சட்டத்தால் யுத்தம் செய்

சட்டத்தால் யுத்தம் செய்,  நீதிபதி கே.சந்துரு, விகடன் பிரசுரம், பக்.167, விலை ரூ.115. ஜனநாயக நாட்டின் முக்கிய அங்கமாக நீதிமன்றங்கள் விளங்குகின்றன. அந்த நீதிமன்றங்களின் கதவுகளை தங்கள் தரப்பு நியாயங்களுக்காகத் தட்டி போராடி வென்ற பெண்களின் வழக்குகள் குறித்து இந்த நூல் பேசுகிறது. இந்த வழக்குகளைத் தொடுத்த பெண்களின் முயற்சி மற்றும் அவர்கள் தொடர்ந்த வழக்கின் மூலம் கிடைத்த தீர்ப்புகள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஆணாதிக்கச் சிந்தனை பரவிக் கிடக்கும் இந்த சமூகச் சூழலில் உயர்பதவியில் இருக்கும் பெண்கள் தொடங்கி, விளிம்பு நிலையில் […]

Read more

அறியப்படாத கலாச்சாரப் புரட்சி

அறியப்படாத கலாச்சாரப் புரட்சி (கல்வியில் சீர்திருத்தங்களும் சீனக் கிராமப்புற வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்),  டாங்பிங் ஹான்,  தமிழில்: நிழல்வண்ணன், அலைகள் வெளியீட்டகம், பக்.264, விலை ரூ.210. 1966 ஆம் ஆண்டு தொடங்கி பத்தாண்டுகள் நீடித்த சீன கலாசாரப் புரட்சியில் பலர் கொல்லப்பட்டனர். சீன பாரம்பரிய சின்னங்கள் அழிக்கப்பட்டன என்பன போன்ற விமர்சனங்கள் உலகெங்கும் கூறப்படுகின்றன. கலாசாரப் புரட்சியால் சீனாவின் அரசியல், பொருளாதார, கலாசார வாழ்க்கை பின்னடைவைச் சந்தித்தது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியே 1981 இல் அறிவித்தது. கலாசாரப் புரட்சியைத் தொடங்கி நடத்தியவரான மா […]

Read more

சங்க இலக்கியங்களில் சமய நோக்கு

சங்க இலக்கியங்களில் சமய நோக்கு, கு.சுந்தரமூர்த்தி, தமிழ்த்துறை, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி,பக்.496, விலை ரூ.150. சென்னையில் நடந்த அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி மாநாட்டில் (மார்ச், 8-11) வெளியிடப்பட்ட நூல் இது. சங்கத் தமிழ் இலக்கியங்கள் காதல், வீரம், மக்கள் வாழ்வியல், நெறிமுறைகள், தொழில், வாணிகம், கலை முதலியவற்றை எடுத்துரைக்கின்றன. என்றாலும், அவற்றினூடே இறைவன் பற்றியும், இறை இயல்புகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. பிறவா யாக்கைப் பெரியோன்; (சிலம்பு),கறைமிடற்று அண்ணல் (புறம்), ஆதிரை முதல்வன்(பரிபாடல்), மழுவோன் நெடியோன் தலைவனாக(மதுரைக் காஞ்சி), "மறைமுது முதல்வன் (சிலம்பு), பிறங்கு […]

Read more

வெற்றி வாகை

வெற்றி வாகை(உங்கள் தொடர் வெற்றியின் திறவுகோல்), பரமன் பச்சைமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 150ரூ. வெற்றியை தக்க வைத்துக்கொள்ள ஏதேனும் விதிகள் உள்ளனவா? அப்படி வெற்றி விதிகள் எதுவும் இருந்தால், அவற்றை நம் வாழ்வில் சரியாகச் செலுத்தி வெற்றியாளனாக உச்சியில் நிற்கலாமே என்று நினைப்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக நிற்கும் இந்நூல். நன்றி: தினமணி, 13/1/2018.

Read more

குட்டி ஆகாயம்

குட்டி ஆகாயம் (சிறார் இதழ்), நிழல்,காந்தி, வானம் அமைப்பு, விலை 40ரூ. குழந்தைகள் உருவாக்கிய புத்தகம். இது குழந்தைகளுக்கான சிறுகதை தொகுப்புப் புத்தகம். இந்த புத்தகத்தை உருவாக்கியது முழுக்க முழுக்க குழந்தைகளே. ஒருவர் ஒரு வரி சொல்ல, அடுத்தவர் அடுத்த வரி சொல்ல குட்டி குட்டி சிறுகதைகளை உருவாக்கி, அதற்கான ஓவியங்களையும் அழகாக தீட்டி, இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளது இதன் சிறப்பு. நன்றி: தினமணி, 13/1/2018.

Read more

விடுதலைப் போரில் தமிழ் முஸ்லிம்கள்

விடுதலைப் போரில் தமிழ் முஸ்லிம்கள், அ.மா.சாமி, கலாம் பதிப்பகம், விலை 250ரூ. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் முஸ்லிம்களின் பங்கு எத்தகையது என்பதை எடுத்துரைக்கும் நூல் இது. மொழி, இனம், நாடு, என்பதைத்தாண்டி தமிழ்நாட்டு முஸ்லிம்களின் மொழிப்பற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளை உள்ளடக்கியது. நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026805.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திருக்குறள் கதைகள் 50

திருக்குறள் கதைகள் 50, லதா, அருண் பதிப்பகம், விலை 150ரூ. கடவுள் நம்பிக்கை, அறிவே பலம், நன்றி மறவாதே, விருந்தோம்பல், உழைப்பின் உயர்வு, நல்ல நட்பு, நீதி தவறாமை உள்ளிட்ட தெதாகுப்புகளைக் கொண்ட குழந்தைகளுக்கான நூல் இது. நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:.https://www.nhm.in/shop/1000000026700.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஜமீன் கோயில்கள்

ஜமீன் கோயில்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, சூரியன் பதிப்பகம், விலை 140ரூ. ஜமீன்தார்கள் என்றாலே ராஜ கம்பீரமும், மிடுக்கும், அதிகாரத் தொனியும்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர்களிடமும் மென்மையான மனம் இருந்ததையும், பாரம்பரியமான ஆன்மிக வழிபாடுகளை மேற்கொண்டிருந்ததையும் விளக்குவதுதான் இப்புத்தகம். நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026627.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உடைந்த குடை

உடைந்த குடை, தாக் ஸூல்ஸ்தாத், காலச்சுவடு பதிப்பகம், விலை 140ரூ. உலகின் மிக முன்னேறிய, அமைதியான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனை, இன்றைய நவீன வாழ்வில் சிக்குண்டிருக்கும் விடை காண முடியாத சூட்சுமக் கேள்விகளின் மூலம் தனது அடையாளத்தை தேடித் தேடித் தோல்வியடைந்து மேலும் தனிமைப்படுத்திக் கொள்வதை இந்நூல் சித்தரிக்கிறது. நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026629.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

உயிர்மெய்

உயிர்மெய்,  கு.சிவராமன், விகடன் பிரசுரம், பக்.224, விலை ரூ.185. பருவ வயது தொடங்கும் ஆண், பெண் உடல்களில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவது தொடங்கி, திருமணமாகி அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது வரை ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்னைகளைப் பற்றியும் அவற்றிற்கான தீர்வுகளைப் பற்றியும் விரிவாக விளக்கும் நூல். தைராய்டு பிரச்னை, ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் கருத்தரிப்பதில் பல தடைகளை ஏற்படுத்துகின்றன. அந்தத் தடைகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. ஆண்-பெண் உறவு தொடர்பான அனைத்து கற்பிதங்கள், நம்பிக்கைகளின் உண்மைத்தன்மைகளை இந்நூல் எடுத்துக்காட்டி, அது […]

Read more
1 72 73 74 75 76 180