பள்ளிப்பருவம்

பள்ளிப்பருவம், தொகுப்பு ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 80ரூ. பள்ளியில் ஒரே பாடத்திட்டத்தைக் கற்றாலும் கற்றல் அனுபவம் அனைவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பள்ளி அனுபவங்கள் இருக்கின்றன. அதனாலேயே பள்ளிப்பருவம் குறித்த அனுபவப் பகிர்தல்கள் எப்போதுமே சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கின்றன. ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி, அ.ராமசாமி, இமையம், பேராசிரியர் கல்யாணி, க. பஞ்சாங்கம் ஆகிய ஆறு ஆளுமைகள் தங்களது பள்ளிப்பருவம் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்தநூல். இவர்களின் அனுபவம் அந்தக் காலத்தில் நிலவிய சமூக, […]

Read more

அதிகாரத்தின் மூலக்கூறுகள்

அதிகாரத்தின் மூலக்கூறுகள், எலியா கனெட்டி, தமிழில் ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-344-2.html 1905ல் பல்கேரியாவில் பிறந்த எலியா கனெட்டி, இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். வெகுமக்களின் கும்பல் மனோபாவத்துக்கும் அதிகாரம் செயல்பாடுவதற்கும் இடையிலான இவரது ஆய்வுகளுக்காகவே தற்போது அதிகம் அறியப்படுகிறார் என்று மொழிபெயர்ப்பாளர் ரவிக்குமார் குறிப்பிடுகிறார். க்ரவுட்ஸ் அண்ட பவர் என்ற இவரது புகழ்பெற்ற நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறு கட்டுரைகள் கொண்ட தொகுதியாக அதிகாரத்தின் மூலக்கூறுகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தனியாக இருக்கும்போது அத்தனை […]

Read more

நபிகள் நாயகம்

நபிகள் நாயகம், குலாம் ரசூல், காஜியார் புக் டிப்போ, தஞ்சாவூர், பக். 420, விலை 120ரூ. அண்ணல் முஹம்மத் நபி சரிதையை புதிய பாணியில் கூறும் நூல். நபி அவர்களைப் பற்றி தமிழில் பல நூல்கள் வந்திருந்தாலும், அவரைப் பற்றிய சரித்திர சம்பவங்கள், நிகழ்வுகள், அவற்றிற்கு ஆதாரமான நூல்களைக் குறிப்பிட்டு இச்சரிதத்தை உருவாக்கி இருப்பதால் கவனத்திற்குரிய நூலாகிறது. முஸ்லிம் சமூகத்தார்மட்டுமல்லாது, பிற சமூக அன்பர்களும் படித்துப் பயனடையும் வகையில் படைத்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 30/4/2014.   —- அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள், […]

Read more

கடல் கிணறு

கடல் கிணறு, ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. மௌனமாய் மரணத்தைப் பேசும் கதைகள் கடல் கிணறு தொகுப்பில் இருக்கிற சிறுகதைகள் வழக்கமான தமிழ்க் கதைகள் அல்ல. மனதின் வலியிலிருந்து எழுதப்பட்ட, சமூக நிகழ்வுகளின் கொடூரங்கள் தந்த மன அழுத்தத்திலிருந்து எழுதப்பட்ட கதைகள். அரசியல் கதைகள் என்று தோற்றம் தருகிற உண்மை அறிதல், எட்டாம் தூக்கம், ழ, வார்த்தைகள் போன்ற கதைகளில் முக்கியமான பாத்திரம் அரசியல் அல்ல. மரணம்தான். அதைவிடவும் மௌனம்தான் எல்லாக் கதைகளிலும் பிரதான பாத்திரம். தொகுப்பின் அநேகக் கதைகளில் மரணம் […]

Read more

தியாகசீலர் கக்கன்

தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, பக். 240, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-232-1.html காமராஜரைப் பற்றி அருமையான நூல் எழுதிய பெரும் பேச்சாளர் இளசை சுந்தரம், கக்கன்ஜி பற்றி எழுதியுள்ள அபூர்வ நூல் இது. யார் யாருக்கோ நூல்கள் உள்ள இந்த நாட்டில் தன்னலமற்ற தேசத் தொண்டர் கக்கனுக்கு அதிக நூல்கள் இல்லையே என்பது என் ஆதங்கம் என்ற முன்னுரையுடன் துவங்கியுள்ள நூலாசிரியர், நூறு கட்டுரைகளாக தந்துள்ளார். கக்கன் பற்றி அவ்வளவாக பதிவுகள் […]

Read more
1 2