நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 150ரூ. இந்திய சுதந்திர வரலாற்றில் அதி முக்கிய இடம் பிடித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு, அதிக அளவில் சர்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாது என்பதை இந்த நூல் சிறப்பாகப் படம் பிடித்துக்காட்டி இருக்கிறது. நாட்டுக்காக சுபாஷ் சந்திரபோஸ் செய்த தியாகங்கள், வீரச் செயல்கள் ஆகியவற்றுடன், அவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது? அதில் உள்ள மர்மங்கள் என்ன என்பதையும், இந்த நூல் ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை […]

Read more

ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம்

ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, ஓங்காரம் பதிப்பகம், விலை 400ரூ. புராணங்கள், இதிகாசங்களில் ராதாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் ஆத்மசாதர்கள் எளிதில் புரிந்து பயனுரும் வகையில் நூலாக்கியுள்ளார் ஓங்காரநந்தா. நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நான் பார்த்து வியந்த சீனா

நான் பார்த்து வியந்த சீனா, டி.ரமேஷ், மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. சீனாவின் தொன்மை, பொருளாதாரம், அறிவியல் வளர்ச்சி சுவையான விஷயங்கள் அதிசயங்கள், பிரச்சினைகள் பற்றி எழுதியிருக்கிறார் ரமேஷ். நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பெரியார் ஈ.வே.ரா. வாழ்க்கை வரலாறு

பெரியார் ஈ.வே.ரா. வாழ்க்கை வரலாறு, சாமி.சிதம்பரனார், வைகுந்த் பதிப்பகம், விலை 115ரூ. தந்தை ஈ.வே.ரா. பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரைத் தூற்றியவர்கள் கூட இப்போது போற்றுகிறார்கள் என்ற உன்னத நிலையைப் பெரியார் அடைந்தது எவ்வாறு என்பதைத் தற்கால சமுதாயத்தினர் தெரிந்து கொள்ள உதவும் வகையில் அவரது விரிவான வாழ்க்கை வரலாற்று நூலாக இது அமைந்து இருக்கிறது. அவர் மதப் புரட்சிக்காரராகவும், அரசியல் புரட்சிக்காரராகவும் இருக் கவேண்டிய அவசியம் ஏற்பட்டது எதனால் என்ற வரலாற்றுத் தகவல் இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. பெரியார் வாழ்வில் நடைபெற்ற […]

Read more

மேடை நயம்

மேடை நயம், சொல் அரசு ஹபீபுல்லா, காமா பதிப்பகம், பக். 300, விலை 200ரூ. தனது மிகச் சிறந்த மேடைப் பேச்சால், சொல் அரசு என்ற பட்டத்தைப் பெற்ற இந்நூலாசிரியர், ஏற்கெனவே மேடைச் சிதறல் என்று பிரபலமானவர்களின் மிகச் சிறந்த மேடை பேச்சுக்களை கொண்ட ஒரு நூலையும், மேடை நடை என்று மேடை பேச்சிற்கு வழிகாட்டியாக ஒரு நூலையும் எழுதி வெளியிட்டார். அவற்றுக்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பை தொடர்ந்து, இந்நூலையும் வெளியிட்டுள்ளார். இதில் பல வகையான மேடைப் பேச்சாளர்களின் சொல் நயத்தினை, படித்து ரசிக்கும்படியாகவும், […]

Read more

இந்தியா அழைக்கிறது

இந்தியா அழைக்கிறது, ஆனந்த் கிரிதரதாஸ், தமிழில்: அவைநாயகன், அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக்.360, விலை ரூ.300. 1970 – களில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா நாட்டில் கிளீவ்லாந்தின் ஓஹியோ புறநகர்ப் பகுதிக்கு குடி பெயர்ந்த இந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவர் நூலாசிரியரான ஆனந்த் கிரிதரதாஸ். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவாக இருந்தாலும், அவருள்ளே இந்திய மண்ணின் மீதான தாகம் எப்போதும்நிறைந்திருந்ததால், அமெரிக்காவில் இருந்த மெக்கின்சி நிறுவனத்தின் இந்தியக் கிளைக்கு வேலைக்கு விண்ணப்பித்து இந்தியா வந்து சேர்ந்தார். வேலை தொடர்பாகவும், தன் ஆர்வத்தின் காரணமாகவும் இந்தியாவின் பல […]

Read more

நாளும் ஒரு நாலாயிரம்

நாளும் ஒரு நாலாயிரம், தொகுப்பு: மாருதிதாசன், நர்மதா பதிப்பகம், பக்.400, விலை ரூ.200. திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு பெருமாளின் கல்யாண குணங்களையும், அவன் உறையும் திருப்பதிகளான திவ்ய தேசங்களைப் புகழ்ந்து பாடியும், அத்திவ்ய தேசங்களை மங்களாசாசனம் (பாசுரம் இயற்றி) செய்து பாடியும் வழிபட்டவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அன்பு, பக்தி, சரணாகதி, திருமந்திரம், திவ்யம் முதலிய வைணவத்தின் அடிப்படைத் தத்துவங்களை, தாம் அருளிச்செய்த பாசுரங்களில் இவர்கள் வெளிப்படுத்தினர். புராண, இதிகாச நிகழ்வுகளையும், பெருமாளின் பத்து அவதாரங்களையும், நீதிநெறிக் கருத்துகளையும், வீடுபேற்றுக்கான வழியையும் அப்பாசுரங்களின் மூலம் […]

Read more

சிக்கனம் சேமிப்பு முதலீடு

சிக்கனம் சேமிப்பு முதலீடு, சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், பக்.120, விலை ரூ.125. சேமிப்புப் பழக்கம் வீட்டில் உள்ள உண்டியலிலிருந்து தொடங்குகிறது எனத் தொடங்கும் நூலாசிரியர், சேமிப்பதால் என்ன பயன் என்பதை விளக்குகிறார். பணமாகச் சேமித்து வைக்கும்போது விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகிய காரணங்களால் பணத்தின் மதிப்பு குறைந்துவிடுகிறது. அதனால் லாபம் இல்லாமல் போய்விடுகிறது. எனவே, சேமிப்பதற்கான சிறந்த வழிமுறைகளை இந்நூலில் விளக்கியுள்ளார். தனிநபர்களிடம் அல்ல; பதிவு பெற்ற சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வதே நல்லது என்று கூறுகிறார். வங்கிகளில் டெபாசிட் செய்வது நல்லதா? வங்கியின் […]

Read more

நமது அடையாளங்களும் பெருமைகளும்

நமது அடையாளங்களும் பெருமைகளும்,  இறையன்பு, கந்தவேல், எஸ்.ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகம், பக்.120, விலை ரூ.100; தேசிய அடையாளங்களான தேசியச் சின்னம், தேசியக் கொடி, தேசிய விலங்கான புலி, தேசியப் பறவையான மயில், தேசிய நீர் வாழ் விலங்கான ஓங்கில் (டால்பின்), தேசியப் பாரம்பரிய விலங்கான யானை, தேசிய மரமான ஆலமரம், தேசிய மலரான தாமரை, தேசியப் பழமான மாம்பழம் ஆகியவற்றைப் பற்றியும், தமிழக அடையாளங்களான தமிழக இலச்சினை, தமிழக விலங்கான வரையாடு, தமிழகப் பறவையான மரகதப்புறா, தமிழக மரமான பனைமரம், தமிழக மலரான செங்காந்தள் மலர், […]

Read more

மனவெளிப் பறவைகள்

மனவெளிப் பறவைகள், தி.இராசகோபாலன், வானதி பதிப்பகம், பக்.248; ரூ.200 சமூகத்தில் நிலவும் அவலங்களை எந்தவித சமரமும் இல்லாமல் தனது பார்வையில் துணிச்சலோடு வெளிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். மனிதநேயம், இலக்கியம், ஆன்மிகம் என பல துறைகளில் தேசத்துக்காகப் பாடுபட்ட சான்றோர்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தின் எந்த அடுக்கில் விரிசல் தென்பட்டாலும் அது அடித்தளமாகிய வாக்காளர்களின் பலவீனம் எனக் கருத வேண்டும் என்கிறது வாக்காளன்- ஒரு வேடிக்கை மனிதன் என்ற கட்டுரை. மூச்சுப் பயிற்சி, யோகாசனம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது சித்தர் சொல் கேளீர் என்ற கட்டுரை. கலக மானுடப் […]

Read more
1 3 4 5 6 7 9