நடுகற்கள்

நடுகற்கள், சரித்திரச் செம்மல் ச. கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம். வரலாற்று ஆய்வுகளை தெரிந்துகொள்ளாதவரை ஒன்றுமில்லை. நூல்கள் மற்றும் ஆவணங்கள் மூலம் தெரிந்து கொண்டால் ஏற்படும் வியப்பும், ஆர்வமும் அதிகரிக்குமேயன்றி குறையாது. அதற்கு உதாரணம்தான் நடுகற்கள் புத்தகம். நடுகற்கள் நேற்றைய வரலாற்றை நினைவு சின்னமாக வழங்குகிறது. மேற்கு இந்தியாவில் நினைவு கற்களை பலியா, கம்பியா, சர என்று அழைப்பர். மத்திய இந்தியாவில் மாரியர்கள் வழிபடும் நினைவுகற்கள் உரஸ்கல் எனப்படுகிறது. வட இந்திய கொல்லா மற்றும் போயா இனத்தவர் வீர்கா என்று நடுகற்களை அழைப்பர். தமிழகத்தில் பல்லவர் […]

Read more

விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர்

விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 481, விலை 100ரூ. சுவாமி விவேகானந்தர் தம்மையும் தமது வாழ்க்கை நிகழ்வுகளையும் பற்றி எழுதியுள்ள மிக அரிதான நூல் இது. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடனாக விவேகானந்தர் ஆனதும், தன் குருவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி அவர் விவரிப்பதும் ஒரு ஆன்மிக நாவல்போல் விரிகிறது. சிகாகோ சர்வதேச மகாசபையில் அவர் ஆற்றிய உரையும் அவர் இந்தியாவிற்குத் திரும்பி வர வேண்டிய அவசியமும் படிக்கும்போது நம் உடலில் ஒரு புது உணர்வு எழுகிறது. […]

Read more

அகம் பொதிந்தவர்கள்

அகம் பொதிந்தவர்கள், கர்ணன், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் 608001, பக். 160, விலை 75ரூ. மகாகவி பாரதியார் தொடங்கி எழுத்தாளர் மாஜினி வரை தன் மனம் கவர்ந்த, தான் நேரில் பார்த்துப் பழகிய, பழகத் தவறிய 26, எழுத்தாளர்களுடனான தனது அனுபவங்கள், அவர்களைப் பற்றிய தனது கருத்துகள் போன்றவற்றை சுவையாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். எழுத்தாளர்கள் எழுதிய நூல்களின் பட்டியல், அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு போன்ற தெரிந்த தகவல்களையே சொல்லி நம்மைச் சலிப்படைய வைக்காமல், அவர்களை தான் சந்தித்தபோது நிகழ்ந்த சம்பவங்கள், […]

Read more

சாந்திவனத்து வேர்கள்

சாந்திவனத்து வேர்கள், ஆ. திருநாவுக்கரசு, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 182, விலை 100ரூ. கிராமத்துக்கு அடிமைச் சேவகமும், சுடுகாட்டுப் பணிகளும் செய்து வாழ்கிற வெட்டியான் சங்கிலியின் குடும்பம், சாதீய ஒடுக்கு முறையால் சிதைக்கப்படுகிற அவலத்தை, மிக யதார்த்தமாக சித்தரிக்கிறார் ஆசிரியர். அவர்களோடு தங்கியிருந்து, தொழிலில், அவர்கள் அனுபவிக்கும் சிரமங்களை நேரடியாகக் கண்டு, கேட்டு, இந்த நூலை உருவாக்கியிருக்கிறார். உள்ளத்தை உருக்கும் நாவலைப் படிக்கும்போது, படிப்பவர் இதயம் கணக்கவே செய்யும். -சிவா. நன்றி; தினமலர், 23/6/2013.   —-   அகம் பொதிந்தவர்கள், கர்ணன், மெய்யப்பன் […]

Read more

2012 யுக மாற்றத்தின் வாசல்

2012 யுக மாற்றத்தின் வாசல், மா. கணேசன், பக்.164, புதிய மானுடம் பிரசுரம், 222, அசோக் நகர் – II, காந்திநகர் அஞ்சல், வடக்குத்து, குறிஞ்சிப் பாடி தாலுகா. விலை ரூ. 100 ‘டிசம்பர் – 21, 2012 உலகம் அழிந்துவிடும், மாயன்களின் நாள்காட்டி அதோடு முடிந்துவிட்டது,’ இந்தச் செய்தி உலகெங்கும் தற்போது கிண்டலும் கேலியுமாக விவாதிக்கப்பட்டு வருகிறது! ‘யாரும் நம்பத் தயாராக இல்லை, நம்பவும் வேண்டாம் – ஆனால், நம் கண் முன்னே தினம் தினம் நடந்துவரும் நிகழ்வுகளும், நாம் படிக்கும் செய்திகளும், […]

Read more
1 2