சினிமா நிருபரின் கலை உலகப் பயணம்

சினிமா நிருபரின் கலை உலகப் பயணம், மேஜர் தாசன்(எஸ்.தேவாதிராஜன்), அமராவதி பதிப்பகம், விலை 50ரூ. சினிமா பத்திரிகையாளர்களில் முக்கியமானவர் மேஜர் தாசன்.(இயற்பெயர் எஸ்.தேவாதிராஜன்). சினிமா நடிகர் – நடிகைகள், பட அதிபர்கள், டைரக்டர்கள் என்று அனைவரையும் பேட்டி கண்டு எழுதியவர். அவர் தனது அனுபவங்களை, டெலிவிஷ,னில் பத்திரிகையாளர் கீழாம்பூர் எஸ்.சங்கரசுப்பிரமணியனுடன் பகிர்ந்து கொண்டார். அந்த பேட்டி நூல் வடிவம் பெற்றுள்ளது. புத்தகம் சிறியதுதான். ஆனால் சுவையான தகவல் நிறைய உள்ளன. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

பாரதிராஜாவின் திரைப்படங்கள் ஒரு பார்வை

பாரதிராஜாவின் திரைப்படங்கள் ஒரு பார்வை, அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், முனைவர் கமலம் சங்கர், விலை 110ரூ. தமிழ்த்திரை உலகில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர், இயக்குனர் இமயம் பாரதிராஜா. உண்மையா கிராமங்களையும், உண்மையான மனிதர்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினர். ஒவ்வொரு திரைப்படத்தையும் ஒரு இலக்கியமாக உருவாக்கினார். காலத்தால் அழிக்க முடியாதவை அவருடைய படங்கள். அது மட்டுமா? சாதாரண நடிகர்களுக்கு நடிப்பு கற்றுக்கொடுத்து, நட்சத்திரங்களாக ஜொலிக்க வைத்தார். உதவி டைரக்டர்களாக இருந்தவர்களை, டைரக்டர்களாக உயர வைத்தவர். தமிழ் சினிமாவின் அந்தஸ்த்தை உயர்த்தியவர்களில் பாரதிராஜாவுக்கு தனி […]

Read more

ஸ்ரீராமானுஜர் 1000 ஆண்டுகள்

ஸ்ரீராமானுஜர் 1000 ஆண்டுகள், எஸ்.சுந்தரேசன், சாந்தி பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரல் 1017-ம் ஆண்டு பிறந்து, 1137-ம் ஆண்டுவரை வாழ்ந்த ஸ்ரீ ராமானுஜர் வைணவக் கொள்கைகளை நிலை நிறுத்தியவர் என்று கொண்டாடப்படுகிறார். அவர் குல வேறுபாடு பார்க்காமல், கீழ் சாதி, மேல் சாதி என்ற பேதம் இல்லாமல் ஆற்றிய சமயத் தொண்டுகள் பற்றி மிக விரிவான தகவல்கள் தக்க சான்றுகளுடன் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. திருப்பதி கோவிலில் இருக்கும் சிலை சிவனா, விஷ்ணுவா என்ற சர்ச்சை எழுந்தபோது, அந்த சிலை விஷ்ணுதான் […]

Read more

சங்க காலப் பேரூர்களும் சீறூர்களும் (தொகுதி 2)

சங்க காலப் பேரூர்களும் சீறூர்களும் (தொகுதி 2), குடவாயிற் சுந்தரவேலு, அருள் பதிப்பகம், பக். 352, விலை 160ரூ. கடலூர், அரியலூர், திருச்சி முதலிய, 11 மாவட்டங்களில் உள்ள பேரூர்கள், சிற்றூர்களை நேரில் சென்று ஆராய்ந்து, அவ்வூர்கள் தொடர்பான தொல்பொருள் சான்றுகள், ஊரின் பரப்பளவு, கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் முதலானவற்றைக் குறிப்பிட்டுள்ள முறை நன்று. ஊரில் உள்ள கோவில்கள், மக்கள் குடியேறிய காலம், ஊர் தொடர்பான சங்க இலக்கியக் குறிப்புகள், சங்க இலக்கியப் புலவர்கள் பற்றிய விளக்கக் குறிப்புகள் தெளிவாக எழுதப்பெற்றுள்ளன. அவை, […]

Read more

ஓரெழுத்தில் அறுபத்துமூவர்

ஓரெழுத்தில் அறுபத்துமூவர், ப.ஜெயக்குமார், உமாதேவி பதிப்பகம், விலை 500ரூ. குரு, லிங்க, சங்கம வழிபாடுகளில் அடியார் பெருமக்களை நேசித்துப் பூசித்தலைச் சங்கம வழிபாடு என்பர். அவ்வழிபாட்டுக்குரிய நாயன்மார்களின் அருள் வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் என, திருப்பேரிட்டுத் தெய்வச் சேக்கிழார் அருளிச் செய்தமை நம் திருப்பேறேயாகும். ஏதேனும் ஓர் உத்தியைக் கையாண்டு இளந்தலைமுறையினரும் அவ்வவதாரிகைகள், அருளாளர்கள் வரலாற்றைப் படித்துய்ய வேண்டும் எனக் கருதிப் போலும், ப.ஜெயக்குமார் ஓரெழுத்தில் ஓரடியார் வரலாறு கூறல் என்னும் அலங்கார உத்தியைக் கையாண்டு, இந்நுாலை யாத்துள்ளார். அதற்காக அடியார்களின் திருப்பெயர்களை அகர […]

Read more

மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்.

மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்., ஜி.விசுவநாதன், கே.எஸ்.எல்.மீடியா லிமிடெட், விலை 150ரூ. விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதன், மக்கள் போற்றும் தலைவரான எம்.ஜி.ஆரின் வரலாறு, அவருடன் தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என பல்வேறு விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. கட்சியைத் தொடங்கியபோது, அவரை மலையாளி என்று வர்ணித்தார், தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதற்கு எம்.ஜி.ஆர்., “யார் தமிழர் என்பதற்கு நீங்களே விளக்கம் சொல்லுங்கள். தமிழக முதல்வராக இருந்த ஓமந்தூராரின் தாய்மொழி தெலுங்கு, ஆனால் அவர் தமிழ் மீது வைத்திருந்த பற்றினை நாடே அறியும். முதல்வராக […]

Read more

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம், சிந்தை ஜெயராமன், வினோத் பதிப்பகம், விலை 299ரூ. சாதாரணக் குடும்பத்தில் பிறந்து பல சோதனைகளை வென்று சாதனை படைத்தவரின் அனுபவப் பாடம். குழந்தைகளுக்கான பள்ளிக் கல்வி முறை எப்படியெல்லாம் இருந்தால் அவர்களின் அறிவுத் திறன் வளரும் என்பதற்கான யோசனைகள் வித்தியாசமானவை, வரவேற்கத்தக்கவை. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 2/5/2018.

Read more

தென்றல் வளர்த்த தமிழ்

தென்றல் வளர்த்த தமிழ், கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 100ரூ. கவியரசர் கண்ணதாசன் ஆசிரியராக இருந்து நடத்திய தென்றல் இதழில், அன்னைத் தமிழின் அருமை குறித்து அக்காலத் தமிழறிஞர்கள் பலரும் எழுதிய கட்டுரைகளை தேடித் தொகுத்துத் தந்திருக்கிறார் ஆர்.பி.சங்கரன். செந்தமிழ்க் கட்டுரைகள் செங்கரும்பாய் இனிக்கின்றன. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 2/5/2018.

Read more

கடல் குதிரைகள்

கடல் குதிரைகள், தாழை மதியவன், தாழையான் பதிப்பகம், பக். 240, விலை 175ரூ. மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான இந்நூலாசிரியர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று பல புதினங்களைப் படைத்துள்ளார். அவற்றில் பல இஸ்லாமிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளும், மத நம்பிக்கைகளும் பின்னப்பட்டு, யதார்த்தத்தை வெளிப்படுத்துபவை. குறிப்பாக, உண்மை நிகழ்வுகளை வைத்தே கற்பனைக் கதைகளை உருவாக்குவது இவரது பாணி. இந்நூலிலுள்ள எட்டு நெடுங்கதைகளும் இதே பாணியில் அமைந்துள்ளது படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ‘கடல் குதிரைகள்’ என்ற முதல் கதை, கடத்தலைப் பற்றி ‘இந்தியா டுடே’யில் வெளியான […]

Read more

காலம்

காலம், பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. சுற்றுவது பூமியா சூரியனா? காலச் சுழற்சி எதனால் ஏற்படுகிறது? காலத்தைப் பின்னோக்கி நகர்த்த முடியுமா? விண்ணிலும் மண்ணிலும் காலமாற்றத்தில் என்னென்ன நிகழ்கின்றன? மனிதர்களும் உயிர்களும் தோன்றியது எவ்வாறு? இப்படி காலம் குறித்த ஏராளமான விஞ்ஞான விளக்கங்கள். எளிய நடையில். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 2/5/2018.

Read more
1 2 3 4 5 6 9