மகாத்மா ஜோதிராவ் புலே

மகாத்மா ஜோதிராவ் புலே, க.ஜெயச்சந்திரன், காவ்யா, பக்.88, விலை ரூ.90. மகாராஷ்டிராவில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியவர் ஜோதிராவ் புலே. 1827 இல் பிறந்த அவர், அனைத்துச் சாதியிலும் உள்ள ஆண்களும், பெண்களும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக 170 ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிகளைத் திறந்து நடத்தியவர். அதற்காக அவருடைய தந்தை அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார் என்றபோதிலும் மனம் கலங்காமல் தொடர்ந்து தனது பாதையில் நடைபோட்டவர். விதவைப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார். விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் […]

Read more

சிற்பியின் படைப்புத்தளம்

சிற்பியின் படைப்புத்தளம், தே.ஞானசேகரன், காவ்யா, விலை 450ரூ. கவிதை உலகில் தனியிடம் பெற்றவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் சிற்பி படைத்த கவிதைகளின் ஆய்வு நூலாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. ஏற்கனவே வெளிவந்த சிற்பிபின் படைப்புக்கலை, சிற்பி மரபும் புதுமையும் ஆகிய இரண்டு நூல்களையும் தொகுத்து ஒரே நூலாக இது வெளியிடப்பட்டு இருக்கிறது. மண் சார்ந்த கற்பனைகளுடனும், மக்கள் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையிலும் சிற்பி எழுதிய கவிதைகளை திறனாய்வு செய்து பல எழுத்தாளர்கள், அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் இலக்கியத் தரத்துடன் மிளிர்கின்றன. […]

Read more

காசி கதைகள்

காசி கதைகள், மயிலம் அய்யப்பன், காவ்யா, விலை160ரூ. நூலின் பெயர் காசி கதைகள் என்றாலும், இதில் இடம் பெற்றுள்ள அனைத்து கதைகளும் காசு, துட்டு, பணம் தொடர்பான சம்பவங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. மயிலம் வட்டாரத்து மக்களின் அன்றாட வாழ்வீயல், அவர்களது குடும்பம், வழிபடும் தெய்வம் என்று பல அம்சங்களை இந்தக் கதைகள் தாங்கி இருப்பதால் படிக்க சுவாரசியமாக இருக்கிறது. நீரோட்டம் போன்று அமைந்துள்ள நடை, இந்த நூலுக்கு வலுவூட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 6-3-19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000028021.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

வையாபுரியாரின் கால ஆராய்ச்சி

வையாபுரியாரின் கால ஆராய்ச்சி, பேராசிரியர் அ.கா.பெருமாள், காவ்யா, பக். 140, விலை 150ரூ, ஆராய்ச்சி, பதிப்பு எனும் இரு துறைகளிலும் தன் வாழ்வை முழுவதும் செலவிட்ட எஸ்.வையாபுரி, 21 நுால்களை வெளியிட்டுள்ளார்; 45 நுால்களை பதிப்பித்துள்ளார். வையாபுரிப் பிள்ளையைப் பற்றி எழுதியோர் எல்லாருமே, அவருக்குத் தமிழகத்தில் இருந்த எதிர்ப்பை, எழுதாமல் விட்டதில்லை என்று கூறும் ஆசிரியர், ‘எஸ்.வி., வடமொழி உட்பட, பல மொழிகள் அறிந்தவர். ‘தமிழ் ஆய்வுக்குத் தேவையான மேலான பின்னணி உடையவர். தமிழ் மொழியின் மேல் அவர் கொண்டிருந்த மதிப்பும், நேசமும் அவரது […]

Read more

பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்

பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல், முனைவர் இரெ.குமரன், காவ்யா, பக். 316, விலை 300ரூ. பொதுவாக புலவர்கள் எல்லை கடந்த கற்பனைத் திறன் கொண்டவர்கள். ஒளி புகா இடத்திலும் கவி புகுவான் என்று சொல்லக் கேட்டதுண்டு. அசாத்திய கற்பனைத் திறன் காணாத உலகுக்கெல்லாம் உள்ளத்தை வழிநடத்தி உலா செல்வதோடு, ஊகங்களின் வழியே புதுமைகளை நிர்மாணிக்கிறது. இவ்வுலகின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் கற்பனைகளாலும் கைதேர்ந்த ஊகங்களாலும் அடையப்பட்டவையே. ஆனால், அவை அடையப்பெறும் முன், அதற்கான வித்தை யாரோ இட்டுவிட்டுச் செல்கின்றனர். அவை இயற்கையின் அங்கமாகவும் இருக்கலாம். நம்புதற்கரிய […]

Read more

நாம் திராவிடர்

நாம் திராவிடர், முனைவர் ப.கமலக்கண்ணன், காவ்யா, பக்.408, விலை 400ரூ. கொள்கையில் விடாப்பிடியாக இருந்து சாதனைகள் பல செய்தவர் ஈவெ.ரா., அதற்காக எத்தகைய தியாகங்களையும் செய்யத் தயங்காதவர். நுால் முழுவதும் அவரது எண்ணம், கொள்கை, விளக்கம் பெறுகின்றன. இந்த நுாலில், ‘மொழி பற்றிய தமது எண்ணங்களில், தமிழ் மொழியைச் செம்மை செய்து, உலக அரங்கில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரவேண்டும் (பக். 53) என்கிறார். ஆனால் ‘காட்டுமிராண்டி’ என்ற அவரது கருத்தையும், தாய்மொழி குறித்த அவரது புலமையையும் இதில் எழுதியிருந்தால், ‘திராவிடக் கண்ணோட்டம்’ எது […]

Read more

பதிலிகள்

பதிலிகள், மணிநாத், காவ்யா, பக். 140, விலை 150ரூ. முற்போக்கு சிந்தனை, மனித நேயம், அடித்தட்டு மக்களிடம் அக்கறை, நேர்த்தியான படைப்பாக்கம் கொண்ட பதிலிகள் எனும் இந்நூலானது, லவகுசா பாலம், அவலம், நீர்க்கோடுகள், பசி, உறுத்தல் உள்ளிட்ட 15 சிறுகதைகளின் தொகுப்பு. இந்நூலில் உள்ள சிறுகதைகள், செம்மலர், தாமரை, வண்ணக்கதிர், கல்கி, மக்கள் வீதி, கணையாழி உள்ளிட்ட இதழ்களில் ஏற்கனவே வெளியாகி வாசகர்களின் வரவேற்பை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினமலர்,6/1/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026541.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

கா.சு.பிள்ளை சைவப் பெருமக்கள்

கா.சு.பிள்ளை சைவப் பெருமக்கள், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.674, விலை ரூ.680. சைவத்திற்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கா.சு.பிள்ளை என்று அழைக்கப்படும் கா.சுப்பிரமணிய பிள்ளை. இவர் 1925 – இல் எழுதி வெளியிட்ட சைவ சித்தாந்த சந்தானாச்சாரியர்களும் அவர்களின் அருள் நூல்களும் என்ற நூலும், சைவ சித்தாந்த விளக்கம் எனும் நூலும், 1930 – இல் அவர் எழுதி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்ட தாயுமானவ சுவாமிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் என்ற நூலும், பட்டினத்தடிகளின் காலமும் வரலாறும் என்ற நூலும், 1932 – […]

Read more

வையாபுரியாரின் கால ஆராய்ச்சி

வையாபுரியாரின் கால ஆராய்ச்சி, அ.கா.பெருமாள், காவ்யா, பக்.140, விலை ரூ.150. எஸ்.வி.என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆராய்ச்சி அறிஞர் எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆராய்ச்சி உலகில் பலருடைய விமர்சனங்களையும் எதிர்கொண்டவர். அவரைப் பலரும் விமர்சித்ததற்கு திருவள்ளுவர், மாணிக்கவாசகர் குறித்த கால ஆராய்ச்சியே முதன்மையான காரணம் என்றும் சொல்லப்படுகிறது. கண்மூடித்தனமாக முந்தைய மரபை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் தாம் கண்ட ஆராய்ச்சி முடிவுகளை – உண்மைகளைச் சொல்லத் தயங்காதவர் எஸ்.வி. எட்டுத்தொகை நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், நிகண்டுகள், புராணங்கள், இதிகாசங்கள் என எஸ்.வி. செய்த 50க்கும் மேற்பட்ட இலக்கியங்களின் கால […]

Read more

வைகைக் கதைகள்

வைகைக் கதைகள், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.604, விலைரூ.600; வைகை நதி ஓடிவரும் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்றிதழ்கள், பேரிதழ்களில் எழுதிய எழுத்தாளர்களின் 56 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் கவிஞர் வைரமுத்து எழுதிய சிறுகதை முதல் நவீனகால எழுத்தாளர் லக்குமணசாமி எழுதிய சிறுகதைகள் வரை இடம்பெற்றுள்ளன. வைகை நதி நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் கதைகள் தொகுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தாலும், குறிப்பாக சில கதைகளைத் தவிர, பல கதைகளில் தென்மாவட்ட மக்களின் வாழ்க்கை, பழக்க, வழக்கங்கள், பேசும் மொழி […]

Read more
1 6 7 8 9 10 22