தி கோமின்டர்ன் அண்ட் ஏர்லி இந்தியன் கம்யூனிசம்: 1921-1928

தி கோமின்டர்ன் அண்ட் ஏர்லி இந்தியன் கம்யூனிசம்: 1921-1928, பாஞ்சாலி மஜும்தார், டுவார்ட்ஸ் ஃப்ரீடம் வெளியீடு, விலை: ரூ.295 இந்திய விடுதலைப் போராட்டம் முகிழ்விடத் தொடங்கிய நேரத்தில், ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் சோஷலிசக் கருத்துகளும் இங்கே வேர்விடத் தொடங்கின. லெனின் தலைமை விவாதங்களில் வெளிநாடுகளில் வசித்த இந்திய இளைஞர்கள் பலரும் பங்கேற்றனர். சமூக விடுதலைக்கு முன்பாக காலனி ஆதிக்கத்திடமிருந்து விடுபட வேண்டும் என்றார் லெனின். அதற்கிணங்க எம்.என்.ராய் உள்ளிட்டோர் பம்பாயில் டாங்கே, சென்னையில் சிங்காரவேலர், கல்கத்தாவில் முசாஃபர் அகமது என இந்திய மண்ணில் சோஷலிசக் […]

Read more

டிஜிட்டல் போதை

டிஜிட்டல் போதை, வினோத் ஆறுமுகம், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.140 பாதுகாப்பான இணையம் பழகுவோம் இணையம் குறித்த புரிதலும் விழிப்புணர்வும் இளைய தலைமுறைக்கு வேண்டும் என்று நோக்கத்தில் இந்து தமிழின் ‘நலம் வாழ’ இணைப்பிதழில் தொடராக வந்த கட்டுரைகள் இவை. இணையத்தில் உள்ள விளையாட்டுகள், சமூக வலைதளங்கள், அதனால் ஏற்படும் சாதக – பாதகங்கள் போன்றவற்றை விளக்குகிறார் வினோத். நமது பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு உண்மையிலேயே உதவும் சில தளங்களையும் அறிமுகப்படுத்துகிறார். நன்றி: தமிழ் இந்து, 11/5/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

நாகரிகங்களின் மோதல்

நாகரிகங்களின் மோதல், உலக ஒழுங்கின் மறுஆக்கம், சாமுவேல் பி.ஹண்டிங்டன், தமிழில்: க. பூரணச்சந்திரன், அடையாளம் பதிப்பகம், விலை 540ரூ. அதிகாரத்திற்கும் கலாச்சாரத்திற்குமான உறவு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, முதலாளித்துவம் – கம்யூனிஸம் இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. போட்டிக்கு ஆளில்லாத நிலையில் முதலாளித்துவம் தன்னைப் பெருமுதலாளித்துவமாக வளர்த்துக்கொண்டு நிற்கிறது. ஆனாலும், பனிப்போர் காலகட்டத்தின் பதற்றமும் பகைமை உணர்ச்சிகளும் இன்னும் மறைந்துவிடவில்லை. பொருளாதாரக் கோட்பாடுகளின் இடத்தில் மத அடிப்படையிலான கலாச்சாரம் தன்னைப் பொருத்திக்கொண்டு உலக அமைதிக்கு ஊறு விளைவிக்குமோ என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. 1993-ல் […]

Read more

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (தீர்வுக்கான வழிமுறைகளும்), சி.எஸ்.தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.200, விலை ரூ.180. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், இளம் பெண்களின் பாதுகாப்பு, சமூக வலைத்தளத்தின் மூலம் ஏற்படும் குற்றங்கள், வரதட்சணைக் கொடுமை, சிசுக் கொலை, பணியிடங்களில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் போன்ற அனைத்தையும் அலசி ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் மட்டும் அல்லாமல் சமுதாய முன்னேற்றத்தை விரும்பும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இதில் அடங்கி உள்ளன. நன்றி: தினத்தந்தி, 6-3-19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள்

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் (இருபது தொகுதிகள்), பதிப்பாசிரியர் ந.முத்துமோகன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், விலை 5000ரூ- பொருள்முதல்வாதத்துக்கும் சமதர்மக் கொள்கைக்கும் விஞ்ஞானபூர்வமான விளக்கம் கொடுத்தவர்கள் மார்க்ஸும் எங்கெல்ஸும். ஆனால், அவர்களின் எழுத்துகளை விளக்கக் குறிப்புகள் இல்லாமல் ஆரம்பநிலை வாசகர்களால் உட்செரிக்க இயலாது. அதனால்தான், இன்றும் மார்க்ஸியத்துக்கு ஏகப்பட்ட அறிமுக நூல்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. மார்க்ஸிய மூலவர்களின் நூல்களை வாசிப்பது அதற்கு அடுத்தக் கட்டம். மாஸ்கோவிலிருந்து முன்னேற்றப் பதிப்பகம் 1989-ல் மார்க்ஸ், எங்கெல்ஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகளை 12 தொகுதிகளாக வெளியிட்டது. அத்தொகுதிகளை விரிவுபடுத்தியும் […]

Read more

ஆண் நன்று பெண் இனிது

ஆண் நன்று பெண் இனிது, சக்திஜோதி, இந்து தமிழ் திசை, விலை 150ரூ. தன்னைக் கவர்ந்த நபர்களைப் பற்றியும், உறவு பற்றிய புரிதலை உணர்த்தும் விதமாகத் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் கட்டுரைகளாக நினைவுகூர்கிறார் கவிஞர் சக்திஜோதி. அன்பின் பொருட்டு குடும்ப வாழ்க்கையில் அனைத்து வலிகளையும் பொறுத்துக்கொள்ளும் பெண்ணின் சகிப்புத்தன்மையையும் அன்பையும் வெளிப்படுத்தும் கட்டுரைகள் நன்றி: தமிழ் இந்து, 4/5/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வாழ்வும் மொழியும்

வாழ்வும் மொழியும், ஜே.ஆர்.இலட்சுமி, மதன்மோனிகா பதிப்பகம், விலை 200ரூ. ஜவ்வாது மலைவாழ்வின் ஆவணம், செஞ்சி நாயக்கர் வரலாறு, தாராசுரம் ஐராவதீச்சுரம் சிற்பங்கள், ஆனைமலைக் காடர்கள், வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என வாழ்க்கைமுறை சார்ந்த கள ஆய்வுகளையும், இலக்கியங்கள் மற்றும் சமூக வரலாற்று நூல்களில் மேற்கொண்ட ஆய்வுகளையும் ஆவணப்படுத்திவருகிறார் ஜே.ஆர்.இலட்சுமி. இந்தப் புத்தகத்தில் ஜவ்வாது மலைவாழ் மலையாளப் பழங்குடிகளின் வாழ்க்கை முறை, நில அமைப்பு, அவர்களின் கலைப் பங்களிப்பு, மொழிநடை உள்ளிட்ட விஷயங்களை விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். ஒவ்வொரு சொற்களையும் இங்குள்ளவர்கள் எப்படி உச்சரிக்கிறார்கள் என்பது […]

Read more

வாடாமல்லி

வாடாமல்லி, சு.சமுத்திரம், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 280ரூ. அமரர் ஆதித்தனாரின் இலக்கிய விருது பெற்ற இந்த நாவலின் கரு, மற்ற எழுத்தாளர்கள் கையாளத் தயங்கும் அரவாணிகள் பற்றியது ஆகும். அரவாணிகள் பலரை நேரில் சந்தித்து, அவர்களின் சோகக் கதைகளை கேட்டறிந்த ஆசிரியர், அவற்றின் மூலம் அரவாணிகள் தொடர்பான அத்தனை அம்சங்களையும் இந்த நூலில் தந்து இருக்கிறார். ஆணாகப் பிறந்து பின்னர் பெண்ணாக மாறிய சுயம்புவின் மன உளைச்சல்கள், சமுதாயத்தில் அவர் எதிர்கொண்ட அடி, உதைகள், அவமானங்கள் எல்லாம், வேதனை தோய்ந்த வார்த்தைகளில், கண்களில் கண்ணீர் […]

Read more

சிற்பியின் படைப்புத்தளம்

சிற்பியின் படைப்புத்தளம், தே.ஞானசேகரன், காவ்யா, விலை 450ரூ. கவிதை உலகில் தனியிடம் பெற்றவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் சிற்பி படைத்த கவிதைகளின் ஆய்வு நூலாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. ஏற்கனவே வெளிவந்த சிற்பிபின் படைப்புக்கலை, சிற்பி மரபும் புதுமையும் ஆகிய இரண்டு நூல்களையும் தொகுத்து ஒரே நூலாக இது வெளியிடப்பட்டு இருக்கிறது. மண் சார்ந்த கற்பனைகளுடனும், மக்கள் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையிலும் சிற்பி எழுதிய கவிதைகளை திறனாய்வு செய்து பல எழுத்தாளர்கள், அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் இலக்கியத் தரத்துடன் மிளிர்கின்றன. […]

Read more

நாரணோ ஜெயராமன் கவிதைகள்

நாரணோ ஜெயராமன் கவிதைகள், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 150ரூ. வேலி மீறிய கிளை’ கவிதைத் தொகுதி வழியாகச் சிறந்த கவிஞராக அடையாளம் காணப்பட்டவர். அன்றாட வாழ்வின் செக்குமாட்டுத் தன்மை, பழக்கங்களின் சுமைகளிலிருந்து விடுபட்டுப் பறக்க எண்ணிய வலுவான நவீனத்துவக் குரல்களில் ஒன்று இவருடையது. ஜே.கிருஷ்ணமூர்த்தியில் உந்துதல் பெற்ற புதுக்கவிஞர். ‘ஒதுங்கி நின்று, அலட்சியமும், நெளிவும், புலனுலகை அது உள்ளபடியே துணிந்து, பரிந்து கண்கொண்டு அனுபவிக்கும் விவேகமும், அந்த விவேகத்தைப் பேச்சமைதி சார்ந்த ஒரு சரஸமொழியில் வெளியிடும் விசேஷத்தன்மையும் நாரணோ ஜெயராமனுடையவை’ என்று பிரமிள் […]

Read more
1 5 6 7 8 9