நல்ல நட்பு

நல்ல நட்பு, இரா. குழந்தை அருள், சங்கர் பதிப்பகம், பக்.160, விலை 145ரூ. ஒவ்வொரு வாழ்விலும் தனிமை என்பது தவிர்க்க முடியாதது என்றே பலரும் எண்ணுகின்றனர். தனிமை, மனிதனின் இயல்பு நிலையைச் சிதைக்கிறது; மகிழ்ச்சியை வற்றி போகச் செய்கிறது. இத்தகைய கொடிய நிலையை இல்லாமல் செய்யும் வரம் தான் நம் நண்பர்கள். நட்புறவு என்பது சொர்க்கச் சுகத்தை முன்னதாகவே சுவைக்க உதவும் தருணங்களின் உருவாக்கம். ஒழுங்கை கடைபிடித்து வாழ்வது எத்துணை இன்றியமையாதது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்நுால். நன்றி: தினமலர், 12/11/2017.

Read more

அறிவுலகின் ஆசான் அப்துல்கலாம்

அறிவுலகின் ஆசான் அப்துல்கலாம், இரா. குழந்தை அருள், சங்கர் பதிப்பகம், பக். 168, விலை145ரூ. பெரியோர் பலர் வாழ்வியல் நெறியைக் கற்பித்துள்ளனர் என்றாலும், மாமேதை அப்துல் கலாமின் அணுகுமுறை வித்தியாசமானது. இந்நுாலை வாசிக்கும் ஒவ்வொருவரும், அறிவியலில் சாதனை படைத்த விஞ்ஞானி, கலாம் வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்தோம் என்று பெருமிதம் கொள்ளக்கூடியவர்களாகவே இருப்போம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 5/11/2017.

Read more

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

செயின்ட் ஜார்ஜ் கோட்டை, குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், பக். 184, விலை 175ரூ. சென்னை மாநகரின் முக்கிய அடையாளம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை. 1640ம் ஆண்டு, வர்த்தக நோக்கில் இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனியார் தங்கள் பாதுகாப்புக்காக கட்டிய கோட்டை இது.இன்று, தமிழக அரசு நிர்வாகம் செய்யும் முக்கிய கோட்டையாகவும் விளங்குகிறது.  அத்துடன், இந்திய ராணுவக் குடியிருப்பு மற்றும் இந்திய கடற்படை ஆகியவையும் இங்கு தான் அமைந்துள்ளன. பிரஞ்சுப் படையினர் இரு முறை ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டு, இக்கோட்டையைக் கைப்பற்றிய வரலாறும் இருக்கிறது! நானுாறு […]

Read more

வாழ வைப்பாள் ஸ்ரீ வாராஹி

வாழ வைப்பாள் ஸ்ரீ வாராஹி, பரத்வாஜ் ஸ்வாமிகள், சங்கர் பதிப்பகம், பக். 176, விலை 160ரூ. வாராஹி வடிவங்களின் தத்துவம், கலப்பையால் கவலை நீக்குபவள், உலக்கையால் ஊழ்வினை நீக்குபவள், வரும் பகையை அழித்து நல்வழி காட்டுபவள். வாராஹியை எப்படி வழிபட வேண்டும் என்பதை கூறுகிறது, இந்நூல். வேத தத்துவத்தை மிகவும் எளிமையாக்கி உலக மாந்தர்களுக்கு அளித்திருக்கிறது எனலாம். நன்றி: தினமலர், 1/10/2017.

Read more

முத்துராமலிங்கத் தேவர் தியாக வரலாறு

முத்துராமலிங்கத் தேவர் தியாக வரலாறு, முனைவர் பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 65ரூ. தமிழ்நாட்டில் தோன்றிய மிக முக்கியத் தலைவர்களில் ஒருவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். மக்களிடம் அவர் பெற்றிருந்த செல்வாக்கு வியப்புக்கு உரியது. ஒரே சமயத்தில் பாராளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் போட்டியிடுவார். இரண்டிலும் வெற்றி பெறுவார். நேதாஜியுடன் நெருங்கிப் பழகியவர். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் மணிக்கணக்கில் சொற்பொழிவு நிகழ்த்தும் ஆற்றல் படைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிந்த நடையில் விறுவிறுப்பாக எழுதியுள்ளார் முனைவர் ப.பாலசுப்பிரமணியன். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

நூலக வளர்ச்சியில் இந்தியா

நூலக வளர்ச்சியில் இந்தியா, ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், பக்.104, விலை 55ரூ. நூலகராக பணியாற்றும், இந்நூலாசிரியர் தம் ஆய்வின் போது கிடைத்த நூலகம் பற்றிய தகவல்களை தொகுத்து இந்நூலை படைத்துள்ளார். சங்க காலம் துவங்கி, இன்றைய நிலை வரை சுவடி நூலகங்கள், அரசு, தனியார், மடாலயம், பள்ளி, கல்லூரி, பொது நூலகங்கள் என, பல வகை நூலகங்களின் செயல்பாடுகளை விவரித்துள்ளார். சரபோஜி மன்னர், 1820ல் தஞ்சையில் உருவாக்கிய, சரசுவதி மகால் நூலகம், 1890ல், கன்னிமாரா உருவாக்கிய சென்னை கன்னிமாரா நூலகம், 1903ல் கர்சன் பிரபு […]

Read more

யுவான் சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப்பயணம்

யுவான் சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப்பயணம்,   குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், விலை 160ரூ. சுமார், 1400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு நடந்தே வந்த சீனத் துறவி யுவான் சுவாங். புததர் பிறந்த இடத்தை நேரில் பார்ப்பது, புத்தருடைய கொள்கைகளை விரிவாக ஆராய்வது, ஆகியவை அவருடைய நோக்கம். பாலைவனங்கள், பயங்கர காடுகள், வனவிலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அவர் அஞ்சவில்லை. இரவு, பகலாக நடந்தார். தமிழ்நாட்டுக்கும் (காஞ்சீபுரத்துக்கு) அவர் வந்தார். இந்தியாவில் மொத்தம் 17 ஆண்டுகள் தங்கி இருந்தார். பின் சீனாவுக்குத் திரும்பினார். தன் […]

Read more

விடுதலை வேந்தன் விஸ்வநாத தாஸ்

விடுதலை வேந்தன் விஸ்வநாத தாஸ், முனைவர் ப. பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், பக். 136, விலை 75ரூ. இந்திய விடுதலை போராட்ட வீரர்களுள் குறிப்பிடத்தக்கவர் விசுவநாத தாஸ். தன் நடிப்பாலும், மேடை நாடகப் பாடல்களாலும் மக்களிடத்தில் சுதந்திர உணர்வை ஊட்டியவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, சிறை சென்று துன்புற்றவர். வறுமையில் துன்புற்ற போது, ஆங்கிலேய கவர்னர் பொருளாதார உதவி செய்ய முற்பட்ட போது, மறுத்துவிட்டு வறுமை யில் வாடியவர் விஸ்வநாத தாஸ். அண்ணல் காந்திஜி, நேருஜி, வ.உ.சி., பசும்பொன் முத்துராமலிங்கம் முதலானோர் இவருடைய பாடல்களை […]

Read more

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள்

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள், தெள்ளாறு இ. மணி, சங்கர் பதிப்பகம், பக். 365, விலை 300ரூ. எத்தகைய நல்ல செயல்களைச் செய்தாலும், அதில் சிறிதளவாவது தீமை கலந்தே இருக்கும். தெய்வங்களின் செயல்கள் அனைத்தும் அதர்மத்தை அழிக்கக்கூடியவையாக இருக்கும். அந்தச் செயல்களின் காரணமாகவே அந்தத் தெய்வங்களை தோஷங்கள் பற்றி இருக்கின்றன. தம்மைப் பற்றிய தோஷங்களை நீக்குவதற்காகவும், ‘பேரானந்த நிலை’ என்பது செயலற்ற ஆன்ம தரிசனத்தில் தான் உள்ளது என்பதை உணர்த்துவதற்காகவும், தெய்வங்கள் மற்றொரு தெய்வத்தை வணங்கி நமக்கு வழிகாட்டி இருக்கின்றன எனக் கூறுகிறார் நூலாசிரியர். […]

Read more

சித்த வைத்தியத் திரட்டு

சித்த வைத்தியத் திரட்டு, தி.நா.அங்கமுத்து முதலியார், சங்கர் பதிப்பகம், பக். 264, விலை 225ரூ. பத்தியம், புடம், கிருதம், எரு, விறகு வகைகளையும், நிறுத்தல் அளவை நிறைகள், முகத்தல், பழங்கால சித்த மருத்துவ அளவைகளையும் பட்டியலிடுகிறது இந்நூல் நன்றி: தினமலர், 21/5/2017.   —-   தமிழ் மொழி அகரமுதலி, ஞானச்செல்வன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 280, விலை 120ரூ. மக்களிடம் பயன்பாட்டில் உள்ள சொற்களுக்கும், தமிழில் கலந்து கிடக்கும் தெலுங்கு, கன்னடம், பாரசீகம், அரேபியச் சொற்களுக்கும் பொருள் தருவதாக அமைந்துள்ளது இந்நூல். […]

Read more
1 2 3 4 5 8