108 திவ்ய தேசங்கள்

108 திவ்ய தேசங்கள், ஆர்.இளைய பெருமாள், சகுந்தலை நிலையம், பக். 414, விலை 300ரூ. பன்னிரெண்டு ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப் பெற்றவை, 108 திவ்ய தேசங்கள். 4,000 திவ்ய பிரபந்தங்களால் இந்த வைணவ கோவில்கள் போற்றப்பட்டுள்ளன. இந்த நுாலில் சோழ நாட்டுத் திருப்பதிகள், 40; நடுநாட்டில் – 2, தொண்டை நாட்டில் – 22, வடநாட்டில் – 11, மலைநாட்டில் – 13, பாண்டி நாட்டில் – 18, திருநாட்டில் – 2 என்று பட்டியலிட்டு கோவில்கள் விளக்கப்பட்டுள்ளன. இதில், கோவில் என்று […]

Read more

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் விளக்கம், திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும், கி.குப்புசாமி முதலியார், சிவலாயம் வெளியீடு, பக்.1735, விலை 1800ரூ. உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறளுக்கு, எண்ணற்ற விளக்கவுரைகள் வெளிவந்துள்ளன; இனியும் வரும். அவை அத்தனையும், மாற்றுக் குறையாத பரிமேலழகரின் உரைக்கு அடுத்த விளக்கமாகும். பரிமேலழகர், வைணவராக இருந்தாலும், சைவ நுால்களை நன்கு பயின்று தேர்ந்தவர். வட மொழியைக் கற்று கரை தேர்ந்த வித்தகர். திருக்குறளுக்கு அவரின் உரை, மாபெரும் கோவிலுக்கு தங்கக் கூரை வேய்ந்ததை போன்றது என்றாலும், அவரின் உரையும், விமர்சனங்களை சந்தித்தே வருகிறது. […]

Read more

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம், அழகர் நம்பி, கவிதா பப்ளிகேஷன், தொகுதி 1, பக்.416, தொகுதி 2, பக்.448, தொகுதி 3, பக்.288, தொகுதி 4, பக்.496, மொத்த பக். 1,648, நான்கு தொகுதிகளும் சேர்த்து விலை ரூ.1,200. ‘அடைவதற்கான வழியும், அடையப்பெறும் பொருளும் (சாதனம், சாத்தியம்) நானே‘ என்கிறார் (‘மாமேகம் சரணம் வ்ரஜ‘ – பகவத் கீதை) ஸ்ரீகிருஷ்ணர். இதை நன்கு உணர்ந்தவர்களே பன்னிரு ஆழ்வார்கள். இவர்கள் வைணவத்தையும், தமிழையும் தழைத்தோங்கச் செய்ததுடன், பக்தி இலக்கியத்தையும்; அந்தாதி, மடல், தாண்டகம், எழுகூற்றிருக்கை, பாவை, பள்ளியெழுச்சி […]

Read more

சிறுகதையும் திரைக்கதையும்

சிறுகதையும் திரைக்கதையும்,  ஜெயகாந்தன்,  டிஸ்கவரி புக் பேலஸ், பக்.172, விலை ரூ.160. ஜெயகாந்தன் அறுபதுகளில் எழுதிய சிறுகதைகள் ஒவ்வொன்றும் மறக்க இயலாதவை. மனித வாழ்வின் சாராம்சத்தை உயிர்ப்பு மிக்க அனுபவங்களினூடே பிழிந்து தருபவை. அந்த வரிசையில் இந்நூலில் இடம் பெற்றுள்ள ‘நான் இருக்கிறேன்‘ சிறுகதையையும் சொல்லலாம். தொழுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பிச்சைக்காரர், வாழ்க்கையில் ஆழ்ந்த பிடிப்புடன் இருக்கிறார். கால்களில்லாத மாற்றுத்திறனாளி ஒருவர், ரயிலில் விழுந்து தற்கொலை செய்ய முயலும்போது அவரைத் தடுத்து மீட்கிற பிச்சைக்காரர், வாழ்க்கையின் மீது நம்பிக்கையை மாற்றுத்திறனாளிக்கு உருவாக்குகிறார். ஆனால் […]

Read more

ஸம்ஸ்கிருத முதற் புத்தகம்

ஸம்ஸ்கிருத முதற் புத்தகம், ஸர் ரா.கோ. பண்டார்கர், தமிழில்: பென்னாத்தூர் சு.ஜானகிராமையர்,சரஸ்வதி பதிப்பகம், பக்.300, விலை ரூ.150. எளிய முறையில் சம்ஸ்க்ருதம் பயில்வதற்காக, புகழ் பெற்ற சம்ஸ்க்ருத அறிஞரான ஆர்.ஜி.பண்டார்கர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்நூல். இதன் முதல் பதிப்பு 1918-இல் வெளியானது. இதன் அடுத்த பதிப்பு குறித்து 1921-ஆம் ஆண்டில் சுதேசமித்திரனில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் இல்லாமல், எளிய முறையில், வீட்டில் இருந்தபடியே இந்தப் புத்தகத்தின் உதவியுடன் சம்ஸ்க்ருதம் பயிலலாம். சம்ஸ்க்ருத எழுத்துகள் தொடங்கி, எளிமையான இலக்கணங்கள் […]

Read more

பணத்தின் பயணம்

பணத்தின் பயணம் – பண்ட மாற்று முதல் பிட்காயின் வரை, இரா. மன்னர் மன்னன், விகடன் பிரசுரம், பக்.336; ரூ.260; கற்காலத்தில் இருந்து தற்காலம் வரையிலும் பணத்தின் பரிணாம வளர்ச்சியை சொல்லும் நூல் இது. பழங்காலத்தில் இருந்த பண்டமாற்று முறை, தங்கம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை பிணயப் பொருள்களாகப் பயன்படுத்தியது, கரன்சிகள் உருவெடுத்த வரலாறு, பல்லவர் காலத்தில் பணம் தொடர்பாக பொதிந்துள்ள பொருள் மதிப்பு, பொற்காசுகளாக மாறிய வரலாறு உள்ளிட்டவற்றை தெள்ளத் தெளிவாக நூல் ஆசிரியர் விளக்கியுள்ளது இந்த நூலின் சிறப்பு அம்சமாகும். […]

Read more

நூலகத்தால் உயர்ந்தேன்

நூலகத்தால் உயர்ந்தேன், கோ.மோகனரங்கன், வசந்தா பதிப்பகம், பக்.1096, விலை ரூ.1200. எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழ் எழுத்துலகில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பவர் இந்நூலின் ஆசிரியர். அவர் தனது இளமைப் பருவத்திலிருந்தே நூல்களின் மீது அளப்பரிய காதல் கொண்டவராக இருந்திருக்கிறார். பத்தாவது படிக்கும்போது பகல் உணவுக்காக அவருடைய தந்தை தந்த நான்காணாவில் மீதம் பிடித்து, பழைய நூல்களை வாங்கிப் படித்திருக்கிறார். சென்னை பல்லாவரத்தில் இருந்த கார்டன் உட்ராப் தோல் தொழிற்சாலையில் 1959 ஆம் ஆண்டு நாள் கூலி இரண்டு ரூபாய் கிடைத்த வேலையை […]

Read more

போப் பிரான்சிஸ்  நம்பிக்கையின் புதிய பரிமாணம்

போப் பிரான்சிஸ்  நம்பிக்கையின் புதிய பரிமாணம், நாகேஸ்வரி அண்ணாமலை, அடையாளம் பதிப்பகம், பக்.224, விலை ரூ.200. கார்டினல் ஹோர்கே மரியோ பெர்காகிலியோ 2013-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி 266-ஆவது போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு போப் பிரான்சிஸ் ஆகிறார். இவர் எங்கு பிறந்தார்? எங்கு படித்தார்? என்று ஆரம்பித்து தற்போதைய அவரது இறைப் பணி வரை தெளிவாக அனைவரும் எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில் தொகுத்தெழுதியுள்ளார் நூலாசிரியர். போப் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? அந்த தேர்தல் முறைகள் எவ்வாறு இருக்கும்? பிரான்சிஸ் என்று பெயர்வரக் காரணம் என்ன? என்பன […]

Read more

கானலால் நிறையும் காவிரி

கானலால் நிறையும் காவிரி, உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை, ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், பக்.104, விலை ரூ.120. காவிரி பிரச்னை குறித்து உணர்வுப்பூர்வமான கொந்தளிப்புகளும், போராட்டங்களும் நிகழ்ந்து வரும் சூழ்நிலையில் அப்பிரச்னை பற்றி மிகவும் உயிரோட்டமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றத்தால் 2007 இல் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 192 டி.எம்.சி., தண்ணீரில் இருந்து 14.75 டி.எம்.சி., தண்ணீரைக் குறைத்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு ஒதுக்கி, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு உத்தரவிட்டது. தமிழகத்தின் நிலத்தடி நீரை கணக்கில் […]

Read more

ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை

ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை, கோ.உத்திராடம், நாம் தமிழர் பதிப்பகம், பக்.168, விலை ரூ.150. இந்நூலில் வெளிவந்த பெரும்பாலான கட்டுரைகள் தினமணியில் (தமிழ்மணி) வெளி வந்தவை. ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அகழாய்வில் கிடைத்த தொல் பொருள்கள், முதுமக்கள் தாழி, கட்டடங்கள், உறை கிணறுகள், தொன்மை எழுத்துகள் ஆகியவை பண்டையத் தமிழர்கள் நகர, நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கு முக்கியச் சான்றாதாரங்களாக உள்ளன என்று கூறும் நூலாசிரியர், அவற்றுடன் தொடர்புடைய இலக்கியங்களையும் எடுத்துக் கூறியுள்ளார். மேலும், கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, சுவர் ஓவியங்களில் காணப்படும் மக்களின் வாழ்வியல் […]

Read more
1 2 3 9