பொன்னகரம்

பொன்னகரம், அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், பக். 264, விலை 230ரூ. மண் வாசனை என்று வரும்போது சென்னையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த நகரம், பல்வேறு ஊர்கள், மாநிலங்களைச் சேர்ந்த மக்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. சென்னைக்குள் பல உலகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை சற்றே அணுகிப்பார்க்கும் முயற்சியில் அந்த உலகின் யதார்த்தம், அதன் நுட்பங்களோடு இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமாவில் பார்த்திருந்த சென்னைக்கும் நேரில் காணும் காட்சிகளுக்கும் சம்பந்தமே இல்லாத பகவதிபுரம் என்ற இடத்துக்கு திருமணம் செய்து கொண்டு அத்தை மகன் முத்துக்கிருஷ்ணன் சகிதம், […]

Read more

மாற்றம்

மாற்றம், மோ – யான், தமிழில் பயணி, காலச்சுவடு பதிப்பகம், பக். 87, விலை 80ரூ. மாற்றம் என்ற இந்தப் படைப்பு, நாவல் வடிவில் எழுதப்பட்ட சுயசரிதை, நாயகனின் பள்ளிப்பருவ வாழ்க்கையில் துவங்குகிறது கதை. நாயகன் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் வாழ்க்கையின் போக்கில் பயணித்து, எங்கெங்கோ அலைந்து, இலக்கியவாதியாகி, அவனுடைய கதை சினிமாவாக எடுக்கப்பட்டு, பிரபலமாகி கடைசி அத்தியாயத்தில் அதே கிராமத்துக்கு வந்து சேர்வதுடன், கதை முடிகிறது. நூலின் இடையிடையே பழமொழிகள், தத்துவங்கள் போகிறபோக்கில் இரைந்து கிடக்கின்றன. சீன வழக்குமொழி நடையில் எழுதப்பட்டிருப்பது சுவையாக […]

Read more

சப்தங்கள்

சப்தங்கள், மலையாளம் வைக்கம் பஷீர், தமிழில் குளச்சல் மு. யூசப், காலச்சுவடு பதிப்பகம். நம்பினால் இருக்கிறான் To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000000462.html மலையாளத்தில் வைக்கம் பஷீர் எழுதி, தமிழில் குளச்சல் மு. யூசப் மொழிபெயர்த்த, சப்தங்கள் என்ற குறுநாவலை, சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நடைபாதை இருளில் சந்திக்கும் ஒருவரோடு, வைக்கம் பஷீர் நடத்தும் உரையாடலை, ஒருவர் கதையாக சொல்வதுதான் இந்த நாவல். இருளில் சந்திக்கும் அந்த நபர், ஒரு ராணுவ வீரன். அவரது வாழ்க்கை, காதல் […]

Read more

சென்றுபோன நாட்கள்

சென்றுபோன நாட்கள், எஸ்.ஜி.இமானுஜலு நாயுடு, ஆ.இரா வேங்கடாசலபதி வெளியீடு, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 125ரூ. இதழியல் பக்கங்கள் தன் 17வது வயதில் பத்திரிகை தொடங்குவது என்பதை யாரேனும் நினைத்துப்பார்த்திருக்க முடியுமா? 1904ல் எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு நினைத்துப் பார்த்ததுடன் பிரஜாநுகூலன் என்ற மாத இதழையும் ஆரம்பித்திருக்கிறார். இந்த இதழை நடத்தினாலும் சுதேசமித்திரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதியவராகவும் பங்களித்தவராகவும் இவர் இருந்திருக்கிறார். 1926ல் இவர் ஆசிரியராக அமர்ந்த ஆநந்தபோதினி இவருக்குப் பேரும் புகழும் பெற்றுத்தந்தது.1934ல் இந்தப் பத்திரிகையிலிருந்து விலகிய கொஞ்சநாளிலேயே இவர் மரணம் அடைந்தார். […]

Read more

லைட்டா பொறாமைப்படும் கலைஞன்

லைட்டா பொறாமைப்படும் கலைஞன், இசை,  காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 100ரூ. சில்லென்று ஒரு தொகுப்பு! பாரதியின் கவிதைகளைப் பற்றிய நீண்ட கட்டுரை ஒன்றைக் கொண்ட இந்த கட்டுரைத் தொகுப்புக்கு நடிகர் வடிவேலுவைப் பற்றிய சின்னகட்டுரை ஒன்றின் தலைப்பை வைத்திருக்கிறார் கவிஞர் இசை. ஒரு வினோதமான ஆசை இது என்று முன்னுரையில் குறிப்பிடும்போதே இசை இந்த கட்டுரைத் தொகுப்பு எப்படி இருக்கும் என்பதைக் கோடிட்டுக்காட்டிவிடுகிறார். பெருமாள் முருகன் கவிதைகளுடனான பயணம், திருடன் மணியன் பிள்ளை புத்தகம் பற்றிய கட்டுரை, ஞானக்கூத்தன் கவிதைகள், கட்டுரை, க.மோகனரங்கனின் […]

Read more

நூறு கோடி நிறங்களில் வண்ணத்துப்பூச்சிகள்

நூறு கோடி நிறங்களில் வண்ணத்துப்பூச்சிகள், சைதன்யா, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 60ரூ. சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியமாக்குவது கவிதை என்கிறார் சைதன்யா. உண்மைதான். கவிதைக்கு இறகு இல்லை என்று யார் சொன்னது என்று கேட்கிறார். நூறு கோடி நிறங்களில் பறந்து கொண்டிருப்பது வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமல்ல கவிதைகளும்தான். மனித நேயம் எங்கே இருக்கிறது? அது இல்லை என்பதைச் சொல்ல வரும் கோபத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால் நியதி இல்லை. வழிகாட்டல் இல்லை. பெரியாரின் குரல் இடுக்கில் இக்கவிதைகள் சிக்கிக் கொண்டதே ஒரு படிமம்தானே. நன்றி: குமுதம், […]

Read more

சோபியின் உலகம்

சோபியின் உலகம், தமிழில் ஆர். சிவகுமார், காலச்சுவடு பதிப்பகம். மகளுக்கு தந்தையின் பிறந்த நாள் பரிசு நார்வே மொழியில் யோஸ்டைன் கார்டர் எழுதி, ஆங்கிலத்துக்கு வந்து, தமிழில் ஆர்.சிவகுமார் மொழியாக்கம் செய்து, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள, சோபியின் உலகம் என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். நாவல் 19955ல் வெளியானபோது, பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. ஆங்கிலத்தில், திரைப்படமாகவும் வந்துள்ளது. தமிழ் மொழிபெயர்ப்புக்காக, இந்த ஆண்டின் தமிழ் பேராய விருதைப் பெற்றுள்ளது. நார்வே நாட்டில் நடக்கும் இந்த கதையின் நாயகி சோபி. அவரது […]

Read more

பாரதியின் இறுதிக்காலம்

பாரதியின் இறுதிக்காலம், ய. மணிகண்டன், காலச்சுவடு பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. பாரதி இறப்பின் பின்னணி மகாகவி பாரதியின் இறுதிநாள் பற்றிய விவாதம் இன்னும் நிலவி வருகிறது. இதை ஆராய்ந்து முடிவு சொல்வது இந்த நூல். 42 பக்கங்களில் இதுபற்றி ஆராய்கிறார், நூலாசிரியர். தேடல் அனுபவம் மிக்க ஆசிரியர் அதோடு நில்லாமல், பாரதி எழுதிய காணக்கிடைக்காத, கோவில் யானை என்ற நாடகத்தையும் இந்த நூலில் இணைத்துள்ளார். இந்த நாடகம் 17 பக்கங்களைக் கொண்டுள்ளது. பாரதியின் இறுதிக்காலம் சிக்கல் நிறைந்தது. அவரைப் பற்றி அவருடைய […]

Read more

கனம் கோர்ட்டாரே!

கனம் கோர்ட்டாரே!, கே. சந்துரு, காலச்சுவடு பதிப்பகம், பக். 264, விலை 225ரூ. செப்டம்பர் 2013 முதல், மார்ச் 2014 வரை, தினமலர் தி இந்து நாளிதழ்களில் வெளியான, 71 கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டு உள்ளன. அண்டப்புரட்டன் அந்தவாதி / அகிலாண்டப் / புரட்டன் அப்பா அவன் பிரதிவாதி – சண்டப் / பிரசண்டன் நியாயவாதி – நாளும் / சகஸ்திரப்புளுகன் சாஷிக்காரனெனும் கியாதி (பக். 28) என, வேத நாயகம் பிள்ளையின் பாடலை எடுத்தாண்டுள்ள முதல் கட்டுரையானாலும், நீதிபதிகளுக்கு ஓய்வு தேவை, நீதிமன்றங்களுக்கு […]

Read more

பயணம்

பயணம், அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், பக். 392, விலை 350ரூ. இளைஞனும் ஆசாபாசங்களும் தமிழ் புனைகதையில் இதுவரை இல்லாத பல புதிய பரிமாணங்களை முன்வைக்கும் நாவல். செல்வம், செல்வாக்கு முதலியன இலக்காகக் கொள்ளாமல் யோகாசனம், சமூக சேவை ஆகியவற்றை நாடிப் பெற்றோரிடம்கூடக் கூறாமல் ஓர் ஆசிரமத்தில் சேரும் இளைஞனின் கதை. ஏற்கனவே பல யோகாசனங்களையும் மூச்சுப் பயிற்சியையும் நன்கு அறிந்தவனாக இருக்கிறான். மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஆசிரமத்தின் கிளைகள் எனக் கூறப்படுபவைக்கு அனுப்பப்படுகிறான். ஒரு சமூகக் கிளர்ச்சியில் ஒரு கட்டத்தில் காவல் துறையும் துணை வராது […]

Read more
1 3 4 5 6 7 12