சத்சங்கம்

சத்சங்கம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 160, விலை 150ரூ. அறிவு மட்டுமே ஒருவரை மேன்மையானவர் ஆக்கி விட முடியுமா? முடியாது என்கிறார் ஆசிரியர். மெத்த படித்தவராக, உலகே வியக்கும் தலைவராக ஒருவர் திகழ்ந்தாலும், இவ்வுலகில் யாராவது ஒருவருக்குக் கூட அவர் பகைவராகத் தென்பட்டால் அல்லது நடந்து கொண்டால், அவர் மேன்மையானவர் என்ற சொல்லுக்கு உகந்தவர் அல்ல. கோபம், அகந்தை, சோம்பல், வெறுப்பு, பிறழ்ந்து பேசுதல் ஆகியவை மனித இயல்பு என கருதினாலும், அவை தான் ஒருவரை பண்பட அல்லது மேன்மையடையச் […]

Read more

நமக்குள் சில கேள்விகள்

நமக்குள் சில கேள்விகள், வெ. இறையன்பு, தினத்தந்தி பதிப்பகம், பக். 224, விலை 160ரூ. அறிவு உள்ள யாவரும் கேள்விகள் கேட்கலாம். ஆனால் எத்தகைய கேள்வி கேட்கிறோம் என்பதுதான் ஒவ்வொருவரையும் தனிப்படுத்திக் காட்டுகிறது. பயனுள்ள பதிலுக்கான கேள்வியைக் கேட்பவரது அறிவு முதிர்ச்சி அடைகிறது. அத்தகைய நூற்றுக்கணக்கான கேள்விகளை தமக்குத் தாமே கேட்டு, அதற்கான விடைகளையும் தாமே தேடியும் சிந்தித்தும் தொகுத்திருக்கிறார் இறையன்பு. வாசிக்க வாசிக்க நமக்குள் எழும் பல கேள்வி முடிச்சுகள் சிக்கல் பிரிந்து அவிழ்கிறது. அதன் விளைவாக அறிவில் மலர்ச்சி முகிழ்கிறது. பல […]

Read more

சத்சங்கம்

சத்சங்கம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.160,  விலை ரூ.150. குருவுக்கும் சீடனுக்கும் இடையில் நிகழும் உரையாடல் வடிவில் ஆன்மிகம் குறித்த தெளிவான புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. ஆன்மிகம் என்பது வழிபாடு என்கிற செயல்முறையோடு நின்றுவிடுவதில்லை.யார் அச்சத்திலிருந்து விடுபடத் தொடங்குகிறார்களோ அவர்களே ஆன்மிகத்தில் அடியெடுத்து வைக்கிறார்கள் என்று பொருள். அவர்கள் எதிர்காலம் குறித்துப் பயப்படமாட்டார்கள்.மகிழ்ச்சியால் ஆன்மிகமே தவிர, மகிழ்ச்சிக்காக ஆன்மிகம் இல்லை.ஆன்மிகம் என்பதே அன்பு. எதிரி என்று யாரும் இல்லாத நிலையே ஆன்மிகம். நம்மைப் பார்த்து யாரும் பொறாமைப்படாதவாறு வாழ்வதே சிறந்த […]

Read more

நமக்குள் சில கேள்விகள்

நமக்குள் சில கேள்விகள், வெ.இறையன்பு, தினத்தந்தி பதிப்பகம், விலை 160ரூ. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான வார, மாத இதழ்களில் கேள்வி பதில் பகுதி இடம் பெறுகிறது. அந்த இதழின் ஆசிரியரோ அல்லது பிரபலமானவர்களோ வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்கள். இது வாசகர்களின் சிந்தை கவர்ந்த பகுதியாகவே திகழ்ந்து வருகிறது. பெரும்பாலும் கேள்வி வாசகர்களால்தான் கேட்கப்படுகிறது. ஆனால் இதற்கு மாறாக ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், பேச்சளாருமான வெ.இறையன்பு கேள்விகளை தானே உருவாக்கி அதற்குத் தக்க பதில்களை அளித்து வந்தார். ராணி வார இதழில் 100 வாரங்கள் […]

Read more

காற்றில் கரையாத நினைவுகள்

காற்றில் கரையாத நினைவுகள், வெ.இறையன்பு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 160ரூ. இந்து தமிழ்’ நாளிதழில் வெ.இறையன்பு வாரந்தோறும் தொடராக எழுதி பெரும் வரவேற்பு பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது. பயணங்கள், அனுபவங்கள் வழியாகத் தன்னை செழுமைப்படுத்திக்கொண்ட விஷயங்களை சுவாரசியமான நடையில் பகிர்ந்துகொள்கிறார் இறையன்பு. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் நமக்குள் பசுமையான கருப்பு – வெள்ளைக் காட்சிகளை ஓட்டிக் காண்பிக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 13/4/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

மூளைக்குள் சுற்றுலா

மூளைக்குள் சுற்றுலா, வெ. இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 658, விலை 1500ரூ. ‘மூளைக்குள் சுற்றுலா’ என தலைப்பிட்டு, நம் மூளையின் மூலை முடுக்குக்கெல்லாம் செல்ல வைத்து விட்டார், நுாலாசிரியர். சிம்பன்சியை விட, மூன்று மடங்கு மூளை, நமக்கு அதிகம் என்பதில் துவங்கி, புராணம், கடவுள், மதங்கள் தோன்றியதன் காரணத்தை விளக்குகிறார். உலகச் சண்டைகள் ஏன் உருவாகுகின்றன என்பதற்கு, இதுவரை யாரும் சொல்லாத, அழகான விளக்கமும் வேறு. ‘ஹைட்ரா’ விலங்கின் தலையை வெட்டினால், இரண்டு தலைகள் முளைக்கின்றன. அதற்கும், ஜெல்லி மீனுக்கும் […]

Read more

காகிதம்

காகிதம், வெ.இறையன்பு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், விலை 50ரூ. மனிதனின் கண்டுபிடிப்புகளுள் மகத்தான இடம் காகிதத்துக்கு உண்டு. அறிவுக் கடத்தியாக தகவல்களை காகிதம் சுமக்கத் தொடங்கிய பிறகுதான், அகிலத்தின் அறிவுக் கண் திறந்தது. உயர்வான காகிதத்தை உதாசீனமாகக் கசக்கிவிடாமல், அதன் அருமை பெருமையை உணரச் சொல்லும் அற்புதமான புத்தகம். காகிதத்தைக் கண்டுபிடித்தவர் ஒரு திருநங்கை என்பது போன்ற வித்தியாசமான தகவல்களும் நிறைய இருப்பது கூடுதல் சுவாரஸ்யம்! நன்றி: குமுதம், 14/11/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026622. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

உச்சியிலிருந்து தொடங்கு

உச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி), வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 175ரூ. வாழ்க்கை என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். வெற்றியும் தோல்வியும், மகிழ்ச்சியும் துன்பமும், வரவும் இழப்பும் கொண்டதுதான் மனித வாழ்க்கை. ஏற்ற இறக்கம் நிறைந்த மனித வாழ்க்கையில் பிரச்சினைகளுக்கு பயந்து தற்கொலை எண்ணத்தை தேடிச் செல்வோரை நல்வழிப்படுத்தும் கருத்துக்கள் நிறைந்த நூல் இது. தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது? அதற்கு உளவியல், குடும்ப, சமூக காரணங்கள் என்ன?, அதில் இருந்து முண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? […]

Read more

அன்புள்ள மாணவனே

அன்புள்ள மாணவனே, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை135ரூ. சோதனைகளைக் கடந்து சாதனைகளைச் செய்ய விரும்பும் மாணவர்களுக்கு மகத்தான வழிகாட்டல். அறிவுரைகளாக இல்லாமல் அறவுரைகளாகவும், கடிந்து சொல்லாமல் கடிதங்களாகவும் எழுதியிருக்கும் விதம் அற்புதம். அனுபவத்தைப் பாடமாகத் தந்திருப்பதைப் படிக்கும் மாணவர் யாராயினும் ஏதேனும் ஒருவகையிலாவது சாதனை படைப்பார் என்பது நிச்சயம். நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026633.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி)

உச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி), வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 175ரூ. விதியால் இறப்பவர்களைவிட விரக்தியால் தற்கொலை செய்து கொள்பவர்களால் ஏற்படும் இழப்புகள் கொடுமையானது. ஒற்றை விநாடியில் முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்வதற்கு பதில் சில நிமிடங்கள் நிதானித்து மனம் விட்டுப் பேசினால் எத்தகைய பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். உயிரை பாதிக்கும் வழியில் இருந்து சாதிக்கும் பாதைக்கு மனதைத் திருப்பும் முறையினை எளிமையான நடையில் அருமையாகச் சொல்லியிருக்கிறார் இறையன்பு. படித்து முடித்ததும் மனதில் தளர்ச்சி நீங்கி தன்னம்பிக்கை பரவுவது நிச்சயம். நன்றி: […]

Read more
1 2 3 4