இந்திரநீலம்

இந்திரநீலம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 150ரூ. பெண்களின் காம வெளிப்பாடு, சங்க காலத்தில் இருந்து தொடரும் மரபுதான் என்றாலும், சங்கத்திற்குப் பின்னால் அதற்கு நீண்ட தொடர்ச்சி இல்லை என்பதையும்,காமம், நறுமணம் மிக்கப்பூவின் மலர்ச்சியைப் போல் அல்லாமல் கெடுபிடிகள் நிரம்பிய சடங்குகளாக ஆக்கப்பட்டுவிட்டது என்பதையும் நுணுக்கமான உளவியல் அடிப்படையில், 8 சிறுகதைகள் மூலம் மென்மையாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். மகாபாரதத்தின் திரவுபதி, சிலப்பதிகாரக் கண்ணகி, காரைக்கால் அம்மையார் ஆன புனிதவதி, மாதவியின் மகள் மணிமேகலை போன்றவர்களைக் கதை மாந்தர்களாக ஆக்கி, அவர்களது உள்மனப் போராட்டத்தை […]

Read more

100 கவிஞர்கள் 100 கவிதைகள்

100 கவிஞர்கள் 100 கவிதைகள், தொகுப்பாசிரியர் தங்கம் மூர்த்தி, அகநி வெளியீடு, விலை 130ரூ. சுரங்கத்தைத் தோண்டி தங்கம் வைரம் போன்றவற்றை எடுத்துக் கொடுப்பதுபோல, இலக்கியத் தரம் வாய்ந்த ஏராளமான கவிதைகளில், மனதைக் கவர்ந்த 100 கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த நூலில் தரப்பட்டுள்ளன. அப்துல் ரகுமான், வைரமுத்து, மு.மேத்தா, நா. காமராசன், ஈரோடு தமிழன்பன், நா. முத்துக்குமார், இன்குலாப், மனுஷ்ய புத்திரன், யுகபாரதி, ஆண்டாள் பிரியதர்ஷினி, தமிழச்சி தங்கபாண்டியன், அ.வெண்ணிலா, சல்மா உள்ளிட்ட 100 கவிஞர்களின் படைப்புகளை ஒருசேர இந்த நூலில் காணமுடிகிறது. பின் […]

Read more

பிச்சியின் பாடு

பிச்சியின் பாடு, பி.உஷாதேவி, அகநி வெளியீடு, விலை: ரூ.140 பி.உஷாதேவியின் தாய்மொழி மலையாளம். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் சிறுகதைகளை எழுதிவருகிறார். ‘வீடு பள்ளத்தில் இருக்கிறது’, ‘ஊதா வண்ண இலைகளின் பாடல்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து வெளிவந்துள்ள தொகுப்பு ‘பிச்சியின் பாடு’. வளர்ச்சியானது உறவுகளுக்குள் ஏற்படுத்தும் நுட்பமான விரிசலையும், அதை எதிர்கொள்ள முடியாத ஆண்களின் இயலாமையையும் முதல் தொகுப்பில் செறிவாக எழுதியிருந்தார். இந்த மூன்றாவது தொகுப்பு வருவதற்குள், கீழ்நடுத்தரக் குடும்பப் பெண்களின் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக எழுதுவதில் பி.உஷாதேவியின் கை தேர்ந்திருக்கிறது. இந்தத் […]

Read more

மதாம்

மதாம், மு.ராஜேந்திரன், அகநி வெளியீடு, பக். 336, விலை ரூ.400. ஆனந்தரங்கப் பிள்ளை எழுதிய நாள்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட வரலாற்று நாவல் இது. 1742 முதல் 1754 வரை புதுச்சேரி கவர்னராக இருந்த ஜோசப் துயூப்ளேவின் மனைவி ழான் சீமாட்டியை மையப்படுத்தி நிகழ்ந்த சம்பவங்களை வரிசைக் கிரமமாகத் தொகுத்து சுவாரஸ்யமான நாவலாக உருவாக்கியிருக்கிறார் நூலாசிரியர். இந்திய வம்சாவளித் தாய்க்கும், ஐரோப்பிய தந்தைக்கும் மகளாக பிறந்தவர்தான் ழான். தனது 13-ஆவது வயதில் தன்னை விட வயதில் மிகவும் மூத்த வேன்சான் என்ற பிரெஞ்சு வணிகரை […]

Read more

சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 400ரூ. கைத்தறி நெசவு தொடர்பான சொல் சாலாம்புரி என்பதைத் தலைப்பாகத் தாங்கி இருக்கும் இந்த நாவல். தமிழகத்தில் 1950 களில் நடைபெற்ற அரசியல், அப்போதைய நெசவாளர்களின் வாழ்க்கை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. திராவிடர் கழகத்தில் இருந்து விலகி தொடங்கப்பட்ட தி.மு.க.வின் வளர்ச்சிக்கு உழைக்கும் கதாநாயகன், அவரைச் சுற்றி நடைபெறும் நெசவாளர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், சாதி பிரச்சனை ஆகியவை கண் முன் படம் பிடித்துக் காட்டப்பட்டு இருக்கின்றன. சரளமான நடை, கதாபாத்திரங்களின் அப்பட்டமான பேச்சு, விறுவிறுப்பான […]

Read more

இந்திர நீலம்

இந்திர நீலம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை: ரூ.150 இன்று பிறக்கும் சங்க காலப் பெண்கள். சங்க காலத்துக்குப் பிறகு இருபதாம் நூற்றாண்டில்தான் பெண்களின் இலக்கியப் பங்களிப்பு பரவலாகக் காணக்கிடைக்கிறது. இதற்கு இடைப்பட்ட நெடிய பரப்பில் ஆண்டாள், காரைக்காலம்மையார் போன்றோரின் பக்திநெறிப் பனுவல்கள் மட்டுமே இலக்கிய வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. இந்த இடைவெளியை நேர்செய்யும் விதமாக இன்று கவிதை எழுதும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது முக்கியமான விஷயம். அவ்வகையில் கவிஞராகக் கவனம்பெற்று தற்போது புனைவுகளிலும் கவனம் செலுத்திவருபவர் அ.வெண்ணிலா. இவரது மூன்றாவது சிறுகதைத் […]

Read more

தண்டோராக்காரர்கள்

தண்டோராக்காரர்கள் {தென்னிந்தியாவில் தேசியவாத அரசியலும், பொழுதுபோக்கு ஊடகங்களும் 1880-1945} , சு. தியடோர் பாஸ்கரன், தமிழில் அ.மங்கை, அகநி வெளியீடு, விலை 220ரூ. தமிழ் வாசகர்களுக்கு தியடோர் பாஸ்கரன் என்ற பெயர் ஒன்று போதும் புத்தகத்தை எடுக்க. சினிமா குறித்ததாகட்டும், இயற்கை குறித்ததாகட்டும் இவர் ஒவ்வொரு புத்தகத்திற்கு செய்யும் ஆய்வுகள், எடுக்கும் தரவுகள் என எல்லாம் அந்த புத்தகத்திற்கு மிகவும் சிறப்பு சேர்ப்பவை. The message bearers என்ற பெயரில் 1981 காலகட்டத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் 35 வருடங்களுக்கு பின் […]

Read more

ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு

ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு – 12 தொகுதிகள்; பதிப்பாசிரியர்கள்: மு.இராஜேந்திரன், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, மொத்த பக்கங்கள்: 5190, விலை ரூ.8,400; தென்னிந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கம் உச்சத்தில் இருந்தபோது, புதுச்சேரியின் ஆளுநர்கள் 4 பேரிடம் துபாஷியாக இருந்தவர் ஆனந்த ரங்கப்பிள்ளை. குறிப்பாக 12 ஆண்டுகள் ஆளுநராக இருந்த துயூப்ளேக்சின் காலத்தில் ஆனந்த ரங்கப்பிள்ளை தலைமை துபாஷியாகப் புகழின் உச்சத்தில் இருந்தவர். 1736 செப்டம்பர் 6 -ஆம் நாள் தன்னுடைய கைப்பட தினப்படி செய்திக் குறிப்புகளை எழுதத் தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து 25 ஆண்டுகள் […]

Read more

தண்டோராக்காரர்கள்

தண்டோராக்காரர்கள், சு.தியடோர் பாஸ்கரன், தமிழில்: அ.மங்கை, அகநி வெளியீடு, விலை: ரூ.220 நம்பினார். காங்கிரஸ் ஆதரவாளரான அவர், சினிமா நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை ஆதரித்தார். இராஜகோபாலாச்சாரி, சத்தியமூர்த்தி, டி.பிரகாசம் ஆகிய தலைவர்களோடும் நாராயணன் தொடர்புகொண்டிருந்தார். தனது வீட்டில் மிகுந்த விளம்பரத்தோடு அந்நியத் துணி எரிப்பை நடத்திவிட்டு, அவர் கதர் அணியத் தொடங்கினார். ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் தலைவர் என்ற முறையில், அவர் காங்கிரஸ் நிகழ்வுகள் பலவற்றைக் குறித்த செய்திச்சுருள், குறும்படங்களையும் தயாரித்திருந்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் நாட்டுத் திரைப்பட மையங்களுக்குப் பயணித்தார். ‘தி இந்து’ […]

Read more

கங்காபுரம்

கங்காபுரம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 450ரூ. சோழ சாம்ராஜ்யத்தின் தன்னிகரில்லாத பேரரசனாகவும், தந்தையை மிஞ்சிய தனயனாகவும் விளங்கிய மன்னர் ராஜேந்திரன் மனதில் வெகு காலமாக நிலை கொண்டு இருந்த வேதனையைச் சுற்றி இந்த சரித்திர நாவல் படைக்கப்பட்டு இருக்கிறது. தந்தை ராஜராஜனுக்காக நாட்டின் பல பகுதிகளுக்கும் படை நடத்திச் சென்று, வெற்றியை மட்டுமே ஈட்டித் தந்த ராஜராஜன், இளவரசு பட்டத்திற்காக தனது 50 வயது வரை காத்து இருக்க நேரிட்ட வரலாற்று நிகழ்வையும், அது குறித்து அந்த மன்னரின் உள்ளக்கிடங்கில் குவிந்து கிடந்த […]

Read more
1 2 3 4