கவிதைச் சிறகுகள்

கவிதைச் சிறகுகள், வானதி பதிப்பகம், விலை 160ரூ. கவிதை நாற்றுகள், கவிதை கீற்றுகள், கவிதை சிறகுகள், இலக்கிய ஆளுமைகள் என்ற தலைப்பில் பேராசிரியர் மோகன் படைத்துள்ள திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. கவிஞர்கள் செல்லகணபதி, ரெ.முத்துக் கணேசன், பெ. சிதம்பரநாதன், பாரதி வசந்தன், இளசை சுந்தரம், துணை வட்டாட்சியர் பே.ராஜேந்திரன், கம்பதாசன் போன்றோரின் கவிதைகளில் உள்ள நயங்களை எடுத்துச் சொல்கிறார். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள், புதுக்கவிதையில் நிகழ்காலப் பதிவுகள் அருமை. கவிஞர்களை மட்டுமல்ல இலக்கிய ஆளுமைகள் பற்றியும் இந்த நூலில் அவர் அழகுற எடுத்துக் […]

Read more

ஜெ.ஜெ. தமிழகத்தின் இருப்புப் பெண்மணி

ஜெ.ஜெ. தமிழகத்தின் இருப்புப் பெண்மணி, வி கேன் புக்ஸ், விலை 90ரூ. மறைந்த முதல் – அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், அதே சமயம் மனதைத் தொடும்படியும் விவரிக்கும் நூல். ஜெயலலிதாவின் இளமைப்பருவம், திரைப்படத் துறையில் பெற்ற தொடர் வெற்றிகள், அரசியல் பிரவேசம், முதல் – அமைச்சர் பதவி, அண்மையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மறைவு… இப்படி, ஜெயலலிதா வாழ்க்கை முழுவதையும் இந்த 108 பக்க நூலில் ஒரு நாவலுக்குள்ள விறுவிறுப்புடன் எழுதியுள்ளார், குகன். அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கும், ஜெயலலிதா மீது பற்று கொண்டவர்களுக்கும் இது […]

Read more

அருள்வளர் மதுரை மீனாட்சி அம்மை கலிவெண்பா

அருள்வளர் மதுரை மீனாட்சி அம்மை கலிவெண்பா, மு. இராமலிங்கம், எல்கேஎம் பப்ளிகேஷன், பக். 32, விலை 22ரூ. மீனாட்சி அம்மையின் சிறப்புகளை பாடுவதாக அமைந்துள்ளது இந்நூல். நன்றி: தினமலர், 29/1/2017. —- ஐம்பெரும் காப்பியக்கதைகள், ஆர்.சி.சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 45ரூ. எளிய கதை வடிவில், மாணவர்கள் படித்து பயன் அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்நூல். நன்றி: தினமலர், 29/1/2017.  

Read more

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை, மு. நியாஸ் அகமது, விகடன் பிரசுரம், பக். 192, விலை 140ரூ. “நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன்‘’- இது தனக்கு மிக நெருங்கியவர்களுடன் ஜெயலலிதா பகிர்ந்து கொண்ட வாசகம். அந்த நரகங்கள் எவை, அவற்றை எப்படித் தாண்டிக் குதித்துத் தப்பித்து வந்தார் என்பதை விவரிப்பதுதான் இந்த நூல். இரண்டாவது வயதில் தந்தையை இழந்தது, தாயார் வேதவல்லி, “சந்தியா’‘ என்கிற பெயர் தாங்கி படங்களில் நடித்தது, சர்ச் பார்க் கான்வென்டில் ஜெ.யின் படிப்பு, […]

Read more

அறுபத்து நான்காவது நாயனார்

அறுபத்து நான்காவது நாயனார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 18ரூ. கிருபானந்த வாரியார் சுவாமிகள், பக்தி சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் ஈடு இணையற்றவர். உலகம் முழுவதும் ஆன்மிகத்தைப் பரப்பியவர். ஏற்கனவே உள்ள 64 நாயன்மார்களுடன் 64-வது நாயனராக வாரியார் சுவாமிகளை கருதவேண்டும் என்ற வலியுறுத்துகிறார் நூலாசிரியர் புலவர் க. தியாகசீலன். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை, சின்ரன், தமிழில் ஜி. விஜயபத்மா, எதிர் வெளியீடு, விலை 280ரூ. சீனாவில் வானொலி தொகுப்பாளினியாகப் பணியாற்றியவர், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், ஓரினச் சேர்க்கை, காதல், ஏமாற்றம் என்று பல வரம்புகளில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்களைச் சந்தித்து அவர்களின் அந்தரங்க உணர்ச்சிகளைத் திரட்டிக் கொடுத்து இருக்கும் தகவல்கள், ஆச்சரியமிக்க அதிர்ச்சிகரமானவை. நன்றி: தினத்தந்தி, 15/3/2017.

Read more

யுகபாரதி கவிதைகள்

யுகபாரதி கவிதைகள், நேர்நிரை, விலை 500ரூ. யுகபாரதியின் ஏழு கவிதைத் தொகுப்புகளை ஒன்று சேர்த்து இறுக்கிய நூல். நல்ல கவிதைகள் பள்ளிக்கூடத்து பிள்ளைகள் மாதிரி ‘காச்மூச்’ சென கத்தக்கூடாது’ என்பார் நகுலன். அப்படியே சத்தம் இல்லாமல் யுகபாரதி கொண்டு சேர்க்கும் எளிமைக்கும், அர்த்தத்திற்கும் தேய் வழக்கற்ற சொல் ஆளுமைக்கும் கட்டியம் கூறுகின்றன கவிதைகள். அவரது கவிதைகளில் கண்டடையும் உண்மை என்பது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அவரின் கவிதைகளைத் தனித்தனியாக பார்க்கும்போதும் ஒவ்வொன்றிலும் ஒரு விசேஷமான பார்வை, கூர்மை, தெளிவு புலப்படுகிறது. எளிமையாக இருப்பதாலேயே இவை சாதாரணமானவை […]

Read more

தமிழ் கற்பித்தல்

தமிழ் கற்பித்தல், டாக்டர் பி. இரத்தின சபாபதி, சாந்தா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் கையேடு இது. நன்றி: தினத்தந்தி, 1/3/2017. —- புலி வாலைப் பிடித்தால், வெங்கட் பிரசாத், மணிமேகலைப்பிரசுரம், விலை 85ரூ. சென்னையில் ஒரு கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர வரும் இரண்டு இளைஞர்கள் ஒரு ஆபத்தில் சிக்கிக்கொள்வது பற்றிய கதை. மர்மம் எதிர்பாராத திருப்பம், சாகசம், காதல்… இப்படி பல்சுவை கொண்ட நாவலை விறுவிறுப்பாக எழுதியுள்ளார் வெங்கட் பிரசாத். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

வரலாறும் வகுப்புவாதமும்

வரலாறும் வகுப்புவாதமும், இஸ்லாமிய நிறுவனம், விலை 80ரூ. வரலாற்றில் பொய்யையும், வெறுப்பையும் நிரப்பி திரிக்கப்பட்ட செய்திகள் உலா வருகின்றன. அத்தகைய செய்திகளில் உள்ள உண்மை நிலையை இந்த நூலில் பேராசிரியர்கள் அருணன், தஸ்தகீர், டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மத் ஆகியோர் உரத்துக் கூறியுள்ளனர். அதில் பாபர் மசூதியின் வரலாறு, பிரிவினைக்குப் பின்னால் உள்ள உண்மையான தகவல்கள், அம்பேத்கரின் நிலைப்பாடு போன்ற பல்வேறு தலைப்புகளில் உண்மை நிலவரத்தை நிலை நிறுத்தியுள்ளனர். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, பாகம் 2, தொகுப்பாசிரியர் சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 514, விலை 200ரூ. மதுரை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் தலைவராக தொண்டாற்றி வரும் இந்நூலாசிரியன் சீரிய முயற்சியினால், இரண்டாண்டுகளுக்கு முன் இந்நூலின் முதல் பாகம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இந்நூலின் 2-ஆம் பாகமும் அவரால் தொகுக்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. மகான் ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்ஸரின் ஆத்மார்த்த சீடரான சுவாமி விவேகானந்தர், ஆன்மிகம், இந்திய விடுதலைப் போராட்டம், பெண்கள் முன்னேற்றம், சமூக […]

Read more
1 2 3 4 7