சிந்தனை, செயல், வெற்றி

சிந்தனை, செயல், வெற்றி,  மெ.ஞானசேகர், கோரல் பப்ளிஷர்ஸ் அண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ்,  பக்.260, விலை ரூ.200,  சிந்தனை, செயல், வெற்றி என்ற தத்துவத்தைப் பின்பற்றினால் வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பதற்கான வழிகளை பல்வேறு வரலாற்று உண்மைகளை உள்ளடக்கிய எடுத்துக்காட்டுகளுடன் கூறியுள்ளார் நூலாசிரியர். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் நம்மைவிட மேலானவர் என்று நினைப்பது நல்லது. அத்துடன் நம்முடைய கற்பனை, சிந்தனை, முன்னேற்றத்துக்கான செயல்பாடுகள், நேர்மறை எண்ணங்கள், பழக்க வழக்கங்களில் சிறிய அளவிலான மாற்றம் ஆகியவற்றைக் கடைப்பிடித்தாலே போதும், நாம் எண்ணிய வாழ்க்கையைப் […]

Read more

அகக்காட்சி

அகக்காட்சி,(அஞ்சனம்), கிளார் வோயான்ட் சுந்தரராஜன், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 200, விலை 200ரூ. உள்ளத்தின் இயல்புகளை, ஏழு இயல்களாக பகுத்து ஆராய்ந்துள்ள நூல். அகக்கண் பெற்ற அதிசயப் பிறவிகளான, ஹெலானா ப்ளாவாட்ஸ்கி, சார்லஸ் லெட்பீட்டர், க்ராய்செட், ஹெர்கோஸ், பால் கோல்டின் ஆகியோரையும், நெற்றிக்கண் பெற்றவராக நம்மாழ்வாரையும் அறிமுகம் செய்துள்ளார். மனம், உள் மனம் பற்றி விளக்கும் நூல். நன்றி: தினமலர், 24/5/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

மதுரகவி ஆழ்வார்

மதுரகவி ஆழ்வார், முகிலை ராசபாண்டியன், முக்கூடல், பக். 64, விலை 60ரூ. நம்மாழ்வாரை மட்டுமே பாடி, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரானவர் மதுரகவி ஆழ்வார். சாதி வேற்றுமைக்கு அப்பாற்பட்டவன் இறைவன் என்பதை உணர்ந்து, உணர்த்தியவர். அதனால்தான், மன்னர் குலத்தில் உதித்த நம்மாழ்வாருக்குச் சீடரானார். அவரைப் போற்றி, ‘கண்ணி நுண் சிறுத்தரம்பு’ என்ற நூலையும் பாடினார். மதுரகவி ஆழ்வாரின் வரலாறு மிக எளிய நடையில் நூலாக்கப்பட்டுள்ளது. ஆழ்வார் வரலாற்று நூல்களில் தனிச்சிறப்புப் பெற்றது. நன்றி: தினமலர், 24/5/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

கர்ணன் – காலத்தை வென்றவன்

கர்ணன் – காலத்தை வென்றவன், மராத்தி மூலம்: சிவாஜி சாவந்த், தமிழில் – நாகலட்சுமி சண்முகம்;மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.862; விலை ரூ.899. மகாராஷ்டிர அரசின் விருது, குஜராத் இலக்கிய அமைப்பின் விருது, ஞானபீடத்தின் மூர்த்திதேவி விருது உள்பட பல விருதுகளைப் பெற்ற நாவலின் தமிழாக்கம் இது. சூரிய பகவானுக்கும், குந்திக்கும் பிறந்த கர்ணனை குந்தி அசுவநதியில் போட்டுவிட, அதிரதன் என்னும் தேரோட்டி கர்ணனை அசுவநதியில் கண்டெடுத்து தனது மகனாக வளர்த்தார். பிறந்த கணம் தொட்டு பாரதப் போரில் அர்ஜுனனால் கொல்லப்படும் வரை கர்ணன் […]

Read more

கிராம ஊராட்சியின் பணிகள் மற்றும் கடமைகள்

கிராம ஊராட்சியின் பணிகள் மற்றும் கடமைகள்,  வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.604. விலைரூ.520; தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 – ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்நூல் கிராம ஊராட்சிகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தொகுத்து தந்திருக்கிறது.கிராம ஊராட்சிகளின் அதிகார எல்லைகள் எவை? ஊராட்சித் தலைவரின், இதர பணியாளர்களின் பணிகள் எவை? குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கல்வி, சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு என அனைத்தையும் கிராம ஊராட்சி அமைப்பு பார்த்துக் கொள்ள வேண்டும். சாலை அமைப்பது, அதைப் பராமரிப்பது, மேம்படுத்துவது என […]

Read more

வெற்றி எங்கே இருக்கிறது?

வெற்றி எங்கே இருக்கிறது? , உதயை மு.வீரையன், மணிவாசகர் பதிப்பகம், பக்.136, விலை ரூ.100. வாழ்கையில் ஒருவர் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை மிக விரிவாகக் கூறும் நூல்.சிறந்த குறிக்கோள் இருப்பவர்களே சிறந்த மனிதர்களாக விளங்க முடியும். சிறந்த மனிதர்களால் மட்டுமே சிறந்த வெற்றியை ஈட்ட முடியும். எந்தச் செயலையும் செய்வதற்கு முன்னும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும். முடிவு எடுத்த பிறகு திரும்பிப் பார்க்காமல் முன்னோக்கியே போய்க் கொண்டிருக்க வேண்டும்.கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளில் […]

Read more

சித்தர் வழி

சித்தர் வழி, அரங்க. இராமலிங்கம், வர்த்தமானன் பதிப்பகம்,  பக்.312, விலை ரூ.200.   சித்தர் மரபு குறித்து பொதுநிலையில் பேசப்படுபவை, சித்தர் நெறியின் மெய்ப்பொருள் ரகசியங்கள் குறித்து பேசப்படுபவை, அனுபவ அறிவால் உணரக் கூடிய நூலாக திகழும் திருமந்திரம், சித்தர் நோக்கில் சைவநெறி போன்றவை குறித்த 21 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. சித்தர் நெறியின் பன்முகத்தன்மையை விரிவாகப் பேசுவதோடு, அவர்களின் பரிபாஷைகள் குறித்த தொகுப்பு, அவற்றில் ஒரு சிலவற்றுக்கு உரிய விளக்கம், சித்தர்கள் ஏன் பரிபாஷைகளைக் கையாண்டனர் என்பதற்கான காரணம் உள்ளிட்டவற்றை தனது […]

Read more

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்,  ம.கணபதி, மணிவாசகர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.160. “பிறருடைய துன்பத்தை, வேதனையைக் கண்டு “ஐயோ” என்று நினைத்து அவனுக்காக இரங்கி, அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய எவன் துடிக்கிறானோ, அவனே உண்மையான வைணவன்” என்ற வைணவக் கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்தவர் இராமானுஜர். மனிதர்களில் ஏற்ற தாழ்வுகள் இல்லை. இறைவனின் முன்பு எல்லாரும் சமம் என்ற அடிப்படையில் இராமானுஜர் வாழ்ந்ததை, அவருடைய வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களின் துணைகொண்டு நூல் முழுவதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இராமானுஜரின் இளம்பருவம், அவர் […]

Read more

உள்ளங்கையில் உடல் நலம்

உள்ளங்கையில் உடல் நலம்,  பி.எம்.ஹெக்டே; தமிழில்: நிழல் வண்ணன்,வானவில் புத்தகாலயம், பக்.176, விலை ரூ.166.   “நோய்கள் என்பவை விபத்துகள் போன்றவைதான். நல்ல ஆரோக்கியத்தோடு வாழும் மனிதர்களைக் கூட தீவிர நோய் வீழ்த்தி விட முடியும். ஆயினும் நாம் சிறந்த வாழ்க்கைமுறையைக் கொண்டால் நோயிலிருந்து விரைந்து குணமடைய முடியும்” என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நோய்கள் குறித்தும் மருத்துவம் குறித்தும் நாம் கொண்டுள்ள பல கருத்துகளை இந்நூல் மாற்றியமைத்துவிடுகிறது. நன்றாகத் தூங்கினால், உடல் நலம் பெறும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, “ஒரு நாளைக்கு 9 […]

Read more

சில பெண்கள் சில அதிர்வுகள் வேத, இதிகாச, புராண காலங்களில்,

சில பெண்கள் சில அதிர்வுகள், வேத, இதிகாச, புராண காலங்களில்,  ஹேமா பாலாஜி, சந்தியா பதிப்பகம், பக்.184, விலை ரூ.140. தினமணி டாட் காமில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வேத காலம் தொட்டு புராண காலம் வரை வாழ்ந்த குறிப்பிடத்தக்க சில பெண்களின் உயர்வான பண்புகளை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. யாக்ஞவல்கியரின் மனைவியான மைத்ரேயி, யாக்ஞவல்கியரை தனது தத்துவஞானக் கேள்விகளால் திணறடித்த கார்கி வாசக்னவி போன்றவர்களைப் பற்றி மட்டுமல்ல, கெட்டவர்களாக பலரால் கருதப்படுகிற கைகேயி, மண்டோதரி, காந்தாரி, சூர்பனகை ஆகியோரின் உயர்ந்த பண்புகளையும் இந்நூல் […]

Read more
1 2 3 4 153