வாரணாசி

வாரணாசி, பா.தேவேந்திர பூபதி, காலச்சுவடு பதிப்பகம், விலை 100ரூ. நிகர்மலர்கள் அவர்கள் பொருள் மதிப்பில் பார்த்தால் சீக்கிரத்திலேயே வாடிவிடக்கூடியதும் அதேவேளையில் பேரழகும் நுட்பமும் கொண்ட வடிவங்கள் மலர்கள். எத்தனை கலைஞர்களை, மெய்ஞானிகளை, கவிஞர்களை அவை ஈர்த்திருக்கின்றன? “உடைகளுக்காக நீங்கள் கவலைப்படுவானேன்? வயல்வெளி யிலுள்ள லீலி புஷ்பங்கள் எப்படி வளரு கின்றன எனப் பாருங்கள்” என்று மலர்களைப் பார்த்து வியந்திருக்கிறார் கிறிஸ்து. புத்தர் ஒன்றுமே பேசாமல் புன்னகைத்தபடி சீடன் மஹாகாஷ்யபனுக்கு ஞானத்தைக் கடத்தியது தாமரையை உயர்த்திக் காட்டியபடிதான். மலர் வழியாகக் கடத்தப்பட்ட அந்த ஞானம்தான் 28 […]

Read more

பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்

பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள், ந.ஜெயபாஸ்கரன், காலச்சுவடு பதிப்பகம், விலை 100ரூ. சொற்களால் ஒ நினைவுத்தடம் ந.ஜெயபாஸ்கரனின் சமீபத்திய கவிதைத் தொகுப்பான ‘பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்’, ஆலவாய் நகர் என்னும் மதுரையின் ஆவணமாகத் திகழ்கிறது. மதுரையின் வீதிகளில் பன்னெடுங்காலம் அலைந்துதிரிந்த ஜெயபாஸ்கரன் வேறொரு புதிய கோணத்தில் தன் ஊரைப் பார்க்கிறார். தொன்மும் புராணமும் இவரது கவிதைகளில் ஊடுபாவாகக் கலந்திருக்கின்றன. நிகழ்காலத்துக்கும் புராண காலத்துக்கும் சடுதியில் தாவுகிறார். ‘வெண்கலப்பாத்திரப் பளபளப்பு’ கொண்ட சொற்களைக் கொண்டு தனக்கே உரித்தான தன்மையுடன் கவிதைகளைப் பின்னியிருக்கிறார் ஜெயபாஸ்கரன். – […]

Read more

எனது சிறிய யுத்தம்

எனது சிறிய யுத்தம், லூயிஸ் பால் பூன், தமிழில் பெர்னார்ட் சந்திரா, காலச்சுவடு பதிப்பகம், விலை 100ரூ. உலகப் போரைப் பேசும் நாவல்! போர்க்காலத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பேசும் இலக்கியப் படைப்புகள் யதார்த்த பாணியில் எழுதப்பட்டபோது அவை வாசகர்களிடையே வரவேற்பை இழந்திருந்தன. நிச்சயமற்ற அடுத்த நொடியைப் பரிதவிப்போடு எதிர்கொள்ளும் சாமான்யர்கள், ஒவ்வொருநாளும் எதிர்கொண்ட நெருங்கிய உறவுகளைக் குண்டுகள் சிதைத்த உடல்களாகக் கண்கொண்டு காண நேரும் அவலம், குழந்தைகளின் ஓலம் என போர்க்காலங்களின் பக்கங்கள் ஒவ்வொன்றும் இன்னதுதான் நிரம்பியிருக்கும் என்று போர் இலக்கியங்கள் குறித்த […]

Read more

குடியேற்றம்

குடியேற்றம், தோப்பில் முஹம்மது மீரான், காலச்சுவடு பதிப்பகம், பக்.237,விலைரூ.275. சாகித்திய அகாதெமி விருது பெற்ற தோப்பில் முஹம்மது மீரானின் ஆறாவது நாவல் இது. வரலாற்றின் கரிய பக்கங்களையும், அதனூடே இன்னமும் கசிந்து கொண்டிருக்கும் வலிகளையும் அச்சாரமாகக் கொண்டு இந்த நாவலைப் படைத்திருக்கிறார் நூலாசிரியர். பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் ஏறத்தாழ 150 ஆண்டுகளாக மரைக்காயர்களுக்கும், பறங்கியர்களுக்கும் இடையே நடைபெற்ற போரின் தாக்கம் தலைமுறைகள் கடந்தும் எப்படி எதிரொலிக்கிறது என்பதுதான் நாவலின் கரு. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் வாழ்ந்த மூத்த குடிகளான மரைக்காயர்கள் மீது […]

Read more

மீனும் பண் பாடும்

மீனும் பண் பாடும், ஹால்டார் லேக்ஸ்நஸ், தமிழில் எத்திராஜ் அகிலன், காலச்சுவடு பதிப்பகம், விலை 375ரூ. மாறுவேடமிட்டிருக்கும் நம் முகங்கள் நோபல் பரிசு பெற்ற ஹால்டார் லேக்ஸ்நஸை ‘மீனும் பண் பாடும்’ நாவல் மூலமாகத் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் எத்திராஜ் அகிலன். இந்த நாவலில் இழையோடும் பகடிக்காகவே ஆர்வத்தோடு வாசித்தார்கள். இன்றைய சமூகத்தில் உலகமயமாக்கல் விளைவித்திருக்கும் இடர்ப்பாடுகளை நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே யூகிக்கத் தொடங்கியிருக்கிறார் லேக்ஸ்நஸ். அயல்தேச கிராமவாசிகளின் நாட்டார் வழக்குகளும், அவர்களது வாழ்வுமுறையும், மனவோட்டங்களும் ஆச்சர்யத்தக்க வகையில் நமது சூழலுக்கு மிக […]

Read more

காச்சர் கோச்சர்

காச்சர் கோச்சர்,  கன்னட மூலம்: விவேக் ஷான்பாக், தமிழில்: கே.நல்லதம்பி, காலச்சுவடு பதிப்பகம், பக்.104, விலை ரூ.125. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்களின் வெவ்வேறு உலகங்களைச் சித்திரிக்கும் நாவல். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வறுமையில் வாடிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு இருந்த சிந்தனை, வாழ்க்கைமுறை, மனோபாவம், பழக்க, வழக்கங்கள் எல்லாம், அவர்களுக்கு வசதி வந்த பிறகு மாறிப் போய்விடுகிறது. வேலைக்குப் போய் தனது முதல் சம்பளத்தில் அம்மாவுக்குப் பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் மகன், வசதி வந்த பிறகு சொந்தத் தொழிலைக் கூட […]

Read more

உடைந்த குடை

உடைந்த குடை, தாக் ஸூல்ஸ்தாத், காலச்சுவடு பதிப்பகம், விலை 140ரூ. உலகின் மிக முன்னேறிய, அமைதியான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனை, இன்றைய நவீன வாழ்வில் சிக்குண்டிருக்கும் விடை காண முடியாத சூட்சுமக் கேள்விகளின் மூலம் தனது அடையாளத்தை தேடித் தேடித் தோல்வியடைந்து மேலும் தனிமைப்படுத்திக் கொள்வதை இந்நூல் சித்தரிக்கிறது. நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026629.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை, ஜெ. பாலசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், பக். 184, விலை 195ரூ. தலித் இலக்கிய வரலாற்றை, தமிழ் இதழில் ஆய்வு மூலம், ஆசிரியர் வெளிப்படுத்தி இருக்கிறார். நான்கைந்து தலித் பத்திரிகைகள் மட்டுமே கிடைக்கும் இன்றைய சூழலில், 40க்கும் மேற்பட்ட, தலித் இதழ்கள் பற்றி, செய்திகள் திரட்டி, பகுத்தாய்ந்திருக்கிறார் ஆசிரியர். 1869 – 1943 வரையிலான தலித் பத்திரிகைகள் குறித்து, சிறந்த ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பதை, நுால் வெளிகாட்டுகிறது. நன்றி: தினமலர், 20/1/2018

Read more

குடியேற்றம்

குடியேற்றம், தோப்பில் முஹம்மது மீரான், காலச்சுவடு பதிப்பகம், பக். 237, விலை 275ரூ. ஆசிரியரின், ஆறாவது நாவல் இது. கிழக்கு – மேற்கு கடற்கரைகளில், பறங்கியர்களுக்கும், கடலோர மரைக்காயர்களுக்கும் இடையே, 150 ஆண்டுகள் கடும்போர் நடைபெற்றது. இந்தப் பின்னணியில், ‘குடியேற்றம்’ எழுதப்பட்டுள்ளது. தோப்பிலாரின் நாவல்களுக்கேயுரிய வரலாற்றுத் தரவுகள், மொழிநடை, காட்சி ரூப உருவாக்கம் ஆகியவை, இந்நாவலிலும் உள்ளன. நாவலின் பலமாக இவை இருந்து குன்றாத வாசிப்புச் சுவையை ஊட்டுகின்றன. நன்றி: தினமலர், 10/1/2018

Read more

பனை மரமே பனை மரமே

பனை மரமே பனை மரமே, ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், விலை 425ரூ. தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மரம் பனை. இம்மரத்தை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழி வழக்காறுகளையும் எழுத்துப் பதிவுகளையும் இந்நூல் கொண்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தைய தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் தொடங்கி இடைக்கால கல்வெட்டுகள் வரை, தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொடங்கி – வாய்மொழி இலக்கியம் – நவீன இலக்கியம் வரை என பல அரிய தரவுகளின் துணையுடன் இந்நூல் உருவாகியுள்ளது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more
1 2 3 4 5 12