செம்மொழிகளின் வரிசையில் தமிழ்

செம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி.என். சாமுவேல், முல்லை நிலையம், விலை 120ரூ. தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நிகழ்வுகளை முதன் முறையாக 2007 ம் ஆண்டு பதிவு செய்த இந்த நூல், இப்போது மறுபதிப்பாக வெளியாகி இருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மை அழிந்தும், அழிக்கப்பட்டும் வருகின்ற இந்தக் காலக்கட்டத்தில் தமிழ மொழியின் சிறப்பைக் காப்பதும் உலகம் முழுவதும் அதனைப் பரவச் செய்வதும் சமுதாயப் பொறுப்புணர்வு கொண்ட தமிழனின் கடமை என்பதை இந்த நூல் வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது. நன்றி: […]

Read more

செஹ்மத் அழைக்கிறாள்

செஹ்மத் அழைக்கிறாள், ஹரீந்தர் சிக்கா, தமிழில்: எம்.ஏ. சுசீலா, நற்றிணை பதிப்பகம் பிரைவேட் லிமிடெட், பக்.239, விலை ரூ.300. புதுதில்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இந்தியக் கடற்படை லெஃப்டினண்ட் காமண்டர் ஹரீந்தர் சிக்கா. செஹ்மத் அழைக்கிறாள் என்பது இவரது முதல் நூல். தேஜஸ்வரி சிங்- ஹிதாயத்கான் தம்பதிக்குப் பிறந்த ஒரே குழந்தை செஹ்மத். செல்வாக்கு மிக்க வியாபாரி, நாட்டுப்பற்று மிக்க குடிமகன், காஷ்மீரிய உளவாளி என பன்முகங்கள் கொண்டவர் ஹிதாயத் கான். ஒரு கட்டத்தில் ஹிதாயத்கான் புற்றுநோய்ப் பாதிப்புக்கு ஆளாக, அவருக்கு மாற்றாக இருக்கட்டும் என்று […]

Read more

சிறகை விரி, பற!

சிறகை விரி, பற!, பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 130ரூ. பட்டிமன்றப் பேச்சாளராக தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பாரதி பாஸ்கர் எழுதி இருக்கும் இந்த நூல், இலைகளே தெரியாத அளவுக்கு, ருசியான பழங்கள் கொத்துக் கொத்தாக பழுத்துத் தொங்கும் மரம் போல சிறப்பாகக் காட்சி அளிக்கிறது. 31 தலைப்புகளில் அவர் எழுதி இருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதிய சுவையான தகவல்களைக் கொடுக்கின்றன. இவற்றில் ஆன்மிகம் சற்றே தூக்கலாக இருக்கின்ற போதிலும், அனைத்துத் தரப்பினரும் படித்துப் பயன்பெறும் வகையில் அவை அமைந்து இருக்கின்றன. […]

Read more

சபாஷ் சாணக்கியா – பாகம்: 2

சபாஷ் சாணக்கியா – பாகம்: 2, சோம வீரப்பன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.170 வணிகம் சார்ந்த விஷயங்களில் அரசியல் சாணக்கியரின் கருத்துகள் எவ்வாறு பொருந்தும் என்ற சந்தேகத்தைப் போக்கும் வகையில், காலத்துக்கு ஏற்ற சாணக்கியரின் அறிவுரையை உதாரணங்களுடன், நாட்டு நடப்பு மட்டுமின்றி உலக நடப்புகளுடன் இணைத்து ‘வணிகவீதி’யில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. சாணக்கியரின் தந்திரம் அரசியலுக்கு மட்டுமல்ல, அரசியலுக்கு அப்பாற்பட்டு நமது அன்றாட வாழ்விலும் பொருந்தும் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே முதல் பாகம் வெளிவந்து பரவலான வாசக […]

Read more

ஹிப்பி

ஹிப்பி, அய்யனார் விஸ்வனாத், விலை 170ரூ. திருவண்ணாமலை பற்றி மூன்று பாகங்கள் எழுதவிருப்பதாக அறிவித்த அய்யனார் விஸ்வனாத், அதன் முதல் பாகத்தை வெளியிட்டிருக்கிறார். நாவலின் பெயர் ‘ஹிப்பி’. சமூகரீதியாக விளிம்பு நிலையில் இருக்கும் இளைஞனின் வாழ்க்கை அவனுடைய அம்மாவின் மரணத்துக்குப் பிறகு நிச்சயமின்மைக்குள் நுழைகிறது. வெளிநாட்டவர்களை ஈர்க்கும் திருவண்ணாமலையின் ரமணாசிரமத்துக்கு வரும் ஹிப்பி, குழுவுக்கு உதவியாளராகக் காட்டுக்குள் பயணிக்கிறான். அங்கே வேறொரு உலகத்தை எதிர்கொள்கிறான். அந்த விவரணைகளே இச்சிறுநாவலின் பெரும் பகுதியாக விரிகிறது. இளைஞனின் சமூகரீதியான நிச்சயமற்ற வாழ்க்கைக்கும், ஹிப்பிகளின் சுயதேர்வுரீதியான நிச்சயமற்ற வாழ்க்கைக்கும் […]

Read more

க.நா.சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

க.நா.சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், ச. கந்தசாமி, சாகித்திய அகாடெமி, விலை 200ரூ. க.நா.சுப்ரமண்யத்தை விமர்சகராகவும் நாவலாசிரியராகவுமே பரவலாக அறிந்திருக்கிறோம். க.நா.சு.வின் சிறுகதை சாதனைகளை வாசிக்கத் தோதாக அவரது 24 சிறுகதைகளை ச.கந்தசாமி தொகுத்திருக்கிறார். க.நா.சு. ஒரு காலகட்டத்தில் இருந்த விழுமியங்களின் பிரதிநிதி. அவர் தன் காலத்தின் குரலாக அவர் வாழ்ந்த சூழ்நிலையையே சிறுகதைகளாக எழுதியிருக்கிறார். ஆழ்மன வேட்கையை, அக்காலகட்டக் குடும்பநிலையை, இயல்பான வாழ்க்கையை அவரது சிறுகதைகளில் காணலாம்.   அவருடைய கதைகள் பெரும்பாலும் குடும்ப அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டு அதன் மீது கட்டப்பட்டவைதான். […]

Read more

கதை கேட்கும் சுவர்கள்

கதை கேட்கும் சுவர்கள், ஷாபு கிளிதட்டில், தமிழில் கே.வி. ஷைலஜா, வம்சி புக்ஸ், விலை 350ரூ. தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமலும் அடங்கிய பண்போடும் ஒரு தீராத சேவைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் உமா பிரேமனின் வாழ்க்கையைப் பேசும் புத்தகம்தான் ‘கதை கேட்கும் சுவர்கள்’. இது புனைவு அன்று; அசலான வாழ்க்கைச் சித்திரம். சுயசரிதை எனினும்கூடப் புனைவுக்கான சுவாரஸ்யத்தோடும் புதுப்புதுத் திருப்பங்களோடும் வாழ்க்கை தரிசனங்களைக் காட்சிகளாக்கி விரிகிறது. துயர் பூசிய தன் வாழ்வின் விம்மல்களைச் சுவர்களோடு மட்டுமே பகிர்ந்துகொள்கிறார் உமா. மலையாளத்தில் ஷாபு கிளிதட்டிலால் எழுதப்பட்ட இந்நூலை கே.வி.ஷைலஜா தமிழாக்கம் […]

Read more

சேர மன்னர் வரலாறு

சேர மன்னர் வரலாறு, அவ்வை சு.துரைசாமி, ஜீவா பதிப்பகம், விலை 220ரூ. இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, நாணயம், அகழ்வு ஆய்வுகள் கொண்டு ஒரு நாட்டின் வரலாறு எழுதப்படுகிறது. சேரர் வரலாறு பற்றி கே.ஜி.சேஷைய்யர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தமிழில், பேராசிரியர் அவ்வை சு.துரைசாமி பிள்ளை, சேர நாடு முழுமையும் சுற்றி தொண்டி, வஞ்சி முதலிய வரலாற்று புகழ்மிக்க இடங்களை நேரில் கண்டு ஆய்வு செய்தார். மலைகள், ஆறுகள் முதலியவற்றின் முந்தைய பெயர்களையும், தற்போது வழக்கில் உள்ள பெயர்களையும் ஆய்ந்து இந்த நுாலில் வெளிப்படுத்தியுள்ளார். சேர நாட்டின் […]

Read more

64 யோகினிகள் மர்மங்கள்

64 யோகினிகள் மர்மங்கள், வேணுசீனிவாசன், சங்கர் பதிப்பகம், விலை 275ரூ.. சக்தி வழிபாட்டில் அம்பாளின் முக்கியமான பரிவார தேவதைகளாக இருப்பவர்கள் யோகினிகள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்றும், மொத்தமாக 64 யோகினிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது என்றும் தகவல் தெரிவிக்கும் நூல், யோகினிகள் பற்றிய மர்மங்களை விளக்கும் ஆன்மிக ஆய்வு நூலாக விளங்குகிறது என்று கூறலாம். 64 யோகினிகள் எனப்படுபவர்கள் யார் யார்?, அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? பக்தர்களுக்கு அவர்கள் எவ்வாறு உதவி செய்கிறார்கள்? என்ற விவரமும் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. யோகத்தல் திறன் பெற்ற ஆண்கள் […]

Read more

பகல் கனவு

பகல் கனவு, லா.ச.ராமாமிருதம், பாலாஜி பதிப்பகம், விலை 130ரூ. பிரபல எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம் எழுதிய சிறுகதைகளின் இந்தத் தொகுப்பு, கடலில் மூழ்கித் தேடிச் சேகரித்த முத்துக்களால் கோர்த்த மாலையாக ஜொலிக்கிறது. இவற்றில் உள்ள பெரும்பாலான கதைகளின் முக்கிய கதாபாத்திரம் தன்னை முன்னிலைப்படுத்திக் கூறுவதுபோல கதை அமைக்கப்பட்டு இருப்பதால், அந்தக் கதாபாத்திரத்தின் உணர்ச்சிக் குவியலில் நாம் கரைந்து விடுவது போன்ற பரவசம், அந்தக் கதையைப் படிக்கும்போது ஏற்படுகிறது. அனைத்துக் கதைகளின் நிகழ்வுகளும், ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்கனவே நடந்த, அல்லது நடக்க இருக்கின்ற சம்பவங்களால் கோர்க்கப்பட்டு இருக்கின்றன. […]

Read more
1 2 3 4 5 6 9