கறுப்புக் குதிரை

கறுப்புக் குதிரை, நரேன் ராஜகோபாலன், நவி பதிப்பகம், விலை 150ரூ. 500, 1000 ரூபாய் திடீரென ஒரு ராத்திரியில் மதிப்பிழந்த நிலையில் நம்மில் நிறையப் பேர் நிலைகுலைந்து போனோம். அதற்கான காரண, காரியங்கள் தெரியாது. எரிச்சலே மிஞ்சியது. இந்த சூழலில் இப்புத்தகத்தில் கறுப்புப் பணம், பண மதிப்பிழப்பு இவற்றின் ஆதி அந்தங்களை விரிவாக எடுத்து வைக்கிறார் நரேன். ஆனால், ஆவணக் கட்டுரைகளின் சாயல் துளியும் எட்டிவிடாமல், ‘துறுதுறு’வென இவைகளின் சாரம் மட்டுமே புரிகிறது. கறுப்புப் பணம், பெரு வங்கிகள், மென்பொருள் துணை கொண்ட டிஜிட்டல் […]

Read more

மறுதுறை மூட்டம் (நாகார்ஜுனன் நேர்காணல்)

மறுதுறை மூட்டம், (நாகார்ஜுனன் நேர்காணல்), நேர்காணல் : எஸ். சண்முகம், நெறியாள்கை: முபின் சாதிகா, கலைஞன் பதிப்பகம், விலை 180ரூ. தமிழில் பின்நவீனத்துவம் காட்டிய எழுத்துக்களில், அதை அடையாளப்படுத்தியதில் நாகார்ஜுனனுக்கு பெரும் இடம் உண்டு. அவரது முழு நேர்காணலின் மூலம் துடிப்பும், அக்கறையும், பரந்துபட்ட அறிவும், சொல்லாடலின் செழுமையும் இந்த நூல் முழுமையும் பரவிக்கிடக்கிறது. ஒவ்வொரு பிரச்னையிலும் அவர் கருத்து வைக்கும் இடம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. நாகார்ஜுனனின் வற்றாத உழைப்பும், மிகையற்ற மதிப்பீடுகளும், அகந்தையற்ற மனமும், மனிதநேய இழைவும் மிகவும் முக்கியமானவைகளாக இந்த நூலில் […]

Read more

பனைமரம்

  பனைமரம், முனைவர் இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 758, விலை 800ரூ. தமிழர் வாழ்வியலில் பனைமரத்தின் பயன்பாடு என்பது, ஒரு பண்பாட்டும் பயில்வு நிலையாகவே தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அகமாயினும் புறமாயினும் மானுட வாழ்வின் பல்வேறு படிநிலையாக்கங்களிலும் பனைமரத்தின் செயல்பாடு நீடித்திருப்பதை எண்ணற்ற சான்றுகள் வாயிலாக எடுத்துக்காட்ட இயலும். குறிப்பாக தமிழர் அறிவும் பாரம்பரியத்தின் களஞ்சியமாகத் திகழும் பல்வேறு எழுத்தாக்கங்கள் கால வெள்ளத்தில் கரைந்து போகாமல் காத்த பெருமை, பனைமரத்தின் ஓலைகளால் ஆன சுவடிகளையே சேரும். தமிழ்ச்சுவடி மரபே உலக நூலாக்கத்தின் […]

Read more

கை நழுவும் சொர்க்கம்

கை நழுவும் சொர்க்கம், எஸ். செல்வசுந்தரி, இனிய நந்தவனம் பதிப்பகம். தவறுகளை துரத்தி அடிக்கும் போர்க்கருவியாக படைப்பாளிகளுக்கு எப்போதுமே, எழுத்துகள் இருக்கின்றன. அவை கவிதையாகவும், புதினமாகவும், சிறுகதையாகவும் வெளிப்படுகின்றன. ‘செல்வசுந்தரி’யும் அந்த ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். அதற்கு சாட்சி, அவரின் கைநழுவும் சொர்க்கம் சிறுகதைத் தொகுப்பு. புதினம் எழுதுவது எளிது; சிறுகதைகள் எழுதுவது தான், கடினம் என்றொரு கருத்து உண்டு. செல்வசுந்தரி, தன் சிறுகதை நூல் தொகுப்பின் வாயிலாக அந்த கடினமானப் பணியை செவ்வனே செய்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். ‘கை நழுவும் […]

Read more

அங்குசம்

அங்குசம், தவசிக்கருப்புசாமி, மணல்வீடு ஏர்வாடி, பக். 60, விலை 80ரூ. ‘கூடிவிட்டது சந்தை; துண்டுபோட்டு மூடி தடையற நடக்குது தரங்கெட்ட வணிகம்’ என்ற கவிதை வரி, இன்றைய சமூகத்திற்கு சாட்டையடி கொடுப்பதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர், 5/3/2017.   —- இலையுதிர்க் காலம், டாக்டர் எஸ்.ஆர். கிஷோர் குமார், தாமரை பப்ளிகேஷன்ஸ், பக். 102, விலை 80ரூ. பிள்ளைகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டு, முதியோர் இல்லங்களில் அடைக்கலமான பெற்றோர் கண்ணீருடன் காலம் கழிக்கும் அவலநிலையை கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 5/3/2017.

Read more

மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள்

மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள், வைரமூர்த்தி, சுபா பதிப்பகம், பக். 128, விலை 50ரூ. மாணவர்களுக்கு பொது அறிவு வளரும் விதத்தில் எழுதப்பட்டுள்ள 33 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். குடியரசு தினம், உழைப்பாளர் தினம், உழவர் திருநாள், உலக தண்ணீர் தினம், சுதந்திரதின விழா போன்ற முக்கிய நாட்கள் பற்றிய செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்ள உதவுகிறது. பூலித்தேவன், வேலு நாச்சியார், வேலுத்தம்பி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீர தீரத்தை எடுத்துச் சொல்வது சிறப்பு. அன்னை தெரசா, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சரோஜினி நாயுடு, […]

Read more

அர்த்த சாஸ்திர அறிவுரைகள்

அர்த்த சாஸ்திர அறிவுரைகள், நல்லிகுப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க், பக். 192, விலை 150ரூ. சாணக்கியரைப் பற்றி கூறுவதோடு அவரது நீதிநெறி அறிவுரைகளையும் சேர்த்துத் தந்துள்ளார் இந்நூலாசிரியர். மக்களை நல்வழிப்படத்த மன்னன் அவர்களின் உணர்வைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்ற ஜனநாயக உணர்வை வெளிப்படுத்தவே சாணக்கியர் ‘அர்த்த சாஸ்திரம்’ என்ற நூலைப் படைத்துள்ளார். இதை சாணக்கியர் வரலாற்றையும் அவரது அர்த்த சாஸ்திர அறிவுரைகளையும் கொண்டு நூலாசிரியர் விளக்கியுள்ளது சிறப்பு. சாணக்கியர் வரலாற்றில் அவர் ‘கிங் மேக்கராக’ இருந்திருப்பது தெரிய வருகிறது. அர்த்த சாஸ்திரம் […]

Read more

சிலிர்த்தெழும் இளைஞர் இந்தியா

சிலிர்த்தெழும் இளைஞர் இந்தியா, செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், பக். 160, விலை 120ரூ. வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்க முன்பு ஒரு விடுதலைப்போர் நடந்ததைத் போல், இன்று நமது அரசியல் கொள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்க மீண்டும் ஒரு விடுதலைப் போர் நடந்தாக வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார் இந்நூலாசிரியர். ஆன்மீகம், அரசியல், கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம், மதச்சார்பின்மை… என்று பல துறைகளில் உயர்ந்த நிலையை உலகிற்கு வழங்கிய இந்தியா, இன்று நமது அரசியல்வாதிகளால் மதவெறி, ஜாதிவெறி, இனவெறி, மொழிவெறி, சுயநலம், ஊழல், லஞ்சம், […]

Read more

மாமனிதர்களின் இளமைக்கால வரலாறு

மாமனிதர்களின் இளமைக்கால வரலாறு, தஞ்சை நா. எத்திராஜ், இராமு நிலையம், பக். 412, விலை 180ரூ. காந்தி, காமராஜர் போன்ற அரசியல் மேதைகள், பாரதியார், திரு.வி.க. உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள், கரிகால் சோழன், சிவாஜி போன்ற நாடாண்டவர்கள், புத்தர், மகாவீரர் போன்ற ஞானிகள் மற்றும் விஞ்ஞானிகள் என்று பலரின் இளமைக்கால வரலாறு மாணவர்களுக்கு உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: குமுதம்.

Read more

கூடிவாழ்வோம்

கூடிவாழ்வோம், கண்ணன் கிருஷ்ணன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 223, விலை 150ரூ. ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை ‘கலைக்கூடம்’ என்ற மூன்று பத்துமாடிக் கட்டிடங்களில் வசிக்கும் ஃபிளாட் வாசிகளை வைத்து சொல்லியிருப்பது புதிய உத்தி. ‘காவியம்’, ‘ஓவியம்’, ‘இலக்கியம்’ என்ற பெயர் கொண்ட அந்த குடியிருப்பு மனிதர்கள் கண்ணப்பன் முதல் பேத்தி தேவிகா, சாந்தா அம்மாள், சோமசுந்தரம், தாமரை, பார்வதி, ஆறுமுகம், சண்முகநாதன், குற்றாலிங்கம் என்று அத்தனை பேரும் நம் அக்கம் பக்கம் வாழும் நிஜ மனிதர்களின் வார்ப்புகள். ‘கலைக் கூடத்தை’ நிர்வகிப்பதில் எழும் […]

Read more
1 2 3 4 5 6 7