தி டெடிகேட்டட்: எ பயாக்ராஃபி ஆஃப் நிவேதிதா

தி டெடிகேட்டட்: எ பயாக்ராஃபி ஆஃப் நிவேதிதா, லிஸெல் ரெய்மண்ட், பீ புக்ஸ், விலை: ரூ.350. விவேகானந்தரால் நிவேதிதா என்று பெயர் சூட்டப்பட்ட அயர்லாந்து பெண்மணியான மார்கரெட் எலிசபெத் நோபிள், இந்தியாவில் மேற்கொண்ட சேவைகள் அநேகம். அதில் முதன்மையானது பெண் கல்வி. பிரிட்டிஷ் ஆதிக்க எதிர்ப்பைப் பரம்பரையாகத் தன்னுள் வரித்திருந்த சகோதரி நிவேதிதா, இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பங்காற்றினார். ஜனவரி 28, 1898 கல்கத்தா துறைமுகத்தில் மார்கரெட் ஆக வந்திறங்கியவரின் வாழ்க்கை 1911-ல் இந்திய மண்ணிலேயே நிறைவடைந்தது. இந்த மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே மிகச் […]

Read more

இமயத்தில் தமிழ்க்கொடி நாட்டிய கரிகாலன்

இமயத்தில் தமிழ்க்கொடி நாட்டிய கரிகாலன், கே.சித்தார்த்தன், மணிமேகலைப்பிரசுரம், விலை 150ரூ. வடநாட்டு மன்னர்கள் பலரை முறியடித்து, இமயமலையில் சோழர்களின் புலிக்கொடியை நாட்டியது, காவிரியின் குறுக்கே பலம்வாய்ந்த கல்லணையைக் கட்டியது போன்ற அரிய செயல்களால் அழியாப்புகழ் பெற்ற மன்னர் கரிகாலனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எழுதப்பட்டுள்ள இந்த நாடகம். விறுவிறுப்பான சினிமா படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும் வகையில் அமைந்து இருக்கிறது. ஒரு சில கற்பனை கதாபாத்திரங்களையும் சேர்த்து, நாடகத்தை நேர்த்தியாக நகர்த்திச் செல்லும் பாங்கு, கரிகாலனின் நல்ல குணங்களை படம்பிடித்துக் காட்டுவது போன்ற […]

Read more

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு, டாக்டர் எச்.வி.ஹண்டே, வசந்தா பதிப்பகம், விலை 300ரூ. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 1984 செப்டம்பர் 15 -ந் தேதி, விழா ஒன்றில் திடீர் என்று மயங்கி விழுந்த போது தான் அவருக்கு எத்தகைய உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது என்ற தகவலை டாக்டர் எச்.வி.ஹண்டே இந்தப் புத்தகத்தில் தெரிவித்து இருக்கிறார். அது முதற்கொண்டு எம்.ஜி.ஆர். மரணம் அடையும் வரை அவருக்கு என்னென்ன கோளாறுகளுக்கு என்னென்ன சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன? […]

Read more

ராகுகால ஸ்ரீ துர்க்கா பூஜையும் கிரக தோஷப் பரிகாரங்களும்

ராகுகால ஸ்ரீ துர்க்கா பூஜையும் கிரக தோஷப் பரிகாரங்களும், வேணுசீனிவாசன், அழகு பதிப்பகம், விலை 180ரூ. துர்க்கையின் அவதாரம், துர்க்கையின் வடிவங்கள், துர்க்கா பூஜை மற்றும் நவராத்திரியின் சிறப்பு அம்சங்கள் ஆகியவை எளிய முறையில் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. ராகு காலம் என்றால் என்ன? வாரத்தில் ஒவ்வொரு நாளும் ராகு காலம் எப்போது என்பதை சுலபமாகத் தெரிந்து கொள்ளும் வழி என்ன? ராகு கால பூஜை செய்வது எப்படி என்பவையும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. மற்ற கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், […]

Read more

உபநிஷதச் சிந்தனைகள்

உபநிஷதச் சிந்தனைகள் – (ஐதரேயம், ப்ரச்னம், ப்ருஹதாரண்யகம், சாந்தோக்யம்) -சங்கரரின் சிந்தனைகளைத் தழுவியது- பகுதி-3; தொகுப்புரை: கே.எஸ்.சந்திரசேகரன், வி.மோகன்; சி.பி.ஆர். பப்ளிகேஷன்ஸ், நூற்று எட்டில் தசோபநிஷத் என்று பத்து உபநிஷத்துகள்தாம் ஆசார்யர்களால் பாஷ்யம் எழுதப்பட்டிருக்கின்றன. உபநிஷதச் சிந்தனைகள் மூன்றாம் பாகமான இந்நூலில் ரிக் வேதத்திலிருந்து ஐதரேயமும், அதர்வணத்திலிருந்து ப்ரச்னமும், சுக்ல யஜுரிலிருந்து ப்ரஹதாரண்யகமும், சாம வேதத்திலிருந்து சாந்தோக்கியமும் இடம்பெற்றுள்ளன. இந்த உபநிஷதங்களில் உள்ள மந்திரங்களின் விளக்கத்தை சிந்தனைகள் என்று நூலாசிரியர்கள் தொகுத்து வழங்கியிருப்பது தனிச்சிறப்பு. முதலிரண்டு நூல்களில் ஏனைய ஆறு உபநிஷதச் சிந்தனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. […]

Read more

சொல்லாய்வுகள்

சொல்லாய்வுகள்,  வய் .மு. கும்பலிங்கன்,  மணிவாசகர் பதிப்பகம், பக்.176, விலை ரூ.125. ஓரெழுத்து ஒரு மொழி, ஒரு பொருள் பன்மொழி, பல்பொருள் ஒரு மொழி என்பது தமிழ் மொழிக்கே உரிய தனிச்சிறப்பாகும். ஒரு சொல்லில் ஓர் ஒற்று இல்லையென்றால் அதன் பொருளே மாறிப் போய்விடும் அபாயம் தமிழில் உண்டு. அதேபோல, பொருள் மாறுபாடான- வேறுபாடான பல சொற்கள் தமிழில் உண்டு. அத்தகைய சொற்களின் பொருளை அறியாமலேயே அவற்றை நாம் அன்றாடம் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம் என்பது இந்நூலைப் படிக்கும்போது நன்கு விளங்குகிறது. அத்தகைய சொற்களை […]

Read more

ரசவாதி

ரசவாதி, பாலோ கொயலோ, தமிழில் – நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.248, விலை ரூ.225; உலகம் முழுவதும் 8.5 கோடி பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்த தி ஆல்கெமிஸ்ட் நூலின் தமிழாக்கம் இது. ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை நாம் உணர முடியும். சான்டியாகோ என்ற ஆடு மேய்க்கும் சிறுவன், யாருமே கண்டடைய முடியாத பொக்கிஷத்தைத் தேடி அலைகிறான். காடு, மலை, பாலைவனம் என பயணிக்கும் அவன், அவனுடைய வழியில் கண்ட காட்சிகளையும், அனுபவங்களையும் […]

Read more

இருதய நோய்களும் இன்றைய மருத்துவமும்

இருதய நோய்களும், இன்றைய மருத்துவமும், த.கோ.சாந்திநாதன், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்,  பக்.272. விலை ரூ.180. வெறும் உள்ளங்கை அளவு மட்டுமே உள்ள இதயம், உயிரைத் தாங்கிப் பிடிக்கும் உன்னத உறுப்பாக எப்படி விளங்குகிறது? என்பதை எளிமையான நடையில் விளக்கும் நூல் இது. பெரிய அளவிலான மருத்துவக் கலைச் சொற்களையோ, புரியாத நோய்களின் பெயர்களையோ எடுத்துரைக்காமல், சாமானிய வாசகர்களை கவனத்தில் கொண்டு நூலை எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. இதயத்தின் அடிப்படை செயல்பாடுகளில் ஆரம்பித்து இன்றைய காலகட்டத்தில் இருக்கும் அதி நவீன இதய மாற்று அறுவைச் சிகிச்சை […]

Read more

நான் உலகம் கடவுள்

நான் உலகம் கடவுள், அறிவியல்பூர்வமான ஆன்மிகத் தேடல், க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.102,  விலைரூ.120. நானும்-உலகமும் சேர்ந்ததுதான் கடவுள். கடவுள் நானாகவும் உலகமாகவும் இருக்கிறார். இது உபநிஷங்களில் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது என்ற அறிவியல்பூர்வமான ஆன்மிகத் தேடலை நான் உலகம் கடவுள் நூல் மூலம் விளக்கியுள்ளார் நூலாசிரியர். காலம்-இடம்-பொருள் எனும் மூன்றாலும் நான் அளவற்றவன். எது அளவற்றதோ, முடிவற்றதோ அதன் பெயர் அனந்தம். எது குறைவற்றதோ அதுவே ஆனந்தம். மனிதனிடம் உள்ள நான் எனும் அக உணர்வு அவனுக்குச் செயல் சுதந்திரத்தை வழங்குகிறது. அவனது […]

Read more

ரபியுல் அவ்வல் வசந்தம்

ரபியுல் அவ்வல் வசந்தம், ஹிஜ்ரா பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. உலகத்திற்கு இறைவனால் அருட்கொடையாக அனுப்பி வைக்கப்பட்டவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர்கள் பிறந்த மாதம் ரபியுல் அவ்வல். அவர்கள் பிறந்ததால் வசந்தம் வந்தது என்ற அடிப்படையில் இந்த நூலில், நபிகளாரின் புகழை கவிஞரும், எழுத்தாளருமான அபுஹாஷிமா அழகுற பாடியுள்ளார். மா நிலமெங்கும் மாநபியின் வாசம் மண்ணுக்கோ புத்தம் புது சுவாசம், நாயகமே நீங்கள் குர்ஆனின் விளக்கம், உங்கள் வாக்கும் வாழவும் அதனை விளக்கும் என்பன போன்ற நெஞ்சை அள்ளும் வரிகள். நன்றி: தினத்தந்தி, […]

Read more
1 6 7 8 9