ஜி.எஸ்.டி.கையேடு

ஜி.எஸ்.டி.கையேடு,என்.இராமதாஸ், டி.ரமேஷ், பிரணவம் அசோசியேட்ஸ், பக். 44, விலை 100ரூ. சரக்கு மற்றும் சேவை வரிக்குள் உள்ளடங்கும் மத்திய – மாநில வரிகள், நான்கு விதமான ஜி.எஸ்.டி., சட்டங்கள், உள்ளீட்டு வரி வரவை கழித்துக்கொள்ளும் முறை, ‘ரிட்டர்ன்’ சமர்ப்பிக்க மற்றும் வரி செலுத்த வேண்டிய முறை, வரி தீர்மான மதிப்பீட்டிற்கு மேல்முறையீடு, வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் விபரம் உள்ளிட்டவை இந்நுாலில் இடம்பெற்றுள்ளன. வணிகவியலாளருக்கு மிகவும் பயனுள்ள எளிய நுால் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

சிவயோகி மா.இரத்தினசபாபதி பிள்ளை படைப்புகள்

சிவயோகி மா.இரத்தினசபாபதி பிள்ளை படைப்புகள், நல்லூர் சா.சரவைணன், சைவ சித்தாந்தப் பெருமன்றம், பக். 824, விலை 450ரூ. ஒரு நுாற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர் சிவயோகி மா.இரத்தினசபாபதி பிள்ளை. சிவராஜ யோகத்தில், 40 ஆண்டுகள் இருந்து சிவஞானம் பெற்றவர். இவர், தான் பெற்ற யோக ஞானத்தால் நான்கு நுால்களை எழுதியுள்ளார். ‘திருமந்திர சம்பிரதாயம், காயசித்தி அல்லது சாகாக் கலை, காரியசித்தி விநாயகர் அகவல், திருவாசகமும் சிவராஜ யோகமும்’ என்ற நான்கு நுால்களையும் ஒரே தொகுப்பாக, மயிலை சைவசித்தாந்தப் பெருமன்றம் வெளியிட்டுள்ளது, பாராட்டுக்கு உகந்த சிவத்தொண்டாகும். காரிய […]

Read more

சிங்காரவேலவர்

சிங்காரவேலவர், பா.வீரமணி, சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. அறிவியல் சிந்தனை வளர விரும்பியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் வாழ்வும் பணியும் பற்றிய இந்நுால், சிங்காரவேலரின் ஆற்றல்கள் பலவற்றை எடுத்துக் காட்டுகிறது. சிங்காரவேலர் மீது கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாடு காரணமாக, ஒவ்வொரு தகவலும் ஆசிரியரால் நுண்ணிய நோக்கில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நுால் சிங்காரவேலருக்கு இருந்த பேரும் புகழும் பற்றிய எளிய நடையில் கட்டுரையாசிரியர் எழுதிச் செல்கிறார். திரு.வி.க., சிங்காரவேலரின் மாணாக்கராகத் தம்மை வரித்துக் கொண்டதை தம் வாழ்க்கைக் குறிப்பில் குறித்திருப்பதை நுாலாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கிறார். […]

Read more

புன்னகை ஓர் அரிய ரோபோ

புன்னகை ஓர் அரிய ரோபோ, மோகன் சுந்தரராஜன், அறிவியல் ஒளி, பக். 105, விலை 90ரூ. இக்கால இளைய தலைமுறைகளிடையே அறிவியல் ஆர்வத்தை உண்டாக்க எழுதப்பட்ட இந்நுால், தமிழக இளைஞர்களின் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு முன்னுரை. ஆண் – பெண் என்ற பாகுபாடின்றி, வயதைவிட அறிவையே மேலாகப் போற்றும் மனப் பக்குவத்தை வலியுறுத்துகிறது. மனித அறிவின் மேன்மையையும், மனித நேயத்தையும் நிலைநாட்டுவதை எடுத்துரைக்கிறது இந்நுால். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

முகவரிகள்

முகவரிகள், கவிஞர் ஆல.தமிழ்ப்பித்தன், செந்தமிழ் அறக்கட்டளை, பக். 112, விலை 100ரூ. உயிர் பெரிதல்ல… உயிலே பெரிதென்று வாழும் வேலம்மா போன்ற வேடதாரிகளின் முகமூடிகளை கிழித்தெறிகிறது, ‘சொத்து!’ வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற கணக்கு நெசவாளருக்கும் பொருந்தும் என்பதை, ‘மொட்டை’ என்ற சிறுகதை மூலம் பதிவு செய்கிறார். இந்நுாலில் உள்ள சிறுகதைகள், பகுத்தறிவு வெளிச்சம் மற்றும் அறியாமை இருளை நீக்குவதாக அமைந்துள்ளன. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள், முனைவர் க.மங்கையர்க்கரசி, லாவண்யா பதிப்பகம், பக். 208, விலை 140ரூ. இந்த நுாலை எழுதியுள்ள தமிழ் பேராசிரியர், முனைவர் க.மங்கையர்க்கரசி, அறிவியல் துறையில் பேராசிரியரோ என்று எண்ணத் தோன்றும் வகையில், அறிவியல் கருத்துக்களைச் செறிவான முறையில் தொகுத்தும் வகுத்தும் விளக்கியும் கூறியுள்ள முறை, கற்போருக்கு ஆர்வத்தைத் தருகிறது. சங்க இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ராமாயணம், மகாபாரதம், தேவாரம், திருவாசகம், பட்டினத்தார் பாடல்கள் முதலிய நுால்களில் பொதிந்து கிடக்கும் அறிவியல் கருத்துக்களை, மருத்துவ இயல், மரபியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் கணிதவியல், […]

Read more

எங்கே போகும் இந்த பாதை?

எங்கே போகும் இந்த பாதை?, கலைநன்மணி மகிழ்நன், வசந்தா பிரசுரம், பக். 144, விலை 90ரூ. பள்ளி, கல்லுாரிப் பாடங்களை எத்தனைச் சிறப்பாகப் படித்தாலும், அன்றாட உலக நடப்புகளைப் புரிந்து சாதுர்யமாகத் தன்னை வழி நடத்திச் செல்பவரே வெற்றி அடைவதைக் காணலாம். பெரும்பாலும் ஊடகங்கள் வாயிலாகவும், இணையதளங்கள் மூலமாகவும் ஏராளமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன. சமூக மேம்பாட்டை பதிவு செய்யும் நுால்களும் வெளிவருகின்றன. அவற்றைப் படித்து, முக்கியமான சாரங்களை சமீபத்திய மாற்றங்களோடு பொருத்தி, விழிப்புடன் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். கடந்த ஏழாண்டுகளாக […]

Read more

புலவர் உசேன் புதுக்கவிதைகள்

புலவர் உசேன் புதுக்கவிதைகள், புலவர் உசேன், உகரம் பப்ளிகேஷன்ஸ், பக். 160, விலை 100ரூ. சமூகத்தில் காணப்படும் வன்கொடுமைகள், அவலங்கள் ஆகியவற்றை அங்கதச் சுவையுடன் அரசியல் நையாண்டிக் கவிதைகளாக இத்தொகுப்பில் தருகிறார். கோணல் மனிதர்களைப் பற்றி சிரிப்பையும், கோபத்தையும் துாண்டும் கவிதைகளும் உள்ளன. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: தினமலர், 6/5/2018.

Read more

தத்துவ ஞானி ஜே.கே.

தத்துவ ஞானி ஜே.கே., மானோஸ், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.208, விலை180ரூ. ஜே.கே., என சுருக்கமாக அழைக்கப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு பூரண சிந்தனையாளர்; தத்துவ ஞானி. அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் இருந்தும், மாணவர்களுடன் அவர் நடத்திய உரையாடல்களில் இருந்தும் எழுந்த கருத்துக்களை அழகாகத் தொகுத்து, தத்துவ ஞானி ஜே.கே., என்று தந்திருக்கிறார் மானோஸ். உலகில், இன்று வரை நிலைத்திருக்கும் சமயங்களுக்கும், முன்னோர்களின் தத்துவ விளக்கங்களுக்கும், குருமார்களின் சடங்கு, சம்பிரதாயங்களுக்கும், அவற்றுக்கு இடையே நிகழும் முரண்பட்ட கருத்துக்களுக்கும், அதனால் எழும் குழப்பங்களுக்கும், பிரச்னைகளுக்கும் தெளிவாக விளக்கமளித்து, […]

Read more

கருணை தெய்வம் காஞ்சி மகான்

கருணை தெய்வம் காஞ்சி மகான், வி.ராமசுந்தரம், சங்கர் பதிப்பகம், படிப்பதிலும், கேட்பதிலும் அலுக்காத விஷயமாக இன்றும் இருப்பது, காஞ்சிப் பெரியவர், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் குறித்த செய்திகள் என்று துணிந்து சொல்லலாம். அண்மைக் காலத்தில் நடமாடும் தெய்வமாக வாழ்ந்தவரைப் பற்றி, குறித்த அருமையான நுாலிது. காஞ்சிப் பெரியவாளுக்கு, 14 மொழிகள் தெரியும் என்றும் (பக். 8), காஞ்சி மடத்தின் தலைவராக, 87 ஆண்டுகள் இருந்துள்ளார். தன் எதிரில் திரைப்படப் பாடல் பாடிய சிறுமியைப் பாராட்டியதும் (பக். 25), உணவைத் தரையில் அமர்ந்து உண்ணுவது தான் […]

Read more
1 4 5 6 7 8 9