நகரப் பாடகன்

நகரப் பாடகன், குமாரநந்தன், காலச்சுவடு பதிப்பகம், விலை 225ரூ. சிறு கதைக்குள் புதைந்திருக்கும் பெரும் வாழ்வு! எதன் மீதும் புகார்களற்றதும் கசப்பற்றதுமான பார்வைதான் குமாரநந்தனுடையது. வெளிச்சத்தில் தென்படும் இருட்டும், வெப்பத்தின் அடியிலுள்ள குளிர்மையும், உள்ளில் காணும் வெளியும் ஒன்றாக உணரப்படுகின்றன. எளிமையான கதைகள்போல தோற்றம் தரும் குமாரநந்தனின் சிறுகதைகள் ஒரு கதைக்குள் பல உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும் தன்மையுடையவை. அவரது கதையாடல்களில் யதார்த்தம், கனவுகள், அறிவியல், அமானுஷத் தருணம் போன்றவை பிரிக்க இயலாதவாறு இணைந்திருக்கின்றன. ஒவ்வொன்றோடும் வாழ்வின் பகுதிகள் தீர்க்கமாகப் புனைந்து காட்டப்பட்டுள்ளன. அதனாலேயே, ஒவ்வொரு […]

Read more

பாரதியார் பதில்கள் நூறு

பாரதியார் பதில்கள் நூறு, அவ்வை அருள், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம். மகாகவி பாரதியார் பற்றி நீண்ட கட்டுரையாக எழுதுவதைவிட பாரதியார் பற்றி 100 கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக பாரதியாரின் புகழைப்பாடி இருக்கும் இந்த நூல், நல்ல தகவல்களைத் தந்து இருப்பதுடன் படிக்க சுவையாக உள்ளது. பலவிமான பாடல்களைப் பாடிய பாரதியார், தாலாட்டுப் பாடல் மட்டும் பாடாதது ஏன்? பாரதியார பாடலைக் கேட்டபடி உயிர்நீத்த சுதந்திர போராட்ட வீரர் யார்? சக்திதாசன் என்ற புனைபெயரை பாரதியார் வைத்துக்கொண்டது ஏனு- […]

Read more

சித்த நூல் ரகசியங்கள்

சித்த நூல் ரகசியங்கள், எஸ். சந்திரசேகர், கற்பகம் புத்தகாலயம், விலை 140ரூ. சித்த நூல் ரகசியங்கள் ரிஷிவர்ஷா என்ற தேசம் தான் இப்போது ரஷியா என்று அழைக்கப்படுகிறது என்று கூறும் ஆசிரியர். இதே போல பல எடுத்துக்காட்டுகளைக் கூறி, பழங்காலத்தில் உலகம் முழுவதும் பாரத கண்டத்தோடு தான் இருந்தது என்பதையும் விளக்குகிறார். வானூர்தி, கப்பல் சாஸ்திரம் ஆகியவற்றை அந்தக் கால சித்தர்கள் அறிந்து இருந்தார்கள் என்றும் மாந்திரீக மற்றும் அட்டமா சித்திகளில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்றும் கூறும் ஆசிரியர், தனது கருத்து நம்ப முடியாததாகவும் […]

Read more

வெற்றி உங்களுடையதே

வெற்றி உங்களுடையதே, பி.வி.பட்டாபிராம், யுனிக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ், விலை 250ரூ. அனைத்துத் திறமையும் கொண்ட இளைஞர்களை கடுமையான கட்டுப்பாடில் வைத்து இருக்காமல், வாழ்க்கையின் மீத புரிதல், தைரியம், உலகை உற்சாகமாக எதிர்கொள்ளும் சக்தி ஆகியவற்றை வழங்குவதன் மலம் அவர்களை வாழ்க்கையின் வெற்றிப்படிகளுக்கு சுலபமாக அழைத்துச் செல்ல முடியும் என்பதை இந்த நூல் விளக்குகிறது. சுய பரிசோதனையாக பல கேள்விகளை அமைத்து அவற்றுக்கு தகுந்த விடை தந்து இருப்பது நல்ல வழிகாட்டியாக அமைந்து இருக்கிறது. பருவ வயதில் வரும் கேள்விகளுக்கான அறிவியல் ரீதியான பதில்கள், திக்கிப் […]

Read more

ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்

ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், ஜெயகாந்தன், தொகுப்பு: ஜெ.ஜெயசிம்மன், கா.எழில்முத்து, டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.300. தமிழ் சினிமா மாறியதும் மாறாததும் எழுத்து, சினிமா, பொது வாழ்க்கை எனக் கால்வைத்த அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்த அரிதான ஆளுமை ஜெயகாந்தன். அவரது சிறுகதைகள், நாவல்கள் அளவுக்கு சுவாரசியம் கொண்டவை அவரது கட்டுரைகள். அரசியல் அனுபவங்கள், பத்திரிகையுலக அனுபவங்கள் வரிசையில் எழுதிய ‘ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ இதுவரை வெளிவராத கட்டுரைகளுடன் தொகுக்கப்பட்டிருக்கிறது. வெறும் அனுபவங்கள் மட்டுமல்ல; தமிழ் சினிமாவின் சரித்திரம், அதன் கலாச்சாரம், […]

Read more

சுளுந்தீ

சுளுந்தீ, இரா.முத்துநாகு, ஆதி பதிப்பகம், பவித்திரம், விலை: ரூ.450 நெருப்பும், சக்கரமும் மனித குல நாகரிக வளர்ச்சியின் தொடக்கப் புள்ளிகள். நெருப்பைப் பூவுலகுக்குத் திருடிக்கொண்டு வந்துசேர்த்த பிரமிதியாக்கைக் கடவுளாகக் கொண்டாடியது கிரேக்க மரபு. கைக்குள் அடங்கும் தீப்பெட்டியிலிருந்து அது புறப்பட்டு, பிறகு ஒளிரும் மின்சாரமாகப் பரவிவிட்ட பின்னர், இன்றைய சூழலில் நெருப்பு பிரமிக்கத்தக்க வஸ்து அல்ல. ஒருகாலத்தில் எண்ணெய்த் துணி கொண்டு தயாரிக்கப்பட்ட தீவட்டி, வெளிச்சம் கொடுத்தது. தீவட்டிப் பயன்பாட்டுக்கு முன்னரே ‘சுளுந்து’ என்ற மரம் வெளிச்சம் தந்துள்ளது. சுடரும் நெருப்பான சுளுந்தீயைக் கொண்டு […]

Read more

மலை உச்சியில் மறுபிறப்பு

மலை உச்சியில் மறுபிறப்பு, அருனிமா சின்ஹா, தமிழில் ஆண்டாள் பிரியதர்ஷினி, விலை 140ரூ. ரெயில் பயணத்தின் போது, சங்கிலி திருடர்களுடன் போராடியதால் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு இடது காலை இழந்த அருனிமா சின்ஹா என்ற வீராங்கனை, சிகிச்சைக்குப் பிறகு ஊனமுற்ற காலுக்கு செயற்கை கால் பொருத்தி புது வாழ்வு பெற்றதோடு, அந்தக் காலுடன் இமயமலை சிகரம் ஏறி அதன் உச்சம் தொட்ட உண்மையான சாதனை வரலாறு. அவரது வார்த்தைகளால் மிகச் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை தொடர்பான புத்தகங்களுக்கெல்லாம் சிகரமாகத் திகழும் இந்த […]

Read more

அணிந்துரை அணிவகுப்பு

அணிந்துரை அணிவகுப்பு, இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 150ரூ. ஆன்மிகம், கவிதை, உரைநடை, பயணக் கட்டுரை என்பது போன்ற பலதரப்பட்ட தலைப்புகளில் வெளியான நூல்களில் முப்பது நூல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் தராதரத்தைப் பார்த்து மெச்சுவது போல, ஒவ்வொரு நூலுக்கும் அணிந்துரை வழங்கி அவற்றையே தனி புத்தகமாக வெளியிட்டு இருக்கும் முயற்சி புதுமையானதும் பாராட்டத்தக்கதும் ஆகும். ஒவ்வொரு நூலிலும் உள்ள சிறப்புகளைச் சுட்டிக்காட்டுவதோடு, அவை தொடர்பான மேற்கோள்களைப் பிற நூல்களில் இருந்தும் மற்ற எழுத்தாளர்களிடம் இருந்தும் தேடிப்பிடித்து அவற்றைப் பொருத்தமாக வழங்கி இருக்கிறார் ஆசிரியர். இந்த […]

Read more

தித்திக்கும் நினைவுகள்

தித்திக்கும் நினைவுகள், ஏ.ஆர்.எஸ்., ஏ.ஆர்.சினீவாசன் வெளியீடு, விலை 200ரூ. ஒரு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்துகொண்டே, சின்னத்திரை, வெள்ளித்திரை, நாடக மேடை ஆகியவற்றில் நடிகராக இருந்து பிரபலமான ஏ.ஆர்.எஸ். என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.சீனிவாசன், கலைத்துறையில் தன்னுடன் பணியாற்றியவர்கள் பற்றியும், அவர்களுடன் பழகிய 50 ஆண்டுகால அனுபவங்களையும் சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா, சோ, ஒய்.ஜி.பார்த்தசாரதி போன்ற பலருடன் கொண்டு இருந்த நட்பின்போது நடைபெற்ற ருசிகரமான நிகழ்வுகளை அவர் வெளியிட்டு இருக்கும் விதமும், கலைத்துறையில் சிலர் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களை அவர் தந்து […]

Read more

என்றும் எம்.ஜி.ஆர்.

என்றும் எம்.ஜி.ஆர்., புவனகிரி செயபாலன், விஜய் பதிப்பகம், விலை 200ரூ. மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க்கை பற்றியும் அவரது வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றியும் பல நூல்கள் வெளிவந்து இருந்தாலும், அவற்றில் இல்லாத பல புதிய செய்திகளை இந்த நூல் தருகிறது. எம்.ஜி.ஆருடன் பேசிப் பழகி, அவரது உணர்வுகளோடு ஒன்றி, அவரது வழி நடக்கும் 15 பேர்களை சந்தித்து, அவர்களின் அனுபவங்களைச் சொல்வதன் மூலம், எம்.ஜி.ஆர். தொடர்பான வியப்பான செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மிகச் சாதாரண நிலையில் இருந்த மு.கற்பகவிநாயகம், […]

Read more
1 4 5 6 7 8 9