மன அழுத்தத்திலிருந்து நிம்மதி

மன அழுத்தத்திலிருந்து நிம்மதி, க.விஜயகுமார், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.180 நிம்மதியான வாழ்க்கைக்கு நல் வழிகாட்டி! மனிதன், ‘தன்னை உணர’ சில தேவைகளைப் பெற்றாக வேண்டும். உளவியல் அறிஞர் ஆப்ரஹாம் மாஸ்லோவின் உயிர், பாதுகாப்பு, உணர்வு பரிமாற்றம், நிலைத்திருத்தல், உணருதல் சார்ந்த தேவைகளை அழகாக விளக்குகிறார் விஜயகுமார். தேவையே இல்லாமல் சிலர் பிறக்கின்றனர்; தேவைகளை தேடி சிலர் வாழ்கின்றனர்; தேவை கிடைக்காமலே சிலர் மறைகின்றனர். எதிர்பார்ப்பு, ஏமாற்றங்களுக்கிடையே மனப் பிரச்னை இருக்கிறது. ஆங்கிலத்தில் STRESS என்கிற வார்த்தைக்கு, ’மன அழுத்தம்’ என்று […]

Read more

வாழ்வெனும் அபத்த நாடகமும் பாரதியாரின் கண்ணன் பாட்டும்

வாழ்வெனும் அபத்த நாடகமும் பாரதியாரின் கண்ணன் பாட்டும்,  க.பஞ்சாங்கம், காவ்யா,  பக்.126. விலை ரூ.150. மகாகவி பாரதியாரின் முப்பெரும் பாடல்கள் என்று அறியப்படுவதில் 23 பாடல்கள் கொண்ட கண்ணன் பாட்டு தொகுப்பும் ஒன்று. முற்றிலும் கவிரசம் ததும்புவதாலேயே அவரது படைப்புகளில் முக்கியமானவற்றில் ஒன்றாக இது இடம் பெறுகிறது. பாரத தத்துவ, இலக்கிய இயலில் தோய்ந்த கவிச் சிந்தனைகளை கண்ணன்- கண்ணம்மா என்கிற பாவனையில் வடித்துள்ளார் மகாகவி. இதிகாச கண்ணனைப் போலவே பாரதியாரின் கண்ணனுக்கும் அரசன், காதலி, ஆசான், சேவகன் என பல தோற்றங்கள். அபத்தக் […]

Read more

துளிர் அறிவியல் கட்டுரைகள்

துளிர் அறிவியல் கட்டுரைகள் , தொகுப்பு: துளிர் ஆசிரியர் குழு, அறிவியல் வெளியீடு, பக்.152; விலை ரூ.150;  துளிர் மாத இதழில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 50 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். குழந்தைகளுக்குப் புரியும்வண்ணம் மிக எளிமையாக எழுதப்பட்ட இக்கட்டுரைகள் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்களை உள்ளடக்கியவையாக உள்ளன. கரோனா வைரஸ் பற்றி உலகையே ஆளும் வைரஸ் கட்டுரை விவரிக்கிறது. பல்வேறு தொழில்நுட்பங்கள் எல்லாம் இணைந்துதான் இன்றைய உலகம் இயங்குகிறது. மருத்துவ உலகமும் அதற்கு விதிவிலக்கல்ல. இதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும்விதமாக "மருத்துவர்களுக்கு உதவும் […]

Read more

லயம்

லயம்,  க.மணி; அபயம் பப்ளிஷர்ஸ்,  பக்.100, விலை  ரூ.100. நேரத்துக்குப் பசிப்பது, தூக்கம் வருவது எல்லாமே உடல் குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதையே காட்டுகிறது. இந்த குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளையே லயம் என்கிறார் நூலாசிரியர். வேலை காரணமாகவோ, இதர காரணங்களினாலோ நாம் தூங்க வேண்டிய நேரத்தில் தூங்குவதில்லை; உண்ண வேண்டிய நேரத்தில் உண்பதில்லை. இது பல்வேறு உடல் நல, மன நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. உடலின் குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு எப்படி வாழ வேண்டும்? என்பதை நூல் விளக்குகிறது. நன்றாகத் தூங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? […]

Read more

செஞ்சொல் உரைக்கோவை

செஞ்சொல் உரைக்கோவை, திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், பக். 292;  விலை ரூ. 86 . சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்காக கிருபானந்த வாரியார் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இந்நூல். இலக்கிய இன்பம், முத்தமிழ், திருப்புகழ் இன்பம், தேவார இன்பம், பெரிய புராணச் சிறப்பு, கந்தபுராண நுண்பொருள், ராமாயண சாரம், சைவ சித்தாந்தம் ஆகிய எட்டு தலைப்புகளில் அவர் ஆற்றிய உரைகளைப் படிக்கும்போது, வாரியாரின் பேச்சை நேரில் கேட்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இடையிடையே அவர் கூறும் உதாரணங்களும், குட்டிக் கதைகளும் நகைச்சுவையுடன், […]

Read more

தருமபுரி முதல் பூடான் வரை

தருமபுரி முதல் பூடான் வரை , வரலாற்றுத் தடங்களின் வழியே,  இரா.செந்தில்; டிஸ்கவரி புக் பேலஸ், பக்.104, விலை ரூ.120. தருமபுரியில் மருத்துவராக உள்ள நூலாசிரியர், பயணங்களின் பயனை அறிந்தவர் மட்டுமல்ல; அதற்கான நெறிமுறைகளையும் அனுபவத்தால் உணர்ந்தவர். தனது பூடான் வரையிலான மகிழுந்துப் பயண அனுபவத்தை நூலாகத் தந்திருக்கிறார். தருமபுரியில் தொடங்கி நாட்டின் பல மாநிலங்கள் வழியே காரில் பயணித்து, அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைச்சூழல், விருந்தோம்பல், சரித்திர நிகழ்வுகள் ஆகியவற்றை ஆங்காங்கே பதிவு செய்யும் நூலாசிரியரின் நுட்பம் பாராட்டுக்குரியது. குறிப்பாக, இந்திய நாட்டின் […]

Read more

பள்ளி புதையல்

பள்ளி புதையல், சிந்தை ஜெயராமன், வினோத் பதிப்பகம், விலைரூ.200 விருது பெற்ற ஆசிரியர், 41- தலைப்புகளில் தகவல்களைத் தருகிறார். புத்தகமில்லா பள்ளி, பாடம் நடத்தும் முறை, எங்கே தவறிவிட்டோம் குழந்தை விரும்பும் கற்றல், ஆர்வமும் தேவையும் போன்ற தலைப்புகளில் கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அதிகமாகப் படிப்பதால் அறிவு வளர்வதில்லை, தேவையானவற்றைப் படிப்பதால் அறிவு வளரும் என குறிப்பிட்டுள்ளார். கற்றல் முறைகளை எளிய நடையில் கூறுகிறது. – பேராசிரியர் இரா. நாராயணன் நன்றி: தினமலர், 22/11/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

மனம் அது செம்மையானால்?

மனம் அது செம்மையானால்? , க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்: 160, விலை ரூ.200. மனம் என்பது என்ன? அது எப்படிச் செயல்படுகிறது? மனத்தை எப்படிச் செம்மையாக்குவது? மனத்தின் நோய் எது? அதிலிருந்து எப்படி விடுபடுவது? ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய மனம் என்னவாகும்?இத்தனை கேள்விகளுக்கும் தத்துவரீதியாகவும் அறிவியல்ரீதியாகவும் இந்நூலில் விளக்கங்களை அளித்துள்ளார் நூலாசிரியர். மேல்மனம் என்பதையும் ஆழ்மனம் என்பதையும் வேறுபடுத்தி விளக்கியுள்ளார் (மேல்மனம் அறிவுமயமானது; ஆழ்மனம் உணர்வு மயமானது). நம் உயிர்தான் நம் மனம் என்பதை தெளிவாக விளக்குகிறார்.  மனம் உடலில் உள்ளவரை […]

Read more

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும்

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும், முனைவர் ஆ.புஷ்பா சாந்தி, பக்.279, விலை ரூ.280. சங்க இலக்கியங்களை அணுகப் பண்பாட்டுச் சூழலியல் பெரிதும் துணை புரிகிறது. தற்போது பல துறைகளிலும் சூழலியல் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. காரணம், சங்க காலமும் சரி, பண்டைத் தமிழ்ச் சமூகமும் சரி இயற்கையோடு இயைந்த வாழ்வையே கொண்டிருந்தது என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அப்படி இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் மட்டுமே மனிதகுலம் செழிக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் சூழலியல் கோட்பாட்டாளர்கள். தற்போது உலகம் பல பேரிடர்களைச் சந்தித்து வருகிறது. பேரிடர்களை […]

Read more

தேவதாசி முறை காலமும் கருத்தும்

தேவதாசி முறை காலமும் கருத்தும், முனைவர் கல்யாணி பிரபாகரன், காவ்யா பதிப்பகம், விலைரூ.400 மன்னர்கள், தேவதாசிகளை, இறைத்தொண்டு புரிவதற்காக கோவில்களில் நியமித்தனர். அதற்காக நிலங்களும் வழங்கப்பட்டன. தேவரடியார் எனப்படும் இவர்கள் ஆடல், பாடல், கோவில் பராமரிப்பு மற்றும் கோவில் பணிக்கான யாவற்றையும் செய்து வந்தனர். இவர்களைப் பற்றி பல நுால்கள் வெளி வந்துள்ளன. இந்நுால் முனைவர் பட்ட ஆய்வு.பதினேழு கட்டுரைகளில், தேவதாசி இன வரலாற்றை முழுமையாக ஆய்ந்து எழுதியிருக்கிறார். தேவதாசிகள் பெரும்பாலும் நடன மாதர்களாகவும் இருந்துள்ளனர். உலக அளவிலும், இந்தியாவிலும் கோவில்களில் இத்தகைய பெண்கள் […]

Read more
1 2 3 71