நரகம்

நரகம், எதிர் வெளியீடு.தமிழில் இரா. செந்தில். உலகப்புகழ் பெற்ற நாவல் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள், அமெரிக்க எழுத்தாளரான டான் பிரவுன் பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவர்எ ழுதிய “டாவின்சி கோட்” என்ற நாவல் 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, 20 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி உள்ளன. சினிமாப் படமாகவும் வெளிவந்துள்ளது. அவர் சமீபத்தில் எழுதிய நாவல்தான் “நரகம்”. இதுவும் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. வாழ்க்கையில் தான் சந்தித்த நபர்களை வைத்தே நாவல்களை சிறப்பாக எழுதுவதில் வல்லவர் டான் பிரவுன். “நரகம்” நாவலும் […]

Read more

தேர்வு பயம் தேவை இல்லை

தேர்வு பயம் தேவை இல்லை, ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குக்கூட, தேர்வு என்றாலே சற்று பயம் ஏற்படும். பரீட்சை நெருங்கும்போது, பதற்றத்துடன் இருப்பார்கள். அத்தகைய அச்சம் தேவை இல்லை என்கிறார் நூலாசிரியர் குன்றில் குமார். தேர்வுக்கு மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார் செய்து கொள்ள வேண்டும், முக்கியமான தகவல்களை மனதில் பதிய வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தெளிவாகவும், விவரமாகவும் கூறுகிறார். மாணவ – மாணவிகளுக்கு பயன்படக்கூடிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

சத்யஜித்ரே வாழ்வும் வழியும்

சத்யஜித்ரே வாழ்வும் வழியும், விகடன் பிரசுரம், விலை 160ரூ. இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் புகழ் தேடித்தந்தவர் சத்யஜித் ரே. 1954-ல் அவருடைய முதல் படமான “பாதேர் பாஞ்சாலி” வெளிவந்தது. சர்வதேச பட விழாக்களில் பல பரிசுகளை வாங்கிக் குவித்தது. வாழ்நாள் சாதனைக்காக சிறப்பு ஆஸ்கார் பரிசு இவருக்குக் கிடைத்தது. உடல் நலம் இல்லாத காரணத்தால், ஆஸ்கார் குழுவினரே கல்கத்தாவில் உள்ள அவர் வீட்டக்கு நேரில் சென்று பரிசை வழங்கினர். “திரைப்பட உலகின் மகத்தானவர் சத்யஜித் ரேதான்” என்று உலகப்புகழ் பெற்ற ஜப்பானிய டைரக்டர் […]

Read more

சொல்வது நிஜம்

சொல்வது நிஜம், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 166ரூ. மூத்த பத்திரிகையாளர் மணா எழுதிய நெஞ்சைத் தொடும் கட்டுரைகளின் தொகுப்பு. தமிழ் சமூகக் கட்டமைப்பில் அடிமட்டத்தில் வாழக்கூடிய விளிம்பு நிலை மனிதர்களை நேரில் கண்டு அவர்கள் படும் துயரங்களையும், அவலங்களையும் அருமையாகப் பதிவு செய்துள்ளார். நாட்டுப்புறச் சிறுவர்களின் கொத்தடிமை வாழ்க்கை, பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் சின்னஞ் சிறுமிகளின் வாழ்க்கையை நேரலை போல விவரிக்கிறார். பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிக் காலத்தில் அவரது தாயாருக்கு சலுகை அளிக்க மறுத்ததையும், தேர்தல் பிரச்சாரத்தின்போது எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் காட்டிய […]

Read more

பொங்கல் விழாச் சிந்தனைகள்

பொங்கல் விழாச் சிந்தனைகள், ஐவர்வழி வ.வேம்பையன், திருவள்ளுவர் மன்றம், விலை 150ரூ. பொங்கல் விழா பற்றிய கட்டுரைகள் கொண்ட நூல். பொங்கலை பல கோணங்களில் ஆராயும் கட்டுரைகள். சுருக்கமாகச் சொன்னால், பொங்கல் பற்றிய ஓர் அரிய ஆவணம் என்றே கூறலாம். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

வெளிச்ச விதைகள்

வெளிச்ச விதைகள், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், விலை 120ரூ. முற்போக்கு சிந்தனைக் கொண்ட நூலாசிரியர், உணர்வு பூர்வமான, சிந்திக்க கூடிய தலைப்புகளில் கவிதைகள் தொகுப்பை வெளியிட்டு உள்ளார். குறிப்பாக விழிகளை விற்று ஓவியம் வாங்கலாமா? வாக்குகளை விற்று பணம் வாங்கலாமா? என்ற ஆழமான பல்வேறு கருத்துகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

கிழக்கு மேற்கு கோவாவில் மதமாற்றம் துயரக்கதை

கிழக்கு மேற்கு கோவாவில் மதமாற்றம் துயரக்கதை, மலையாள மொழியில் ரங்க ஹரி, தமிழில் அலமேலு கிருஷ்ணன், விஜயபாரதம், விலை 120ரூ. போர்ச்சுக்கீசிய ஆட்சியில் கோவாவில் நடந்த மதமாற்றத்தால் ஏற்படும் கொடுஞ்செயல்களை நூலாசிரியர் அனைவருக்கும் புரியும் வகையில் நேரடி காட்சியாக காண்பித்து உள்ளார். கொங்கன் பகுதியில் இருந்து ஓடிச்செல்ல வேண்டிய ஒரு பகுதி மக்களின் சோகக் கதையை நூலாக, நூலாசிரியர் வடித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

உன்னை விட்டு விலகுவதில்லை

உன்னை விட்டு விலகுவதில்லை, இனிய நந்தவனம் பதிப்பகம், விலை 120ரூ. எழுத்தாளர் எஸ். செல்வசுந்தரிக்கு இது முதல் நாவல். ஆயினும், வார்த்தைகளையும், சம்பவங்களையும் செதுக்கிச் செதுக்கி, இதை ஒரு நல்ல நாவலாக உருவாக்கியிருக்கிறார். கதையில் முக்கிய பாத்திரங்களாக வருகிறவர்கள் திருநங்கைகள். அவர்களுடைய வாழ்க்கையை கண்ணாடி போல் பிரதிபலித்துக் காட்டுகிறது இந்த நாவல். முதல் நாவலையே வெற்றி நாவலாக உருவாக்கியுள்ள செல்வசுந்தரி பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

எம்.ஜி.ஆர். நடித்த 133 படங்கள்

எம்.ஜி.ஆர். நடித்த 133 படங்கள், மணிவாசகர் பதிப்பகம், விலை 350ரூ. எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் “சதிலீலாவதி”. இது 1936-ம் ஆண்டு வெளிவந்தது. அறிவிருந்து பல படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அவருடைய 15-வது படமான ‘‘ராஜகுமாரி” , அவரை கதாநாயகனாக உயர்த்திய படம். அது முதல் ஏறுமுகம்தான். 1977-ல் சட்டசபை தேர்தலில் அவருடைய அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது. முதல் – அமைச்சராகப் பதவி ஏற்பதற்கு முன் அவர் நடித்து முடித்து படம் “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” (1978). இது […]

Read more

அரசியல் அறிவியல்

அரசியல் அறிவியல், டாக்டர் S.இராமநாதன், டாக்டர் K. செந்தில்குமார், நோசன் பிரஸ், பக். 140, விலை 175ரூ. இந்நூலின் ஆசிரியர்கள் இருவரும் அரசியல் அறிவியல் (Political Science) துறையில் மட்டுமின்றி மற்ற சில துறைகளிலும் ஆராய்ச்சி பட்டங்களைப் பெற்றவர்கள். NET/SLET. IAS மற்றுமுள்ள போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களை மனதில் கொண்டு இந்நூலை உருவாக்கியுள்ளார்கள். அரசியல் என்பது வெறும் நிர்வாகத்துறையை மட்டுமின்றி, சட்டத்துறை, நீதித்துறை, அறிவியல், பொருளாதாரம், விவசாயம், தொழிற்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை, விளையாட்டுத்துறை… என்று அனைத்து துறைகளையும் ஒழுங்கப்படுத்தி செல்லும் ஆளுமை […]

Read more
1 2 3 4 5 7