மொபைல் ஜர்னலிசம்

மொபைல் ஜர்னலிசம், நவீன இதழியல் கையேடு, சைபர் சிம்மன், கிழக்கு பதிப்பகம், பக்.216, விலை ரூ.225. செல்பேசி இதழியல் என்பது, களத்தில் நடக்கும் நிகழ்வுகளை எளிதாகவும், விரைவாகவும் படம் பிடித்து வெளியிட ஸ்மார்ட் போன்கள், செயலிகள், சமூக வலைப்பின்னல் சேவைகள் மற்றும் இணைய வசதி ஆகியவை இணைந்து அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதாகும். யார் வேண்டுமானாலும் செல்போன் மூலம் செய்திகளைப் பிறருக்குப் பரப்பலாம் என்ற நிலை இருப்பதால், அதற்கான அடிப்படைகளை வரையறுத்து விளக்குவதும், அவற்றை ஒழுங்குபடுத்துவதும் அவசியமாகிறது. அந்த அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. செல்பேசியின் மூலம் […]

Read more

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்,  மு.பி.பாலசுப்பிரமணியன், பாரி நிலையம், பாரி நிலையம், பக்.288, விலை ரூ.200. திராவிட இயக்கம் ஏன் தோன்றியது? அதற்கான பின்புலம் என்ன? என்பதை விளக்கும் கட்டுரைகளுடன் தொடங்கும் இந்நூல், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எழுதிய கவிதை நூல்கள், புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், அவர்கள் நடத்திய இதழ்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. அதுமட்டுமல்ல, திராவிட இயக்கத்தைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர்களைப் பற்றியும், அவர்களின் குறிப்பிடத்தகுந்த சொற்பொழிவுகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது. அறிவியல் தமிழை வளர்க்கும் நோக்கத்துடன் 1999 இல் நடத்தப்பட்ட தமிழ் […]

Read more

செப்புத் திருமேனிகள் வார்த்தெடுக்கும் செய்முறைகளும் அமைப்பு முறைகளும்

செப்புத் திருமேனிகள் வார்த்தெடுக்கும் செய்முறைகளும் அமைப்பு முறைகளும், ம.பாபு; காவ்யா, பக்.318; ரூ.320; ஐம்பொன்னில் செம்பு அதிகம் கலந்து வார்க்கப்படும் திருவுருவத்தை செப்புத் திருமேனி என்பர். தொடக்கத்தில் இறைவன் உருவங்களே உருவாக்கப்பட்டன. பின்னர் அரசர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றோர் திருமேனிகளையும் செப்புத் திருமேனிகளாக வடித்தனர். தமிழகத் திருக்கோயில்களில் இடம்பெறும் கலைப் பாணிகளை வரலாற்று நோக்கில் வகைப்படுத்தி விளக்கியுள்ளார் ஆய்வாளர். பண்டைக் காலத்தில் சிற்பக்கலை இருந்ததற்கான சான்றுகளை சிலப்பதிகாரத்தைக் கொண்டும், சங்க காலத்தில் உலோகங்களால் திருமேனிகள் செய்யப்பட்டதை நன்னன் என்ற அரசனின் வரலாறு கொண்டும் விளக்கியுள்ளது […]

Read more

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ. உயிர் எப்படித் தோன்றுகிறது என்பது பற்றிய ஆர்வம் மனிதரிடம் பிறந்த எப்படி, வளர்ந்தது எப்படி, நகூன உயிரியல் இது பற்றி என்ன கருத்தை முன்வைக்கிறது என்பதை சுவாரஸ்யமாக வழங்குகிறது இந்நூல். நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஆச்சார்ய வினோபாவும் விடுதலையும்,

ஆச்சார்ய வினோபாவும் விடுதலையும், நா.பாஸ்கரன், ஜாஸிம் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. வினோபா பாவேவின் எண்ண அலைகளும் எழுச்சியும், சங்கரர், ஞானேசுவரர், காந்தி ஆகிய பெருமகான்களால் எவ்வாறு ஒழுங்குப்படுத்தப்பட்டன, ஒருமுகப்படுத்தப்பட்டன என்பதை இந்நூலில் காணலாம். நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்

பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம், அல்லூர் வெங்கட்ராமய்யர், விலை 600ரூ. பழங்கால இந்தியாவில் ஜோதிட சாஸ்திரம் பற்றி 18 மகரிஷிகள் பல கருத்துக்களைத் தெரிவித்து இருந்தாலும், அவர்களில் முதன்மையானவராகக் கருதப்படும் பராசரர் என்ற மகரிஷி அருளிய ஜோதிட சாஸ்திர ஸ்லோகங்களை இந்த நூல் தமிரீல் உரைநடையாகத் தந்து இருக்கிறது. ஜோதிடத்தை ஓரளவு தெரிந்து கொண்டவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இந்த நூல் ஆக்கப்பட்டு இருக்கிறது. எம்.ஜி.ஆர்., அமிதாப்பச்சன் ஆகியோரின் ஜாதக விவரங்களுடன், ராஜயோகம் மற்றும் செல்வந்தராகும் யோகம் யாருக்கு, வறுமையைக் கொடுக்கும் நிலை […]

Read more

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன், தொ.மு.சி.ரகுநாதன், ஏ.கே.எஸ்.பதிப்பகம், விலை 105ரூ. தமிழ் சிறுகதை இலக்கியத்தில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் 42 ஆண்டுகளே வாழ்ந்த போதிலும், அந்தக் குறுகிய காலத்துக்குள் மகத்தான சிறுகதைகளை எழுதி மங்காப் புகழ் பெற்றார் என்பதை அவரது வாழ்க்கை வரலாற்று நூலான இந்தப் புத்தகம் சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறது…. பிறந்தது முதல் புதுமைப்பித்தன் சந்தித்த சவால்கள், வேதனைகள், அவரது கதைகள் ஏற்படுத்திய தாக்கம் ஆகிய அனைத்தும் இந்த நூலில் விரிவாகத் தரப்பட்டு இருக்கின்றன. கபாலி, நந்தி, சுக்கிராச்சாரி, கூத்தன் போன்ற […]

Read more

புத்தரின் வரவேற்பறையில் காத்திருக்கிறேன்

புத்தரின் வரவேற்பறையில் காத்திருக்கிறேன், அ.கார்த்திகேயன், பச்சியம்மன் பதிப்பகம், விலை 50ரூ. ‘வேட்கை’ அ.கார்த்திகேயனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு. மீறல்கள் குறித்து பேசவும் எழுதவும்தான் முடிகிறது கடைசியில் வட்டங்களுக்குள்தான் வாழவேண்டியிருக்கிறது/ என்பது போன்று எளிய வார்த்தைகளில் வாழ்வின் எதார்த்தங்களைக் கவிதைகளாக்கும் முயற்சி. நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தூரங்களின் பாடல்

தூரங்களின் பாடல், மணல் உரையாடல், இசாக், தமிழ் அலை வெளியீடு, விலை: ரூ.150 பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை உணர்ந்து ஆயிரமாயிரம் இளைஞர்கள் சொந்த தேசத்தை விட்டு, தூர தேசம் சென்று உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வலி மிகு துயர வாழ்வை வார்த்தை வயல்களில் விதைத்திருக்கிறார் இசாக். துபாய் தேசத்துக்குச் சென்று நிமிடந்தோறும் நெஞ்சில் குடும்பத்தைச் சுமந்துகொண்டு, கண்ணின் நீருக்கு உள்ளுக்குள் தாழ்போட்டுக்கொள்ளும் நாட்களின் பாடல்தான் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கவிதைகள். ஏற்கெனவே வந்த ‘துணையிழந்தவளின் துயரம்’ சிற்சில மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது. சம்பாத்தியம் புருஷ லட்சணம் […]

Read more

சுதந்திரப் போராட்டத்தில் சௌராஷ்ட்ரர்

சுதந்திரப் போராட்டத்தில் சௌராஷ்ட்ரர், வி.என்.சாமி, வி.என்.சாமி வெளியீடு, விலை ரூ.300 சௌராஷ்டிர சமூகத்தினர் தமிழகம் வந்த பிறகு எப்படி இங்கேயுள்ள சமூகப் பங்களிப்பில் தங்களைப் பிணைத்துக்கொண்டார்கள் என்பதைப் பேசும் புத்தகம் இது. மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்புராமன், குடந்தை கே.கே.ராமாச்சாரி, யோகாசன நிபுணர் வி.என்.குமாரசாமி, வெங்கட்ராமையா, அஷ்டாவதானி பத்மநாபய்யர், பாலாஜி சொர்ணம்மாள், சோலை பாக்கியலட்சுமி அம்மாள், தாயம்மாள் இன்னும் இந்நூலில் வரும் பலருடைய வாழ்க்கையும் தியாகமும் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை. ராஜாஜியின் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தைத் தினசரிக் குறிப்புகளாக எழுதிய டி.ஆர்.பத்மநாபன், அரிய வரலாற்றுப் பதிவுக்கு […]

Read more
1 6 7 8 9