ஆன்மிகம் அறிவோமா
ஆன்மிகம் அறிவோமா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 60, விலை 60ரூ. மனிதர்களுக்கும், மகான்களுக்கும் என்ன வித்தியாசம்? தமக்கு மேலே இருக்கிறவர்களையே எப்போதும் மனிதர்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்… ‘அவர்களைப் போல் ஆவது எப்போது?’ என்கிற ஆசையில்! தமக்கு கீழே இருக்கிறவர்களையே எப்போதும் மகான்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்… ‘அவர்களும் நம்மைப் போல் ஆவது எப்போது?’ என்கிற அக்கறையில்! அந்த வகையில், நல்வாழ்விற்கு மகான்கள் காட்டிய பாதை இரண்டு. ஒன்று ஆன்மிகம்; இன்னொன்று நற்பண்பு. இவை இரண்டும் ஒரே புள்ளியில் இணையும் இரு கோடுகள். […]
Read more