உலக மக்களின் வரலாறு

உலக மக்களின் வரலாறு , கிரிஸ் ஹார்மன்; தமிழில்: நிழல்வண்ணன், மு.வசந்தகுமார்; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் , பக்.1088, விலை ரூ.750. வரலாறு என்பது ஆட்சியாளர்களின் வரலாறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்களுடைய காலம், அவர்களுடைய வழித்தோன்றல்களின் காலம் ஆகியவற்றின்போது நிகழ்ந்த நிகழ்வுகள் வரலாற்றுச் சம்பவங்களாகக் கருதப்பட்டன. ஆனால் இந்த நூல், இதற்கு மாறாக வரலாற்றை மக்களின் வரலாறாகக் காண்கிறது. மனிதன் உயிர் வாழ்வதற்காக மேற்கொண்ட வேட்டையாடுதல், விவசாயம் செய்தல் ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்கள், நிலையான குடியிருப்புகள் தோன்றியது, நேரடி உழைப்பில் […]

Read more

அழகிய இந்தியா

அழகிய இந்தியா – தரம்பாலின் எழுத்துகளுக்கு ஓர் அறிமுகம்,  தரம்பால், தமிழில் – பி.ஆர். மகாதேவன், கிழக்கு பதிப்பகம், பக். 264, விலை ரூ. 300;    தரம்பாலின் எழுத்துகளுக்கு ஓர் அறிமுகம்தான் அழகிய இந்தியா என்ற இந்த நூல் என்றாலும் அவரைப் பற்றிய, அவருடைய எழுத்துகள் பற்றிய விரிவான சித்திரத்தை நம் முன்வைக்கிறது. பிரிட்டிஷார் வருவதற்கு முன்னரே இந்தியாவில் கல்வி நிலை உலகின் பிற பகுதிகளை விடச் சிறப்பாக இருந்தது; பிரிட்டிஷார் இங்கு வந்து பாரம்பரியக் கல்வி எனும் அந்த அழகிய மரத்தை […]

Read more

தியாகச் செம்மல் காமராஜ்

தியாகச் செம்மல் காமராஜ், சாவி, நர்மதா பதிப்பகம், விலைரூ.75. மறைந்த காமராஜரின் அரசியல் வாழ்வை விவரிக்கும் நுால். பத்திரிகையாளர் சாவி, நேரடியாக பார்த்தவற்றை பதிவு செய்துள்ளார். கேள்வி – பதிலாகவும் உள்ளது. பதவியில் இருந்து விலகுவதால், அசவுகரியங்கள் ஏற்படாதா என்ற கேள்விக்கு, ‘ஓய்வூதியத்தில் வீட்டு வாடகை, வரி போக, 1,000 ரூபாய் மீதமிருக்கும். அதில், காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திற்கு சென்று வரும் செலவு, 600 ரூபாய்; மீதமுள்ள, 400 ரூபாயை என் செலவுக்கும், தாய்க்கும் அனுப்பியது போக, மீதி பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து விடுவேன்…’ […]

Read more

ஆளுமைகளுடன் எனது அனுபவங்கள்

ஆளுமைகளுடன் எனது அனுபவங்கள், துக்ளக் ரமேஷ், அல்லயன்ஸ் கம்பெனி, பக்.232, விலை ரூ.220. பத்திரிகைத்துறையில் நாற்பதாண்டு அனுபவம் உள்ள இந்நூலாசிரியர், தமிழகத்தின் முக்கிய அரசியல் ஆளுமைகள் பலருடனான தனது அனுபவங்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார். முரசொலி அடியார் நடத்திய நீரோட்டம் பத்திரிகையில் பணியில் சேர்ந்ததில் தொடங்கி, மாஃபா பாண்டியராஜனுக்காக ஜெயலலிதாவிடம் பரிந்துரைத்தது வரை நூலாசிரியரின் எல்லா அனுபவங்களுமே மிகவும் சுவையாக இருக்கின்றன. குறிப்பாக திமுகவைச் சேர்ந்த ரகுமான் கானும், அதிமுகவைச் சேர்ந்த பி.எச்.பாண்டியனும் பேரவை வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பு வரை போனது, தனக்கு முதல்வராகும் […]

Read more

பாண்டிய மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு

பாண்டிய மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு – மு.நீலகண்டன்; கனிஷ்கா புத்தக இல்லம்,  பக்.202. விலை ரூ.180. தொன்மைக்கால பாண்டிய மண்டலம் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களைக் கொண்டதாக இருந்தது. கி.மு. 3 – ஆம் நூற்றாண்டில் பெளத்தம் பாண்டிய மண்டலத்துக்கு வந்திருக்கலாம் என்று கூறும் நூலாசிரியர், பாண்டிய மண்டலத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பெளத்த சமயமும், சமண சமயமும் உயர்ந்தநிலையில் இருந்திருக்கின்றன; நாட்டின் பல பகுதிகளில் பெளத்த விகாரங்கள் அமைக்கப்பட்டன; புத்த பள்ளிகள் இருந்தன என்கிறார். அதற்கான பல வரலாற்று ஆதாரங்களை எடுத்துக் […]

Read more

இந்தியா – அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு

இந்தியா – அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு, ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் (1498 – 1765), ராய் மாக்ஸம், தமிழில் – பி.ஆர். மகாதேவன்; கிழக்கு பதிப்பகம், பக். 280; ரூ. 325;    ராய் மாக்ஸமின் தி தெப்ஃட் ஆஃப் இந்தியா நூலின் மொழிபெயர்ப்பு இந்த நூல்.இந்தியாவின் உப்புவேலி, ஆப்பிரிக்காவின் தேயிலைச் சுரண்டல் பற்றிய நூல்களுக்கான தரவுகளைத் தேடியபோது கண்டடைந்த தகவல்களின் அடியொற்றி மேற்கொண்ட தொடர் தேடுதல்களின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்தியா மீதான ஆக்கிரமிப்பு கால கறுப்புப் பக்கங்களை விவரிக்கும் இந்நூலில், ஐரோப்பிய ஆதிக்க சக்திகளின் […]

Read more

அழகிய நதி

அழகிய நதி, பி. ஆர். மகாதேவன், கிழக்கு பதிப்பகம், விலைரூ.400.   வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற விடுதலைப் போராட்ட வீரர் தரம் பால். இந்தியா பற்றிய கனவுகளில் ஆழ்ந்த கருத்தை சிந்தித்தவர். இந்திய அளவிலும், உலக அளவிலும் அவரது ஆய்வுகளுக்கு வரவேற்பு இருந்துள்ளது. இந்த நுாலில், 18ம் நுாற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எவ்வாறு இருந்திருக்கின்றன என்பதை மிகவும் விரிவாக ஆவணங்களின் தரவுகளோடு எடுத்துரைக்கிறார். கணிதவியல், வானவியல் சிறந்திருந்ததை பிரிட்டிஷார் ஆவணங்களிலிருந்து எடுத்துக் காட்டி விளக்கும்போது, பெருமையை உணர்கிறோம். இந்தியாவில் […]

Read more

அரசஞ் சண்முகனாரின் தமிழ்ப்பணி

அரசஞ் சண்முகனாரின் தமிழ்ப்பணி, பேரா.கு.ஞானசம்பந்தன்; பக். 368;  விலை ரூ. 370; தமிழ் இலக்கண உலகிலும் இலக்கிய உலகிலும் பெரும்புலவராய்த் திகழ்ந்தவர் சோழவந்தான் அரசஞ் சண்முகனார். இவர் தொல்காப்பிய பாயிர விருத்தி, அன்மொழித்தொகை ஆராய்ச்சி, நுண்பொருள் கோவை, நவமணிக்காரிகை நிகண்டு போன்ற இலக்கண ஆய்வு நூல்களையும், சிதம்பர விநாயகர் மாலை, திருவடிப் பத்து, மாலைமாற்று மாலை, இன்னிசை இருபது, வள்ளுவர் நேரிசை உள்ளிட்ட படைப்பிலக்கியங்களையும் இயற்றியுள்ளார். பாண்டித்துரைத் தேவர் உருவாக்கிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். இவர் மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியராகப் […]

Read more

எந்தையும் தாயும் – 2

எந்தையும் தாயும் – 2, ராஜேஸ்வரி கோதண்டம், கோரல் பதிப்பகம், விலைரூ.110 ஒவ்வொருவர் வாழ்விலும் தாய், தந்தையின் பங்கு குறிப்பிடத்தக்கது. இன்றைய பிரபல எழுத்தாளர்களின் தாய், தந்தையுடனான அனுபவங்களை பதிவு செய்துள்ள நுால். பெற்றோரின் சிறப்பு, உருவாகக் காரணமான கிராமச் சூழ்நிலை, கூட்டுக் குடும்ப நிகழ்வுகள் என சுவையான சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. பொன்னீலன் முதல் பேராசிரியர் மு.ராமச்சந்திரன் வரை, 17 எழுத்தாளர்களின் நினைவுப் பெட்டகத்திலிருக்கும் குவியலாக சிறக்கிறது. இவர்களின் அனுபவங்கள் தாய், தந்தையின் உழைப்பையும், தியாக உணர்வையும், அன்பையும் வெளிப்படச் செய்கிறது. இதை […]

Read more

விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியம்

விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியம், நாஞ்சில் நாரண.தொல்காப்பியன், ஆசியவியல் நிறுவனம், விலைரூ.400 திருவிதாங்கூர் ஆளுகைக்குட்பட்டிருந்த, நாஞ்சில் நாட்டில் வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த மகராசன், கிறித்தவத்துக்கு மாறிய நிகழ்வுகளும், ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக விளை நிலத்தை தானமாக வழங்கியதும் பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. திருவிதாங்கூர் மன்னராட்சியின் போதிலான கயமை, சூழ்ச்சி, வீழ்ச்சி, முறைகேடுகளுக்கு துணை நின்றோரின் கொடுமை, ஒடுக்கப்பட்ட மக்களை மீட்க நடந்த போராட்டங்கள் பற்றி எல்லாம் சொல்லப்பட்டுள்ளது. போராட்டங்களில் துணை நின்ற கிறித்தவ சமய போதகர்களின் தொண்டுகளையும் அறிய முடிகிறது. ஆங்கிலேயக் கம்பெனி, திருவிதாங்கூர் அரசு, […]

Read more
1 2 3 95