யாளி

யாளி, ச.வைரவ ராஜன், பாவைமதி வெளியீடு, விலை 180ரூ. வித்தியாசமான கட்டுரைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் ஏராளமான தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. தமிழகக் கோவில்களில் மட்டுமே காணப்படும் சிற்பங்களான யாளி என்ற மிருகம் இருந்தது உண்மையான என்ற ஆய்வு பல இலக்கியங்களின் மேற்கோள்கள் வழியாகக் கொடுக்கப்பட்டு இருப்பது புதுமையாக உள்ளது. மேலும் யானை, காகம், நாய், பேய் போன்றவைகள் குறித்தும் ஆழமான கருத்துக்களை நகைச்சுவையுடன் தந்து இருப்பது சிந்திக்கவும், ரசிக்கவும் வைக்கிறது. நோய்களைத் தீர்ப்பதற்கு வண்ணங்கள் எவ்வாறு உதவுகின்றன என்ற தகவலும் வியக்க வைக்கிறது. […]

Read more

சுளுந்தீ

சுளுந்தீ, ரா.முத்துநாகு, ஆழி பதிப்பகம், பக். 472, விலை 450ரூ. பண்டுவம் எனும் சித்த மருத்துவம் பார்க்கும், நாவிதர்களின் சமூக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாவல், சுளுந்தீ. இது, ஒரு மரத்தின் பெயர்; இதை, தீக்குச்சியாகவும் எரிபொருளாகவும் பயன்படுத்துவர். ஆசிரியர் இதை வழிகாட்டும் வெளிச்சமாகவும், ஆதிக்க உணர்வுக்கு எதிராக வினை புரியும் எரி நெருப்பாகவும், ஒடுக்கப்பட்டோரின் வாழ்விற்குரிய போர் ஆயுதமாகவும் உணரக் கூடிய வகையில், ஒரு குறியீட்டு நாவலாக அமைத்துள்ளார். இதை, ஒரு தொல்குடி சமூகத்தின் ஆவணமாக கருதலாம். தொன்மை அடையாளத்தின் பண்பாட்டையும், குறிப்பிட்டதொரு […]

Read more

கன்னித் தமிழும் கணினித் தமிகும்

கன்னித் தமிழும் கணினித் தமிகும், இரா.பன்னிரு கை வடிவேலன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக். 286, விலை 180ரூ. ‘என்று பிறந்தனள் இவள்?’ என அனைவரும் வியக்குமாறு விளங்கும் தமிழின் தொன்மை முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான ஒரு நீண்ட வரலாற்றுப் பாதையில் பயணிக்கிறது, இந்நுால். தனித்தனியான இருபத்து மூன்று கட்டுரைகளைக் கொண்டிருந்தாலும், மொழியின் வளர்ச்சிப் பாதையில் இவை அமைக்கப்பட்டுள்ளதால் தமிழின் இனிமை மிகுதிப்படுகிறது. தமிழின் சொல்வளத்தை அறியச் செய்யும் நிகண்டுகளில் இந்நுால் தொடங்குகிறது. நிகண்டுகளின் வரலாற்றையும் சிந்தாமணி நிகண்டு, ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு […]

Read more

தமிழியல் ஆய்வுகள் மரபும் புதுமையும்

தமிழியல் ஆய்வுகள் மரபும் புதுமையும், இரா.பன்னிருகை வடிவேலன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக். 357, விலை 230ரூ. சங்க இலக்கியம் தொடங்கி, இன்றைய காலம் வரையிலான தமிழின் இலக்கிய இலக்கணம் குறித்த பல கட்டுரைகளின் தொகுப்பே, இந்நுால். சங்க இலக்கியங்களில் ஆயர்கள், புள்ளினம், வாழ்வியல் எனப் பொதுவான கருத்துகளும், புறநானுாறு, குறுந்தொகை, குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து குறித்த தனித்த சிந்தனைகளும் கட்டுரைகளாக மலர்ந்துள்ளன. இவ்வாறே, திருக்குறள், சீவகசிந்தாமணி, நளவெண்பா, சித்தர்கள், சிற்றிலக்கியங்கள், நாவல், சிறுகதை, மொழியியல், நாட்டார் வழக்கு, மொழிப்பயன்பாடு என இன்றுவரையிலான பல்வேறு தலைப்புகளில் […]

Read more

செம்மொழிகளின் வரிசையில் தமிழ்

செம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி.ஜான் சாமுவேல், முல்லை நிலையம், பக். 172, விலை 120ரூ. தமிழ்மொழி செம்மொழி மதிப்பை அடைந்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த உயரிய அடைதலுக்காக மேற்கொள்ளப்பட்ட அரிய முயற்சிகள் என்ன, அதற்காக சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வறிக்கைகள் என்னென்ன என்பதைப் பற்றிய வரலாற்று விபரங்களைத் தருகிறது இந்நூல். நம் பண்டைய புலவர்கள் தமிழைச் செவ்வியல் நிலையிலேயே வளர்த்து அதைச் செந்தமிழ் என்று அழைத்து வந்தனர். செவ்வியல் எனும் சொல்லை, ரோமானியர்கள் பெரும்பாலும் உயர்தரமான இலக்கியப் படைப்புகளை சுட்டப் பயன்படுத்தியிருக்க, கிரேக்க இலத்தீன் […]

Read more

வியப்பூட்டும் வரலாற்று உண்மைகள்

வியப்பூட்டும் வரலாற்று உண்மைகள், ஞானபாரதி செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், விலை 150ரூ. மாவீரர்களின், ஞானிகளின் தன்னலமற்ற தலைவர்களின் வரலாறுகளைப் படிப்பதன் மூலம் நாமும் அப்படி ஆக முடியும் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மனதில் ஆழ விதைக்கிறது இந்நூல். நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பொதி

பொதி, மரபுக் கவிதைத் தொகுப்பு, புதியவன் பப்ளிகேஷன்ஸ், விலை 140ரூ. இந்நூல் எனது அரை நூற்றாண்டு காலச் சேமிப்பு எனக்கூறும் நூலாசிரியர், கவிதைக்கான அடித்தளமாக அனுபவத்தை அழகியலாக்கி, இருபதின் தொடக்கமும் அறுபதின் அடக்கமும் என்று நிஜம் சொல்கிறார். நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

விடுதலைப் போரில் பழங்குடி மக்கள்

விடுதலைப் போரில் பழங்குடி மக்கள், வி.என்.சாமி, விலை 120ரூ. காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் பூர்வ குடிமக்களான பழங்குடி இனத்தவர்கள், இந்திய வரலாற்றில் கவனிக்காமல் விடுபட்ட நிலையிலும், அவர்கள் இந்திய விடுதலைக்காகப் போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என்பதை இந்த நூல் விளக்கி இருக்கிறது. சாந்தல்கள் என்னும் பழங்குடி இன மக்கள் வில் அம்புகளை மட்டுமே ஆயுதங்களாக வைத்துக் கொண்டு நான்கு ஆண்டு காலம் ஆங்கிலேய படைகளை எதிர்த்துப் போராடினார்கள் என்ற வியப்பான தகவலை இந்த நூல் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டம், […]

Read more

மலர்க் கிரீடம்

மலர்க் கிரீடம், கண்மணி பதிப்பகம், விலை 70ரூ. எழுத்தாளரும், சினிமா கதை வசனகர்த்தாவுமாகிய கண்மணி ராஜா முகமது எழுதிய புதுக்கவிதைகளின் தொகுப்பு, முழுக்க முழுக்க காதலைப் பற்றியே பாடுகிறார். “தூங்கும்போது கனவில் விழித்திருக்கையில் நினைவில் எப்படித்தான் இவர்கள் நம்மைப் பிரிப்பார்களோ? ஒரு வண்ண மயிலை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருக்கிறார்கள் என மேனகா காந்திக்கு மெயில் அனுப்ப வேண்டும் நீரின்றி அமையாது உலகு குறள் நீயின்றி அமையாது உலகு என் குரல் என்பன போன்ற கவிதைகள் நெஞ்சைக் கவர்கின்றன. நன்றி: தினத்தந்தி, நவம்பர், 2019. இந்தப் […]

Read more

மண் மக்கள் தெய்வங்கள்

மண் மக்கள் தெய்வங்கள், வெ.நீலகண்டன், விகடன் பிரசுரம், விலை 185ரூ. கிராமப்புற மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து இன்றைக்கும் காலம் தவறாமல் கொண்டாடப்படும் கிராம தெய்வ வழிபாட்டை, உளவியல் பூர்வமாக இந்த நூல் அணுகி இருக்கிறது. இருளர்கள், கோத்தர்கள், பளியர்கள், காடர்கள் போன்ற தமிழகப் பழங்குடி மக்களின் வழிபாடுகள், திருநங்கைகளின் மாதா வழிபாடு, திருவள்ளுவருக்கு அருகே 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் அபூர்வமான வழிபாடு ஆகியவை பற்றியும் இந்த நூலில் விரிவான தகவல்கள் உள்ளன. சில கோவில்களில் நடைபெற்ற அமானுஷ்யமான சம்பவங்கள் […]

Read more
1 4 5 6 7 8 9