மனிதனை இயக்குவது மனமா மூளையா?

மனிதனை இயக்குவது மனமா மூளையா?, டாக்டர் ஏ.வி.ஸ்ரீநிவாசன், லஷ்மி மோகன், நலம் வெளியீடு, பக். 128, விலை 125ரூ. தாயின் வயிற்றில் உள்ள கருவிலேயே மூளையில் நியூரான்கள் உதிக்கத் துவங்கி, குழந்தை கற்கவும் துவங்கி விடுகிறது என்பது இறைவனின் விந்தை. எந்தக் குழந்தைக்கும் முதல் மூன்று மாதத்திலேயே ஒவ்வொரு வினாடியும், 2,500 நியூரான்கள் உருவாவது, பேதமற்ற முழு முதல் கடவுளின் வித்தை. குழந்தைப் பருவத்தின், ‘சிதறும் மனநிலை’ முதல், வயோதிகத்தின் இறுதிக்கட்டமான, ‘ஒடுக்கப்பட்ட மனநிலை’ வரை, பல்வேறு காலகட்டங்களில் எண்ணங்களைத் தாங்கி நிற்கும் மூளையின் […]

Read more

நல்லிரவு

நல்லிரவு, க.விஜயகுமார், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 96, விலை 80ரூ. ‘குட் நைட்’ சொல்வது பகலிலா, இரவிலா? என்று ‘டாக் ஷோ’ நிகழ்த்தும் அளவிற்கு ‘துாங்கா உலகின்’ துாக்கம் மாறிக் கொண்டே வருகிறது. 20 வயதில் தலைகீழாக படுத்துக் கொண்டு விடிய விடிய இரவைக் கழிக்கும் ‘நவ நாகரிகர்’களால், 40 வயதில் நேராக உட்கார்ந்து மலம் கூட கழிக்க முடியாமல் போகிறது. எனவே, துாக்கமின்மைக்கு, ‘வேலை, வெட்டி’ என்று ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். ‘காரணம் இருக்கட்டும், நிவாரணம் இருக்கிறதா?’ […]

Read more

என் நினைவில் சே

என் நினைவில் சே, சே குவேராவுடன் என் வாழ்க்கை, அலெய்டா மார்ச், தமிழில் அ.மங்கை, அடையாளம், புத்தாநத்தம், விலை 250ரூ. போராளியின் மற்றொரு பரிமாணம் அலெய்டா மார்ச், சே குவேராவின் இரண்டாவது மனைவி. நான்கு குழந்தைகளுக்குத் தாய். கியூபா புரட்சிப் போரில் தலைமறைவு இயக்கத்திலும், கொரில்லா குழுவிலும் பணியாற்றியவர். கியூபாவின் பெண்கள் அமைப்பிலும், கல்வித்துறை, அயலகத்துறை ஆகியவற்றிலும் பணியாற்றியவர். தன் நினைவில் படிந்து நிற்கும் சேவை இந்த நூலில் பகிர்ந்துகொள்கிறார். கண்டிப்பான தலைவராக, கறாரான போராளியாக உலகம் அறிந்த சேவின் மற்றொரு பரிமாணத்தை நம்முன் […]

Read more

பெரியார் அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்

பெரியார் அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள், சு.ஒளிச்செங்கோ, சங்கமி வெளியீடு, விலை 60ரூ. திருந்தச் சொல்லி, திருந்திடச் சொல்லி பெரியாரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் படிக்கிற ஒருவர் வியப்புக்கு ஆளாகும் விஷயங்களில் ஒன்று நீளநீளமான வாக்கியங்கள். ஆனால் அனைத்தும் எளிமையோ எளிமையாக இருக்கும். சொல்ல வந்த கருத்தை மீண்டும் மீண்டும் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லி, அதை நினைவில் பதியவைக்கும் முயற்சி அது. எப்போதும் அலைபாய்ந்துகொண்டிருக்கும் மனித மனத்தில், எந்தவொரு கருத்தையும் மூன்று முறை சொல்லி கவனத்தை ஈர்க்க முயற்சித்தது பவுத்தம். பெரியாரும் அதே அணுகுமுறையைக் கையாண்டார் […]

Read more

கரிசல் மனிதர்கள்

கரிசல் மனிதர்கள், கி.ரா.பிரபாகர், அட்சரம் பதிப்பகம், விலை 100ரூ. முதுபெரும் எழுத்தாளர் கி.ரா.வின் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் எழுத்தாளரின் முதல் தொகுப்பு. மூன்று குறுநாவல்கள், பேதலிப்பு கதையில் வரும் முத்துக்கோனார் – ஒடையம்மாவும் நம் மனதில் பதிந்துபோகும் கதாமாந்தர்கள். வட்டார வழக்கிலேயே சரசரவென நம்மை இழுத்துக்கொண்டோடும் மொழிநடைக்கு ஒரு சபாஷ் போடலாம். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: தி இந்து, 7/4/2018.

Read more

பன்முகன்

பன்முகன், சந்திரா மனோகரன், காவ்யா வெளியீடு, விலை 180ரூ. கவிதை, கட்டுரை, நாவல், சிறுவர் இலக்கியம், விளையாட்டு, மொழிபெயர்ப்பு பணிகளோடு சிற்றிதழாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் நூலாசிரியரின் 25-ஆவது நூலிது. இதிலுள்ள 24 கதைகளிலும் வரும் சாதாரண மனிதர்கள், எல்லாச் சோதனைகளிலிருந்தும் தன்னம்பிக்கையோடு மீண்டெழுந்து சாதனை மனிதர்களாக தடம் பதிக்கிறார்கள். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026537.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: தி இந்து, 7/4/2018.

Read more

உச்சி சூரியனில் முளைக்கும் பனை

உச்சி சூரியனில் முளைக்கும் பனை, திணடுக்கல் தமிழ்ப்பித்தன், வெற்றிமொழி வெளியீட்டகம், விலை 60ரூ. நவீன ஓவியராக அறியப்பட்டவரின் நான்காவது கவிதை நூல். கவிதை மொழிக்கான மெனக்கெடல்கள் ஏதுமின்றி, அச்சு அசலான வாழ்க்கையை தனது இயல்பான மொழியில் கவிதையாக்கியுள்ளார். மாட்டுக்கறி சுமந்து செல்லும் அம்மாவும், மலமள்ளிய வாடையை விரட்ட மதுவாடையோடு குழந்தையைக் கொஞ்சம் அப்பாக்களும் நம்மை நெஞ்சோடு சேர்த்தணைத்து நெகிழ வைக்கிறார்கள். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: […]

Read more

சைவ வைணவப் போராட்டங்கள்

சைவ வைணவப் போராட்டங்கள், சிகரம் ச.செந்தில்நாதன், சந்தியா பதிப்பகம், விலை 165ரூ. இந்தியாவின் பிற மொழிகளில் வடமொழி வேதத்தின் செல்வாக்கு மிகுந்திருப்பதுபோல் தமிழில் இல்லாமைக்கு காரணம், இங்கே சைவ, வைணவ சமயங்களும் அவற்றின் வழியாக கிடைக்கப்பெற்ற சமய இலக்கியங்களும்தான் சங்க காலம் தொடங்கி, சைவ – வைணவ சமயங்களின் செல்வாக்கு குறித்தும், நாயக்கர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியில் இவ்விரு சமயங்களின் நிலை குறித்தும் விரிவாக ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026495.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

நூலகத்தால் உயர்ந்தேன்

நூலகத்தால் உயர்ந்தேன், முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கம், வசந்தா பதிப்பகம், விலை 1200ரூ. தமிழ்நாட்டில், நூலகத்துறை வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கம். கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்பட்டவர் மோகனரங்கம். அவர் தனது வாழ்க்கை வரலாற்றை “நூலகத்தால் உயர்ந்தேன்” என்ற தலைப்பில் எழுதியுள்ளார். காரணம், தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை நூலகங்களில் கழித்திருக்கிறார். நூலில் ஏராளமான தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பற்றிய விவரங்களையும் விரிவாக எழுதியுள்ளார். எனவே, இந்த நூல் மூலம் ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்ல, பலருடைய வாழ்க்கையைப் பற்றி அறிய முடிகிறது. குறிப்பிட்டுச் சொன்னால், […]

Read more

ஆகாயத் தாமரை

ஆகாயத் தாமரை, பாரதி வசந்தன், பழனியப்பா பிரதர்ஸ், விலை 220ரூ. அற்புதமான சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்ற பாரதி வசந்தன், கவிதையாப்பதிலும் தனக்குள்ள வல்லமையை எடுத்துக்காட்டி இருக்கிறார், ஆகாயத்தாமரை நூலின் மூலம். எல்லாம் மரபுக் கவிதைகள். சமுதாயத்தின் கொடுமைகளை சாடும்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்பும்போதும், அவருடைய கவிதைகள் நமது இதயத்தைத் தொடுகின்றன. கவிதைகளில் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் கடல் அலைபோல் பொங்கி எழுகின்றன. மாதிரிக்கு ஒரு கவிதை, “என் இனம் என் மொழி என் நிலம் மீட்பது இதுவே வாழ்வின் லட்சியம் – என் […]

Read more
1 2 3 4 5 9