ஈசனை உணரலாம் வாங்க

ஈசனை உணரலாம் வாங்க, ஆ.ஞானகுரு, தமிழ்வனம், விலை 110ரூ. மதுரை அருகே உள்ள புனிதத் தலமான சதுரகிரிக்குச் செல்பவர்களுக்குப் பயன் தரும் வழிகாட்டிப் புத்தகம் போல இந்த நூல் அமைந்து இருக்கிறது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னருக்கு குழந்தை வரம் அருளிய வல்லப சித்தர் என்பவரின் வாழ்க்கை விவரத்துடன் தொடங்கும் இந்த நூலில், சதுரகிரியில் எந்த எந்த சித்தர்கள் எங்கே வாழ்ந்தார்கள்? அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள், அந்தச் சித்தர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் செல்வது எப்படி? என்ற அனைத்து விவரங்களும் இதில் தரப்பட்டு இருக்கின்றன. சதுரகிரியில் […]

Read more

தேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும்

தேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும், தோப்பில் முகம்மது மீரான், இர.பிரபா, எதிர் வெளியீடு, பக். 118, விலை 130ரூ. பிரபஞ்சன் எனும் ஆளுமைக்கு, புதுச்சேரி அரசு மரியாதை செலுத்தியது. தமிழக அரசோ, மத்திய அரசோ ஒரு மலர் வளையத்தைக் கூட எந்த எழுத்தாளருக்கும் வைப்பதில்லை’ (பக்., 11) என்று நியாயமாக ஆதங்கப்படும் நுாலாசிரியர், அன்பின் பெருங்கடலாய் தோப்பில் முகமது மீரானை ஆராதித்து, அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் உரையாடிய நேர்காணல்களையும், மீரானின் படைப்புகளான தேங்காய்ப் பட்டணம், மாப்பிள்ளைப் பாட்டுகளின் வேர்களையும் இதில் […]

Read more

கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும்

கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும், கவிஞர் சி.விநாயகமூர்த்தி, மணிமேகலை பிரசுரம், பக். 268, விலை 200ரூ. கபிலர் மலைநிலமான குறிஞ்சி நிலத்தை பாடுவதில் வல்லவர். சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்கள் பாடியவர்களுள் இவரும் ஒருவர். பாரியின் நண்பராக இருந்து பறம்பு மலையை பலவாறு பாடியவர். கவிஞர் விநாயகமூர்த்தி, பதினாறு தலைப்புகளில் கபிலரின் பாடல்களிலிருந்து பல்வேறு கருத்துகளை இந்நுாலில் அழகுறத் தொகுத்திருக்கிறார். கபிலருக்கும், பாரிக்கும் இருந்த நட்புறவு, கபிலர் பதிற்றுப்பத்தில் பாடிய ஏழாம் பத்து, இன்னா நாற்பது பாடிய கபிலர் முதலியவற்றை முதற்பகுதியில் […]

Read more

சித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு

சித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு, முனைவர் சு.சசிகலா, காவ்யா, பக். 272, விலை 280ரூ. இப்பிரபஞ்ச இயக்கத்தின் சூட்சுமத்தை உணர்ந்தவர்களாக வாழ்ந்த சித்தர்கள், இறைவன் உன்னுள்ளே உள்ளான் என்ற அகவழிபாட்டு நெறியை, சமயம் கடந்த நிலையில் விளக்கியுள்ளனர். அண்டம் அனைத்தும் பரவியிருக்கும் பரம்பொருள் மனித உடலுக்குள்ளும் இருக்கிறது என்பதையே, ‘அண்டத்துள் உள்ளது பிண்டத்துள் உள்ளது’ என்று சித்தர்கள் கூறுகின்றனர். இவர்கள் தமிழில் யோகம், மருத்துவம், ஞானம், ரசவாதம் போன்றவற்றை நுட்பமாக விளக்கியுள்ளனர். பதினெண் சித்தர்கள், உரோம ரிஷி, கருவூரார் வரலாற்றையும், அவர் தம் படைப்புகளையும், […]

Read more

காவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்

காவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள், சிங்கம்பட்டி பெ.மாடசாமி, மணிமேகலை பிரசுரம், பக். 200, விலை 125ரூ. காவல்துறை பணி ஒரு சவால் நிறைந்தது என சொல்லத் தேவையில்லை. காவல்துறையினர் எப்படி பணியாற்றுகின்றனர் என்பதை பலரும் சினிமாவில் தான் பார்த்திருப்போம். ஒரு கொலை, திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்பதை நேரடியாக கேட்பது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. அந்த வகையில், போலீஸ் அதிகாரி மாடசாமி, தான் சந்தித்த வித்தியாசமான வழக்குகள், மற்ற போலீசார் கண்டுபிடித்த குற்றங்களை மிக சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் தந்துள்ளார். இந்த புத்தகத்தை […]

Read more

வாழ்க்கை வாழத்தான்

வாழ்க்கை வாழத்தான், எஸ்.ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், பக்.120, விலை 90ரூ. வாழ்தல் – நம், ‘கை’யில் இருப்பதால் தான் அதற்கு, வாழ்க்கை’ என்று பெயர் வைக்கப்படுகிறது என்பார் ஏர்வாடியார். ‘ஜெயமுண்டு பயமில்லை மனமே’ என்கிற பாரதி, ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்று கூறி அசையாது நிற்பான். அப்பர் சுவாமிகள், ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்பார். இவர்களைப் போல் அஞ்சாது, வாழ்க்கையை எதிர்கொண்டால், வாழ்க்கை நமக்கு வசப்படும். பழி எண்ணம் மறக்கிற போது, பகை மாறி நட்பு மலரும் என்று பேசும் ஏர்வாடியார் – கவிஞர் அப்துல் […]

Read more

நக்கீரன் இயர்புக் 2019

நக்கீரன் இயர்புக் 2019, நக்கீரன் பதிப்பகம், விலை 160ரூ. சமூக அர்ப்பணிப்பு உணர்வு மட்டுமல்லாமல், அறிவுக் கடலில் முத்தெடுக்கும் இதழாக மலர்ந்து மணம் வீசும் நக்கீரனுக்கு, சிகரத்தைத் தொடுமளவிற்கு சிறப்பு சேர்க்கிறது இந்நுால். இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பது போல தற்கால நிகழ்வுகள், பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், விருதுகள், விளையாட்டுகள், உலகச் செய்திகள் உள்ளிட்ட அரிய தகவல்கள் அடங்கிய பொக்கிஷம் இந்நுால் என்றால் மிகையாகாது. பொது அறிவு உலகமாகிய இந்நுால், எக்காலத்திலும் மாணவச் செல்வங்களுக்கு பயன் தரும் வகையில் வாழையடி வாழையாக அமைந்துள்ள […]

Read more

சங்கீத நினைவலைகள்

சங்கீத நினைவலைகள், வாதூலன், ஜெனரல் பப்ளிஷர்ஸ், விலை 140ரூ. இசை மேதைகள் பலருடைய அன்றாடங்கள் என்னவாக இருந்தது என்பதையும், அதில் இசை எப்படி ஒன்றுபடக் கலந்திருந்தது என்பதையும் சுவை படத் தொகுத்துத் தந்திருக்கிறார் வாதூலன். நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு

கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு,  மிகையீல் நைமி, மலையாளத்தில் எம்.ஏ.அஸ்கர், தமிழில்: சிற்பி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்,  பக். 160,  விலை ரூ.150. கலீல் ஜிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். அவருடைய இளம் வயதில் அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு அவர் குடும்பம் இடம் பெயர்கிறது. மிகுந்த வறுமையில் வாடிக் கொண்டிருந்த சிறுவனான கலீல் ஜிப்ரான், ஓவியம் வரைவதில் ஆர்வம் உடையவராக இருக்கிறார். ஓவியக் கண்காட்சி நடத்துகிறார். எனினும் ஓவியம் வரைவதற்கான அதே மனநிலை அவரைக் கவிதை எழுதவும் வைக்கிறது. சிறந்த சிறுகதைகளையும் எழுதுகிறார். […]

Read more

பூர்ணிமா.காம்

பூர்ணிமா.காம், பட்டிமன்றம் ராஜா, கவிதா பப்ளிகேஷன், பக்.184, விலை ரூ.130. வங்கிப் பணியாளராக இருந்த ராஜா, பட்டிமன்றப் பேச்சாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், திரைப்பட நடிகர் என்ற பன்முகத் திறன் படைத்தவர். மதுரை அருகே உள்ள சிறிய கிராமமான கீழமாத்தூரில் பிறந்து வளர்ந்தவர். தனது வாழ்க்கை அனுபவங்களை மங்கையர் மலர் இதழில் தொடராக எழுதினார். அதனுடைய நூல் வடிவம் இது. இளம் வயதில் மின்சார விளக்கு இல்லாத வீட்டில் மிகவும் கஷ்டப்பட்டு படித்து தனது முயற்சியினால் முன்னேறிய நூலாசிரியர், தனது வாழ்க்கை அனுபவங்களை மிகவும் சுவையாக […]

Read more
1 5 6 7 8 9