இனிப்பு தேசம்

இனிப்பு தேசம், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.110. ஒருகாலத்தில் முதியவர்களுக்கு வரும் நோயாக அறியப்பட்ட நீரிழிவு இன்று மத்திய வயதினர், இளம் வயதினரையும் பாதிக்கிறது. நீரிழிவு குறித்த பொது நம்பிக்கைகள் சரியா, தவறா என்று ‘இனிப்பு தேசம்’ நூலில் பிரபல மருத்துவரும் எழுத்தாளருமான கு.சிவராமன் விளக்கியுள்ளார். காலத்துக்கு அவசியமான இந்நூல் உங்கள் ஆரோக்கியம் காப்பதில் துணைநிற்கும். நன்றி: தமிழ் இந்து, 30/3/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000028045.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

குறுந்தொகைப் பாடல்கள் (1-25)

குறுந்தொகைப் பாடல்கள் (1-25), குழ.கதிரேசன், ஐந்திணைப் பதிப்பகம், பக்.136, விலை 80ரூ. குழந்தைகள் மனத்தைக் குளிர்வித்துப் பல குழந்தை இலக்கியங்களைப் படைத்த குழந்தைக் கவிஞர் குழ.கதிரேசன், இப்போது இலக்கிய இன்பம் நல்கும் நல்ல குறுந்தொகை எனப் போற்றப்படும் குறுந்தொகை பாடல்களுக்கு விளக்கம் தந்துள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் முதல் இருபத்தைந்து பாடல்களுக்கான எளிய விளக்கத்துடன், அப்பாடல்களில் இடம்பெறும் மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள், முதல், கரு, உரிப்பொருள்களுக்கான விளக்கங்களையும் மாணவர்கள்புரிந்து கொள்ளும் வகையில் தந்திருப்பது சிறப்பு. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய மூல […]

Read more

மாபெரும் தமிழ்க் கனவு

மாபெரும் தமிழ்க் கனவு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 500ரூ. உலகில் வாழும் தமிழர்களெல்லாம் தங்கள் இதயங்களையே அரியாசனமாக்கி அமர்த்தி அழகுபார்க்கும் அறிவு ஆசான். சாமானியர்களின் எழுச்சிக்கு வித்திட்ட சரித்திர நாயகன். தமிழ்நாடும், தமிழ்ச் சமுதாயமும் தழைக்க வழிவகுத்துத் தந்த தள நாயகன் எங்கள் அண்ணா! – மு.கருணாநிதி கடவுள் என்றால் யார்? அறிவைக் கொடுப்பவர் கடவுள். அன்பை வழங்குபவர் கடவுள். அறிஞர் அண்ணா இந்த நாட்டுக்கே அறிவை வழங்குகிறார். மக்களுக்கெல்லாம் அன்பை ஊட்டுகிறார். எனவே, அறிஞர் அண்ணாவைக் கடவுள் என்றால் மிகையாகாது. […]

Read more

பேரன்பின் பூக்கள்

பேரன்பின் பூக்கள், சுமங்களா, தமிழில் யூமா வாசுகி, சித்திரச் செவ்வானம், புக்ஸ் ஃபார் சில்ரன்,  விலை 350ரூ. அண்டை மாநிலமான கேரளம் இலக்கியத்திலும் சமூக உணர்விலும் நம்மைவிட மேம்பட்ட நிலையிலேயே பல நேரம் இருந்து வந்திருக்கிறது. அதற்கான அழுத்தமான அடையாளங்களில் ஒன்று மலையாளச் சிறார் இலக்கியம். தற்கால மலையாள மொழியின் சொத்துகளைக் கணக்கெடுத்தால், அதில் சிறார் இலக்கியத்துக்குத் தனி இடம் உண்டு. இதற்குப் பல்வேறு சமூக வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. தமிழில் கடந்த 15 ஆண்டுகளில் வெளியான நேரடிச் சிறார் இலக்கியத்தைவிடவும், மொழிபெயர்ப்பின்வழி தமிழுக்கு […]

Read more

அன்புள்ள ஏவாளுக்கு

அன்புள்ள ஏவாளுக்கு, ஆலிஸ் வாக்கர், தமிழில் ஷஹிதா, எதிர் வெளியீடு, விலை 350ரூ. எண்பதுகளில் இங்கே விளிம்புநிலை மனிதர்களும் அவர்களது வாழ்க்கையும் இலக்கியமாகி பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தத் தொடங்கிய அதே காலகட்டத்தில்தான் ஆப்ரிக்க-அமெரிக்கர்களின் கதையை ‘தி கலர் பர்ப்பிள்’ (தமிழ் மொழிபெயர்ப்பின் தலைப்பு: ‘அன்புள்ள ஏவாளுக்கு’) என்ற பெயரில் நாவலாக்குகிறார் ஆலிஸ் வாக்கர். அந்நாவல் வெளியாகிய அடுத்த ஆண்டே ஆலிஸ் வாக்கருக்கு ‘புலிட்சர் விருது’ கிடைக்கிறது. ஆலிஸ் வாக்கர்தான் புலிட்சர் விருதுபெற்ற முதல் கறுப்பினப் பெண். நாவல் வெளியாகி அடுத்த மூன்று ஆண்டுகளில் ஸ்டீவன் […]

Read more

இன்பியல் துன்பியல் இதழியல்

இன்பியல் துன்பியல் இதழியல், கோ.சீனிவாசன், அகரம், பக்.158, விலை ரூ.125. முன்னணி ஆங்கில நாளிதழ்களில் பணியாற்றிய நூலாசிரியர், செய்தி சேகரிப்பு சார்ந்த நிகழ்வுகளில் தனக்கு நேர்ந்த இன்பமானவற்றையும், துன்பமானவற்றையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். கூடவே இதழாளர்களுக்குப் பயன்படும் வகையில் அது குறித்த தனது அனுபவம் சார்ந்த கருத்துகளையும் கூறியிருக்கிறார். 1990 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 -ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தை செய்தி சேகரிக்கச் சென்றபோது நேரில் பார்க்க நேர்கிறது. அந்த காட்சிகள் அவரை நினைவிலும் கனவிலும் […]

Read more

அருந்தவப்பன்றி

அருந்தவப்பன்றி, சுப்பிரமணிய பாரதி – பாரதி கிருஷ்ணகுமார், சப்னா புக் ஹவுஸ், பக்.174, விலை ரூ.140. நூலின் தலைப்பு  ஒருவிதமான அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். என்றாலும் நூலைப் படிக்கத் தொடங்கியவுடன், நூலாசிரியர் சொல்லும் விஷயங்களில் அமிழ்ந்து பாரதியாரைப் பற்றி நம் மனதில் ஏற்கெனவே இருந்த சிறப்பான மதிப்பீடுகள் இன்னும் அதிகமாக வலுப்பெற்றுவிடுகின்றன. இப்படி ஒரு மகாகவியா?என்று யோசிக்க வைத்துவிடுகிறது. தமிழ்க் கவிதையை மக்கள் மொழியில் மாற்றிய பெருமை பாரதியாருக்கு உண்டு. அவர் நிறைய கட்டுரைகள் எழுதியிருந்தாலும் கவிஞராகவே நம் எல்லாருடைய மனதிலும் நிற்கிறார். ஆனால் பாரதியார் […]

Read more

திருக்கார்த்தியல்

திருக்கார்த்தியல்,ராம் தங்கம், வம்சி புக்ஸ், விலை: ரூ.170. குரலற்றவர்களின் பெருங்குரலாய்! என் தலைமுறையின் பலரும் கடந்துவந்த பாதைதான் ‘திருக்கார்த்தியல்’ செந்தமிழுக்கானதும். கேவும் ஆன்மாவைத் தவிர்த்துக் கடக்க முடியவில்லை. பொருளாதார, அரசியல் அரங்குகளில் பலமாய் வியாபித்திருக்கும் சமூகங்களின் அக வேர்களில் நடத்திய விசாரணையே இ்த்தொகுப்பிலுள்ள கதைகள். சமூக அவலங்களை அதன் அக, புறக் கூறுபாடுகளோடுடனான உணர்வுகளாய்க் கொட்டுகிறது. ராம், அடிப்படையில் ஆய்வாளராய் இருப்பதால் அடித்தள மக்களின் வாழ்வு அதன் ஆணிவேரான தொன்மங்களோடு கதைகளில் தெறிக்கிறது. – ஜோ டி குருஸ் நன்றி: தமிழ் இந்து, 30/3/19. […]

Read more

உறவே உதவும்

உறவே உதவும், ரவணசமுத்திரம் நல்லபெருமாள்,ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை: ரூ.150. சந்தக் கவிதைகள் பள்ளி ஆசிரியராகவும் கல்வித் துறை பயிற்சியாளராகவும் பல்வேறுபட்ட அனுபவங்களுக்குச் சொந்தக்காரர் நல்லபெருமாள். 80 வயதில் தனது கவிதை முயற்சிகளுக்கு நூல்வடிவம் கொடுத்திருக்கிறார். விநாயகர், முருகன், கண்ணன் துதிப் பாடல்கள்; வாழ்வின் நிலையாமையைப் பேசும் தத்துவப் பாடல்கள்; தமிழையும் தமிழ்க் கவிஞர்களையும் போற்றும் கவிதைகள்; குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அனுபவப் பதிவுகள், பள்ளிக் குழந்தைகளுக்குப் பயன்படும் சந்தப் பாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுப்பு இது. பல பாடல்கள் மரபுக் கவிதைகளை வாசிக்கும் […]

Read more

ஸ்ரீ அரவிந்தரின் எரிக்கன்(ERIC)

ஸ்ரீ அரவிந்தரின் எரிக்கன்(ERIC), அரவிந்தர்; தமிழாக்கம்: சிவ சூரியநாராயணன்; எல்கேஎம் பப்ளிகேஷன், பக்.272, விலை ரூ. 250. விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளராக இருந்து ஆன்மிகவாதியாக மலர்ந்தவருமான மகரிஷி அரவிந்தகோஷ், மிகச் சிறந்த இலக்கியவாதி என்பது பலரும் அறியாத தகவல். அரவிந்தர் எழுதிய எரிக் என்ற கவிதை நாடகம், ஸ்காண்டிநேவிய நாட்டுக் கதையின் செம்மை வடிவம். அவரது ஆங்கில நடை, ஆங்கிலேயர்களே வியந்த தனித்தன்மை கொண்டதாகப் போற்றப்படுகிறது. இதன் மூலம் எதுவென்று அவர் குறிப்பிடவில்லை. எனினும், நார்வே தேச மன்னன் எரிக் பற்றிய சித்திரம் […]

Read more
1 4 5 6 7 8