பணத்தின் பயணம்

பணத்தின் பயணம் – பண்ட மாற்று முதல் பிட்காயின் வரை, இரா. மன்னர் மன்னன், விகடன் பிரசுரம், பக்.336; ரூ.260; கற்காலத்தில் இருந்து தற்காலம் வரையிலும் பணத்தின் பரிணாம வளர்ச்சியை சொல்லும் நூல் இது. பழங்காலத்தில் இருந்த பண்டமாற்று முறை, தங்கம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை பிணயப் பொருள்களாகப் பயன்படுத்தியது, கரன்சிகள் உருவெடுத்த வரலாறு, பல்லவர் காலத்தில் பணம் தொடர்பாக பொதிந்துள்ள பொருள் மதிப்பு, பொற்காசுகளாக மாறிய வரலாறு உள்ளிட்டவற்றை தெள்ளத் தெளிவாக நூல் ஆசிரியர் விளக்கியுள்ளது இந்த நூலின் சிறப்பு அம்சமாகும். […]

Read more

நூலகத்தால் உயர்ந்தேன்

நூலகத்தால் உயர்ந்தேன், கோ.மோகனரங்கன், வசந்தா பதிப்பகம், பக்.1096, விலை ரூ.1200. எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழ் எழுத்துலகில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பவர் இந்நூலின் ஆசிரியர். அவர் தனது இளமைப் பருவத்திலிருந்தே நூல்களின் மீது அளப்பரிய காதல் கொண்டவராக இருந்திருக்கிறார். பத்தாவது படிக்கும்போது பகல் உணவுக்காக அவருடைய தந்தை தந்த நான்காணாவில் மீதம் பிடித்து, பழைய நூல்களை வாங்கிப் படித்திருக்கிறார். சென்னை பல்லாவரத்தில் இருந்த கார்டன் உட்ராப் தோல் தொழிற்சாலையில் 1959 ஆம் ஆண்டு நாள் கூலி இரண்டு ரூபாய் கிடைத்த வேலையை […]

Read more

போப் பிரான்சிஸ்  நம்பிக்கையின் புதிய பரிமாணம்

போப் பிரான்சிஸ்  நம்பிக்கையின் புதிய பரிமாணம், நாகேஸ்வரி அண்ணாமலை, அடையாளம் பதிப்பகம், பக்.224, விலை ரூ.200. கார்டினல் ஹோர்கே மரியோ பெர்காகிலியோ 2013-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி 266-ஆவது போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு போப் பிரான்சிஸ் ஆகிறார். இவர் எங்கு பிறந்தார்? எங்கு படித்தார்? என்று ஆரம்பித்து தற்போதைய அவரது இறைப் பணி வரை தெளிவாக அனைவரும் எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில் தொகுத்தெழுதியுள்ளார் நூலாசிரியர். போப் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? அந்த தேர்தல் முறைகள் எவ்வாறு இருக்கும்? பிரான்சிஸ் என்று பெயர்வரக் காரணம் என்ன? என்பன […]

Read more

ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை

ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை, கோ.உத்திராடம், நாம் தமிழர் பதிப்பகம், பக்.168, விலை ரூ.150. இந்நூலில் வெளிவந்த பெரும்பாலான கட்டுரைகள் தினமணியில் (தமிழ்மணி) வெளி வந்தவை. ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அகழாய்வில் கிடைத்த தொல் பொருள்கள், முதுமக்கள் தாழி, கட்டடங்கள், உறை கிணறுகள், தொன்மை எழுத்துகள் ஆகியவை பண்டையத் தமிழர்கள் நகர, நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கு முக்கியச் சான்றாதாரங்களாக உள்ளன என்று கூறும் நூலாசிரியர், அவற்றுடன் தொடர்புடைய இலக்கியங்களையும் எடுத்துக் கூறியுள்ளார். மேலும், கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, சுவர் ஓவியங்களில் காணப்படும் மக்களின் வாழ்வியல் […]

Read more

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்… அம்மாவின் கதை!

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்… அம்மாவின் கதை!, எஸ்.கிருபாகரன், விகடன் பிரசுரம், பக்.248, விலை ரூ.175. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு இந்நூல். முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை விறுவிறுப்பான ஒரு நாவலைப் படித்த உணர்வை ஏற்படுத்துகிறது. ஜெயலலிதா சிறுமியாக இருந்தபோது, பூங்காவில் சந்தித்த கழைக்கூத்தாடிச் சிறுமியைப் படிக்க வைக்கும்படி கூறி, தன் தங்கக் காதணிகளைக் கழற்றிக் கொடுத்தது; சர்ச் பார்க் பள்ளியில் படித்த தோழி நளினியை பிரபல நடிகையான பின்னர் தேடிச் சென்று சந்தித்துப் பேசி மகிழ்ந்தது; அமெரிக்க நடிகர் ராக் […]

Read more

தமிழ் இன்று

தமிழ் இன்று, கேள்வியும் பதிலும், இ. அண்ணாமலை, அடையாளம், பக்.182, விலை ரூ.170. தமிழ்மொழி தொடர்பாக பலருக்கும் எழுந்த பல்வேறு சந்தேகங்கள் சிஃபி, வல்லமை ஆகிய ஆன்லைன் இதழ்களில் கேள்விகளாகக் கேட்கப்பட்டு, அதற்குத்தக்க விடைகளும் நூலாசிரியரால் அளிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய வினா-விடைகளின் தொகுப்பே இந்நூல். எழுத்து, எழுத்துச் சீர்திருத்தம், சந்தி, கிரந்த எழுத்து, பிறமொழிச் சொற்கள், பேச்சுத்தமிழ், சொல், கலைச்சொல், இலக்கணம், செம்மொழி, தொன்மை, வளர்ச்சி, நடைவேறுபாடுகள் ஆகிய பதின்மூன்று தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக நூலாசிரியர் விடையளித்துள்ளார். இந்த விளக்கங்கள் அனைத்தும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு […]

Read more

பட்டுப்புழு வளர்ப்பு

பட்டுப்புழு வளர்ப்பு, பி.மாரியப்பன், இயல் வெளியீடு, பக்.264, விலை ரூ.200. பட்டாடையை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பட்டு தோன்றிய வரலாற்றை எடுத்துச் சொல்வதோடு, பட்டு நூலின் உற்பத்தி குறித்தும் பட்டின் பல்வேறு வகைகள் பற்றியும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது. பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரமாக செயல்படக்கூடிய மல்பெரி தாவரம் பற்றியும், அதைப் பயிரிடும் முறை, தாவரப் பெருக்க முறை, பயிரிடும் காலம் போன்றவற்றையும் நூல் விளக்குகிறது. பட்டுப்புழு வளர்ப்பதற்கான சூழல், வெப்பம், ஈரப்பதம், புழுவிற்கு வழங்கப்படும் இலை, பருவப் பட்டுப்புழுவின் உணவுத்தேவை என எல்லாவற்றையும் விரிவாக […]

Read more

வாகீச முனிவரின் ஞானாமிர்தம்

வாகீச முனிவரின் ஞானாமிர்தம் (சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல்), ஆ. ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், பக்.752, விலை ரூ.650. வாகீச முனிவர் அருளிச் செய்த ‘ஞானாமிர்தம்‘ என்ற நூலே மெய்கண்ட சாத்திரங்களுக்கு எல்லாம் முன்னோடி நூலாக இருக்கிறது. சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள் உண்மைகளை 75 அகவற்பாக்களால் விளக்குகிறது ஞானாமிர்தம். உலகப் படைப்பு, பசுவின் மூவகை அவத்தை, ஆன்மா அடையும் ஐந்துநிலை வேறுபாடுகள், மாயாவாத மறுப்பு, சற்காரிய வாதம், மூவகை துக்கங்கள், பசு தரிசனம், ஞானியரின் இயல்பு, குரு உபதேசப் […]

Read more

பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்

பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல், இரெ.குமரன், காவ்யா, பக்.316, விலை ரூ.300. இன்று அறிவியல் வெகுவாக முன்னேறிவிட்டது. நாள்தோறும் புதுபுதுக் கண்டுபிடிப்புகளால் உலகம் நிரம்பி வழிகிறது. நமது பழந்தமிழ் நூல்களில் காணக் கிடைக்கும் பல கருத்துகள் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளோடு வியக்கத்தக்க வகையில் ஒத்துப் போவதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. சூரியக் குடும்பத்தைப் பற்றி இன்றைய அறிவயில் கூறும் கருத்துகளை உறையூர் முதுகண்ணன் சாத்தனாரின் புறநானூற்றுப் பாடல், "வாணிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு' என்ற சிறுபாணாற்றுப் படை பாடல்கள் கூறியிருப்பது வியப்பூட்டுகிறது. தாய்ப்பால் தருவதின் […]

Read more

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம், அழகர் நம்பி, கவிதா பப்ளிகேஷன், தொகுதி 1, பக்.416, தொகுதி 2, பக்.448, தொகுதி 3, பக்.288, தொகுதி 4, பக்.496, மொத்த பக். 1,648, நான்கு தொகுதிகளும் சேர்த்து ரூ.1,200. அடைவதற்கான வழியும், அடையப்பெறும் பொருளும் (சாதனம், சாத்தியம்) நானே என்கிறார் மாமேகம் சரணம் (வ்ரஜ – பகவத் கீதை) ஸ்ரீகிருஷ்ணர். இதை நன்கு உணர்ந்தவர்களே பன்னிரு ஆழ்வார்கள். இவர்கள் வைணவத்தையும், தமிழையும் தழைத்தோங்கச் செய்ததுடன், பக்தி இலக்கியத்தையும்; அந்தாதி, மடல், தாண்டகம், எழுகூற்றிருக்கை, பாவை, பள்ளியெழுச்சி முதலிய சிற்றிலக்கிய […]

Read more
1 70 71 72 73 74 180