எங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்

எங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள், சி.எஸ்.தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 192, விலை 175ரூ. நீண்டதாகப் பலரும் கருதும் இந்த வாழ்க்கை உண்மையில் மிகவும் சிறியது. கண் மூடி இமைப்பதற்குள் காலம் பறந்து விடுகிறது. இதை உணர்ந்தோர் வாழ்க்கையில் எதையேனும் சாதிக்க வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். பலர் இலக்குகள் இன்றி, கிடைத்த வாழ்க்கையில் சமரசமாகி நீர்த்து விடுகின்றனர். வாழ்க்கையின் இடையில் வரும் ஒவ்வொரு சவாலான கட்டத்திலும் வெல்வதற்கு முயல்வதே ஊக்கமுள்ளோரின் இலக்கு. எங்கும் எதிலும் எப்போதுமே நேர்மையோடு முதன்மையாக நிற்க […]

Read more

மகாபாரதமும் மாயக் கண்ணனும்

மகாபாரதமும் மாயக் கண்ணனும், இரா.ஜீவரத்தினம், கைத்தடி பதிப்பகம், பக்.114, விலை 120ரூ. இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் கோகுல கிருஷ்ணனின் ஆளுமை மிகுந்து காணப்படும். இதில் பலவித மாயங்களைப் புரிந்து, எல்லாரின் மனதிலும் எப்போதும் நீக்கமற நிறைந்திருப்பவன் மாயக் கண்ணன். பாரதக் கதையின் மீது நாட்டம் கொண்ட ஜீவரத்தினம், வியாச பாரதம் மற்றும் வில்லிபுத்துாரார் பாரதம் முதலியவற்றில் உள்ள நிகழ்ச்சிகளை தொகுத்து, வாசர்களின் பாராட்டைப் பெறுகிறார். – மாசிலா இராஜகுரு நன்றி: தினமலர், 5/5/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027995.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

ஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை

ஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை, வண்ணைத் தெய்வம், மணிமேகலை பிரசுரம், பக். 272, விலை 170ரூ. இலங்கை மண்ணைவிட்டு பிரான்சிற்கு புலம் பெயர்ந்த எழுத்தாளரான வண்ணைத் தெய்வத்தின் பதிமூன்றாவது புத்தகம் இந்தச் சிறுகதைத் தொகுதி. அகரம் என்ற இதழில், 26 சிறுகதைகளையும், 12 குட்டிக் கதைகளையும் தொகுத்திருக்கின்றனர். மண்ணைவிட்டு புலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தன் மண்வாசனையை மறக்காமல் மனதோடு சுமந்து வாழ்பவர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் வகையில் பதிவு செய்திருக்கிறார். சிறுகதைகளில் வரும் எழுத்துக்கள் மிக எளிமையானதாக இருக்கிறது; கருத்தளவில் ஆழமானதாக இருக்கிறது. நன்றி: தினமலர், […]

Read more

மண்ணும் மனிதரும்

மண்ணும் மனிதரும், டி.பி. சித்தலிங்கையா, சாகித்திய அகாடமி, பக். 648, விலை 485ரூ. கன்னட இலக்கியத்தின் கலங்கரை விளக்கம் என போற்றப்படும் சிவராம காரந்த் எழுதிய மூன்று தலைமுறைகளின் கதைதான் மண்ணும் மனிதரும். சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். மனித வாழ்க்கையில் இயற்கையின் பங்கு மற்றும் சுற்றுச்சூழலியல் பங்கு பற்றி சிந்தித்து, தொலைநோக்குப் பார்வையோடு முன் நகர்த்தும் முன்னோடி இவர். ஒரு கடலோர கிராமத்தில், பரம்பரையாக வாழ்ந்து வரும் வேளாண்மைக் குடும்பத்தில், நவீன நாகரிகம் குறுக்கிடுகிறது. மகன் நிலத்தை விற்று நகரத்துக்குச் சென்று […]

Read more

சேப்பியன்ஸ்

சேப்பியன்ஸ், யுவால் நோவா ஹராரி, தமிழில் நாகலட்சு சண்முகம், மஞ்சுள் ப்பளிஷிங் அவுஸ், பக். 499, விலை 499ரூ. பிரபஞ்சத்தோற்றம், பூமி உருவாதல், உயிரினங்களின் தோற்றம் என 1,350 கோடி ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாற்றை விளக்கி வியக்க வைக்கிறது இந்த நூல். கோடானு கோடி உயிர் இனங்களில் ஒன்றாகவும், அரை குறை ஆடையுடனும், பரட்டைத் தலையுடனும், காய் கனிகளைப் பொறுக்கிக்கொண்டும், எதிர்ப்பட்ட விலங்குகளை வேட்டையாடி, திரிந்து கொண்டிருந்த மனித இனம், படிப்படியாக மாறி, இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற ஓர் இனமாக மாறி […]

Read more

பகவான் புத்தர்

பகவான் புத்தர், தர்மானந்த கோஸம்பி, கா.ஸ்ரீ.ஸ்ரீ., சாகித்திய அகாதெமி, பக். 334, விலை 270ரூ. உலகத்தின் உயர்நிலைச் சிந்தனையாளர்களின் கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர் பகவான் புத்தர். அரச வாழ்க்கையைத் துறந்து, மனித வாழ்வின் துன்பங்களை நீக்கும் வழியைக் காண முற்பட்டு அதில் வெற்றி கண்டவர். அவருடைய அறவழிகள் ஜப்பான், சீனா, தாய்லாந்து மற்றும் பிற கிழக்காசிய நாடுகளில் பரவின. புத்தர் பெருமானின் இந்தச் சரித்திரம் பலவகை நோக்கத்தால் மூலநுாலாக விளங்குகிறது.அதை, தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார் கா.ஸ்ரீ.ஸ்ரீ.தங்கு தடையற்ற சரளமான மொழியாக்கம், அறுபது ஆண்டுகளுக்குப்பின் மறுபதிப்பு […]

Read more

திரிசங்கு நரகம்

திரிசங்கு நரகம், இரா. ஜெயப்பிரகாசம், பொற்செல்வி பதிப்பகம், பக். 112, விலை 100ரூ. செவி வழி செய்தி எப்படி இனிமை சேர்க்கிறதோ, அதேபோல் கடல் கடந்து ஆகாய வழியில் அயல்நாடு பயணம் செய்து, மறக்க முடியாத நினைவுகளை பகிர்வது புதுமை சேர்க்கிறது. ஆங்கிலம் என் தாய்மொழி அல்ல; அது தெரிந்தும் இம்மொழி பேச மாட்டேன் எனச் சபதமிட்டு, பயணத்தின் போது உடல் நலிவுற்று, பாரிஸ் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களிடம் நேர்ந்த மருத்துவமனை அனுபவங்களின் தொகுப்பு இந்நுால். நன்றி: தினமலர், […]

Read more

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி, சத்திய சோதனையில் ஒளிர்ந்த அகிம்சையின் திருவுரு – இராம் பொன்னு, சர்வோதய இலக்கியப் பண்ணை, பக்.480, விலை ரூ.250. வரலாற்றுப் பேராசிரியராக- கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலாசிரியர், மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் எழுதியுள்ளார். காந்தியின் பிறப்பு, கல்வி, சட்டக் கல்லூரியில் படிப்பதற்காக லண்டன் சென்றது, படிப்பு முடித்து இந்தியா திரும்பி வந்து பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டது, இந்திய நிறுவனம் ஒன்றிற்காக வழக்குரைஞராகப் பணி செய்ய தென்னாப்பிரிக்கா சென்றது, நேட்டாலில் நீதிமன்றத்தில் காந்தி […]

Read more

ஸ்ரீபாஷ்யம்

ஸ்ரீபாஷ்யம், ராமாநுஜரின் பிரம்மசூத்திர விளக்கவுரை,  ஸ்வாமி,  ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக்.752, விலை ரூ.600. பிரம்மசூத்ரம் என்கிற நூலை பாதராயணர் தொகுத்தது என்று கூறும் மரபு உள்ளது. வேத வியாசர் அருளியதே பிரம்ம சூத்ரம்; ஸ்ரீமந் நாராயணனே வியாசராக அவதரித்து பிரம்மசூத்ரத்தை அருளிச் செய்தார் என்றும் கூறப்படுகிறது. வேத-உபநிஷத்துக்கள் என்னும் ஞானப் பாற்கடலைக் கடைந்து பிரம்ம சூத்ரம் என்கிற அமிருதத்தைப் பெற்று, வியாசர் நமக்களித்தார் என்போர் உளர். ராமாநுஜரின் பிரம்ம சூத்ர உரை ஸ்ரீபாஷ்யம் என்று அறியப்படுகிறது. சரஸ்வதி தேவியே ராமாநுஜரின் உரைக்கு ஸ்ரீபாஷ்யம் […]

Read more

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு, டாக்டர் எச்.வி.ஹண்டே, வசந்தா பதிப்பகம், பக்.120. விலை ரூ.300. மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழும் வரம் வெகு சிலருக்கே வசப்படும். அதில் எம்ஜிஆருக்கு தனியிடம் உண்டு. எம்ஜிஆர் உடல் நலிவுற்று அதிலிருந்து மீண்டதில் தொடங்கி, சில காலத்துக்குப் பிறகு அவர் மரணம் அடைந்தது வரைக்கும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கிப் பழகியவரும், அவரது அமைச்சரவையில் சுகாதாரத் துறை இலாகாவை வகித்தவருமான மூத்த அரசியல் தலைவர் எச்.வி.ஹண்டேவால் எழுதப்பட்டது இப்புத்தகம் என்பது கூடுதல் சிறப்பு. எனவே, அதில் […]

Read more
1 3 4 5 6 7 9