மகத்தான பேரூரைகள்

மகத்தான பேரூரைகள், பெ.சுபாசு சந்திரபோசு, அன்னம், பக். 240, விலை 200ரூ பேச்சு என்பது உலக அளவில் ஒரு கலையாக உருவான போது, ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி, அரசியல், புரட்சி, சமயம், நீதி போன்ற துறைகளில் மாற்றங்களை உருவாக்க, மகத்தான பேச்சாளர்கள் உலக அளவில் உருவாகினர். உலக அளவில் மகத்தான பேருரைகள் ஆற்றிய தத்துவ ஞானிகள், அரசியல் சிந்தனையாளர்கள், பகுத்தறிவுவாதிகள், எழுத்தாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள், சமயவாதிகள், அரசியல் மேதைகள், சட்ட வல்லுனர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் என, 25 நபர்களின் பேருரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. […]

Read more

கீரைகளும் மருத்துவப் பயன்களும்

கீரைகளும் மருத்துவப் பயன்களும், டாக்டர் மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 112, விலை 90ரூ. ஆதி காலம் முதல் இன்று வரை, கீரை வகைகளுக்கு என்றென்றும் சிறப்பிடம் உண்டு. கீரை இல்லாமல் மதிய உணவு இல்லை. மனித உடலில் ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதில், மூலிகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அவற்றில், கீரைகளின் பங்கு மிக முக்கியமானது என, முன்னோராகிய மூதாதையர் சொல்வர். சமையலறையில் கீரைகளின் பயன்பாடு, அவற்றின் மருத்துவ குணம், அதைப் பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்து, நுாலாசிரியரும், மருத்துவருமான மானக்சா கூறியுள்ளது […]

Read more

திருக்கயிலாய தரிசனம்

திருக்கயிலாய தரிசனம் (பயண அனுபவங்கள்), டி.கே.எஸ்.கலைவாணன்,  வானதி பதிப்பகம், பக்.176, விலை ரூ.125. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்&amp என்ற திருமூலரின் வாக்கின்படி நூலாசிரியர் தாம் 2010-ஆம் ஆண்டில் மேற்கொண்ட திருக்கயிலாய யாத்திரையை இந்நூலில் பயணக் கட்டுரையாகப் படைத்துள்ளார். திருக்கயிலாயத்துக்குச் சென்று வர மனப்பக்குவமும், உறுதியும் வேண்டும். அத்துடன் இறை அருளும் தேவை என்பதை அவர் நூலில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசு நடத்தும் கயிலாய யாத்திரை குழுவில் பங்கேற்பது எப்படி? என்பது குறித்தும், தனியார் அழைத்துச் செல்லும் யாத்திரை குழுவில் […]

Read more

மகாத்மா ஜோதிராவ் புலே

மகாத்மா ஜோதிராவ் புலே, க.ஜெயச்சந்திரன், காவ்யா, பக்.88, விலை ரூ.90. மகாராஷ்டிராவில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியவர் ஜோதிராவ் புலே. 1827 இல் பிறந்த அவர், அனைத்துச் சாதியிலும் உள்ள ஆண்களும், பெண்களும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக 170 ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிகளைத் திறந்து நடத்தியவர். அதற்காக அவருடைய தந்தை அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார் என்றபோதிலும் மனம் கலங்காமல் தொடர்ந்து தனது பாதையில் நடைபோட்டவர். விதவைப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார். விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் […]

Read more

நீரிழிவு நோய் இருந்தாலும்…

நீரிழிவு நோய் இருந்தாலும்… இயல்பான வாழ்க்கை வாழலாம், லயன் எம். சீனிவாசன், கற்பகம் புத்தகாலயம், பக்.160, விலை ரூ.120. அடுத்த 10 ஆண்டுகளில் சர்க்கரை நோயாளிகளின் தலைமையகம் என்ற நிலையை இந்தியா எட்டிவிடும் என மருத்துவத்துறையின் புள்ளிவிவரங்கள் எச்சரித்துள்ளன. சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால் அதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கமுடியும் எனும் நூலாசிரியரின் முன்னுரையுடன் தொடங்கும் இந்த நூல், சர்க்கரை நோயாளிகளுக்கு பயனளிக்கக்கூடிய விழிப்புணர்வு வழிகாட்டி எனலாம். குறிப்பாக, சில கற்பனை கருத்துகளும், உண்மையும் என்ற பகுதி புதுமையானது. சர்க்கரை நோய் வந்தால் அதைக் கட்டுப்படுத்தக்கூடிய […]

Read more

சர்வதேச தினங்கள்

சர்வதேச தினங்கள், ஏற்காடு இளங்கோ, யுனிக் மீடியா இன்டகரேட்டர்ஸ், பக்.388, விலை ரூ.300. உலகமயமாகி வரும் இந்நாளில் உலக அளவிலான பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் சில உள்ளூர் அளவில் மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடப்படும் அதேசமயம், அவற்றுக்கு எதிர்ப்பும் கூட எழுகிறது. உதாரணம், உலக காதலர் தினம். இந்நூல் நமக்கு ஏற்கெனவே அறிமுகமான உலக தொழிலாளர் தினம், அன்னையர் தினம், பெண்கள் தினம், முட்டாள்கள் தினம், உலக புத்தக தினம் போன்றவற்றைப் பற்றிய விவரங்களைத் தருகிறது. அதுமட்டுமல்லாமல் இதுவரை பலரும் கேள்விப்படாத உலக ஈரநிலங்கள் தினம், […]

Read more

ஞானியின் சமதர்மப் படைப்பாளுமை

ஞானியின் சமதர்மப் படைப்பாளுமை,  இரா.அறவேந்தன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.36, விலை  ரூ.30. சமகால உலகின் நிகழ்வுகளை, அவற்றிற்கு அடிப்படையாக அமைந்தவற்றைப் புரிந்து கொள்வதிலும், விளக்குவதிலும் பலவிதமான பார்வைகள், கோணங்கள் இருக்கின்றன. கோவை ஞானியின் பார்வையை விளக்கும் சமதர்மப் படைப்பாளுமை, பெரியாரியம், சமதர்மப் பேருணர்வு எனும் இறையுணர்வு ஆகிய மூன்று கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்திருக்கிறது. ஞானியின் பல நூல்களிலிருந்து பல கருத்துகளை நூலாசிரியர் ஆராய்ந்து ஞானியின் மெய்யியல் சிந்தனை பற்றிய தனது கருத்துகளை இக்கட்டுரைகளில் முன் வைத்திருக்கிறார். மார்க்சியம், […]

Read more

ஹைக்கூ புதிது

ஹைக்கூ புதிது (ஹைக்கூ நூற்றாண்டின் கையேடு),  நெல்லை சு.முத்து, பக்.240, விலை ரூ.220. ன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11. ஹைக்கூ பற்றித் தெரிந்து கொள்ள பயன்படும் நூல். நூலாசிரியர் புகழ்பெற்ற அறிவியலாளர். ஹைக்கூ பற்றிய நூலிலும் அவருடைய அறிவியல்சார்ந்த அணுகுமுறை வெளிப்படுகிறது. விவரங்களைப் பரிசீலனை செய்து முடிவுக்கு வருதல் அறிவியல் அணுகுமுறை. ஹைக்கூ பற்றிய இந்நூலிலும் ஹைக்கூ சார்ந்த பல விவரங்கள் கூறப்பட்டுள்ளன. சுமார் 274 ஹைக்கூ கவிஞர்கள் உள்ளனர்; 26 ஹைக்கூ இதழ்கள் உள்ளன; ஹைக்கூ எழுதுபவர்களைக் […]

Read more

தொழில் தொடங்கலாம் வாங்க!

தொழில் தொடங்கலாம் வாங்க!, ஆர்.கார்த்திகேயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.150 முதலீட்டுக்குப் பணம் இருந்திருந்தால், கைவசம் இருக்கும் ஐடியாவுக்கு முதலீட்டாளர் கிடைத்திருந்தால், திறமையான கூட்டாளி கிடைத்திருந்தால் தொழில் தொடங்கி இருக்கலாம் என ஏக்கப் பெருமூச்சு விடுபவர்களுக்குப் புதிய வெளிச்சம் காட்டும் வகையில் இந்து தமிழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்த கார்த்திகேயனின் கட்டுரைகளின் புத்தக வடிவம் இது. நன்றி: தமிழ் இந்து, 18/5/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

மார்க்சியம் என்றால் என்ன

மார்க்சியம் என்றால் என்ன, சு.பொ.அகத்தியலிங்கம், பாரதி புத்தகாலயம், விலை 120ரூ. திரைப்பாடல்கள் வழியே மார்க்ஸியம் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றுடன் தொடங்கும் அறிமுகம், சித்தாந்தங்களைப் பயில வேண்டியதன் அவசியத்தைத் திரைப்படப் பாடல் வரிகளை எடுத்துக்காட்டி எளிமையாக விளக்குகிறது. இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் சங்கப் பாடல்கள், பாரதியார் பாடல்களின் துணையோடு விளக்குகிறது. இந்திய தத்துவ ஞானத்தை மேற்கத்திய தத்துவ முறைமைகளுடன் ஒப்பிட்டுப் பேசுகிறது. மனித வரலாறு என்பது உற்பத்தி முறையோடு நெருங்கிப் பிணைந்தது. ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்திலிருந்து காலம்தோறுமான உற்பத்தி அமைப்புகளை விவரித்து மனித சமுதாயம் […]

Read more
1 2 3 4 5 9