சிதரால் திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி
சிதரால் திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி, சிவ. விவேகானந்தன், காவ்யா, பக்.301, விலை ரூ.300. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குமரி நாட்டில் சமணம் தழைத்தோங்கி வளர்ந்திருந்தது என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. இன்றும் அந்த மதத்தின் அழியாத ஆவணங்களாக பல இடங்கள் திகழ்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது திருச்சாரணத்துமலை எனப்படும் சிதரால் ஆகும். சமண மதக் கல்வெட்டுகளும், சிற்பங்களும், ஆலயங்களும் காலஓட்டத்தில் சிதைந்தும், மாற்றமடைந்தும் வந்துள்ளதை அறிய முடிவதுடன், அவை பற்றிய புதிய புதிய தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன. சமயவியல், கட்டடக் கலையியல், கல்வெட்டியல், சிற்பவியல் […]
Read more