கிறுக்கு ராஜாக்களின் கதை

கிறுக்கு ராஜாக்களின் கதை – சரித்திரக் கிறுக்கர்கள் முதல் சமகாலச் சர்வாதிகாரிகள் வரை,  முகில், விகடன் பிரசுரம்,  பக்.264, விலை ரூ.190 எல்லாருக்கும் தெரிந்த சர்வாதிகளான ஹிட்லர், முசோலினியை விட மிகக் கொடூரமானவர்களாக உலகில் பல சர்வாதிகாரிகள் இருந்திருக்கின்றனர். அவர்களில் 21 சர்வாதிகாரிகளின் கதை இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 3800 ஆண்டுகளுக்கு முன் பாபிலோனியாவை ஆண்ட ஹம்முராபியின் காலத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனை உண்டு. இல்லையென்றால் குற்றம் சுமத்தியவனுக்கு மரணதண்டனை இருந்திருக்கிறது. கி.பி.1547 இல் ரஷ்யாவில் கிரெம்ளின் மாளிகைக்கு மேற்கே அர்பாட் […]

Read more

அம்பேத்கர் பிள்ளைத் தமிழ்

அம்பேத்கர் பிள்ளைத் தமிழ், வித்துவான் வீ.சேதுராமலிங்கம், உரை ஆசிரியர் ரா.சரவணன், டுடே கிராபிக்ஸ் வெளியீடு, விலை 250ரூ. சமூக நீதி சிந்தனையாளர் டாக்டர் அம்பேர்கர் மீது பாடப்பட்ட, தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக இந்த நூல் திகழ்கிறது. அம்பேத்கர் தொடர்பான பல வரலாற்று தகவல்களை, இலக்கியச் சுவையுடன் பாடல்களாகத் தரப்பட்டு இருக்கின்றன. இந்த நூல் மூலம் ஆசிரியரின் இலக்கிய புலமை முழுமையாக வெளிப்பட்டு இருக்கிறது. வளரும் தலைமுறையினர், அம்பேத்கர் பற்றிய வரலாற்றுத் தகவல்களை இலக்கியச் சுவையுடன் இந்த நூல் மூலம் தெரிந்து கொள்ளலாம். நன்றி: தினத்தந்தி. […]

Read more

பாரதியார் பதில்கள்

பாரதியார் பதில்கள், ஔவை அருள், ஸ்ரீராம் பதிப்பகம், பக். 148. மகாகவி பாரதியின் 137-ஆவது பிறந்தநாள் விழாவில் (2.2.2019) வெளியான இந்நூலை, தமிழறிஞர் ஔவை நடராஜனின் புதல்வரும், தமிழறிஞருமான இந்நூலாசிரியர் எழுதியுள்ளார். இது ஸ்ரீராம் நிறுவனங்களின் ஆதரவில் உருவாகி, படிக்க விரும்புபவர்களுக்கு விலையில்லாத அன்பளிப்பாக வழங்கும் வகையில் வெளியிட்டப்பட்டுள்ளது. பாரதியாரைப் பற்றி அனேக நூல்கள் வெளியாகியிருந்தாலும், அவற்றைவிட இந்நூல் மிக வித்தியாசமானது என்பதோடு, இக்காலச் சிறுவர் சிறுமியருக்கும், இளைஞர்களுக்கும் மிக எளிய முறையில் பாரதியின் பல்வேறு பரிமாணங்களைப் புரிய வைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கேள்வி […]

Read more

அய்யாவின் அடிச்சுவட்டில்

அய்யாவின் அடிச்சுவட்டில்,கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 250ரூ. தந்தை பெரியாரின் இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு 75 ஆண்டுகளாக தொடர்ந்து சமூகப் பணியாற்றி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பெரியாருடன் இணைந்து ஆற்றிய இயக்கப் பணிகள் குறித்து ஏற்கனவே எழுதிய 224 கட்டுரைகள், 5 பாகங்களாக வெளியாகி உள்ள நிலையில், மேலும் 41 கட்டுரைகளுடன் இந்த ஆறாவது தொகுதி வெளியாகி உள்ளது. ஆங்கில நாளேட்டை தமிழர் தொடங்க வேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பியது, தஞ்சையில் வரலாற்றுச் சாதனையாக மகளிர் பாலிடெக்னிக் […]

Read more

இராஜ தந்திரி இராஜாஜி

இராஜ தந்திரி இராஜாஜி, செல்லப்பா, அனிதா பதிப்பகம், பக். 136, விலை 65ரூ. சீர்திருத்தம், சமதர்மம், பகுத்தறிவு என்றெல்லாம் பலரும் மேடையில் பேசுவர். அவற்றைத் தம் வாழ்வில் கடைப்பிடிப்போர் மிகச் சிலரே ஆவர். அந்த மிகச் சிலரில் ராஜாஜியும் ஒருவர். மகாத்மா காந்தியடிகள் தம் வாரிசு என்று இவரையே சொன்னார். அத்தகைய பெரியவரின் வாழ்க்கை வரலாற்றின் சில பகுதிகளை இந்நுால் கூறுகிறது. சிறுவயதில் ராஜாஜி கண் சரியாகத் தெரியாமல், கண்ணாடி கேட்டு தந்தையிடம் அடம் பிடித்ததும், முதல் வழக்கிலே வாதாடி இவர் வெற்றி பெற்றதும், […]

Read more

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம், உரையாசிரியர் துரை.ராஜாராம், நர்மதா, பக். 272, விலை 160ரூ. பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள், கடைச்சங்கப் புலவர்களில் மிகச் சிறந்தவர். சேரமன்னன் செங்குட்டுவனின் இளைய சகோதரரான இவர், கற்புக்கரசி கண்ணகியின் காலத்தில் வாழ்ந்தவர். இக்காப்பியம் கண்ணகியின் கால் சிலம்பின் காரணமாக விளைந்த வரலாற்றை கூறுவதால் இதற்கு சிலப்பதிகாரம் என்று பெயர் வந்தது. காவிரிப் பூம்பட்டினத்தில் பெருங்குடி வணிகர் மரப்பில் தோன்றிய கண்ணகி கோவலனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இக்காவியத்தில் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் விரவிக் கிடக்கின்றன. தவிர, […]

Read more

மகாபாரதம்

மகாபாரதம், பதிப்பாசிரியர் அனந்த் பய், விளக்கம் திலிப் கதம், வெளியீடு அமர் சித்ர கதா, மூன்று தொகுதிகளும் சேர்த்து 2199ரூ. அமர் சித்ர கதை என்ற தலைப்பில் வெளியாகும் அனைத்து சித்திரக் கதைகளும், சிறுவர்களையும் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் என்பது, மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ள மகாபாரதப் புத்தகத்தின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. வியாசர் அருளிய மகாபாரதக் கதை எவ்வாறு, எந்த சமயத்தில் சொல்லப்பட்டது என்பது முதல் தொடங்கி இந்த இதிகாசத்தின் இறுதிப் பாகம் வரை உள்ள அனைத்து முக்கிய சம்பவங்களும் அழகாகத் […]

Read more

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன்

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன், உளிமகிழ் ராஜ்கமல், வானதி பதிப்பகம், பக். 248, விலை 180ரூ. சோழ வரலாற்றில் மாபெரும் வீரனாக, தவிர்க்க முடியாத ஓர் தலைவனாகக் கருதப்படுபவர் ஆதித்த கரிகாலன். இவனின் தம்பி தான் அருண்மொழி என்னும் ராஜராஜன். சோழப் பேரரசை ஆதித்த கரிகாலன் ஐந்து ஆண்டுகள் தான் ஆட்சி புரிந்திருக்கிறார். அதற்குள்ளாகவே எவரும் தொட முடியாத சாதனைகளை எல்லாம், சாதாரணமாகத் தொட்டுச் சென்றது இவரின் பெருஞ்சிறப்பு. அவர் காலத்தில் அவருக்கு நிகரான வீரனே கிடையாது என்பதைச் சொல்வதாக இருக்கிறது. மாவீரனான ஆதித்த […]

Read more

வெட்டவெளியில் ஒரு கரிசல் கிராமம்

வெட்டவெளியில் ஒரு கரிசல் கிராமம், சமயவேல், மணல்வீடு, விலை 100ரூ. ஊர் நினைவுகள் பாரதி பிறந்த எட்டயபுரம் அருகே வேம்பூர் என்ற கிராமத்தில் பிறந்து இப்போது மதுரையில் வாழ்பவர் கவிஞர் சமயவேல். இவர் தான் பிறந்த கரிசல் சமயவேல். இவர் தான் பிறந்த கரிசல் மண் கிராமத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும் கட்டுரைகள் அடங்கியது இந்நூல். அந்த கிராமத்தின் வெட்டவெளியை, அது 360 டிகிரியில் காண்பிக்கும் அடிவானத்தை, விளாத்திகுளம் சுவாமியின் பாட்டில் கேட்கும் அந்த வெட்ட வெளியின் இசையை இங்கே பதிவு செய்திருக்கிறார் அவர். பால்யமும் […]

Read more

வலை வாசல் வருக

வலை வாசல் வருக, முனைவர் பா.சிதம்பர ராஜன், க.சண்முகம், எஸ்.ஆர்.எம். கல்லூரி, பக். 72, விலை 150ரூ நம் தாய் மொழியாம் தமிழில், கணினி தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் புனையப்பட்டுள்ள அற்புத நுால். ஒவ்வொரு கணினி அறிவியலை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நம்மை சார்ந்த நிகழ்வுகளை தக்க சான்றுகளுடன் விளக்குகிறது இந்நுால். தரவுப் பகுப்பாய்வு, மேகக் கணிமை, வலையிணைப்புக் கணிமை, மின்வெளி பாதுகாப்பு, தன்னியக்க இயந்திரம் உள்ளிட்டவற்றை எளிய நடையில் இரத்தினச் சுருக்கமாகப் பட்டியலிடுகிறது இந்நுால். இன்றைய தலைமுறை மாணவர்கள் […]

Read more
1 2 3 4 9