பறந்து கொண்டிருக்கும் கழுகு

பறந்து கொண்டிருக்கும் கழுகு,சுப்ரபாரதி மணியன், காவ்யா பதிப்பகம், பக். 632, விலை ரூ.640. நூலாசிரியா் எழுதி பல்வேறு இதழ்களில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இந்நூலில் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வீட்டில் சமையல் குறிப்புகள் முதல் உலக அரசியல் வரை எண்ணற்ற விஷயங்களை நூலில் அறிந்து கொள்ள முடிகிறது. அரசியல், அறிவியியல், இலக்கியம், எழுத்தா பலதரப்பட்ட தகவல்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு பொருள்களைப் பற்றிய கட்டுரைகளாக இருப்பதால், சலிப்பில்லாமல் படிக்க முடிகிறது. துரித உணவுகளால் உடல் நலம்தான் பாதிக்கும் என்று […]

Read more

பிளிறல்

பிளிறல், சுப்ரபாரதி மணியன், கனவு, விலைரூ.100. எட்டு சிறுகதை தொகுப்பு இந்நுால். சில கதைகள், மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. குறுங்கதைகளும் இடம் பெற்றுள்ளன. பிரச்னைகள், பெண்களின் இயல்பான பண்புகள்,வெறுப்பு, வன்மம், சமகால பிரதிபலிப்பு, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை தரம் போன்றவற்றை, உளவியல் பார்வையோடு கதைகளில் விவரிக்கிறார் நுால் ஆசிரியர். ‘யானைகளை விரட்ட, தாரைத் தப்பட்டைக்காரர்களை கூப்பிட போயினர்; யாரும் அகப்படவில்லை; பெரிய பெரிய பட்டாசு வெடித்தனர். திருமணம் செய்தோம், விவாகரத்து பெற்றோம்; மீண்டும் ஒரு திருமண நாளில் சந்தித்தபோது, விவாகரத்து வலி தெரிந்தது’ போன்ற […]

Read more

அண்டை வீடு

அண்டை வீடு – பயண இலக்கியம், சுப்ரபாரதி மணியன், வெளியீடு: காவ்யா, விலை ரூ.110 பின்னலாடை உற்பத்தியில் திருப்பூருக்குப் போட்டியாக விளங்கும் வங்கதேசத்திற்கு, மேம்பட்டுள்ள பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிலையை ஆய்வு செய்வதற்காக, சென்ற குழுவில் சுப்ர பாரதி மணியன் தனக்கேற்பட்ட வங்கதேச அனுபவங்களை இதில் பகிர்ந்துள்ளார். பின்னலாடை பற்றிய ஆய்வை விட பங்களாதேஷ் எவ்வெவ் வகைகளில் மிகவும் சரிந்து சீர்கேடு அடைந்துள்ளது என்பதை பெரும்பாலான கட்டுரைகளில் விவரித்துள்ளார். நில நடுக்கங்கள், வங்கதேச விடுதலைப் போர்க் குற்றவாளிகள், மோசமான தொழில் என்று அழைக்கப்படும், ‘கப்பல் […]

Read more

மறைந்து வரும் மரங்கள்

மறைந்து வரும் மரங்கள், சுப்ரபாரதி மணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.116, விலை ரூ.100. உலக அளவில் வெப்பநிலை உயர்வதற்கான காரணங்களில் ஒன்று, மரங்களை வெட்டுவதும். நமதுநாட்டில் பல பாரம்பரிய மரங்கள் பல அழிந்து வருகின்றன. அவ்வாறு அழிந்து வரும் மரங்களில் இலுப்பை, இலந்தை, மாவிலங்கம், சந்தன வேங்கை, தான்றி, மகிழம், கோங்கு, விளா, சரக்கொன்றை, கடுக்காய், மகாவில்வம், திருவோடு, பூவரசு, வெட்டிவேர், சந்தனம், நாவல், உருத்திராட்சம் உள்ளிட்ட 30 மரங்களைப் பற்றி நாம் அறியாத பல செய்திகள் இந்நூலில் இடம் […]

Read more

கோமணம்

கோமணம், சுப்ரபாரதி மணியன், முன்னேற்றப் பதிப்பகம், பக். 112, விலை 80ரூ. பூசாரி ஜெகந்நாதன் தலைமையில் நாலு தீர்த்த கலசத்தையும் ஐந்து நாள் நடையில் காலை ஒருவர், மாலை ஒருவர் என தலையில் சுமந்து கோமணாண்டி முருகனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் ஒரு குழுவினரின் அனுபவங்களை மிக இயல்பாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர். பாதயாத்திரை அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர, ராவணன் என்ற புனைப்பெயர் பூண்ட மணி என்னும் நாஸ்திகரும் இந்த குழுவை நைசாகத் தொடர்கிறார்! குழுவினரின் கடவுள் சார்ந்த நம்பிக்கைகள், தொன்மக் […]

Read more

சப்தமில்லாத சப்தம்

சப்தமில்லாத சப்தம், ஓஷோ, தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 312, விலை 200ரூ. புராதன இசையைத்தான் சப்தமில்லாத சப்தம் என்கிறார் ஓஷோ. அது நம்மைச் சூழ்ந்துதான் இருக்கிறது. ஆனால் அதை நம்மால் உணர முடியாது. அதைக் கேட்டுணரும் முயற்சிதான் தியானம் என்கிறார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —– சிந்திக்க வைக்கும் சிறுவர் கதைகள், சுப்ரபாரதி மணியன், விஜயா பதிப்பகம், பக். 64, விலை 30ரூ. இன்பச் சுற்றுலா உள்ளிட்ட 11 சிறுகதைகளின் தொகுப்பு. சின்னஞ்சிறுகதைகள் மூலம் மாணவர்களுக்கு ஆதிவாசிகள். […]

Read more

பிணங்களின் முகங்கள்

பிணங்களின் முகங்கள், சுப்ரபாரதி மணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 248, விலை 200ரூ. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டுதான், கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அத்துடன் ஏழை பிள்ளைகளுக்கும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டு வசதியையும் அரசாங்கம் ஏற்படுத்தித் தந்துள்ளது. இன்று கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், நாம் நம் சமூகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை இன்னும் ஒழிந்த பாடில்லை. தேநீர் கடைகள், உணவு விடுதிகள் […]

Read more

வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத்

வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத், என்.எஸ். அப்துல் ஜலீல், சிராக் ஃபவுன்டேஷன் ட்ரஸ்ட், சென்னை, விலை 150ரூ. குஜராத்தில் நரேந்திர மோடியின் ஆட்சியில் மாநிலம் வளர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்லப்படுவதை மறுத்து கல்வி, விவசாயம், கிராம முன்னேற்றம், ஒடுக்கப்பட்டோர் நிலையை ஆதாரங்களுடனும் புள்ளி விவரங்களுடனும் விளக்குகிறது இந்நூல். ஆனால் நூலின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு எதிரானதுபோல் உள்ளது. நன்றி: இந்தியா டுடே, 4/6/2014.   —- மழைக்காடுகளின் மரணம், நக்கீரன், பூவுலகின் நண்பர்கள், சென்னை, விலை 20ரூ. காடுகள் குறித்த ஒரு விரிவான பார்9வையை அளிக்கிறது இந்நூல். […]

Read more

குப்பை உலகம்

குப்பை உலகம், சுப்ரபாரதி மணியன், சேவ், பக். 96, விலை 60ரூ. நாவல், சிறுகதைகள் எனப் படைப்பிலக்கியத் துறையில், நிறைய எழுதியுள்ள பிரபல எழுத்தாளரான சுப்ரபாரதி மணியன், சுற்றுப்புறச் சுழல் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. சாயக் கழிவு நீரால் மாசுபட்டுக் கிடக்கும் ஆறுகள் மற்றும் அதை ஒட்டியுள்ள, விவசாய நிலங்கள் பாழாகிப்போய்க் கொண்டிருப்பதைப் பற்றிக் கவலை தெரிவிக்கும் சுற்றுச்சூல் பணியாளர்களின், பொதுத் தொண்டு, அனைத்து மக்களுக்கும், தெரியப்படுத்த வேண்டிய முக்கியமான விஷயம். இந்த வகையில் இந்த நூலாசிரியரின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு வரவேற்பிற்குரியது. […]

Read more