களிப்பூட்டும் கணிதம்

களிப்பூட்டும் கணிதம், நல்லாமூர் கோவி. பழனி, வனிதா பதிப்பகம், விலைரூ.300. கணிதத்தை எளிதாக கற்க துாண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். கணித அழகை ரசித்து, அதனுள் மூழ்கவைக்கும் விதமாக எளிமையாக படைக்கப்பட்டு உள்ளது. கணித சிந்தனைகள், கணித மன்ற செயல்பாடுகள், கணித விளையாட்டு, கணித மேதைகளின் சுருக்க வரலாறு என பல தலைப்புகளில் உள்ளது. கணித ஆர்வ களஞ்சியமாக அமைந்துள்ளது. ஒன்றிலிருந்து மற்றொன்று உருவாவதை தெளிவாக புரிந்து கொள்ளும் வகையிலும், அவற்றிற்கு இடையேயான தொடர்புகளையும் அடுக்கமைவு மூலம் தகவலாக கோர்க்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பெருந்தலைப்புகளின் […]

Read more

தமிழன்னையின் மாட்சி

தமிழன்னையின் மாட்சி, கவிஞர் இரா.கருணாநிதி, வனிதா பதிப்பகம், விலைரூ.140. சந்தக் கவிதைகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு நுால். பொதுவுடைமை, சமூக நீதி, சமூக அவலம், நீர் மேலாண்மை, விழிப்புணர்வு போன்ற கவிதைகளில் பொது நலப் பார்வையைக் காண முடிகிறது. இயற்கை, இல்லறம், தாய்மை, காதல் மற்றும் கையறு நிலை சார்ந்த கவிதைகளில் இதம் இழையோடுவதை உணர முடிகிறது. பொதுவான தலைப்புகளில் வரும் இசைப்பாடல்கள் மற்றும் தத்துவப் பாடல்களில் மனித நேயம் எதிரொலிக்கிறது. சில மழலைப் பாடல்கள் தாலாட்டுகின்றன. – மெய்ஞானி பிரபாகரபாபு நன்றி: தினமலர், […]

Read more

சாரணர் இயக்கம் கலைக்களஞ்சியம்

சாரணர் இயக்கம் கலைக்களஞ்சியம், கோ பெரியண்ணன், வனிதா பதிப்பகம், விலை ரூ. 150. ஒழுக்கத்துடன் வாழ்வது, விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்றவற்றைக் கற்றுத் தரும் சாரணர் இயக்கம் பற்றிய முழு விவரத்தை தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. சாரணர் இயக்கத்தின் சிறப்பு சின்னங்களை பெறும் முறை, உற்று நோக்கும் பயிற்சி முதலுதவி சிகிச்சை குழுவுடன் கலந்து பணி செய்தல், செய்கை பேச்சு யோகாசனம் போன்ற பல அம்சங்கள் படங்களுடன் விளக்கிக் கூறப்பட்ட இருக்கின்றன. இந்தியாவில் சாரணர் இயக்கம் முதன் முதலில் எவ்வாறு […]

Read more

பாகுபலி

பாகுபலி, சொ.முத்துக்குமார், வனிதா பதிப்பகம், விலை 110ரூ. சரித்திரம், சாதனை, கோயில் என்று பலதரப்பட்ட விஷயங்களின் விவரங்கள், நிஜ பாகுபலியார் என்பதில் தொடங்கி, ஔவை வழி நடந்து, சில கோயில்கள் கடந்து, வழியில் சில்வர்ஸ்டார் ஸ்டோலனின் கதை சொல்லி வரலாற்று நிகழ்வுகளை உரையாடல் பாணியில் நகர்த்திச் சென்றிருக்கும் விதம் அற்புதம். நன்றி: குமுதம், 13/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பாகுபலி

  பாகுபலி, சொ.முத்துக்குமார், வனிதா பதிப்பகம், விலை 110ரூ. சரித்திரம், சாதனை, கோயில் என்று பலதரப்பட்ட விஷயங்களின் விவரங்கள், நிஜ பாகுபலியார் என்பதில் தொடங்கி, ஔவை வழி நடந்து, சில கோயில்கள் கடந்து, வழியில் சில்வர்ஸ்டார் ஸ்டோலனின் கதை சொல்லி வரலாற்று நிகழ்வுகளை உரையாடல் பாணியில் நகர்த்திச் சென்றிருக்கும் விதம் அற்புதம். நன்றி: குமுதம், 13/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026851.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அறிந்த பழமொழிகளும் அறியாத விளக்கங்களும்

அறிந்த பழமொழிகளும் அறியாத விளக்கங்களும், முனைவர் விஜயலட்சுமி ராமசாமி, வனிதா பதிப்பகம், பக். 168, விலை 120ரூ. நம் முன்னோர் தம் பட்டறிவால் கண்டுணர்ந்த பழமொழிகள் எனலாம். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறன் கொண்ட பழமொழிகள் ஆழ்ந்த பொருள் கொண்டவை. ஒரு சமூகத்தின் நாகரிகம், பண்பாடு, பட்டறிவு ஆகியன மிகச் சுருக்கமாகப் பேச்சு நடையில் வெளிப்பட்ட ஒரு சொற்றொடரே பழமொழி. இவ்வாறு விளங்கும் பல்லாயிரக்கணக்கான பழமொழிகளும், 75 பழமொழிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு மக்கள் இதுவரை அறிந்து கொள்ளாத நிலையிலான விளக்கங்களை நுணுகி […]

Read more

திருநாவுக்கரசர் தேவராத்தில் பிற சமயம்

திருநாவுக்கரசர் தேவராத்தில் பிற சமயம், புலவர் இரா.நாராயணன், வனிதா பதிப்பகம், விலை 160ரூ. திருநாவுக்கரசர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்; நாயன்மார்கள் அறுபத்து மூவருள் ஒருவர். 81 அகவை வாழ்ந்து பக்தி இயக்கத்தில் தொண்டினை இணைத்தவர். சிவ நெறிக் குடியில் பிறந்த இவர், இளமையில் சமண சமயத்தின் உயிரிரக்கக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்து சிறப்பு மிகப்பெற்று, தருமசேனர் எனும் பெயருடன் வாழ்ந்தார். பெற்றோர் இட்டபெயர் மருள்நீக்கியார். தமக்கை திலகவதியார் வேண்டுதலால், சிவன் தருமசேனருக்கு சூலை நோய் தந்து, சிவனருள் திருநீற்றால் நோய்க் கொடுமையிலிருந்து […]

Read more

காற்றடைத்த பையடா

காற்றடைத்த பையடா, ஜி.எஸ்.குமாரதேவி, வனிதா பதிப்பகம், பக். 328, விலை 250ரூ. தாம் விரும்பும் கல்வியையே தன் மகனோ மகளோ பயில வேண்டும் என்ற திணிப்பு. தாங்கள் விரும்பும்படியே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வற்புறுத்தல் இப்படியான குழப்பமான கலாச்சார யுகத்தில் பெற்றோர்களும் பிள்ளைகளுக்குமான போராட்டக்களமாக வெடித்துள்ளது இந்நாவல். நட்பும் காதலும் அதன் ஊடுபயிராய் இருந்து சிறப்பிக்கின்றன. நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

கோலங்களில் கணிதம்

கோலங்களில் கணிதம், நல்லாமூர் கோவி. பழனி, வனிதா பதிப்பகம், பக்.160, விலை 100ரூ. கணிதம் கற்பது சிலருக்குக் கற்கண்டு. சிலருக்கு வேப்பங்காய். இந்நூல் வேப்பங்காயையும் கல்கண்டாய் மாற்றுகிறது. ஆம், மிக எளிய கோலங்கள் மூலம் கணித சமன்பாடுகளை விளக்குகிறது. இந்நூலிருந்து யூலர் கோலம் மூலம் இதயக்கமலம் எனும் கோலத்தையும் லுகாஸ் தொடர் மூலம் சதுரக்கோலங்களும் வரையலாம் என்று அறிகிறோம். இந்நூல் படிப்போரின் சிந்தனையைத் தூண்டி கணிதம் குறித்த பயத்தைப் போக்கி, தன்னம்பிக்கையை வளர்க்கும் என்று உறுதியாகக் கூறலாம். -டாக்டர் கலியன் சம்பத்.   —- […]

Read more

செல்வம் கொழிக்கச் செய்யும் மகாலட்சுமி பூஜை

செல்வம் கொழிக்கச் செய்யும் மகாலட்சுமி பூஜை, பரமஹம்ச ஸ்ரீமத் பரத்வாஜ் சுவாமிகள், வனிதா பதிப்பகம், 11, நானாதெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 304, விலை 110ரூ இந்தக் கலியுகத்தில் நேர்வழியில் செல்வத்தைக் குவிக்க முடியாது என்றுதான் பலரும் நினைக்கின்றனர். ஆனால் நேர்வழியில் செல்வத்தைக் குவிக்க முடியும். அம்மாதிரி நேர்வழியில் குவியும் செல்வம்தான் நிலைத்து நிற்கும், துன்பமே தராத செல்வமாக இருக்கும் என்கிறார் நூலாசிரியர். நேர்வழியில் செல்வத்தை குவிக்க, மகாலட்சுமி திருவிளக்கு பூஜையை அதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி செய்ய வேண்டும் என்று அவற்றை […]

Read more
1 2