விடை தேடும் வினாக்கள்

விடை தேடும் வினாக்கள், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், விலை 160ரூ. அன்றாட வாழ்வுக்குத் தேவையான அறிவுரைகள், ஆன்மிகக் கருத்துகள், சிந்தனையைத் தூண்டும் செய்திகள் போன்றவற்றை ஏராளமான கேள்விகளுக்குப் பதிலாக மிக நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர். அனைத்து கருத்துகளையும், ஆன்மிகப் பெரியோர்கள், பல அறிஞர்கள் ஆகியோரின் மேற்கோள்களுடன் தந்து இருப்பதால், அந்தக் கருத்துக்கள் அனைவரையும் கவரும் வண்ணம் திகழ்கின்றன. வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள் மற்றும் திருமூலரின் திருமந்திரம் உள்பட பல நூல்களின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டியும், ஆங்காங்கே ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான சிறுகதைகள் மூலமும் […]

Read more

சபரிமலை அய்யப்பன் வரலாறும் பக்தர்களுக்கான வழிகாட்டியும்

சபரிமலை அய்யப்பன் வரலாறும் பக்தர்களுக்கான வழிகாட்டியும், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 330ரூ. பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பால் சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் பரபரப்பான பேசுபொருளாக ஆகி இருக்கும் நிலையில், அந்தப் பிரச்சினையை சமநிலையில் இருந்து நோக்கும் வகையிலான தகவல் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது. அய்யப்பனின் விரிவான வரலாறு, ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய விரதம், கோவிலில் விரைவான தரிசனத்திற்கும் தங்கும் வசதிக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்வத எப்படி என்ற தகவல், கோவிலுக்குச் செல்வதற்கான வழிகள், […]

Read more

மகத்தான பேருரைகள்

மகத்தான பேருரைகள், பெ.சுபாசு சந்திரபோசு, அன்னம், பக்.240, விலை ரூ.200. தத்துவஞானிகள், அரசியல் சிந்தனையாளர்கள், பகுத்தறிவுவாதிகள், எழுத்தாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள், சமயவாதிகள், அரசியல் மேதைகள், சட்ட வல்லுநர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் என 25 ஆளுமைகள் ஆற்றிய மகத்தான பேருரைகளின் தொகுப்பு இந்நூல். இந்த சிறைவாசத்தைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை. என்னை தண்டியுங்கள். அது எனக்குப் பொருட்டல்ல. வரலாறு என்னை விடுதலை செய்யும் இது கியூபாவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்து 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிடல் காஸ்ட்ரோவின் வீர […]

Read more

ஷேடோ ஆர்மீஸ்: ஃபிரின்ஜ் ஆர்கனைசேஷன்ஸ் அண்ட் புட் சோல்ஜர்ஸ் ஆப் இந்துத்துவா

ஷேடோ ஆர்மீஸ்: ஃபிரின்ஜ் ஆர்கனைசேஷன்ஸ் அண்ட் புட் சோல்ஜர்ஸ் ஆப் இந்துத்துவா, திரேந்திர கே., ஜாகர்னாட், விலை: ரூ.499   இந்துத்துவா தத்துவத்தைப் பரப்புவதற்காக 1925-ல் தொடங்கப்பட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு, அதன் அரசியல் பிரிவாக உருவெடுத்த இந்து மகாசபா, ஜனசங்கம், பாஜக போன்றவற்றின் வளர்ச்சிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த அமைப்புகள் எவ்வாறு உதவின என்ற வரலாற்றைக் கூறும் நூல் இது. சனாதன் சன்ஸ்தா, பஜ்ரங் தள், இந்து யுவ வாஹினி, அபிநவ பாரத், ஸ்ரீராம் சேனை, ராஷ்ட்ரீய சீக்கிய சங்கட், இந்து ஐக்கிய வேதி, போன்ஸ்லே […]

Read more

பாதுஷா என்ற கால்நடையாளன்

பாதுஷா என்ற கால்நடையாளன், உண்ணி.ஆர், தமிழில்: சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.175. இளம் தலைமுறை மலையாள எழுத்தாளர்களில் ஒருவரான உண்ணி.ஆரின் சிறுகதைத் தொகுப்பு இது. இதிலுள்ள கதைகள், அதிகபட்சம் நான்கைந்து பக்கங்களே வருகின்றன. அதற்குள் வாழ்க்கையின் பலவித அம்சங்களை, மனத்தின் வினோதங்களைச் சித்திரிக்க முயல்கின்றன. மரியா என்னும் நோயுற்ற சிறுமியை மையமாகக் கொண்டு சொல்லப்பட்டுள்ள ‘மூன்று பயணிகள்’, இழப்பின் துயரத்துக்கு அருகில் நம்மை நிறுத்துகிறது. சில மணி நேரங்கள் முன்பு கடற்கரையில் காலாற நடந்துவந்த பாதுஷா, வெளிச்சம் வராத சிறைக்கூடத்தில் அகப்பட்டுக்கிடக்கும் துயரத்தை […]

Read more

பிரமிளும் விசிறி சாமியாரும்

பிரமிளும் விசிறி சாமியாரும், அழகியசிங்கர், விருட்சம் வெளியீடு, விலை 90ரூ. ‘பிரமிளும் விசிறிச் சாமியாரும்’ என்ற பெயரைப் பெரிய திட்டத்துடன் அழகியசிங்கர் வைத்திருக்க முடியாது. பிரமிள், தமிழில் சில ஆயிரம் இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகமானவர். விசிறிச் சாமியாரோ மிகவும் பிரபலம். தனக்கு ஆதர்ச குருவான விசிறி சாமியாரைப் பார்ப்பதற்காக அழகியசிங்கரையும் பிரமிள் கூட்டிச்சென்றது பற்றி இப்புத்தகத்தில் ஒரு கட்டுரை உள்ளது. மற்றவை எல்லாம் பிரமிள் என்ற தமிழின் பெரும் ஆளுமையான கவிஞனின் தினசரித் தன்மைகளை, கோபதாபங்களை, அல்லல்களை, கொண்டிருந்த நம்பிக்கைகளை விவரிப்பதாக உள்ளது. ஒரு […]

Read more

எங்க ஊரு வாசம்

எங்க ஊரு வாசம், பாரததேவி, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை ரூ.130. கரிசல் எழுத்தாளர் கி.ராவுடன் இணைந்து நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்தவர் பாரததேவி. இந்து தமிழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. வீட்டுப் பெரியவர்கள் கதை சொல்வதுபோல மனதுக்கு நெருக்கமான வார்த்தைகளால் கிராம வாழ்க்கையை விவரிக்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும் நம்மைக் கிராமத்துக்கே அழைத்துச்செல்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 27/4/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more
1 7 8 9