ஜெ.ஜெயலலிதா என்னும் நான்… அம்மாவின் கதை!

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்… அம்மாவின் கதை!, எஸ்.கிருபாகரன், விகடன் பிரசுரம், பக்.248, விலை ரூ.175. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு இந்நூல். முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை விறுவிறுப்பான ஒரு நாவலைப் படித்த உணர்வை ஏற்படுத்துகிறது. ஜெயலலிதா சிறுமியாக இருந்தபோது, பூங்காவில் சந்தித்த கழைக்கூத்தாடிச் சிறுமியைப் படிக்க வைக்கும்படி கூறி, தன் தங்கக் காதணிகளைக் கழற்றிக் கொடுத்தது; சர்ச் பார்க் பள்ளியில் படித்த தோழி நளினியை பிரபல நடிகையான பின்னர் தேடிச் சென்று சந்தித்துப் பேசி மகிழ்ந்தது; அமெரிக்க நடிகர் ராக் […]

Read more

தமிழ் இன்று

தமிழ் இன்று, கேள்வியும் பதிலும், இ. அண்ணாமலை, அடையாளம், பக்.182, விலை ரூ.170. தமிழ்மொழி தொடர்பாக பலருக்கும் எழுந்த பல்வேறு சந்தேகங்கள் சிஃபி, வல்லமை ஆகிய ஆன்லைன் இதழ்களில் கேள்விகளாகக் கேட்கப்பட்டு, அதற்குத்தக்க விடைகளும் நூலாசிரியரால் அளிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய வினா-விடைகளின் தொகுப்பே இந்நூல். எழுத்து, எழுத்துச் சீர்திருத்தம், சந்தி, கிரந்த எழுத்து, பிறமொழிச் சொற்கள், பேச்சுத்தமிழ், சொல், கலைச்சொல், இலக்கணம், செம்மொழி, தொன்மை, வளர்ச்சி, நடைவேறுபாடுகள் ஆகிய பதின்மூன்று தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக நூலாசிரியர் விடையளித்துள்ளார். இந்த விளக்கங்கள் அனைத்தும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு […]

Read more

தமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும், டி.வி.ராதாகிருஷ்ணன், திருவரசு புத்தக நிலையம், பக். 160, விலை 100ரூ. குறைந்த விலை உள்ள இந்த நூல் ஒரு சிறந்த தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது. நூலாசிரியர் ராதாகிருஷ்ணன், 55 ஆண்டுகளுக்கும் மேல் நாடகப் பணி புரிந்தவர். 25க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதித் தயாரித்து, நடித்து இயக்கியவர். தமிழ் நாடக மேடையின் தோற்றம் முதல் இன்று நாடகம் நடத்தும் குழுக்கள் வரைஇந்நூலில் எழுதியுள்ளார். தொழிற்துறை நாடக சபை துவங்கி, அமெச்சூர் நாடகக் குழுக்கள் வரை அனைத்து நாடக சபை […]

Read more

ஆதார் சட்டம்

ஆதார் சட்டம், பி.ஆர்.ஜெயராஜன், சுப்ரீம் லா பப்ளிகேஷன்ஸ், விலை 210ரூ. ஆதார் அட்டையின் அடிப்படைத் தேவை என்ன? அரசு சார்ந்த மானியங்கள், நலத்திட்டங்கள் என அத்தனைக்கும் அது ஏன் அவசியம்? அதனால் தனிமனிதனுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன? ஆதார் அட்டை குறித்து ஏ டு இசட் தகவல்களைத் தெரிந்து கொள்ள எளிய வழிகாட்டி. நன்றி: குமுதம் 9/5/2018.

Read more

கணவனின் காதலி

கணவனின் காதலி, ஜோஜ், ஹலோ பப்ளிகேஷன்ஸ், விலை 500ரூ. மயக்கும் காதலை நம்பி மனைவியை மறந்து போனவன், உண்மை உணர்ந்து திரும்பி வரும் யதார்த்தக் கதை. விஷச்செடியாய் முளைக்கும் கணவனின் விபரீதக் காதலை, வீண்வாதம் செய்து வளர்க்காமல், முளைக்கும்போதே முறித்திட அறிவுரை சொல்லியிருப்பது சிறப்பு. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 9/5/2018.

Read more

வாங்க, மனசுக்குள் போகலாம்

வாங்க, மனசுக்குள் போகலாம், டாக்டர் எஸ். மோகன வெங்கடாசலபதி, மனோரக்ஷா, விலை 100ரூ. மனம் கெட்டால் உடலும் கெட்டு நோய்களுக்கு ஆளாகும். மனநல பாதிப்புகள் எப்படியெல்லாம் ஏற்படும், அதில் இருந்து விடுபடுவது எப்படி? இதற்கெல்லாம் விடையாக தன்னிடம் வந்த உளநலப் பிணியாளர்களின் அனுபவங்கள் வாயிலாக விறுவிறு நடையில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 9/5/2018.

Read more

பட்டுப்புழு வளர்ப்பு

பட்டுப்புழு வளர்ப்பு, பி.மாரியப்பன், இயல் வெளியீடு, பக்.264, விலை ரூ.200. பட்டாடையை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பட்டு தோன்றிய வரலாற்றை எடுத்துச் சொல்வதோடு, பட்டு நூலின் உற்பத்தி குறித்தும் பட்டின் பல்வேறு வகைகள் பற்றியும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது. பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரமாக செயல்படக்கூடிய மல்பெரி தாவரம் பற்றியும், அதைப் பயிரிடும் முறை, தாவரப் பெருக்க முறை, பயிரிடும் காலம் போன்றவற்றையும் நூல் விளக்குகிறது. பட்டுப்புழு வளர்ப்பதற்கான சூழல், வெப்பம், ஈரப்பதம், புழுவிற்கு வழங்கப்படும் இலை, பருவப் பட்டுப்புழுவின் உணவுத்தேவை என எல்லாவற்றையும் விரிவாக […]

Read more

வாகீச முனிவரின் ஞானாமிர்தம்

வாகீச முனிவரின் ஞானாமிர்தம் (சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல்), ஆ. ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், பக்.752, விலை ரூ.650. வாகீச முனிவர் அருளிச் செய்த ‘ஞானாமிர்தம்‘ என்ற நூலே மெய்கண்ட சாத்திரங்களுக்கு எல்லாம் முன்னோடி நூலாக இருக்கிறது. சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள் உண்மைகளை 75 அகவற்பாக்களால் விளக்குகிறது ஞானாமிர்தம். உலகப் படைப்பு, பசுவின் மூவகை அவத்தை, ஆன்மா அடையும் ஐந்துநிலை வேறுபாடுகள், மாயாவாத மறுப்பு, சற்காரிய வாதம், மூவகை துக்கங்கள், பசு தரிசனம், ஞானியரின் இயல்பு, குரு உபதேசப் […]

Read more

உன்னால் கடக்க முடியும்

உன்னால் கடக்க முடியும், ஓஷோ, தமிழாக்கம் வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், விலை 300ரூ. கடலைக் கடக்க வேண்டுமானால் படகு முக்கியம். அதுபோல் வாழ்க்கைக் கடலைக் கடக்க குரு எனும் தோணி அவசியம். குருவின் துணையோடு வாழ்க்கைக் கடலில் குதித்து, ஒவ்வொன்றாய்க் கடந்து, பறிகு குருவையும் துறந்து ஞானக்கடலில் சுதந்தரமாக நடந்து அதனைக் கடப்பது எப்படி? சூட்சுமமான சூஃபி கதைகள் மூலம் ஓஷோ சொல்லித் தந்த ஞானவழிகாட்டல், எளிய தமிழில். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

அதுவும் இதுவும்

அதுவும் இதுவும், டாக்டர் க.விஜயகார்த்திகேயன் I.A.S., விஜயா பதிப்பகம், பக். 152, விலை 120ரூ. மருத்துவக் கல்வியை முடித்து ஐ.ஏ.எஸ். தேர்விலும் வெற்றி பெற்று, தற்போது கோவை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள இந்நூலாசிரியர், நல்ல எழுத்தாளராகவும், பண்பட்ட பேச்சாளராகவும் விளங்குபவர். இவர் ஏற்கெனவே எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ்., விடை பாதி எழுதும் பாணி பாதி என்ற இரு நூல்களையும் எளிய தமிழ் நடையில், அரசுப் பணிகளுக்குத் தேர்வு எழுதும் அரசுத் தேர்வாணைய மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டி நூல்களாகப் படைத்து, நல்ல பாராட்டைப் பெற்றவர். இந்நூலில் […]

Read more
1 2 3 4 9