தென்னாட்டு ஜமீன்கள்

தென்னாட்டு ஜமீன்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா பதிப்பகம், விலை: ரூ.1000. பத்திரிகையாளரும் வரலாற்று எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு, நெல்லைச் சீமையின் அரசியல், பண்பாட்டு வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து தொடர்ந்து எழுதிவருபவர். தேரிக்காட்டு ஜமீன்தார்கள் என்ற தலைப்பில் ஏற்கெனவே நூல் எழுதியிருக்கும் காமராசு, இந்தப் புதிய நூலில் மறவர் ஜமீன்கள், நாயக்கர் ஜமீன்கள், மற்றையோர் என 18 ஜமீன்களின் வரலாற்றை மிக விரிவாக அளித்திருக்கிறார். ஜமீன்களின் வம்சாவளியினர், அவர்களின் வாழ்க்கைமுறை, தொடர்புடைய கோயில்கள், திருவிழாக்கள், இன்றும் அவர்களுக்குத் தொடரும் பாரம்பரிய மரியாதை என்று கடந்த சில […]

Read more

ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்

ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்,  முத்தாலங்குறிச்சி காமராசு,  காவ்யா, பக்.343, விலை ரூ.350.  திருநெல்வேலி -திருச்செந்தூர் சாலையில் ஆதிச்சநல்லூர் பரம்பு என்றழைக்கப்படும் 114 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கே ஜெர்மனியைச் சேர்ந்த சாகோர் என்பவர் செய்த ஆராய்ச்சிகளின் விளைவாக பல அரிய உண்மைகள் வெளிவந்தன. அதைப் பற்றி விரிவாக இந்நூல் எடுத்துக் கூறுகிறது. ஆதிச்ச நல்லூரில் தொல்லியல்துறையினர் 3 கட்டங்களாக அகழாய்வு செய்தனர். அவ்வாறு அகழாய்வு செய்யும்போது நிறைய தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் அருகே சிறிய மண்குடங்கள், குவளைகள், மூடிகள், தீப […]

Read more

தாமிரபரணி நதிக்கரை அற்புதங்கள்

தாமிரபரணி நதிக்கரை அற்புதங்கள், முத்தாலங்குறிச்சி காமராசு,காவ்யா பதிப்பகம், பக்.244, விலை ரூ. 240. நெல்லைச் சீமையைப் பற்றி, தாமிரவருணி நதிக் கரையோரம் பற்றி படிப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு நல்லதொரு தகவல் கருவூலம் இந்நூல்.எங்கெங்கோ தேடித் தனித்தனி நூல்களில் படிக்க வேண்டிய விஷயங்களை ஒரே நூலில் திரட்டித் தந்துள்ளார் நூலாசிரியர். ஏற்கெனவே, தாமிரவருணி சார்ந்து இவர் எழுதிய, தாமிரபரணிக் கரையினிலே “தாமிரபரணி கரையில் சித்தர்களுடன் பயணிப்போம்  என்ற தொடர்கள் இணைந்து நூலாகியிருக்கிறது. நன்றி: தினமணி, 2/3/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   […]

Read more

தென்னாட்டு ஜமீன்கள்

தென்னாட்டு ஜமீன்கள் , முத்தாலங்குறிச்சி காமராசு; காவ்யா,  பக்.1042, விலை ரூ.1000. தமிழகத்தின் தென்னாடு என குறிப்பிட்டாலும் நெல்லைச் சீமையை மையமாக வைத்து 18 ஜமீன்களின் வரலாற்றையே நூலாசிரியர் தொகுத்திருக்கிறார். மறவர், நாயக்கர் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த ஜமீன்களின் அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும் நூலில் விவரித்திருப்பது பாராட்டுக்குரியது. ஊர்க்காடு ஜமீனில் சிலம்பத்தில் சுப்புத்தேவர், அய்யங்கார் வரிசை குறித்து படிக்கும் போது ஆச்சரியம் ஏற்படுகிறது. கழுதையை வாயால் கடித்து தூக்கி எறிந்த சுந்தரத்தேவர், குத்தாலிங்கத் தேவர், கொள்ளையர்களாக இருந்து தற்போது தெய்வமாக வணங்கப்படும் […]

Read more

நவீன தாமிரபரணி மஹாத்மியம்

நவீன தாமிரபரணி மஹாத்மியம், முத்தாலங்குறிச்சி காமராசு, பொன் சொர்ணா பதிப்பகம், விலை 450ரூ. தமிழகத்தில் தோன்றி, தமிழகத்திற்கு உள்ளேயே ஓடி கடலில் கலக்கம் ஒரே நதியான தாமிரபரணி, புண்ணியமானது என்று இதிகாசங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட தாமிரபரணியின் வரலாறு, அதன் முக்கியத்துவம், அது தொடர்புடைய அதிசயிக்கத்தக்க தகவல்கள், கதைகள் ஆகிய அனைத்தும் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. தாமிரபரணி நதியைப் பற்றி அறிந்து கொள்ள இந்த ஒரு நூலைப் படித்தாலே போதும் என்ற அளவு அத்தனை அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அத்தியாத்தின் […]

Read more

ஜமீன் கோயில்கள்

ஜமீன் கோயில்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, சூரியன் பதிப்பகம், விலை 140ரூ. ஜமீன்தார்கள் என்றாலே ராஜ கம்பீரமும், மிடுக்கும், அதிகாரத் தொனியும்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர்களிடமும் மென்மையான மனம் இருந்ததையும், பாரம்பரியமான ஆன்மிக வழிபாடுகளை மேற்கொண்டிருந்ததையும் விளக்குவதுதான் இப்புத்தகம். நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026627.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நெல்லை வரலாற்று சுவடுகள்

நெல்லை வரலாற்று சுவடுகள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, பக். 244, விலை 240ரூ. திருநெல்வேலி சீமைப் பற்றிய, சிறு சிறு, பல அரிய செய்திகளை, இந்நூலுள் தொகுத்து வழங்கி உள்ளார், நூலாசிரியர். தென்கயிலை எனவும், பொதிகைமலை எனவும் போற்றப்படும், அகத்தியர்மலை முதல், அம்பாசமுத்திரத்தில் துண்டிக்கப்பட்ட தண்டவாளம் ஈறாக இருநூற்றுக்கும் மேற்பட்டச் செய்திகளை தரும், அரிய தகவல் களஞ்சியமாக திகழ்கிறது இந்நூல். ‘ நெல்லை மாவட்டத்தின், பண்பாட்டின் சின்னங்களாக விளங்கும் கோவில்கள், கோபுரங்கள், அரண்மனைகள், தேவாலயங்கள், நீரூற்றுகள், அருவிகள், ஆறுகள், பாலங்கள், விலங்குகளின் சரணாலயங்கள், சடங்குகள், […]

Read more

குளத்தூர் ஜமீன் கதை

குளத்தூர் ஜமீன் கதை, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, விலை 175ரூ. தமிழ்நாட்டின் முந்தைய ஜமீன்தார்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதில் மக்களுக்கு நெருக்கமாகவும், அணுக்கமாகவும் வாழ்ந்தவர்கள் பலருண்டு. அவர்களை உள்ளது உள்ளபடி எழுதிப்போவதில் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னணியில் இருக்கிறார். ஆடம்பரம் இல்லாத எழுத்து அவரிடம் இருக்கிறது. பரபரக்கிற எளிய மொழி கைவசம் இருக்க, முழு வீச்சில் குளத்தூர் ஜமீன் கதையை எழுதியிருக்கிறார். ஜமீன்தார்களின் நேர்த்தி, நடைமுறை, பழக்கவழக்கங்கள் என எல்லாமே 162 பக்கங்களில் பரவிக்கிடக்கிறது. அவர்கள் பயன்படுத்திய ராலே சைக்கிள், கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. […]

Read more

நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும்

நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும், முத்தாலங்குறிச்சி காமராசு, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 376, விலை 150ரூ. தென் தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சி காலத்துக்கு முன்பே பாளையக்காரர்கள் என்ற பெயரில் ஜமீன்தாரி முறை அமலில் இருந்ததையும், நாயக்கர் ஆட்சிக்குப் பின் அது பலப்பட்டதையும் விரிவுபட்டதையும் நூல் எடுத்துரைக்கிறது. இதில் பாண்டிய நாட்டுக்கு உள்பட்ட 72 பாளையங்களில் அன்றைய நெல்லை ஜில்லாவைச் சேர்ந்த சிவகிரி, நெற்கட்டும், செவ்வல், எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி,  உள்ளிட்ட 10 ஜமீன்களின் குறுநில மன்னர்கள் வாழ்ந்ததையும் வீழ்ந்ததையும் நூல் விளக்குகிறது. ஊர்க்காடு […]

Read more