பின் நவீனநிலை – இலக்கியம் அரசியல் தேசியம்

பின் நவீனநிலை – இலக்கியம் அரசியல் தேசியம், அ. மார்க்ஸ், புலம் வெளியீடு, 332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 5. விலை ரூ. 380 90களில் சோவியத் ரஷ்யா உடைந்து சிதறியபோதுதான் கம்யூனிஸ்ட்கள் பலருக்குக் கனவு கலைய ஆரம்பித்தது. ‘ராட்சச’ ஜார் ஆட்சியை வீழ்த்தி எழுந்த ‘ரட்சக’ ரஷ்யா அனைத்து மக்களுக்குமான பூலோகமாகத்தான் இருக்க முடியும் என்று அனைவரும் கருதினர். ஆனால் அடக்கப்பட்ட தேசிய இனங்களுக்குள் கிளம்பிய முரண்பாடுகள் ஒரு பெரிய தேசத்தையே சின்னச் சின்னதாய் உடைக்கத் தொடங்கியது. அந்த தத்துவத்தைப் […]

Read more

கனவு ஆசிரியர்

கனவு ஆசிரியர், தொகுப்பாசிரியர்: க. துளசிதாசன், புக்ஸ் ஃபார் சில்ட்ரன், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18, விலை ரூ. 90. ‘உங்கள் வாழ்க்கையில் யார் மிக முக்கியமான வழிகாட்டி என நினைக்கிறீர்கள்?’ என்று, வர்த்தக இதழ் ஒன்று பெரிய தொழில் அதிபர்கள் எட்டுப் பேரிடம் கேட்டது. அதில் ஆறு பேர், தங்களது பள்ளிக்கூட ஆசிரியர்கள் என்று சொன்னார்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் முதல் ஹீரோ, அவர்களது ஆசிரியர்கள்தான். நல்லதும் கெட்டதுமான பல நடவடிக்கைகள் பள்ளியில் இருந்துதான் தொடங்குகின்றன என்பதால், அதற்குக் […]

Read more

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம், எஸ்.ஏ.எம். பரக்கத் அலி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 600002, விலை ரூ. 85. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-394-6.html இந்த தேசத்தில் மிக மர்மமான முறையில் பல கொலைகள் நடக்கின்றன. அதில் செத்துப்போனவர்களில் பலர் தகவல் உரிமைப் போராளிகளாக இருக்கிறார்கள். வாழ்க்கைத் தரத்தில் வறுமைக் கோட்டைத் தொடும் நிலையில் இருக்கும் இவர்களைக் கொல்ல வேண்டிய அவசியம் பெரிய முதலைகளுக்கு, அரசியல் தாதாக்களுக்கு ஏன் வருகிறது என்று கண்டுபிடிக்க முடியாமலேயே […]

Read more

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108, விலை 75 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-082-3.html ஆங்கிலத்தில் நீங்கள் எழுதியதில் ஒருவர் குற்றம் கண்டுபிடித்தால், கூனிக்குறுகிப் போகிறீர்கள். ஆனால், தமிழில் தவறு இருந்து, அதை யாராவது சுட்டிக்காட்டினால், ‘ஐ டோண்ட் நோ தட் மச் தமிழ்’ என்று பெருமையாகச் சொல்வீர்கள். தாய்மொழியில் பேச, எழுதத் தெரியாததுகூட பெருமையாகச் சொல்வீர்கள். தாய்மொழியில் பேச, எழுதத் தெரியாததுகூட பெருமையாக […]

Read more

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை, நாவலர் ஏ. இளஞ்செழியன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-02, விலை 95ரூ இங்கே தி.மு.க. இருப்பதைப்போல இலங்கையிலும் தி.மு.க. இருந்தது என்பதே பலருக்கும் தெரியாது. பெரியாரின் தலைமையை ஏற்று திராவிடர் கழகம் இங்கே இருந்தபோது இலங்கையிலும் அது உதயமானது. பெரியாரிடம் இருந்து முரண்பட்டு அண்ணாவும் அவரின் தம்பிமார்களும் விலகி திராவிட முன்னேற்றக் கழகம் கண்டபோது, இலங்கையிலும் அது தொடர்ந்தது. இங்கே, அரசியல் கட்சியாக தி.மு.க. மாறியபோது, அங்கே ஒரு மாற்றுச் சிந்தனை ஒலித்தது. ‘திராவிட’ என்று […]

Read more

எம்.ஆர். ராதா வாழ்க்கையும் சிந்தனையும்

எம்.ஆர். ராதா வாழ்க்கையும் சிந்தனையும், விந்தன், தோழமை வெளியீடு, 5 டி, பொன்னம்பலம் சாலை, கே. கே. நகர், சென்னை – 78, விலை 80 ரூ. பெரியாருக்கு சினிமா பிடிக்காது. அவருக்குப் பிடித்த சினிமாக்காரர் எம்.ஆர்.ராதா. ராதா தன்னுடைய வாழ்க்கையை சினிமாவுக்காக அர்ப்பணித்தவர். ஆனால், அவருக்கு சினிமாக்காரர்களைப் பிடிக்காது. காரணம், அவர்களிடம் இருந்த போலித்தனம். அந்த போலித்தனம் சிறிதும் இல்லாமல் வாழ்ந்தவர்தான் ராதா. “வீட்டிலே சோறில்லை. டிராமா கம்பெனியைத் தேடிக்கிட்டுப் போவேன். அங்கேதான் நல்ல சோறு கிடைக்கும்  சுருக்கமாச் சொன்னா, பாய்ஸ் கம்பெனி சோறுதான் […]

Read more

களவுபோன என் கடவுளும் காணாமல்போன என் காதலியும்

களவுபோன என் கடவுளும் காணாமல்போன என் காதலியும், பேராசிரியர் ப. சந்திரசேகரன், ஆனந்து பப்ளிகேஷன்ஸ், 1, தாமஸ்நகர், சின்னமலை, சைதாப்பேட்டை, சென்னை – 15, விலை 500 ரூ. சிக்கலானதும் கண்டுபிடிக்க முடியாததுமான குற்ற வழக்குகள் வந்தால் அனைவரும் தேடும் நபர் பேராசிரியர் ப. சந்திரசேகரன். ‘தடய அறிவியல்’ சந்திரசேகரன் என்றால், அனைவருக்கும் தெரியும். ராஜீவ் காந்தி கொலை வழக்கு முதல் ஆட்டோ சங்கரின் கொலை வழக்கு வரை அவரால் மர்மம் அவிழ்க்கப்பட்ட முடிச்சுகள் ஏராளம். தமிழகத்தின் மிகமுக்கியமான தீ விபத்துக்கள் அனைத்துக்கும் முதல் புகையைக் […]

Read more

காற்றின் கையெழுத்து

காற்றின் கையெழுத்து, பழநிபாரதி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 130ரூ. ஒரு பத்திரிகை நின்று போனது குறித்து எழுதும்போது… எழுத்தாளர் சுஜாதா, ‘நிகழ் காலத்தைப் பிரதிபலிக்காத எதுவும் நிலைக்காது’ என்று சொன்னார். பத்திரிகைகளுக்கு மட்டுமல்ல… படைப்பாளிக்கும் அது பொருந்தும். சினிமா பாடலாசிரியராக இருந்தாலும் பழநிபாரதிக்குள் இருக்கும் ‘சமூகன்’ கொடுக்கும் சாட்டையடிகள்தான் இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள். வளரும் நாடுகளை உய்விக்க வந்ததாகச் சொல்லப்படும் உலகமயமாக்கல், பாரம்பரியத்தை நசுக்கி அன்னிய நாட்டிடம் கையேந்தி நிற்கும் நிலை ஆகியவற்றைக் காட்டுவதாகவே இந்த தொகுப்பின் […]

Read more

பத்தினிப் பெண்டிர் அல்லோம்

பத்தினிப் பெண்டிர் அல்லோம் (பரத்தையர் கணிகையர் தேவதாசிரியர் பற்றிய பதிவுகள்), அ. கா. அழகர்சாமி, கருத்து – பட்டறை, 2, முதல் தளம், மிதேசு வளாகம், நான்காவது நிறுத்தம், திருநகர், மதுரை 6, விலை 90ரூ. குடும்பப் பெண்கள் அனைவரும் தலைவனின் காலடியில் கிடக்க… தேவதாசிகள் ஆடல், பாடல், கலை வளர்த்த கதையை எல்லாத் தமிழ் இலக்கியங்களும் பேசுகின்றன. சிலப்பதிகாரத்தின் கதைத் தலைவியான கண்ணகிக்கு இணையான இடம் மாதவிக்கு இருந்தது. அவரது மகளான மணிமேகலையைப் போற்றிப் பாடவே ஒரு காப்பியம் படைக்கப்பட்டது. சுந்தரரின் மனைவியான […]

Read more

இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் – சடங்குகள் – நிறுவனங்கள்

இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் – சடங்குகள் – நிறுவனங்கள், அபே.ஜெ.எ.துபுவா, தமிழில் – வி.என். ராகவன், அலைகள் வெளியீட்டகம், 4/9, 4-வது முதன்மைச்சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை – 24. விலை-260 ரூ 200 ஆண்டுகளுக்கு முன்னால் பிரெஞ்சு நாட்டில் இருந்து தென்இந்தியாவுக்கு வந்த கிறிஸ்துவப் பாதிரியார் ஜெ.எ. துபுவாவுக்கு இந்தியாவை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிற ஐரோப்பியர்களிடம், இந்தியர்களைப் பற்றிய முறையான தகவல்கள் எதுவுமே இல்லையே என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தைப் போக்க துபுவா எழுதிய […]

Read more
1 2