வரலாற்று உண்மைகள்

வரலாற்று உண்மைகள் தமிழ் மண் தமிழர் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம், பக் 348, விலை 350ரூ. தொல்லியல், கல்வெட்டு ஆராய்ச்சியாளரான நூலாசிரியர், தனது 30 ஆண்டுகால ஆராய்ச்சியின் பயனாக வரலாற்று உண்மைகள் என்ற தலைப்பில் தமிழ் மண், தமிழர், தமிழ் வரலாறு தொன்மைக்காலம் முதல் கி.பி. 1947-ஆம் ஆண்டு வரையில் உள்ள உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தின் தொன்மைகளை அகழ்வாய்வு, கல்வெட்டு, மொழியாய்வு வல்லுநர்களின் கருத்துகளைக் கொண்டு விவரிக்கிறார் நூலாசிரியர். தமிழ் மன்னர்களைப் பற்றியும், அவர்களது உணர்வுகள் குறித்தும் “நந்திக்கலம்பகம்’‘ நூலின் மூலம் […]

Read more

உரையாசிரியர்களின் உரைவளம்

உரையாசிரியர்களின் உரைவளம், கண்ணகி கலைவேந்தன், தமிழய்யா வெளியீட்டகம், பக். 480, விலை 500ரூ. கரந்தை தமிழ்ச்சங்கமும், திருவையாறு கல்விக்கழகமும் நடத்திய அனைத்துலக உரைநடைத்தமிழ் 14ஆவது ஆய்வு மாநாட்டின் கட்டுரைத் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் 80 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இலக்கணம், இலக்கியம், தற்கால உரைநடை முன்னோடிகள் என 3 பிரிவுகளாகக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி என்பது மக்களின் தொடர்பியல் சாதனமாக உள்ள நிலையில், காலத்திற்கேற்ப மக்கள் அம்மொழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மொழிகளின் கால தூதுவர்களாகவும், இணைப்புப் பாலமாகவும் திகழ்பவர்களே உரையாசிரியர்கள் என்பது பொதுவான கருத்து. […]

Read more

லாபம் தரும் பட்ஜெட்

லாபம் தரும் பட்ஜெட், விகடன் பிரசுரம், பக். 168, விலை 115ரூ. பசுமை விகடனில் பல வாரங்கள் தொடராக வெளிவந்து விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். நெடுங்காலமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்த நாம், இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் விவசாயம் செய்ய ரசாயன உரங்களைப் பயன்படுத்த தொடங்கினோம். இதன் காரணமாக, உணவு தானியங்களிலும், காய்கறிகளிலும் நஞ்சு கலக்கப்படுவதுடன், மண்ணின் இயற்கைத் தன்மையும் மாறி வருகிறது. ரசாயனப் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகள் பயணப்படுவதற்காக […]

Read more

பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்

பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன், யமுனா ராஜேந்திரன், பிரக்ஞை பதிப்பகம், பக்.168, விலை 130ரூ. உலக அளவில் வெளியான குழந்தைகள் பற்றிய திரைப்படங்களைப் பற்றிப் பேசும் நூல். வெறுமனே திரைப்படங்கள் குறித்தும், கதைச்சுருக்கம், நடிகர், நடிகையர் பற்றியும் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்காமல், படம் உருவானதன் பின்னணி, கேமரா கோணங்களின் சிறப்பு, காட்சிகளின் முக்கியத்துவம் என்று பலவகையிலும் சிறப்பான திரைப்படங்களைப் பலமுறை பார்த்து, ஆராய்ந்து விரிவாக எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பு. நெதர்லாந்து திரைப்படமான “பேசுவதை நிறுத்திக் கொண்ட சிறுவன்’‘ (1996) படத்தில், சொந்த மண்ணைப் பிரிவதனால் சமூகத்தின் மீது […]

Read more

பையன் கதைகள்

பையன் கதைகள், வி.கெ.என்., தமிழில் மா. கலைச்செல்வன், சாகித்ய அகாதெமி, பக். 752, விலை 365ரூ. சாகித்ய அகாதெமி விருது பெற்ற இந்த படைப்பில் “பையன்’ என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு புனையப்பட்ட 73 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மலையாள இலக்கியத்தில் நகைச்சுவை சக்கரவர்த்தி என்று போற்றப்படும் வடக்கேக் கூட்டாலெ நாராயணன்குட்டி நாயர் (வி.கெ.என்.) இக்கதைகளில் பல்வேறு துறைகளில் ஊடுருவியுள்ள குற்றம் குறைகளை அங்கதச் சுவை மிளிர அழகுற எடுத்துக் காட்டியுள்ளார். இலக்கியம், அரசியல் என கதைக்கு கதைக்கு வித்தியாசமானகளனைக் எடுத்துக் கொண்டு சமூக அவலங்களைப் […]

Read more

உடல் உள்ளம் ஆன்மா

உடல் உள்ளம் ஆன்மா, ஏ.எம். ஜேம்ஸ், ஓவியா பதிப்பகம், பக். 500, விலை 390ரூ. உடலும் உள்ளமும் தூய்மையாக இருந்தாலே பரிசுத்தமான ஆன்மாவை உணர முடியும். அந்த இலக்கில் இந்நூலை வாசிக்க ஆரம்பிக்கலாம். பல்வேறு மத நூல்கள், அறிஞர் பெருமக்களின் அறிவுரைகள், இந்துமத ஆன்மிகப் பெரியவர்கள், ஏசுநாதர் போதனைகள், அண்ணல் நபிகள் நாயகத்தின் பொறுமையைப் பறைசாற்றும் கட்டுரை.. இத்துடன் திருக்குறள், பாரதியாரின் அமுத மொழிகளையும் தலைப்புக்கு ஏற்றவாறு கலவையாகத் தந்து வியக்க வைக்கிறார் நூலாசிரியர். சமய நல்லிணக்கத்துக்கான மிகச் சிறந்த நூலாகவும் இது விளங்குகிறது. […]

Read more

பாவலரேறு பெருஞ்சித்தனார் பாடல்களின் யாப்பமைதி

பாவலரேறு பெருஞ்சித்தனார் பாடல்களின் யாப்பமைதி, ஜெ. மதிவேந்தன், நெய்தல் பதிப்பகம், பக். 208, விலை 130ரூ. தனித்தமிழ் இயக்கத்தின் அறிஞர் பெருமக்கள் பலருள் குறிப்பிடத்தக்கவர் பெருஞ்சித்திரனார். இதழாசிரியராகவும் நூலாசிரியராகவும் எழுத்துப்பணியில் அயராது ஈடுபட்டிருந்தவர். பெருஞ்சித்திரனாரின் இலக்கிய-இலக்கணக் கூறுகளையும் பாவினங்களையும் இந்நூல் ஆராய்கிறது. மக்களில் உயர்வு-தாழ்வைப் படைத்தவர்கள் பாவினங்களிலும் யார் எந்தப் பாவினத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வகைப்படுத்தியிருந்தனர். ஆனால், பெருஞ்சித்திரனார் இதைத் தகர்த்தெறியும்படியாக, தமிழிலுள்ள அனைத்துப் பாவினங்களையும் பயன்படுத்திப் பாடினார். மேலும், அவர் பயன்படுத்திய யாப்பு வடிவங்களையே முதன்மைப் பொருளாகக் கொண்டு இந்நூல் அமைந்திருக்கிறது. […]

Read more

தமிழாய்வு சில மயக்கங்கள்

தமிழாய்வு சில மயக்கங்கள், சா. பன்னீர்செல்வம், மணிவாசகர் பதிப்பகம், பக். 320, விலை 200ரூ. தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவை குறித்து எழுதப்பட்ட பத்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தொல்காப்பியர் நோக்கில் திசைச்சொல் என்பது என்ன, தமிழில் பேச்சுமொழியே எழுத்துமொழியாகி விடுமா, தமிழில் தன்வினை – பிறவினை பொருள் மரபுகளும் அவற்றிற்கான சொல்லாட்சிகளும் எவ்வாறு அமைகின்றன, தமிழ் கலப்புமொழி ஆகாமல் காப்பதெப்படி, வள்ளுவர் கொல்லாமையை முதலாவதாகவும் பொய்யாமையை இரண்டாவதாகவும் கூறியது சரியா – இப்படிப்பட்ட ஆழமான செய்திகளை எடுத்துக்கொண்டு அவற்றைப் பல கோணங்களிலும் அலசி […]

Read more

எப்போ வருவாரோ

எப்போ வருவாரோ, தொகுப்பாசிரியர் வள்ளி முத்தையா, தோழமை வெளியீடு, பக். 112, விலை 150ரூ. எம்.எஸ்.சுப்புலட்சுமி சதாசிவம் தம்பதியருக்கு ரசிகமணி டி.கே.சி. எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்நூல். இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு ரசிகமணி எழுதிய கடிதங்கள், ஒரு பல்சுவை விருந்து. பல தனிப்பட்ட சம்பவங்களை அவை கூறும்போது, சரித்திர நிகழ்வுகளாக அவை நிழலாடுகின்றன. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அவர் எழுதும் கடிதங்கள், “அருமைப் புதல்வி குஞ்சம்மாளுக்கு’ எனத் தொடங்குகின்றன. டி.சதாசிவத்துக்கு எழுதும் கடிதங்கள் “அருமை நண்பர் சதசாசிவத்துக்கு’ என்று தொடங்குகின்றன. கடிதங்களின் முடிவில் “அன்புள்ள, டி.கே.சிதம்பரநாதன்’ என்றே எழுதி […]

Read more

மெக்காலே கல்வியிலிருந்து மீள திருக்குறளே வழி

மெக்காலே கல்வியிலிருந்து மீள திருக்குறளே வழி, நலந்தா செம்புலிங்கம், விஜயா பதிப்பகம், பக். 80, விலை 50ரூ. பள்ளிப் பாடத்தில் திருக்குறள் முழுவதையும் சேர்க்க வேண்டும் என்று மதுரை கிளை, உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு எண் WP(MD)11999/2015க்கு, நீதிபதி மகாதேவன், பள்ளிப் பாடத்தில், 6 முதல், பிளஸ் 2 வகுப்புக்குள் திருக்குறள் அறத்துப் பாலையும், பொருட்பாலையும் முழுமையாகச் சேர்க்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இத்தீர்ப்பில் மெக்காலே கல்வி முறையும், அதனால் பண்பாடு உருவாகவில்லை, நீதிநெறி முறைகள் […]

Read more
1 2 3