சுய கர்மயோகம்

சுய கர்மயோகம், ஏகேஎம். லெப்பைக்கனி, காமா பப்ளிகேஷன்ஸ், பக்.96,  விலை குறிப்பிடப்படவில்லை. “சுய கர்ம யோகம்’ என்ற நூலின் தலைப்பைப் பார்த்தமாத்திரத்திலேயே இது ஒரு யோகாசனம் தொடர்பான நூல் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் நூலாசிரியரின் கருத்தோ வேறுவிதமாக இருக்கிறது. “சுய கர்மயோகம் என்றால், ஒரு மனிதன் செய்யும் காரியம் நமக்கும் மற்றவர்களுக்கும் பயன்படக் கூடிய சிறப்பான காரியமாக இருக்க வேண்டும் என்பதுதான்’ என்கிறார். மருத்துவரான நூலாசிரியர் ஆரோக்கியமான வாழ்வுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது. மருத்துவம் தொடர்பான […]

Read more

ஆரோக்கிய வாழ்விற்கு யோக முத்திரைகள்

ஆரோக்கிய வாழ்விற்கு யோக முத்திரைகள், கீர்த்தி, குறிஞ்சி, விலைரூ.80. முத்திரையின் பலன்கள், முத்திரைகளும் அதன் நிறங்களும், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்கள், தியானம், முத்திரைகளைச் செய்யும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை என 10 தலைப்புகளில் விளக்கம் உள்ளது. யோக முத்திரை என்ற பகுதியில் 59 வகை முத்திரைகளும், செய்முறை படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. – பேராசிரியர் இரா.நாராயணன் நன்றி: தினமலர்,11/4/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

யோகா அறிவியலும் ஆரோக்கியமும்

யோகா அறிவியலும் ஆரோக்கியமும், பி.கே. அய்யாசாமி, மணிமேகலைப் பிரசுரம், விலை 280ரூ. கொரோனா காலத்தில் அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு வழிகாட்டியாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. அமெரிக்க பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று பேராசிரியராகப் பணிபுரிந்து பல்வேறு நாடுகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்த இந்த நூலின் ஆசிரியர், உடல் நலத்துக்கான அனைத்து ஆசனங்களின் செய்முறை, அதனால் ஏற்படும் பலனகள், ஆசனத்தின் போது கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கைகள் ஆகியவற்றை அறிவியல் நோக்கிலும், பட விளக்கங்களுடனும் எளிமையாகத் தந்து இருக்கிறார். யோகாவின் வரலாறு, […]

Read more

நுரையீரலை வலுப்படுத்தும் யோகா

நுரையீரலை வலுப்படுத்தும் யோகா, பி.கிருஷ்ண பாலாஜி, ஸ்ரீபதஞ்சலி மஹரிஷி யோகாலயம் டிரஸ்ட், பக். 48, விலை 100ரூ. நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கும் எளிய யோக முறையை விளக்கும் நுால். கொரோனா போன்ற வைரஸ் நோய்களை தடுக்கும் வழிமுறை என அறிமுகமாகி உள்ளது. வண்ணப் படங்களுடன், யோகா, முத்திரை, தியானம், உணவு முறை என பல விளக்கங்கள் உள்ளன. பயம் களைந்து, வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் வகையில் பயிற்சி முறை பற்றி விளக்கம் தரப்பட்டு உள்ளது. நன்றி: தினமலர், 9/8/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

யோகாசனம் 108

யோகாசனம் 108, யோகா சுரேஷ், புத்தக பூங்கா, விலை 125ரூ. ஏராளமான யோகாசனங்கள் இருக்கின்ற போதிலும் அவற்றில் முக்கியமான 108 விதயோகாசனங்களை செய்வது எவ்வாறு என்பதும், பந்தங்கள், முத்திரைகள், கிரியைகள் பட விளக்கத்துடன் எளிய முறையில் தரப்பட்டுள்ளன. அத்துடன் பிராணயாமத்தில் உள்ள பலவகை பற்றியும், அவற்றை மேற்கொள்வது குறித்தும் விளக்கமாகத் தந்து இருக்கிறார் ஆசிரியர். எந்தெந்த நோய்களைத் தீர்க்க எந்த யோகாசனத்தை செய்ய வேண்டும் என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, செப்டம்பர் 2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

ஒளிந்திருப்பது ஒன்றல்ல

ஒளிந்திருப்பது ஒன்றல்ல, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 150ரூ. இன்றைய அவசர உலகில் உடலும் மனமும் நலமாக இருக்க, விழிப்பு உணர்வுடன் வாழ எளிய முறையில் உங்கள் மனநிலைக்குப் பொருத்தமான தியானத்தை விளையாட்டாகவே தேர்வு செய்வது எப்படி? சூட்சுமத்தை சொல்லித் தந்திருக்கிறார் ஓஷோ. தியானத்தைக் கைக்கொள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு யுக்தி. அதைத் தெரிந்து கொள்ள வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம், 2/8/2017

Read more

ஓஷோ உயர் வேதம்

ஓஷோ உயர் வேதம், ஓஷோ, கே.என்.ஸ்ரீனிவாஸ், கண்ணதாசன் பதிப்பகம், பக். 560, விலை 360ரூ. வாழ்க்கையை அதன்வழி ஏற்றுக் கொண்டு ஞானம் எய்துவது எப்படி என்பதே உயர்வேதம் எனும் இந்நூலின் இலக்கு. துன்பங்கள் எத்தனை நேர்ந்தாலும் அவற்றை நினைவில் கொள்ளாமல் எப்படி வெல்வது என்பதை ஆணித்தரமாய் அஞ்ஞானிகளுக்கு விரித்துக் காட்டுவதே இந்நூலின் நோக்கம். இன்றைய சமுதாயம் எதிர் கொண்டுள்ள அரசியல் பிரச்னைகளுக்கும், வெகு அவசரமான சமூக பிரச்னைகளுக்கும் விடை தேடும் தனி நபர்களின் தாகத்தை தணிக்க கூடியதாய் விளங்குகிறது. வாழ்க்கை முறைகள் பற்றியும், தியானங்கள் […]

Read more

யோக முத்திரைகளின் அறிவியல்

யோக முத்திரைகளின் அறிவியல், தமிழில் வி.மகாலிங்கம், சப்னா புக் ஹவுஸ், விலை 185ரூ. முத்திரைகளின் வரலாறு, பொதுவான செய்முறை, பஞ்சபூதக் கொள்கை போன்றவை தொகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 200 முத்திரைகள் விரிவாக படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. முத்திரைகளைச் செய்வதன் மூலம் உடல், மன சமநிலையையும் நோயற்ற வாழ்வையும் எவ்வாறு பெற முடியும் என்பதை இந்நூல் அறிவியல் பூர்வமாக விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 26/7/2017.

Read more

மனம் மயக்கும் கலை – ஹிப்னாடிசம்

மனம் மயக்கும் கலை – ஹிப்னாடிசம், ஹிப்னோ ராஜராஜன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், பக்.368, விலை ரூ.380. ஹிப்னாடிசம் என்றால் பிறரைத் தன்வசப்படுத்தும் கலை என்பதை மட்டுமே பெரும்பாலோர் அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் அது நம் மனத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் கலை என்பதோடு, தியானம், மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சி, கண்களுக்குச் சக்தியூட்டுதல், யோக நித்திரை போன்றவற்றைச் சார்ந்த பயிற்சியாகவும் இக்கலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். ஹிப்னாடிசத்தின் வரலாறு, அதன் முன்னோடிகள் பற்றி விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஹிப்னாடிசத்தின் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை […]

Read more

ஞான ஒளி பரப்பும் யோகசூத்திரம்

ஞான ஒளி பரப்பும் யோகசூத்திரம், ஜெகாதா, காளீஸ்வரி பதிப்பகம், விலை 90ரூ. ஞான ஒளியை நமக்கு கற்றுத்தரும் யோக சூத்திரத்தினை எளிமையாக அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்ட நூல். திருமந்திரமும் யோக நெறியும், திருமூலர் கூறும் பிற யோகங்கள், ஆராக்கியம் தரும் ஆசனங்களும் தெளிவாக பயனுள்ள வகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி, 31/5/2017.

Read more
1 2 3 4