்த அனுபவங்களை அமுதசுரபி உள்பட பல்வேறு பத்திரிகைகளிலும் எழுத, அது பிரபலமானது. இந்நூலில் அவையும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலின் முதல் கட்டுரையில் ஷெனாய் வாத்ய மேதை பிஸ்மில்லாகான் சென்னை வந்தபோது, அவரையும் அவரது இசைக்குழுவினரையும் திருமதி சுப்புலெட்சுமி கல்கி சதாசிவம் தங்கள் […]

Read more

நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், ஏ.சி. திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், சென்னை, பக். 256, விலை 220ரூ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 65 திரைப்படங்களை இயக்கி வெற்றிகரமான திரை ஆளுமையாளகத் திகழ்ந்தவர் ஏ.சி. திருலோகசந்தர். அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை உள்ளது உள்ளவாறு பதிவு செய்துள்ள புத்தகமே நெஞ்சம் நிறைந்த நினைவுகள். தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.சி. திருலோகசந்தர் இந்தப் புத்தகத்தையும் அவருடைய படங்களில் இடம்பெறும் காட்சிகளைப் போன்றே அழகுற ஆவணப்படுத்தியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், ஏவி. […]

Read more
1 2 3