கணினித் தமிழ்

கணினித் தமிழ், இல. சுந்தரம், விகடன் பிரசுரம், பக். 368, விலை 230ரூ. கணினி, இணையம் இவை இன்று மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக மாறி வருகின்றன. இந்நிலையில் இவற்றைப் பற்றிய புரிதலை அனைத்துத் தரப்பினருக்கும் உண்டாக்கும் வகையில், ‘கணினித் தமிழ்’ என்னும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து அலகுகளில் ஆசிரியர் கணினி, இணையம் சார்ந்த செய்திகளைப் பதிவு செய்துள்ளார். கணினியின் பாகங்கள், அதன் செயல்பாடு, அதில் பயன்படும் வன்பொருட்கள், மென்பொருட்கள், இன்று பெருகி வரும் நவீன மொபைல்பேசிகளில் பயன்படுத்தப்படும் இயங்குதளங்கள், […]

Read more

தி ஜேர்னி ஆப் ஜீனியர்ஸ்

தி ஜேர்னி ஆப் ஜீனியர்ஸ், இரா. சிவராமன், பை கணித மன்றம் வெளியீடு, விலை 250ரூ. கணித பாடங்கள் சொல்லிக் கொடுக்கும் கணித சிந்தனைகள் எல்லாம், நம் அன்றாட வாழ்வில் எங்கே பயன்படுகின்றன என்ற கேள்விக்கான விடை தான், The journey of genius என்ற ஆங்கில நூல். இதன் முக்கிய அம்சமே கதை வடிவில் கணித சிந்தனைகளை அறிமுகப்படுத்தியிருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது. கணிதத்தின் அனைத்து அம்சங்களையும் அறிந்த அதுல்யா என்ற மேதையும், கணிதம் பற்றி பெரிதாக புரிதல் இல்லாத வியாபாரி ஒருவரும் சந்திக்க […]

Read more

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், இந்திரா சவுந்தரராஜன், திருமகள் நிலையம், பக். 280, விலை 175ரூ. இந்நாவல் படிக்கத் துவங்கியது முதல் முடிக்கும் வரை தொடர்ந்து படிக்கும் வகையில் விறுவிறுப்பாக உள்ளது. மகாதேவபுரம், மழையின்றி, தண்ணீர் இன்றித் தவித்தபோது, தாசி கமலாம்பாள் அங்கு வந்து, அவ்வூர் நடராஜர் சன்னிதியில் நடனமாடி, மழையை வரவழைத்தாள் என்ற செய்தியுடன் நாவல் தொடங்குகிறது. இச்செய்தியைக் கேள்விப்பட்ட ஊஞ்சல் பத்திரிகை ஆசிரியர் அமிர்தலிங்கம், பிரபாகர் என்ற செய்தி சேகரிப்பவரை அந்த ஊருக்கு அனுப்புகிறார்; அவன், அஸ்வதி என்ற பெண்ணுடன் மகாதேவபுரம் சென்று உண்மையை […]

Read more

பெரிய புராணத்தில் வாழ்வியல்

பெரிய புராணத்தில் வாழ்வியல், பேராசிரியர் சாமி.தியாகராஜன், கற்பகம் புத்தகாலயம், பக். 280, விலை 190ரூ. எதிர்கால இளைஞர்கள் பெரியபுராணத்தைப் படிக்கவும், கேட்கவும், பேசவும், பின்பற்றவும் ஏற்ற வகையில், மிகவும் ஆழ்ந்த சிந்தனையில், ஆய்வு நோக்கில் இந்த நூல் உள்ளது. பக்தியும் தொண்டும் வாழ்வை எவ்வாறு உயர்த்தும் என்பதை இந்த நூலில் மிகவும் அழகாக அறிஞர் சாமி.தியாகராஜன் எழுதியுள்ளார். பதினொன்றாம் திருமுறைகள் என்னும் அருள் பெட்டகத்தைத் திறக்கும் தங்கச் சாவியாக, 12ம் திருமுறை ஆகிய பெரிய புராணம் உள்ளதை மிக அழகாக விளக்கியுள்ளார். ‘தொண்டின் தூய்மை’யில் […]

Read more

பார்வை தொலைத்தவர்கள்

பார்வை தொலைத்தவர்கள், யோசே சரமாகோ, தமிழில் எஸ். சங்கரநாராயணன், பாரதி புத்தகாலயம், பக். 383, விலை 295ரூ. கடந்த, 1998ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற போர்த்துக்கீசிய நாவல் இது. யோசே சரமாகோ (1922 – 2010) ஒரு போர்த்துக்கீசியர். கவிஞர், நாவலாசிரியர், நாடகாசிரியர், பத்திரிகையாளர். இந்த உலகத்தை, ‘மொத்தமுமே பார்வையற்ற குருடர்களின் உலகம்’ என்று சொல்கிறார் ஆசிரியர். ஒரு தனி மனிதன் (38 வயதினன்) கார் ஓட்டிச் செல்கையில் திடீரென்று பார்வையை இழக்கிறான். அவன் காரைத் திருடிச் செல்லும் திருடனும் குருடாகிறான். […]

Read more

நல்லவை நாற்பது

நல்லவை நாற்பது, இரா. மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 330, விலை 200ரூ. வள்ளலார், விவேகானந்தர், பரமஹம்சர், ரமண மாமுனி என்று ஆற்றல்சால், அருளாளர்கள் பற்றிய சுவையான கட்டுரைகள், ரசிகமணி டிகேசி, தொ.பொ.மீ. உள்ளிட்ட தமிழ்ச்சான்றோர்கள் தமிழ்ப் புலமை, பாரதியார், பாரதிதாசன், நாமக்கல்லார், சுரதா என்று பாரதி பாசறை, பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், என்.எஸ்.கே., நாகேஷ் என திரைவித்தகர்களை வியந்தோதும் பாங்கு என்று நாற்பது நல்லவைகளை இந்நூலில் புகுத்தித் தந்துள்ளார்கள் பேராசிரியர்கள். நன்றி: குமுதம், 16/11/2016.

Read more

மனம் ஒரு மகாத்மா

மனம் ஒரு மகாத்மா, முனைவர் பா. மஞ்சுளா, விஜயா பதிப்பகம், பக். 104, விலை 70ரூ. வள்ளலார் மீதான ஈடுபாடு நூலில் நிரூபணமாகியுள்ளது. பெற்றோர் போற்றுதல், தெய்வத் துணை, சான்றோரை மதித்தல், துணையை நேசித்தல், மரங்களைக் காத்தல், நட்பு போற்றுதல், நல்லோர் சேர்க்கை, தானம் கொடுத்தல், நல்லோர் மனத்தை நலம் பெறச் செய்தல் என்று வள்ளலார் வழி நின்று விளக்கியுள்ளது பயன்தரத்தக்கது. நன்றி: குமுதம், 16/11/2016.

Read more

நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி

நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி, தமிழில் பூ. சோமசுந்தரம், அலைகள் பதிப்பகம், விலை 140ரூ. ஜான் ரீடைப் போலவே ரஷ்யப் புரட்சியைப் பற்றி மிக விரிவாக எழுதிய மற்றொரு எழுத்தாளரும் அமெரிக்காவைச் சேர்ந்தவரே அவர் பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம்ஸ், ஜான் ரீடின் வழிகாட்டலில் வந்தவர். இருவருமே ரஷ்யப் புரட்சியை நேரில் கண்டவர்கள். ரஷ்யா பற்றியும், அந்நாட்டில் புரட்சியை வழிநடத்திய லெனின் பற்றியும் நிலவிய பல்வேறு தவறான நம்பிக்கைகள், சித்திரங்களை மாற்றியதில் ரைஸ் வில்லியம்ஸின் எழுத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. ரஷ்யப் புரட்சிக்குப் பின்னால் 1922- […]

Read more

முதல் வரிசை மூன்றாவது இருக்கை

முதல் வரிசை மூன்றாவது இருக்கை, படுதலம் சுகுமாரன், ஆரம் வெளியீடு, விலை 160ரூ. பல்வேறு வார இதழ்கள், மாத இதழ்களில் வெளியான ஆசிரியரின் 35 சிறுகதைகளின் தொகுப்பு. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் வாழ்க்கைப் போராட்டங்களுமே கதைக்கான களமாக விரிகின்றன. மகிழ்ச்சி, சந்தேகம் பொறாமை, உறவுச் சிக்கல்கள் என எல்லாப் பின்னணிகளிலும் கதைகள் பயணிக்கின்றன. ஒரு குழந்தையின் மனதில் ஒருவர் இடம்பிடிப்பது எவ்வளவு கடினம் என்பதையும், இந்த நிலை மாறும்போது அந்தக் குழந்தையின் மனநிலை எப்படி மாறுகிறது என்பதையும் அற்புதமாக விளக்குகிறது ‘12 வயதுப் […]

Read more

ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை

ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை, அண்டனூர் சுரா, இருவாட்சி இலக்கியத் துறைமுகம், விலை 180ரூ. அண்டனூர் சுராவின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. இத்தொகுப்பில் 19 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு கதையும் ஏதாவது ஒரு சமூக நிகழ்வின் நிகழ்காலப் பதிவாக நம் கவனத்தை ஈர்க்கிறது. சிக்கலற்ற கதைப்போக்குகளுடன் இயல்பாக உள்வாங்க கூடிய கதைகளாக எல்லாக் கதைகளுமே இருக்கின்றன. வெறும் உரையாடல்களோடு மட்டுமே நிறைவுறா இக்கதைகள், ஆசிரியரின் அரசியல் சார்பையும் வெளிப்படுத்துகின்றன. நன்றி: தி இந்து, 5/11/2016.

Read more
1 2 3